under review

ஆனந்த்குமார்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 25: Line 25:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*[https://www.jeyamohan.in/161080/ ஆனந்த்குமார் ‘அணிலோசை’- மயிலாடுதுறை பிரபு, ஜெயமோகன்.இன், ஜனவரி 08, 2022]
*[https://www.jeyamohan.in/161080/ ஆனந்த்குமார் ‘அணிலோசை’- மயிலாடுதுறை பிரபு, ஜெயமோகன்.இன், ஜனவரி 08, 2022]
*[http://www.kavithaigal.in/2022/05/ கவிதைகள் சிறப்பிதழ் - ஆனந்த்குமார், கவிதைகள்.இன், மே 2022]
*[https://www.jeyamohan.in/166957/ குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார், ஜெயமோகன்.இன், ஜூன் 14, 2022]
*[https://www.jeyamohan.in/166957/ குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார், ஜெயமோகன்.இன், ஜூன் 14, 2022]
== வெளி இணைப்புகள் ==
*[https://www.youtube.com/watch?v=l0-FeABbrCY ஆனந்த் குமார் ஏற்புரை | குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது 2022 | Anandh Kumar, யூடியூப்.காம், ஜூன் 12, 2022]
*[https://www.youtube.com/watch?v=l0-FeABbrCY ஆனந்த் குமார் ஏற்புரை | குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது 2022 | Anandh Kumar, யூடியூப்.காம், ஜூன் 12, 2022]
*[http://www.kavithaigal.in/2022/05/ கவிதைகள் சிறப்பிதழ் - ஆனந்த்குமார், கவிதைகள்.இன், மே 2022]
*[https://www.jeyamohan.in/149887/ தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள், ஜெயமோகன்.இன், ஆகஸ்ட் 08, 2021]
*[https://www.jeyamohan.in/149887/ தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள், ஜெயமோகன்.இன், ஆகஸ்ட் 08, 2021]
*[https://www.jeyamohan.in/164702/ பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன், ஜெயமோகன்.இன், ஏப்ரல் 21, 2022]
*[https://www.jeyamohan.in/164702/ பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன், ஜெயமோகன்.இன், ஏப்ரல் 21, 2022]

Revision as of 12:38, 10 June 2023

To read the article in English: Anandkumar. ‎

ஆனந்த்குமார்

ஆனந்த்குமார் (மார்ச் 22, 1984) (ஆனந்த் குமார்) தமிழில் எழுதிவரும் கவிஞர். கோவையில் புகைப்பட நிபுணராக உள்ளார். கவிதைகள்.இன் இணைய இதழின் பொறுப்பாசிரியர்.

பிறப்பு, கல்வி

Anand3.jpg

ஆனந்த்குமார் நாகர்கோயிலில் மார்ச் 22, 1984 அன்று சதானந்தன் - கனகம்மா இணையருக்கு பிறந்தார். நாகர்கோயில் தேசிகவினாயகம் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அஞ்சுகிராமம் கேப் பொறியியல் கல்லூரியில் 2005-ல் கணிப்பொறியியல் முடித்தார். கணிப்பொறியியலாளராக பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது 2022

மனைவி பெயர் ஜெயஸ்ரீ. ஜூலை 3, 2011 அன்று மணநாள். இரு குழந்தைகள் - அஜய் கிருஷ்ணா, அர்ஜூன் கிருஷ்ணா. கோவையில் புகைப்பட நிபுணராக உள்ளார்.

படைப்புலகம்

பல்வேறு பெயர்களில் தொடக்க காலத்தில் எழுதியிருந்தாலும், தீவிரமாக எழுத ஆரம்பித்தது 2020- ல் என ஆனந்த்குமார் கூறுகிறார். சொல்வனம் இதழில் வந்த 'குட்டி வீடு' கவிதையை முதல் படைப்பு என்கிறார். 2020-ல் எழுதப்பட்ட குட்டிவீடு கவிதை மார்ச், 2021-ல் வெளியாகியது.

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என அசோகமித்திரன், வைக்கம் முகமது பஷீர், அ. முத்துலிங்கம் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். கவிதையில் தேவதேவன், வண்ணதாசன், தேவதச்சன் ஆகியோரை முன்னோடிகளாக கருதுகிறார்.

விருதுகள், ஏற்புகள்

Anan1-1024x1024.jpg

ஆனந்த்குமாருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த்குமார் கவிதைகளுக்காக கவிதை இணையதளம் ஒரு சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. (இணைப்பு)

இலக்கிய இடம்

ஆனந்த்.jpg

’ஆனந்த்குமாரின் கவிதைகள் எளிமையான மொழியில் நம்மிடம் உரையாடுபவை. வாசகனாக கவிதைகளின் மொழிச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல், அதன் மையத்தை நோக்கி எந்தவிதச் சிதறல்களும் இல்லாமல் மனதைக் குவிக்கமுடிகிறது. பல கவிதைகள் எளிமையான ஒரு சித்திரத்தை நம்முன் நிறுத்தி, சில வரிகளில் கவித்துவ உச்சத்தை அடைந்து, முழுமையான வாசிப்பனுபவம் அளிப்பவை’ என விமர்சகர் பாலாஜி ராஜு குறிப்பிடுகிறார்.

நூல்கள்

  • டிப் டிப் டிப் கவிதைத்தொகுப்பு - தன்னறம் வெளியீடு 2021[1]

ஆவணப்படங்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

✅Finalised Page