under review

ஏ. பெரியதம்பிப்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Added First published date)
 
(9 intermediate revisions by 2 users not shown)
Line 3: Line 3:
[[File:பெரியதம்பிப் பிள்ளை நூல்.jpg|thumb|பெரியதம்பிப் பிள்ளை நூல்]]

[[File:பெரியதம்பிப் பிள்ளை நூல்1.jpg|thumb|பெரியதம்பிப் பிள்ளை நூல்]]

[[File:Ee.periyathampi pillai.png|thumb|ஏ.பெரியதம்பிப் பிள்ளை தபால்தலை]]
ஏ.பெரியதம்பி பிள்ளை (ஜனவரி 8, 1899 - நவம்பர் 2, 1978) ஈழத்து தமிழறிஞர், கவிஞர். இதழாளர், பேச்சாளர். விபுலானந்தரின் வழித்தோன்றலாகவும் சமூகப்போராளியாகவும் அறியப்பட்டவர்.  

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 15: Line 16:
பெரியதம்பி பிள்ளை 1921-ல் சாவகச்சேரி சங்கத்தானை அமிர்தாம்பிகை வித்தியாலயம், சாவகச்சேரி இந்து வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.சாவகச்சேரி ரீபர் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.  

1926-ஆம் ஆண்டு முதல் விபுலானந்தர் ஆதரவில் திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றலானார். 1931 முதல் ஓராண்டு மட்டக்களப்பு தூய அகுஸ்தினார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். 1932 முதல் மட்டக்களப்பு புனித வளனார் கல்லூரியில்லும் மட்டக்களப்பு புனித சிசிலியா கன்னியர் மட கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.  
1926-ம் ஆண்டு முதல் விபுலானந்தர் ஆதரவில் திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றலானார். 1931 முதல் ஓராண்டு மட்டக்களப்பு தூய அகுஸ்தினார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். 1932 முதல் மட்டக்களப்பு புனித வளனார் கல்லூரியில்லும் மட்டக்களப்பு புனித சிசிலியா கன்னியர் மட கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.  

நடுவே 1936 முதல் 1938 வரை மண்டூர் துணைத் தபால் அதிகாரியாகப் பணியாற்றினார். மீண்டும் புனித அகுஸ்தினார் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். 1947 முதல் 1959 வரை மட்டக்களப்பில் அரசினர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

Line 25: Line 26:
== இலக்கியப் பணி ==
== இலக்கியப் பணி ==
மரபுக்கவிதைகள் எழுதிய பெரியதம்பி பிள்ளை ‘புலவர்மணி கவிதைகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டார். பதிகங்கள் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களில் கவிதைகளை எழுதியிருக்கிறார்.

[[File:Periyathampi.png|thumb|பெரியதம்பிப்பிள்ளை]]
== ஆன்மிகம் ==
== ஆன்மிகம் ==
சாவகச்சேரியில் ஆசிரியராகப் பணிபுரியும்போது ஆறுமுகம் என்ற பெரியாரும் அப்பாத்துரையென்ற அவரது மகனும் அடிக்கடி அவரைச் சந்திக்க வருவார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள். சிறந்த தமிழறிஞர்கள், இசை வல்லுனர்கள். அவர்களை பெரியதம்பிப் பிள்ளை மிகவும் போற்றினார். (ஆறுமுகம் மறைந்தபோது பத்து பாடல்களில் இரங்கற்பா பாடியிருக்கிறார்)  

புலவர்மணி அவர்களுடன் பழகுவது அங்குள்ள இந்துக்களுக்கு பிடிக்கவில்லை. பெரியதம்பிப் பிள்ளை சாவகச்சேரி இந்து மகா சபையால் கண்டிக்கப்பட்டார். அதனால் வெறுப்புற்றிருந்த நிலையில் ஐசக் தம்பையா,  எட்வர்ட் மேதர் போன்ற அமெரிக்கன் மிஷன் கிறிஸ்தவப் போதகர்கள் அவரை மதமாற்றி கிறிஸ்தவராக ஆக்கினர். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஆசிரியர் பதவியை விட்டு விலகி சாவகச்சேரி மிஷன் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பதவி ஏற்றார்.

