லக்ஷ்மி பாலகிருஷ்ணன்: Difference between revisions
No edit summary |
|||
| Line 17: | Line 17: | ||
(வளர்ப்பு)தந்தையின் முதலாமாண்டு நினைவு நாளிற்கு அவரைப் பற்றிய நினைவலைகளைத் தொகுத்து ’அப்பா - நினைவுகளின் தொகுப்பு’ எனும் சிறு நூலாக வெளியிட்டார். | (வளர்ப்பு)தந்தையின் முதலாமாண்டு நினைவு நாளிற்கு அவரைப் பற்றிய நினைவலைகளைத் தொகுத்து ’அப்பா - நினைவுகளின் தொகுப்பு’ எனும் சிறு நூலாக வெளியிட்டார். | ||
ஆட்டிச உலகை ஒரு அன்னையாக நான் உணர்ந்துகொண்ட விதத்தினை வெளிப்படுத்திய நூல் 'எழுதாப் பயணம்-ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்'. கனிவமுதன் எனும் ஆட்டிச நிலைச் சிறுவனின் வளர்ச்சிப் பாதையை அவனது அன்னையின் பார்வையில் விவரிக்கும் தன்வரலாற்றுத் தன்மை கொண்ட நூல். ஆட்டிசக் குறைபாடு பற்றிய அதிகம் விழிப்புணர்வில்லாத, அறிவுசார் குறைபாடுகளை இயல்பாக ஏற்கத் தயங்கும் சமூகத்தில் ஒரு குழந்தையும், அதன் பெற்றோரும் எதிர்கொள்ளும் சவால்களை, அப்பயணத்தில் அறிந்துகொண்டவற்றை, மகிழ்வுத் தருணங்களை, நேர்மறையாக சித்த்ரிக்கிறார் லக்ஷ்மி. | |||
லக்ஷ்மியின் முதல் நாவல் ஆனந்தவல்லி தஞ்சை மராட்டிய அரச வம்சத்தின் இறுதி நாட்களைப் பின்னணியாகக் கொண்ட, சில உண்மைச் சம்பவங்களின் மீது கட்டப்பட்ட புனைவு. தஞ்சை மராட்டிய வரலாற்றின் பதிவேடுகளான மோடி ஆவணங்களைத் தொகுத்த [[கா.ம.வேங்கடராமையா|கா.ம. வேங்கடராமையா]]வின் குறிப்புரைகள், ஆய்வு நூல்களின் துணை கொண்டு எழுதப்பட்டது. | லக்ஷ்மியின் முதல் நாவல் ஆனந்தவல்லி தஞ்சை மராட்டிய அரச வம்சத்தின் இறுதி நாட்களைப் பின்னணியாகக் கொண்ட, சில உண்மைச் சம்பவங்களின் மீது கட்டப்பட்ட புனைவு. தஞ்சை மராட்டிய வரலாற்றின் பதிவேடுகளான மோடி ஆவணங்களைத் தொகுத்த [[கா.ம.வேங்கடராமையா|கா.ம. வேங்கடராமையா]]வின் குறிப்புரைகள், ஆய்வு நூல்களின் துணை கொண்டு எழுதப்பட்டது. | ||
| Line 30: | Line 28: | ||
நேஷனல் புக் ட்ரஸ்டிற்காக இரண்டு நாவல்கள் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார். | நேஷனல் புக் ட்ரஸ்டிற்காக இரண்டு நாவல்கள் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார். | ||
ஆட்டிசக் குழந்தைகளின் ஆரம்பநிலையில் பெற்றோரின் அச்சத்தை போக்கி வழிகாட்டும் பணிய லக்ஷ்மி கணவர் பாலபாரதியுடன் இணைந்து செய்து வருகிறார். | |||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
"கனியின் அம்மா லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய சிறுநூல் ‘எழுதாப்பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்’. ஆட்டிசம் பற்றி எழுதப்பட்ட தன்கதை. இந்நூலின் முதன்மையான சிறப்பே இது ஓர் அன்னையின் அனுபவம் என்பதுதான். சிக்கலில்லாத நடையில், செயற்கையான சொல்லாட்சிகளோ பாவனைகளோ இல்லாமல். நேரடியாக உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே ஆட்டிசம் பற்றிய நூல் என்பதற்கு அப்பால் ஒரு வாழ்க்கைச்சித்திரம் என்றவகையிலும் முக்கியமானது இந்நூல்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். "இது