under review

எஸ். சத்தியமூர்த்தி (எழுத்தாளர்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Line 1: Line 1:
[[File:Writer S.Sathyamoorthy.jpg|thumb|எழுத்தாளர் எஸ். சத்தியமூர்த்தி (இ.ஆ.ப. ஓய்வு)]]
[[File:Pooram.jpg|thumb|பூரம் சத்தியமூர்த்தி (படம் நன்றி: தென்றல் இதழ்)]]
எஸ். சத்தியமூர்த்தி (சீனிவாசன் சத்தியமூர்த்தி: பிறப்பு: டிசம்பர் 3, 1945) தமிழக எழுத்தாளர், கவிஞர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றினார். ‘இதயம் பேசுகிறது’ இதழில், ‘கடைசி பக்கம்’ என்ற தொடர் மூலம் பரவலான கவனம் பெற்றார். உலக அளவில் பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து பயணக் கட்டுரைகள் எழுதினார். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதினார்.
எஸ்.சத்தியமூர்த்தி(பூரம் சத்தியமூர்த்தி; 1937 - மே 12,2016) தமிழ் எழுத்தாளர். சிறார் கதைகள், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், நாடகங்கள் என்று எழுத்துலகில் செயல்பட்டவர் . ’சென்னை பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திப் பல சிறுகதை விமர்சனக் கூட்டங்களை நடத்தியவர்.
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
எஸ். சத்தியமூர்த்தி, டிசம்பர் 3, 1945 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில்,  சீனிவாசன் - நாமகிரி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்தவர், சென்னை லயோலா கல்லூரியில் பி. காம். படித்தார். ஐ.பி.எஸ். தேர்வு எழுதித் தேர்வானார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.  
சத்தியமூர்த்தி, ஏப்ரல் 21, 1937 அன்று, புதுக்கோட்டையில், டி.சீனிவாச ஐயங்கார்- சீதா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை, ஸ்ரீ குலபதி பாலையாப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பயின்று கணிதத்தில் பட்டம் பெற்றார்.
 
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
எஸ். சத்தியமூர்த்தி, சென்னை ரிசர்வ் வங்கியில் சில ஆண்டுகள் பணியாற்றினார். நாக்பூரில், மாநிலக் கணக்காய்வில், Deputy Accountant General ஆகப் பணிபுரிந்தார்.  கப்பல் வளர்ச்சித் துறையில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார். டெல்லியில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் இங்கிலாந்து, பர்மிங்காம், ஜெருசலேம், காபூல், பாக்தாத், ஸ்பெயின் போன்ற இடங்களில் நிதித் துறை ஆலோசகராகப் பணியாற்றினார். மனைவி ஹேமா சத்தியமூர்த்தி, அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தார். மகன்கள்: ஸ்ரீராம் சத்தியமூர்த்தி (விஞ்ஞானி); அரவிந்த் (நிதி ஆலோசகர்).
படிப்பை முடித்ததும் சென்னைத் துறைமுக டிரஸ்டில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அமுதன் சீனிவாசன், ராமானுஜன் என்று இரு மகன்களும், அனுசூயா, வேதவல்லி என இரு மகள்களும் பிறந்தனர். பூரம் சத்தியமூர்த்தி, சென்னைத் துறைமுகத்தின் தலைமை கண்காணிப்பாளராகப் (office superintendent) பதவி உயர்வு பெற்றார். 1992-ல் திடீரென ஏற்பட்ட கண்பார்வைக் குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றார். பணிஓய்வுக்குப் பின், மாணவர்களுக்கு வேதம் போதிக்கும் பணியைச் செய்து வந்தார்.
[[File:Sathyamurthy novels.jpg|thumb|எஸ். சத்தியமூர்த்தி நாவல்கள்]]
== கணித மேதை ராமானுஜமும் பூரமும் ==
 