போதகராக புகழ்பெற்றிருந்த பெரியதம்பி பிள்ளை 1923 முதல் மதுரை பசுமலை இறையியல் கல்லூரியில் பயிற்சி எடுத்தார். பசுமலை வேதசாஸ்திர கலாசாலை விடுதி மேற்பார்வையாளராகவும் செயற்பட்டார். அமெரிக்க மிஷனில் இருந்த வெள்ளையர்களின் மேட்டிமை நோக்கால் மனம் புண்பட்டிருந்தபோது சுவாமி விபுலானந்தரை மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் சந்தித்தார். வேதாந்தத்தில் சாதிவேறுபாட்டுக்கு இடமில்லை என விபுலானந்தர் அவருக்கு கற்பித்தார். சாதிவேறுபாட்டினைக் களைய போராடவேண்டுமென்று அழைத்தார். பெரியதம்பிப் பிள்ளை கிறிஸ்துவ மதத்தை துறந்து இந்துமதத்திற்கு மீண்டார். யாழ் திரும்பும்போது யாழ்ப்பாணத்தின் திருச்சபை செயலாளர் பதவி இவருக்காக ஒதுக்கப்பட்டுக் காத்திருந்தது. அதைத் துறந்து சாவகச்சேரியில் விபுலானந்தரின் பள்ளியில் ஆசிரியரானார். இந்நிகழ்வை “சங்கத் தமிழ்மதுரைச் சத்திரத்தில் வைத்தெம்மை அங்கு வசமாக்கி அருள்செய்தே - தங்கியெம் புத்தி புகுந்த விபுலானந்தர்” என பெரியதம்பிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

Line 44: Line 46:
நவம்பர் 2, 1978-ல் மறைந்தார்.
நவம்பர் 2, 1978-ல் மறைந்தார்.
== விருதுகளும் பட்டங்களும் ==
== விருதுகளும் பட்டங்களும் ==
* 1950-ஆம் ஆண்டில் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றம் "புலவர்மணி" என்னும் விருது வழங்கிக் கவுரவித்தது.
* 1950-ம் ஆண்டில் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றம் "புலவர்மணி" என்னும் விருது வழங்கிக் கவுரவித்தது.
* 1951-ல் மட்டக்களப்பு தமிழ் மன்றம் புலவர்மணி என்று பட்டம் அளித்தது.

* 1952 யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கம் சார்பில் அதன் 28 ஆவது ஆண்டுவிழாவில் பணிதமணி பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் [[சுத்தானந்த பாரதி]]  

Line 82: Line 84:
* பாலைக்கலி
* பாலைக்கலி
* இந்தியநோக்கில் கிறிஸ்தவ வேத வியாக்கியானம்

* கர்மயோகம் கீதைவெண்பா (1962, சாகித்திய மண்டலப் பரிசு)

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 93: Line 94:
* [http://www.maddunews.com/2018/11/blog-post_88.html பெரியதம்பிப் பிள்ளை நூல்வெளியீடு]

*
*
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|02-Dec-2022, 20:49:44 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:இதழாளர்கள்]]

Latest revision as of 12:04, 13 June 2024

பெரியதம்பிப் பிள்ளை
பெரியதம்பி பிள்ளை
பெரியதம்பிப் பிள்ளை நூல்
பெரியதம்பிப் பிள்ளை நூல்
ஏ.பெரியதம்பிப் பிள்ளை தபால்தலை

ஏ.பெரியதம்பி பிள்ளை (ஜனவரி 8, 1899 - நவம்பர் 2, 1978) ஈழத்து தமிழறிஞர், கவிஞர். இதழாளர், பேச்சாளர். விபுலானந்தரின் வழித்தோன்றலாகவும் சமூகப்போராளியாகவும் அறியப்பட்டவர்.

பிறப்பு, கல்வி

மட்டக்களப்பு மாவட்டம், மண்டூரில் சோமநாதர் ஏகாம்பரப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் பெரியதம்பிப்பிள்ளை. ஏகாம்பரப் பிள்ளை மண்டூர் கந்தசாமி ஆலயத்தின் தலைமை வண்ணக்கராக இருந்தார். மண்டூரில் வெஸ்லியன் மிஷன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் என்பாரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார். உயர்கல்வியை கல்முனையில் கற்றார்.