ஒரு நிகரற்ற வாழ்க்கை சித்திரம்" என்று எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். | "கனியின் அம்மா லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய சிறுநூல் ‘எழுதாப்பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்’. ஆட்டிசம் பற்றி எழுதப்பட்ட தன்கதை. இந்நூலின் முதன்மையான சிறப்பே இது ஓர் அன்னையின் அனுபவம் என்பதுதான். சிக்கலில்லாத நடையில், செயற்கையான சொல்லாட்சிகளோ பாவனைகளோ இல்லாமல். நேரடியாக உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே ஆட்டிசம் பற்றிய நூல் என்பதற்கு அப்பால் ஒரு வாழ்க்கைச்சித்திரம் என்றவகையிலும் முக்கியமானது இந்நூல்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். "இது ஒரு நிகரற்ற வாழ்க்கை சித்திரம்" என்று எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். | ||
மாலன் "லக்ஷ்மி கால இழைகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டு வந்தாலும் வாசிப்பவனுக்கு குழப்பமில்லாமல் இட்டுச் செல்கிறார். இது ஜீவன் உள்ள எழுத்து" என்று குறிப்பிடுகிறார். | மாலன் அன்னத்வல்லி "லக்ஷ்மி கால இழைகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டு வந்தாலும் வாசிப்பவனுக்கு குழப்பமில்லாமல் இட்டுச் செல்கிறார். இது ஜீவன் உள்ள எழுத்து" என்று குறிப்பிடுகிறார். | ||
== விருதுகள், பரிசுகள் == | == விருதுகள், பரிசுகள் == | ||
Revision as of 18:38, 8 April 2023
லக்ஷ்மி பாலகிருஷ்ணன் (பிறப்பு : ஆகஸ்ட் 25, 1978) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சிறப்புக்கல்வி ஆசிரியர், மனநல ஆலோசகர்
பிறப்பு, கல்வி
லக்ஷ்மி ஆகஸ்ட் 25, 1978 அன்று சென்னையில் ராஜலட்சுமி-ராஜகோபாலன் இணையருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். இரண்டரை வயதிலிருந்து தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பெரியம்மா பெரியப்பாவுடன் வளர்ந்தார். வளர்ப்புத் தந்தையான பெரியப்பா ஆரம்பப்பள்ளி ஆசிரியர். பெரியப்பா ஆரம்பப் பள்ளி ஆசிரியர். அவரது ஊக்கத்தால் சிறு வயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார்.
தனி வாழ்க்கை
லக்ஷ்மி மென்பொருள் துறையில் பதிமூன்று ஆண்டுகள் பணிசெய்தார். Newgen Software Technologies, Arkin Systems, CS Software Solutions ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டுக் கடைசி பத்தாண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.
லக்ஷ்மி யெஸ். பாலபாரதியை மணம் செய்துகொண்டார். பாலபாரதி எழுத்தாளர். மகன் பா.ல.கனிவமுதன்.
இலக்கிய வாழ்க்கை
லக்ஷ்மி கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவரது கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. வாரமலர், 'கதவு' காலாண்டிதழ் போன்றவற்றில் அவரது பதினைந்து சிறுகதைகள் வெளிவந்தன.
(வளர்ப்பு)தந்தையின் முதலாமாண்டு நினைவு நாளிற்கு அவரைப் பற்றிய நினைவலைகளைத் தொகுத்து ’அப்பா - நினைவுகளின் தொகுப்பு’ எனும் சிறு நூலாக வெளியிட்டார்.