கணித மேதை ராமானுஜன் அமர்ந்து பணி செய்த இருக்கையில், அதே பொறுப்பை ஏற்றுச் செய்தார் பூரம் சத்தியமூர்த்தி. அக்காலகட்டத்தில், ராமானுஜனின் மனைவி ஜானகி, நிதி ஆதாரம் இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்து, அவருக்கு அரசு ஓய்வூதியம்  கிடைக்க ஏற்பாடு செய்தார். ராமானுஜன் குடும்பத்திற்காக நிதி திரட்டி, அதனை ராமானுஜத்தின் மனைவி ஜானகியிடம் அளித்தார். ஜானகி பரிந்துரைத்த உறவினர் ஒருவருக்கு சென்னைத் துறைமுக டிரஸ்டில் வேலை வாய்ப்பளித்தார்.துறைமுக சேர்மன் அலுவலகத்தில் இருந்த பழைய, சிதைந்த ராமானுஜத்தின் ஓவியத்தை அதை முன்பு வரைந்த கோதண்டராமன் என்பவரைக் கொண்டு மீண்டும் எண்ணெய் ஓவியமாக வரையச் செய்தார். ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது ராமானுஜத்தைப் பற்றி ஓர் ஆங்கில நாடகத்தை எழுதி, இயக்கி, அரங்கேற்றினார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
எஸ். சத்தியமூர்த்தி கவிதைகளில் ஈடுபாடு கொண்டு கவிதைகள் எழுதினார். முதல் கவிதை, [[கண்ணதாசன்]] ஆசிரியராக இருந்த [[தென்றல்]] இதழில் வெளியானது. [[மஞ்சரி (இதழ்)|மஞ்சரி]] இதழ் கட்டுரைகளாலும், எழுத்தாளர் நாடோடி, [[சோமலெ]], [[பிலோ இருதயநாத்]] போன்றோரது எழுத்தாலும் ஈர்க்கப்பட்டு கட்டுரைகள் எழுதினார். சத்தியமூர்த்தியின் எழுத்தால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர் மணியன், தனது [[இதயம் பேசுகிறது (இதழ்)|இதயம் பேசுகிறது]] இதழின் கடைசி பக்கங்களை சத்தியமூர்த்திக்காக ஒதுக்கினார். அதில் தொடர்ந்து இருபது ஆண்டுகள் (1985-2005) கட்டுரைகள் எழுதினார் சத்தியமூர்த்தி. அவற்றில் சில பின்னர் நூல்களாக வெளிவந்தன.
====== தொடக்கம் ======
 
தாய் சீதா சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைச் சிறு வயது முதலே வாசித்து வந்தார் பூரம் சத்தியமூர்த்தி. மாமன்னர் கல்லூரியில் படிக்கும் காலத்தில்  சிறார்களுக்கான சிறுகதைகளை எழுத முற்பட்டார். தனது பிறந்த நட்சத்திரமான ’பூரம்’ என்பதைத் தன் பெயர் முன் இணைத்து, ‘பூரம் சத்தியமூர்த்தி’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.
எஸ். சத்தியமூர்த்தி, பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதினார். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா போன்ற பல நாடுகளுக்குப் பயணப்பட்டு அந்த அனுபவங்களைப் பயண நூல்களாக எழுதினார்.  
====== சிறுவர் இலக்கியம் ======
 
புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘டிங் டாங்' சிறார் இதழில் இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் வெளியாகின. தொடர்ந்து '[[கண்ணன் (இதழ்)|கண்ணன்]]' குழந்தைகள் இதழில் இவரது சிறுகதைகளும் நாடகங்களும் வெளிவந்தன.கோகுலம், ரத்னபாலா, ஆதவன், கல்கண்டு, [[பாப்பா|பாப்பா,]] மஞ்சரி, சின்ன கண்ணன் போன்ற சிறார் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. இவர் சிறார்களுக்காக எழுதிய முப்பத்தி ஐந்து சிறுவர் கதைகள், ‘அறிவூட்டும் கதைகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன.
== ஊடகம் ==
====== சிறுகதைகள் ======
 
