under review

அவள் பிரிவு: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Line 3: Line 3:
== எழுத்து, பிரசுரம் ==
== எழுத்து, பிரசுரம் ==
பர்மாவில் வெ.சாமிநாத சர்மா வசித்தபோது அவர் '[[தனவணிகன்|தன வணிகன்]]’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய கட்டுரைகளால், அதன் எளிய மொழிநடையால் ஈர்க்கப்பட்டார், அரு. சொக்கலிங்கம் செட்டியார். இவர், சாமிநாத சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே 'பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்’ என்னும் பதிப்பகத்தை பர்மாவில் நிறுவினார். பிரசுரத்தின் முதல் நூலாக 'முசோலினி’ வெளியானது. பின்னர் பல நூல்கள் வெளியாகின. இரண்டாம் உலகப் போருக்குப் பின், பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தின் 40-ஆவது வெளியீடு 'அவள் பிரிவு’. மார்ச், 1957-ல் இந்த நூல் வெளியானது.  

இந்த நூல் பதிப்பு குறித்து பதிப்பாளர் முறையூர் அரு. சொக்கலிங்கம் செட்டியார் தனது முன்னுரையில், "சர்மாஜி அவர்களின் தமிழ்ப்பணிக்கு சக ஊழியராகவும், அவர்களுக்கு ஒரு சிஷ்யை போலவும், அவர்களை எழுதத் தூண்டிக் கொண்டிருந்த தூண்டுகோலாகவும், அவர்களின் உடம்பைப் பேணிக்காப்பதில் தாதியாகவும், இல்லற வாழ்க்கையை நடத்திக்காட்டிய குடும்ப விளக்காகவும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இணைபிரியாதிருந்த இலட்சிய மனைவியராகவும் வாழ்ந்த எங்கள் அம்மையாரின் மறைவு, சர்மாஜியின் வாழ்க்கையை துண்டித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சில நாட்களிலே அவர்களுக்குத் தனிமையை உணர்த்தத் தலைப்பட்டுவிட்டது. அந்தச் சமயத்தில் அம்மையார் அவர்கள் மறைந்த சில நாட்களில் உணர்ச்சி வசத்தால் உந்தப்பட்டு அவர்கள் எழுதிய கடிதங்களே இந்நூலாக மிளிர்கிறது.

இக்கடிதங்கள் ஆரம்பத்தில் பிரசுரத்திற்காகவென்று எழுதப்பட்டவையல்ல. அம்மையார் அவர்களின் பன்மொழிப் புலமை, சீரிய பண்பு, தமிழ்த்தொண்டில் அவர்களுக்கிருந்த ஆர்வம் இவைகளைப்பற்றிச் சிறிதளவாவது வாசகர்கள் அறிந்து கொள்வதற்கான வசதியை இந்நூல் ஏற்படுத்திக் கொடுக்குமென நினைத்து, பிரசுரிக்க அனுமதி கோரினோம். அதோடு 'அவள் பிரிவு’ என்ற இந்நூலின் தலைப்புப் பற்றியும் சர்மாஜியின் சம்மதத்தைக் கோரி, பெற்றோம். எங்கள் வேண்டுகோளுக்கு இசைந்த அவர்களுக்கு எமது நன்றி." என்று குறிப்பிட்டுள்ளார்.

== நூல் சுருக்கம் ==
== நூல் சுருக்கம் ==
[[File:Sarma - mangalam.jpg|thumb|வெ.சாமிநாத சர்மா - மங்களம்]]

வெ.சாமிநாத சர்மா - மங்களம் இருவருக்குமே இளம் வயதிலேயே திருமணம் நிகழ்ந்து விட்டது என்பதால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர். 42 ஆண்டுகள் இணைபிரியாது வாழந்தனர். வயதாகியும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்தனர். 1956-ல், புற்றுநோயால் உடல் நலிவுற்று மங்களம் காலமானார். சாமிநாத சர்மாவால் அந்தச் சோகத்தைத் தாங்க இயலவில்லை. தனது நினைவுகளை தன் நண்பருக்குக் கடிதங்களாக அனுப்பினார். உருக்கமான பல நிகழ்வுகளை அக்கடிதங்களில் விவரித்து ஆறுதலைடைந்தார்.

கணவனும் மனைவியும் எப்படி ஒருமித்து ஒரே மனதினராய் வாழ்ந்தனர் என்பதைப் பல சம்பவங்கள் மூலம் அக்கடிதங்களில் விளக்கியிருக்கிறார் வெ.சாமிநாத சர்மா. ஆங்காங்கே சில அனுபவ மொழிகளும் பொன் மொழிகளும் காணக்கிடைக்கின்றன.  