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை ஆறுமுகநாவலர் சைவப் பாடசாலையின் ஓர் அங்கமாகிய காவிய பாடசலையில் பயின்றார். அங்கே சி. கணபதிப்பிள்ளை இவரது சக மாணவர். 1914-ல் பின்னாளில் சுவாமி விபுலானந்தர் ஆக மாறி பண்டிதர் மயில்வாகனரிடம் அறிமுகமானார். யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பண்டிதர் மயில்வாகனனாரிடத்திலும் பாடங்கேட்டு வந்தார். ஆறுமுக நாவலர் மரபில் வந்த தமிழறிஞர் ம.வே. மகாலிங்கசிவம் இவருடைய ஆசிரியர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் இவரது ஆசிரியர்.

தனிவாழ்க்கை

1926-ல் குருக்கள்மடம் குமரப்பெருமாள் உடையார் அவர்களது பேத்தியார் நல்லம்மாவை பதிவுத்திருமணம் செய்துகொண்டார். இது சாதி மீறிய திருமணம். இவர்களுக்கு நான்கு புதல்வர்களும் இரு புதல்வியரும் பிறந்தனர்

பெரியதம்பிப் பிள்ளை வெவ்வேறு கல்லூரிகளில் ஆசிரியராகவும், மண்டூர் துணைத் தபால்நிலைய அதிகாரியாகவும், உணவுக்கட்டுப்பாடு இலாகாவில் தடுப்பு கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார்.

கல்விப்பணி

பெரியதம்பி பிள்ளை 1921-ல் சாவகச்சேரி சங்கத்தானை அமிர்தாம்பிகை வித்தியாலயம், சாவகச்சேரி இந்து வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.சாவகச்சேரி ரீபர் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1926-ம் ஆண்டு முதல் விபுலானந்தர் ஆதரவில் திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றலானார். 1931 முதல் ஓராண்டு மட்டக்களப்பு தூய அகுஸ்தினார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். 1932 முதல் மட்டக்களப்பு புனித வளனார் கல்லூரியில்லும் மட்டக்களப்பு புனித சிசிலியா கன்னியர் மட கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

நடுவே 1936 முதல் 1938 வரை மண்டூர் துணைத் தபால் அதிகாரியாகப் பணியாற்றினார். மீண்டும் புனித அகுஸ்தினார் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். 1947 முதல் 1959 வரை மட்டக்களப்பில் அரசினர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பதவிகள்

  • 1954-ல் இலங்கைக் கலைக்கழகத்தின் நாட்டுக் கூத்து உபகுழுவின் உறுப்பினராக பதவி ஏற்றார்
  • 1958-ல் அரசு கரும மொழி திணைக்கள ஆலோசனைச் சபையில் கலைச்சோல்லாக்க ஆலோசகராக பதவி வகித்தார்.
  • 1965-ல் இலங்கை கல்வித் திணைக்கள பாடநூல் ஆலோசனை சபை உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • 1976-ல் சமாதான நீதிபதியாக பதவி ஏற்றார்.

இலக்கியப் பணி

மரபுக்கவிதைகள் எழுதிய பெரியதம்பி பிள்ளை ‘புலவர்மணி கவிதைகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டார். பதிகங்கள் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களில் கவிதைகளை எழுதியிருக்கிறார்.

பெரியதம்பிப்பிள்ளை

ஆன்மிகம்

சாவகச்சேரியில் ஆசிரியராகப் பணிபுரியும்போது ஆறுமுகம் என்ற பெரியாரும் அப்பாத்துரையென்ற அவரது மகனும் அடிக்கடி அவரைச் சந்திக்க வருவார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள். சிறந்த தமிழறிஞர்கள், இசை வல்லுனர்கள். அவர்களை பெரியதம்பிப் பிள்ளை மிகவும் போற்றினார். (ஆறுமுகம் மறைந்தபோது பத்து பாடல்களில் இரங்கற்பா பாடியிருக்கிறார்)