[[கலைமகள்]] வண்ணக் கதைச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டார். இவர் எழுதிய `கருவளை” என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து [[கல்கி (வார இதழ்)|கல்கி]] வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியிலும் இவரது படைப்புகள் பரிசுகளைப் பெற்றன. சுதேசமித்திரன் இதழிலும் இவரது படைப்புகள் வெளியாகின.
* எஸ். சத்தியமூர்த்தி, சென்னைத் தொலைக்காட்சியில் 50 முறைகளுக்கும் மேல் வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்தினார்.
பூரம் சத்தியமூர்த்தியின் சிறுகதைகளை [[கி. வா. ஜகந்நாதன்|கி.வா.ஜ]]., [[அழ.வள்ளியப்பா]], [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[கே.ஆர். வாசுதேவன்|கே. ஆர். வாசுதேவன்]], கவிஞர் பீஷ்மன், [[வாசவன்]] உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர். வெவ்வேறு இதழ்களில் வெளியான இவரது சில கதைகளைத் தேர்ந்தெடுத்து, ‘பூரம் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் ‘சாந்தி நூலகம்’ வெளியிட்டுள்ளது.
* சென்னைத் தொலைக்காட்சியில் பேச்சுத் தமிழ், வண்ணத் தமிழ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்.
====== நாடகம், ஆய்வு ======
* வானொலியில் பல தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்.  
முறையாக வேதம் கற்றவர் பூரம் சத்தியமூர்த்தி. வேதம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘சப்தகிரி’ இதழில் எழுதியுள்ளார். பத்திரிகைகளுக்காகவும் வானொலிக்காகவும் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1990-ல், அகில இந்திய வானொலி நடத்திய வானொலிப் போட்டியில், இவரது நாடகம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.
* வானொலிக்காகப் பலரைப் பேட்டி கண்டார்.
பூரம் சத்தியமூர்த்தி, சிறார்களுக்காக 51 சிறுகதைகளும், பொது வாசிப்புக்குரிய 54 பொதுச் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் நாடகங்களும் அடக்கம். ஜோதிடம், ஆன்மிகம் சார்ந்து தனி நூல்கள் சிலவற்றையும் இவர் எழுதியுள்ளார்.
 