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
Line 18: Line 15:
*[https://www.sramakrishnan.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/ ’அவள் பிரிவு’ நூல் குறித்து எழுத்தாளர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன்]  

[[Category:spc]]
[[Category:spc]]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:35, 3 July 2023

அவள் பிரிவு - வெ.சாமிநாத சர்மா

எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா, தனது மனைவி மங்களம் மறைந்ததை ஒட்டி, தனது துயரங்களை, நினைவுகளை, தனது நண்பரும், பதிப்பாளருமான ஆர். சொக்கலிங்கம் செட்டியாருக்குக் கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். அந்தக் கடிதங்கள் சிலவற்றின் தொகுப்பே 'அவள் 'பிரிவு’ என்னும் தலைப்பில் பின்னர் நூலாக வெளியானது.

எழுத்து, பிரசுரம்

பர்மாவில் வெ.சாமிநாத சர்மா வசித்தபோது அவர் 'தன வணிகன்’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய கட்டுரைகளால், அதன் எளிய மொழிநடையால் ஈர்க்கப்பட்டார், அரு. சொக்கலிங்கம் செட்டியார். இவர், சாமிநாத சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே 'பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்’ என்னும் பதிப்பகத்தை பர்மாவில் நிறுவினார். பிரசுரத்தின் முதல் நூலாக 'முசோலினி’ வெளியானது. பின்னர் பல நூல்கள் வெளியாகின. இரண்டாம் உலகப் போருக்குப் பின், பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தின் 40-ஆவது வெளியீடு 'அவள் பிரிவு’. மார்ச், 1957-ல் இந்த நூல் வெளியானது. இந்த நூல் பதிப்பு குறித்து பதிப்பாளர் முறையூர் அரு. சொக்கலிங்கம் செட்டியார் தனது முன்னுரையில், "சர்மாஜி அவர்களின் தமிழ்ப்பணிக்கு சக ஊழியராகவும், அவர்களுக்கு ஒரு சிஷ்யை போலவும், அவர்களை எழுதத் தூண்டிக் கொண்டிருந்த தூண்டுகோலாகவும், அவர்களின் உடம்பைப் பேணிக்காப்பதில் தாதியாகவும், இல்லற வாழ்க்கையை நடத்திக்காட்டிய குடும்ப விளக்காகவும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இணைபிரியாதிருந்த இலட்சிய மனைவியராகவும் வாழ்ந்த எங்கள் அம்மையாரின் மறைவு, சர்மாஜியின் வாழ்க்கையை துண்டித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சில நாட்களிலே அவர்களுக்குத் தனிமையை உணர்த்தத் தலைப்பட்டுவிட்டது. அந்தச் சமயத்தில் அம்மையார் அவர்கள் மறைந்த சில நாட்களில் உணர்ச்சி வசத்தால் உந்தப்பட்டு அவர்கள் எழுதிய கடிதங்களே இந்நூலாக மிளிர்கிறது. இக்கடிதங்கள் ஆரம்பத்தில் பிரசுரத்திற்காகவென்று எழுதப்பட்டவையல்ல. அம்மையார் அவர்களின் பன்மொழிப் புலமை, சீரிய பண்பு, தமிழ்த்தொண்டில் அவர்களுக்கிருந்த ஆர்வம் இவைகளைப்பற்றிச் சிறிதளவாவது வாசகர்கள் அறிந்து கொள்வதற்கான வசதியை இந்நூல் ஏற்படுத்திக் கொடுக்குமென நினைத்து, பிரசுரிக்க அனுமதி கோரினோம். அதோடு 'அவள் பிரிவு’ என்ற இந்நூலின் தலைப்புப் பற்றியும் சர்மாஜியின் சம்மதத்தைக் கோரி, பெற்றோம். எங்கள் வேண்டுகோளுக்கு இசைந்த அவர்களுக்கு எமது நன்றி." என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல் சுருக்கம்

வெ.சாமிநாத சர்மா - மங்களம்

வெ.சாமிநாத சர்மா - மங்களம் இருவருக்குமே இளம் வயதிலேயே திருமணம் நிகழ்ந்து விட்டது என்பதால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர். 42 ஆண்டுகள் இணைபிரியாது வாழந்தனர். வயதாகியும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்தனர். 1956-ல், புற்றுநோயால் உடல் நலிவுற்று மங்களம் காலமானார். சாமிநாத சர்மாவால் அந்தச் சோகத்தைத் தாங்க இயலவில்லை. தனது நினைவுகளை தன் நண்பருக்குக் கடிதங்களாக அனுப்பினார். உருக்கமான பல நிகழ்வுகளை அக்கடிதங்களில் விவரித்து ஆறுதலைடைந்தார். கணவனும் மனைவியும் எப்படி ஒருமித்து ஒரே மனதினராய் வாழ்ந்தனர் என்பதைப் பல சம்பவங்கள் மூலம் அக்கடிதங்களில் விளக்கியிருக்கிறார் வெ.சாமிநாத சர்மா. ஆங்காங்கே சில அனுபவ மொழிகளும் பொன் மொழிகளும் காணக்கிடைக்கின்றன.

இலக்கிய இடம்

கடித இலக்கிய வகையில் நினைவிலக்கியம் என்ற வகைமையில் 'அவள் பிரிவு’ நூல் முக்கிய இடம் பெறுகிறது.

உசாத்துணை

✅Finalised Page