புலவர்மணி அவர்களுடன் பழகுவது அங்குள்ள இந்துக்களுக்கு பிடிக்கவில்லை. பெரியதம்பிப் பிள்ளை சாவகச்சேரி இந்து மகா சபையால் கண்டிக்கப்பட்டார். அதனால் வெறுப்புற்றிருந்த நிலையில் ஐசக் தம்பையா, எட்வர்ட் மேதர் போன்ற அமெரிக்கன் மிஷன் கிறிஸ்தவப் போதகர்கள் அவரை மதமாற்றி கிறிஸ்தவராக ஆக்கினர். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஆசிரியர் பதவியை விட்டு விலகி சாவகச்சேரி மிஷன் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பதவி ஏற்றார்.

போதகராக புகழ்பெற்றிருந்த பெரியதம்பி பிள்ளை 1923 முதல் மதுரை பசுமலை இறையியல் கல்லூரியில் பயிற்சி எடுத்தார். பசுமலை வேதசாஸ்திர கலாசாலை விடுதி மேற்பார்வையாளராகவும் செயற்பட்டார். அமெரிக்க மிஷனில் இருந்த வெள்ளையர்களின் மேட்டிமை நோக்கால் மனம் புண்பட்டிருந்தபோது சுவாமி விபுலானந்தரை மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் சந்தித்தார். வேதாந்தத்தில் சாதிவேறுபாட்டுக்கு இடமில்லை என விபுலானந்தர் அவருக்கு கற்பித்தார். சாதிவேறுபாட்டினைக் களைய போராடவேண்டுமென்று அழைத்தார். பெரியதம்பிப் பிள்ளை கிறிஸ்துவ மதத்தை துறந்து இந்துமதத்திற்கு மீண்டார். யாழ் திரும்பும்போது யாழ்ப்பாணத்தின் திருச்சபை செயலாளர் பதவி இவருக்காக ஒதுக்கப்பட்டுக் காத்திருந்தது. அதைத் துறந்து சாவகச்சேரியில் விபுலானந்தரின் பள்ளியில் ஆசிரியரானார். இந்நிகழ்வை “சங்கத் தமிழ்மதுரைச் சத்திரத்தில் வைத்தெம்மை அங்கு வசமாக்கி அருள்செய்தே - தங்கியெம் புத்தி புகுந்த விபுலானந்தர்” என பெரியதம்பிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

சுவாமி விபுலானந்தர், யோகர் சுவாமிகள் ஆகியோருடன் அணுக்கம் கொண்டிருந்தார். சைவம், வேதாந்தம் ஆகியவற்றை கற்றறிந்தவர். விபுலானந்தரிடம் கொண்ட அணுக்கத்தால் சுவாமி விபுலானந்தர் பற்றிய "யாழ்நூல் தந்தோன்", "விபுலானந்த மீட்சிப் பத்து" என்னும் கவிதை நூல்களை எழுதினார்.

பகவத் கீதைக்கு மூன்று பாகங்களிலாக உரை எழுதினார். யாழ் வைத்தீஸ்வர வித்யாலயத்தில் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கம் சார்பில் அதன் 28-வது ஆண்டுவிழாவில் பெரிய தம்பிப் பிள்ளை எழுதிய பகவத்கீதை உரை வெளியிடப்பட்டது.

சமயப்பணி

1970-ல் இந்து சமய விவகார ஆலோசனைச் சபையின் உறுப்பினராக அரசால் நியமிக்கப்பட்டிருந்தபோது புத்த ஜயந்தியை இலங்கையின் அனைத்து இந்து நிறுவனங்களும் கொண்டாட வேண்டுமென அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை மறுத்து “ஒரு சமயத்தை இன்னொரு சமயம் கௌரவிப்பது மிகவும் அவசியமானது. ஆனால், அது சுதந்திரம்மிக்க செயல்பாடாக அமையவேண்டும். பௌத்த நிறுவனங்கள் இவ்வேண்டுகோளை விடுத்திருந்தால் அன்புப் பணிப்பாக ஏற்று நாம் இதனைக் கொண்டாடலாம். இதனை அரசாங்கம் விடுத்திருப்பது அதிகாரப் பணிப்பாகும். பௌத்தத்தின் மீது நான் வைத்திருக்கின்ற பெருமதிப்பினால் சொல்கின்றேன். இவ்வேண்டுகோளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது” என்று கூறினார்.