== அமைப்புப்பணிகள் ==
====== சென்னை பூரம் சிறுகதை ரசிகர் மன்றம் ======
வாசகர்களிடையே சிறுகதை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், சிறுகதை பற்றிய புதிய பார்வைக்கு, விமர்சன வளர்ச்சிக்கு வித்திடுவதற்காகவும், சென்னை திருவல்லிக்கேணியில், தனது இல்லத்தில், 'பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கினார் பூரம் சத்தியமூர்த்தி. அதில் சிறுகதை ஆர்வலர்களையும், எழுத்தாளர்களையும் வாரந்தோறும் வரவழைத்து, சிறுகதைகளை வாசிக்கச் சொல்லி, திறனாய்வு செய்யும் பணியினை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டங்களில் எழுத்தாளர்கள் [[இந்திரா பார்த்தசாரதி]], சாருகேசி, [[பாக்கியம் ராமசாமி]], ராணி மைந்தன், மதிஒளி சரஸ்வதி, கூத்தபிரான், இளையவன், கொத்தமங்கலம் விஸ்வநாதன், சுப்ர.பாலன், பி. வெங்கட்ராமன், காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, கே.ஜி. ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.  
====== ஒலி நூல் ======
பூரம் சத்தியமூர்த்தியின் தேர்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகள் ‘நலம் தரும் சொல்’ மற்றும் ‘கருவளை’ என்ற அவரது சிறுகதைகளின் பெயரிலேயே ஒலி நூலாக வெளியாகியுள்ளன. பாம்பே கண்ணன், அவற்றைத் தயாரித்தளித்தார்.
== பரிசுகள்/விருதுகள் ==
* சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான நாடகப் போட்டியில் முதல் பரிசு
* சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும்
* கண்ணன் இதழ் நடத்திய தொடர்கதைப் போட்டியில் முதல் பரிசு (கறுப்புக்கண்ணாடி தொடர்கதை, 1958)
* கலைமகள் ‘வண்ணச் சிறுகதைப் போட்டி’யில் முதல் பரிசு (கருவளை)
* கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியில் பரிசு
* பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியில் பரிசு
* அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு
* அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' விருது
* 'வித்யா வேத ரத்னா' பட்டம்
*ஆர்.வி.அறக்கட்டளை சார்பில் குழந்தை இலக்கியப் பணிக்காக, பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி மற்றும் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது
== மறைவு ==
உடல்நலக்குறைவு காரணமாக, பூரம் சத்தியமூர்த்தி,  மே 12, 2016 அன்று, சென்னை திருவல்லிக்கேணியில் காலமானார்.
== ஆவணம் ==
பூரம் சத்தியமூர்த்தியைப் பற்றி ‘எழுத்துலக இமயம் பூரம் சத்தியமூர்த்தி’ என்ற தலைப்பில் ஆவணப்படத்தை திருச்சியைச் சேர்ந்த முனைவர் தாமோதரக்கண்ணன் தயாரித்துள்ளார்
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
எஸ். சத்தியமூர்த்தி, பத்தி எழுத்தாளர். தனது பணி மற்றும் அனுபவங்களைக் கொண்டு வெகு ஜன இதழ்களில் சுவாரஸ்யமான நடையில் கட்டுரைகள், தொடர்கள் எழுதினார். எதையும் சுவையாகவும் சுருக்கமாகவும் சொல்வதைத் தனது எழுத்து முறையாகக் கொண்டார். தனது கட்டுரைகளின் நகைச்சுவைக்காக [[ஜெயகாந்தன்]] தொடங்கி [[சிவசங்கரி]], [[சுஜாதா]], [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை|எஸ்.ஏ.பி]]., [[கமல்ஹாசன்]] உள்ளிட்ட பலரது பாராட்டுதல்களைப் பெற்றார். பல்வேறு வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களது அன்றாட வாழ்வியல் அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்தார்.  
[[ஆர்வி]] போன்ற நன்னோக்கம் கொண்ட பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர்களின் வரிசையில் வைத்து மதிப்பிடத்தகுந்தவர் பூரம் சத்தியமூர்த்தி. தன்னுடைய சிறுகதைகள் பற்றி இவர், ““இலக்கியங்கள் என்பவை சாதாரண பொழுதுபோக்கிற்கு அல்ல; அவை சமூகத்தைச் செம்மைப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த சாதனங்கள்” என்றும், “மொழியில் இலக்கிய வளர்ச்சி இருந்தால்தான் அந்த மொழி வளர்கிறது என்று பொருள். இலக்கியங்கள் வளரவில்லை என்றால் நாட்டிலே எந்த வளர்ச்சியும் இருக்காது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார் .
[[File:S. Sathyamurthy Books.jpg|thumb|எஸ். சத்தியமூர்த்தி நூல்கள்]]
[[File:Pooram sirugathaikal.jpg|thumb|பூரம் சிறுகதைகள்]]
 
== நூல்கள் ==
== நூல்கள் ==
 
====== சிறுகதைத் தொகுப்புகள் ======
===== சிறுகதைத் தொகுப்பு =====
* அறிவூட்டும் கதைகள்
 
* பூரம் சிறுகதைகள்
* வானவில்
====== கட்டுரை நூல்கள் ======
* கரையைத் தேடிய அலைகள்
* எகிப்து நாட்டு பிரமிடுகள்
 
* ஓடு மனச்சக்தி
===== நாவல் =====
* சோதிடக்கலையைப் புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள்
 
* கைரேகை சோதிடம் –புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள்
* ஆயிரம் நிலவே வா
* பாரத நாட்டு இசைக்கருவிகள்
* அம்மா வந்தாச்சு
====== ஒலி நூல்கள் ======
 
* நலம் தரும் சொல் (ஒலி நூல்)
===== கட்டுரை நூல்கள் =====
* கருவளை (ஒலி நூல்)
 
====== ஆங்கில நூல் ======
* கடைசிப் பக்கம்
* The Musical Instruments of India
* சின்னச் சின்னப் பூக்கள்
* கண் சிமிட்டல்கள்
* கதம்பச்சரம்
* தூறல்கள்
* மின்னல்கள்
* கிளிஞ்சல்கள்
* அலைகள்
* எதிர்கால யுத்தங்கள்
* பட்டாம்பூச்சிகள்
 