ஆட்டிச உலகை ஒரு அன்னையாக நான் உணர்ந்துகொண்ட விதத்தினை வெளிப்படுத்திய நூல் 'எழுதாப் பயணம்-ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்'. கனிவமுதன் எனும் ஆட்டிச நிலைச் சிறுவனின் வளர்ச்சிப் பாதையை அவனது அன்னையின் பார்வையில் விவரிக்கும் தன்வரலாற்றுத் தன்மை கொண்ட நூல். ஆட்டிசக் குறைபாடு பற்றிய அதிகம் விழிப்புணர்வில்லாத, அறிவுசார் குறைபாடுகளை இயல்பாக ஏற்கத் தயங்கும் சமூகத்தில் ஒரு குழந்தையும், அதன் பெற்றோரும் எதிர்கொள்ளும் சவால்களை, அப்பயணத்தில் அறிந்துகொண்டவற்றை, மகிழ்வுத் தருணங்களை, நேர்மறையாக சித்த்ரிக்கிறார் லக்ஷ்மி.
லக்ஷ்மியின் முதல் நாவல் ஆனந்தவல்லி தஞ்சை மராட்டிய அரச வம்சத்தின் இறுதி நாட்களைப் பின்னணியாகக் கொண்ட, சில உண்மைச் சம்பவங்களின் மீது கட்டப்பட்ட புனைவு. தஞ்சை மராட்டிய வரலாற்றின் பதிவேடுகளான மோடி ஆவணங்களைத் தொகுத்த கா.ம. வேங்கடராமையாவின் குறிப்புரைகள், ஆய்வு நூல்களின் துணை கொண்டு எழுதப்பட்டது.
'மானசா' மகாபாரத்தின் மானசா என்னும் நாகர் குலப்பேண்ணின் பாத்திரத்தை மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட நாவல்.
'நெல் விளைந்த கதை' எனும் சிறார் நாவல், மானசா
சிறார்களின் கற்றல் குறைபாடு(Learning Disability) குறித்த 'கவனப் பிழை' தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடாக வந்தது.
நேஷனல் புக் ட்ரஸ்டிற்காக இரண்டு நாவல்கள் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஆட்டிசக் குழந்தைகளின் ஆரம்பநிலையில் பெற்றோரின் அச்சத்தை போக்கி வழிகாட்டும் பணிய லக்ஷ்மி கணவர் பாலபாரதியுடன் இணைந்து செய்து வருகிறார்.
இலக்கிய இடம்
"கனியின் அம்மா லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய சிறுநூல் ‘எழுதாப்பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்’. ஆட்டிசம் பற்றி எழுதப்பட்ட தன்கதை. இந்நூலின் முதன்மையான சிறப்பே இது ஓர் அன்னையின் அனுபவம் என்பதுதான். சிக்கலில்லாத நடையில், செயற்கையான சொல்லாட்சிகளோ பாவனைகளோ இல்லாமல். நேரடியாக உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே ஆட்டிசம் பற்றிய நூல் என்பதற்கு அப்பால் ஒரு வாழ்க்கைச்சித்திரம் என்றவகையிலும் முக்கியமானது இந்நூல்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். "இது ஒரு நிகரற்ற வாழ்க்கை சித்திரம்" என்று எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
மாலன் அன்னத்வல்லி "லக்ஷ்மி கால இழைகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டு வந்தாலும் வாசிப்பவனுக்கு குழப்பமில்லாமல் இட்டுச் செல்கிறார். இது ஜீவன் உள்ள எழுத்து" என்று குறிப்பிடுகிறார்.
விருதுகள், பரிசுகள்
- சிறந்த நாவலுக்கான விருது- புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி (ஆனந்தவல்லி நாவலுக்காக-)
- மக்கள்கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருது -த.மு.க.இ. (ஆனந்தவல்லி நாவலுக்காக)
படைப்புகள்
எழுதாப்பயணம்
ஆனந்தவல்லி
மான்சா
சிறார் நூல்கள்
உசாத்துணை
- எழுதாப் பயணம் பற்றி ஜெயமோகன்
- பொம்மை ராஜாக்களும் உடன்கட்டைப் பெண்களும்-ஆனந்ததவல்லி நாவலை முன்வைத்து-சரவணம் மாணிக்கவாசகம்
- மானசா-லக்ஷ்மி பாலகிருஷ்ணன், சரவணன் மாணிக்கவாசகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.