1974-ல் ஆலய நடைமுறைகளைச் செம்மைப்படுத்தும் நோக்கில் ‘இந்து அறநிலய நிதிநிருவாகச் சட்டம்’ எனும் பெயரில் ஒரு புதிய சட்டவாக்கத்தை கலாச்சார அமைச்சின் ஊடாக முன்வைத்தார். அது நிறைவேறவில்லை.

பொதுப்பணி

தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்காக இலங்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட 20 அம்சத் திட்டக் குழுவில் பங்காற்றினார்.

மறைவு

நவம்பர் 2, 1978-ல் மறைந்தார்.

விருதுகளும் பட்டங்களும்

  • 1950-ம் ஆண்டில் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றம் "புலவர்மணி" என்னும் விருது வழங்கிக் கவுரவித்தது.
  • 1951-ல் மட்டக்களப்பு தமிழ் மன்றம் புலவர்மணி என்று பட்டம் அளித்தது.
  • 1952 யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கம் சார்பில் அதன் 28 ஆவது ஆண்டுவிழாவில் பணிதமணி பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் சுத்தானந்த பாரதி
  • 1962-ல் கர்மயோகம் நூலுக்காக இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு

வாழ்க்கை வரலாறு

நினைவுகள்

  • 1978 மட்டக்களப்பில் புலவர்மணி நினைவு பணிமன்றம் நிறுவப்பட்டது
  • 1980 புலவர்மணி நினைவு மன்றம் புலவர் மணி கவிதைகள் முழுத்தொகுதியை வெளியிட்டது
  • 1981 புலவர்மணி படம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் திறக்கப்பட்டது
  • 1983 புலவர்மணி படம் மட்டக்களப்பு தமிழ் நூலக அரங்கில் திறக்கப்பட்டது
  • 1994 புலவர்மணியின் தபால்தலை வெளியிடப்பட்டது. (2 -மே 1994) தேசிய வீரர் பட்டம் வழங்கப்பட்டது
  • 1997 கிழக்கு பல்கலைக் கழகம் மறைவுக்குப் பின் கலாநிதி பட்டம் வழங்கியது (23 ஏப்ரல் 1997)
  • 1999 மட்டக்களப்பு மாநகர சபை ஆதரவுடன் முதலியார் வீதி சந்தியில் புலவர்மணிக்கு சிலை அமைக்கப்பட்டது. இவர் மாணவரான ஈழத்துப் பூராடனார் அச்செலவை ஏற்றார்
  • 1999 மட்டக்களப்பு யாட் வீதிக்கு புலவர்மணி பெயர் சூட்டப்பட்டது

இலக்கிய இடம்

இலங்கையில் சுவாமி விபுலானந்தர் உருவாக்கிய இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்தவராக பெரியதம்பி பிள்ளை மதிப்பிடப்படுகிறார்

நூல்கள்.

கவிதை
  • யாழ்நூல் தந்தோன்
  • விபுலானந்த மீட்சிப்பத்து
  • ஈழமணித் திருநாடு
  • கொக்கட்டிச் சோலை தான்தோன்றிஸ்வரர் பதிகம்
  • திருமாமாங்கப் பிள்ளையார் பதிகம்
  • ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் பதிகம்
  • சித்தாண்டிக் கந்தசுவாமி பதிகம்
  • திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி பதிகம்
  • காளியாமடு விநாயகர் ஊஞ்சல்
  • புலவர்மணிக் கவிதைகள்
  • கிறிஸ்து திருவவதார கீதங்கள்
  • கிறிஸ்தவ சமய துயிலுணர்ச்சி
உரைநடை
  • பகவத்கீதை உரை மூன்றுபாகங்கள்
  • உள்ளதும் நல்லதும்
  • பாலைக்கலி
  • இந்தியநோக்கில் கிறிஸ்தவ வேத வியாக்கியானம்
  • கர்மயோகம் கீதைவெண்பா (1962, சாகித்திய மண்டலப் பரிசு)

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Dec-2022, 20:49:44 IST