===== பயண நூல்கள் =====
 
* பாரத உலா
* மூன்று நாடுகளில் முன்னூறு நாட்கள்
* ஐரோப்பாவில் ஐந்து மாதங்கள்
* மயக்கும் மலேசியா
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5033 எழுத்தாளர் பூரம் சத்தியமூர்த்தி:தென்றல் இதழ் கட்டுரை]
* [https://www.amazon.in/s?i=digital-text&rh=p_27%3AS.+Sathyamoorthy&s=relevancerank&text=S.+Sathyamoorthy&ref=dp_byline_sr_ebooks_1 எஸ். சத்தியமூர்த்தி நூல்கள்: அமேசான் தளம்]
* [https://play.google.com/store/books/details?id=Aq4_EAAAQBAJ&rdid=book-Aq4_EAAAQBAJ&rdot=1&source=gbs_vpt_read&pcampaignid=books_booksearch_viewport தன்னம்பிக்கைத் தமிழர்கள்-பூரம் சத்தியமூர்த்தி: என்.சி. மோகன்தாஸ்]
* [https://www.commonfolks.in/books/sathyamoorthy எஸ். சத்தியமூர்த்தி நூல்கள்: காமன்ஃபோல்க்ஸ் தளம்]  
* [https://www.hindutamil.in/news/tamilnadu/78240-.html பூரம் சத்தியமூர்த்தி: ராமானுஜத்தின் குடும்பத்துக்கு உதவிய எழுத்தாளர்: இந்து தமிழ் திசை]
* சூரியன் சந்திப்பு-நேர்காணல்: தொகுதி-2, ஆர்னிகா நாசர், மணிவாசகர் நூலகம், சென்னை - 108
* [https://www.madrasmusings.com/vol-27-no-4/the-man-who-helped-ramanujans-widow/ The man who helped Ramanujan’s widow]
* [https://www.newindianexpress.com/cities/chennai/2009/jul/16/now-listen-to-short-stories-67914.html Now, listen to short stories]
* [https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0825-writers-pooram-revathi-to-get-rv-award.html எழுத்தாளர்கள் பூரம், ரேவதிக்கு ஆர்.வி. விருது]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=1521854 பூரம் சத்தியமூர்த்தி அஞ்சலி]
* [https://www.youtube.com/watch?v=9XLazFOgwB8&ab_channel=06bombaykannan பூரம் சத்தியமூர்த்தியின் சிறுகதை ஒலி வடிவில்]
* [https://aravind.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/ பூரம் சத்தியமூர்த்தியின் ’நலம் தரும் சொல்’ ஒலி நூல் விமர்சனம்]
* [https://aravind.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/ பூரம் சத்திய மூர்த்தியின் ’கருவளை’ ஒலி நூல் விமர்சனம்]
* [https://aravindsham.blogspot.com/2009/08/blog-post_22.html பிரியவாதினி - பூரம் சத்தியமூர்த்தியின் சிறுகதை]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Revision as of 14:37, 3 July 2023

பூரம் சத்தியமூர்த்தி (படம் நன்றி: தென்றல் இதழ்)

எஸ்.சத்தியமூர்த்தி: (பூரம் சத்தியமூர்த்தி; 1937 - மே 12,2016) தமிழ் எழுத்தாளர். சிறார் கதைகள், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், நாடகங்கள் என்று எழுத்துலகில் செயல்பட்டவர் . ’சென்னை பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திப் பல சிறுகதை விமர்சனக் கூட்டங்களை நடத்தியவர்.

பிறப்பு, கல்வி

சத்தியமூர்த்தி, ஏப்ரல் 21, 1937 அன்று, புதுக்கோட்டையில், டி.சீனிவாச ஐயங்கார்- சீதா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை, ஸ்ரீ குலபதி பாலையாப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பயின்று கணிதத்தில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் சென்னைத் துறைமுக டிரஸ்டில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அமுதன் சீனிவாசன், ராமானுஜன் என்று இரு மகன்களும், அனுசூயா, வேதவல்லி என இரு மகள்களும் பிறந்தனர். பூரம் சத்தியமூர்த்தி, சென்னைத் துறைமுகத்தின் தலைமை கண்காணிப்பாளராகப் (office superintendent) பதவி உயர்வு பெற்றார். 1992-ல் திடீரென ஏற்பட்ட கண்பார்வைக் குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றார். பணிஓய்வுக்குப் பின், மாணவர்களுக்கு வேதம் போதிக்கும் பணியைச் செய்து வந்தார்.

கணித மேதை ராமானுஜமும் பூரமும்

கணித மேதை ராமானுஜன் அமர்ந்து பணி செய்த இருக்கையில், அதே பொறுப்பை ஏற்றுச் செய்தார் பூரம் சத்தியமூர்த்தி. அக்காலகட்டத்தில், ராமானுஜனின் மனைவி ஜானகி, நிதி ஆதாரம் இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்து, அவருக்கு அரசு ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார். ராமானுஜன் குடும்பத்திற்காக நிதி திரட்டி, அதனை ராமானுஜத்தின் மனைவி ஜானகியிடம் அளித்தார். ஜானகி பரிந்துரைத்த உறவினர் ஒருவருக்கு சென்னைத் துறைமுக டிரஸ்டில் வேலை வாய்ப்பளித்தார்.துறைமுக சேர்மன் அலுவலகத்தில் இருந்த பழைய, சிதைந்த ராமானுஜத்தின் ஓவியத்தை அதை முன்பு வரைந்த கோதண்டராமன் என்பவரைக் கொண்டு மீண்டும் எண்ணெய் ஓவியமாக வரையச் செய்தார். ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது ராமானுஜத்தைப் பற்றி ஓர் ஆங்கில நாடகத்தை எழுதி, இயக்கி, அரங்கேற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

தாய் சீதா சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைச் சிறு வயது முதலே வாசித்து வந்தார் பூரம் சத்தியமூர்த்தி. மாமன்னர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சிறார்களுக்கான சிறுகதைகளை எழுத முற்பட்டார். தனது பிறந்த நட்சத்திரமான ’பூரம்’ என்பதைத் தன் பெயர் முன் இணைத்து, ‘பூரம் சத்தியமூர்த்தி’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

சிறுவர் இலக்கியம்

புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘டிங் டாங்' சிறார் இதழில் இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் வெளியாகின. தொடர்ந்து 'கண்ணன்' குழந்தைகள் இதழில் இவரது சிறுகதைகளும் நாடகங்களும் வெளிவந்தன.கோகுலம், ரத்னபாலா, ஆதவன், கல்கண்டு, பாப்பா, மஞ்சரி, சின்ன கண்ணன் போன்ற சிறார் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. இவர் சிறார்களுக்காக எழுதிய முப்பத்தி ஐந்து சிறுவர் கதைகள், ‘அறிவூட்டும் கதைகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன.

சிறுகதைகள்

கலைமகள் வண்ணக் கதைச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டார். இவர் எழுதிய `கருவளை” என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியிலும் இவரது படைப்புகள் பரிசுகளைப் பெற்றன. சுதேசமித்திரன் இதழிலும் இவரது படைப்புகள் வெளியாகின. பூரம் சத்தியமூர்த்தியின் சிறுகதைகளை கி.வா.ஜ., அழ.வள்ளியப்பா, கல்கி, கே. ஆர். வாசுதேவன், கவிஞர் பீஷ்மன், வாசவன் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர். வெவ்வேறு இதழ்களில் வெளியான இவரது சில கதைகளைத் தேர்ந்தெடுத்து, ‘பூரம் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் ‘சாந்தி நூலகம்’ வெளியிட்டுள்ளது.

நாடகம், ஆய்வு

முறையாக வேதம் கற்றவர் பூரம் சத்தியமூர்த்தி. வேதம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘சப்தகிரி’ இதழில் எழுதியுள்ளார். பத்திரிகைகளுக்காகவும் வானொலிக்காகவும் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1990-ல், அகில இந்திய வானொலி நடத்திய வானொலிப் போட்டியில், இவரது நாடகம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. பூரம் சத்தியமூர்த்தி, சிறார்களுக்காக 51 சிறுகதைகளும், பொது வாசிப்புக்குரிய 54 பொதுச் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் நாடகங்களும் அடக்கம். ஜோதிடம், ஆன்மிகம் சார்ந்து தனி நூல்கள் சிலவற்றையும் இவர் எழுதியுள்ளார்.

அமைப்புப்பணிகள்

சென்னை பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்

வாசகர்களிடையே சிறுகதை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், சிறுகதை பற்றிய புதிய பார்வைக்கு, விமர்சன வளர்ச்சிக்கு வித்திடுவதற்காகவும், சென்னை திருவல்லிக்கேணியில், தனது இல்லத்தில், 'பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கினார் பூரம் சத்தியமூர்த்தி. அதில் சிறுகதை ஆர்வலர்களையும், எழுத்தாளர்களையும் வாரந்தோறும் வரவழைத்து, சிறுகதைகளை வாசிக்கச் சொல்லி, திறனாய்வு செய்யும் பணியினை மேற்கொண்டார். இந்தக் கூட்டங்களில் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, சாருகேசி, பாக்கியம் ராமசாமி, ராணி மைந்தன், மதிஒளி சரஸ்வதி, கூத்தபிரான், இளையவன், கொத்தமங்கலம் விஸ்வநாதன், சுப்ர.பாலன், பி. வெங்கட்ராமன், காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, கே.ஜி. ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஒலி நூல்

பூரம் சத்தியமூர்த்தியின் தேர்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகள் ‘நலம் தரும் சொல்’ மற்றும் ‘கருவளை’ என்ற அவரது சிறுகதைகளின் பெயரிலேயே ஒலி நூலாக வெளியாகியுள்ளன. பாம்பே கண்ணன், அவற்றைத் தயாரித்தளித்தார்.

பரிசுகள்/விருதுகள்

  • சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான நாடகப் போட்டியில் முதல் பரிசு
  • சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும்
  • கண்ணன் இதழ் நடத்திய தொடர்கதைப் போட்டியில் முதல் பரிசு (கறுப்புக்கண்ணாடி தொடர்கதை, 1958)
  • கலைமகள் ‘வண்ணச் சிறுகதைப் போட்டி’யில் முதல் பரிசு (கருவளை)
  • கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியில் பரிசு
  • பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியில் பரிசு
  • அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு
  • அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' விருது
  • 'வித்யா வேத ரத்னா' பட்டம்
  • ஆர்.வி.அறக்கட்டளை சார்பில் குழந்தை இலக்கியப் பணிக்காக, பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி மற்றும் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது

மறைவு

உடல்நலக்குறைவு காரணமாக, பூரம் சத்தியமூர்த்தி, மே 12, 2016 அன்று, சென்னை திருவல்லிக்கேணியில் காலமானார்.

ஆவணம்

பூரம் சத்தியமூர்த்தியைப் பற்றி ‘எழுத்துலக இமயம் பூரம் சத்தியமூர்த்தி’ என்ற தலைப்பில் ஆவணப்படத்தை திருச்சியைச் சேர்ந்த முனைவர் தாமோதரக்கண்ணன் தயாரித்துள்ளார்

இலக்கிய இடம்

ஆர்வி போன்ற நன்னோக்கம் கொண்ட பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர்களின் வரிசையில் வைத்து மதிப்பிடத்தகுந்தவர் பூரம் சத்தியமூர்த்தி. தன்னுடைய சிறுகதைகள் பற்றி இவர், ““இலக்கியங்கள் என்பவை சாதாரண பொழுதுபோக்கிற்கு அல்ல; அவை சமூகத்தைச் செம்மைப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த சாதனங்கள்” என்றும், “மொழியில் இலக்கிய வளர்ச்சி இருந்தால்தான் அந்த மொழி வளர்கிறது என்று பொருள். இலக்கியங்கள் வளரவில்லை என்றால் நாட்டிலே எந்த வளர்ச்சியும் இருக்காது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார் .

பூரம் சிறுகதைகள்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • அறிவூட்டும் கதைகள்
  • பூரம் சிறுகதைகள்
கட்டுரை நூல்கள்
  • எகிப்து நாட்டு பிரமிடுகள்
  • ஓடு மனச்சக்தி
  • சோதிடக்கலையைப் புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள்
  • கைரேகை சோதிடம் –புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள்
  • பாரத நாட்டு இசைக்கருவிகள்
ஒலி நூல்கள்
  • நலம் தரும் சொல் (ஒலி நூல்)
  • கருவளை (ஒலி நூல்)
ஆங்கில நூல்
  • The Musical Instruments of India

உசாத்துணை


✅Finalised Page