ம.பெ.ஸ்ரீனிவாசன்: Difference between revisions
mNo edit summary |
(Corrected Category:வைணவ மத அறிஞர்கள் to Category:வைணவ மத அறிஞர்) |
||
(11 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=சீனிவாசன்|DisambPageTitle=[[சீனிவாசன் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:ம.பெ.ஸ்ரீனிவாசன்.jpg|thumb|ம.பெ.ஸ்ரீனிவாசன்]] | [[File:ம.பெ.ஸ்ரீனிவாசன்.jpg|thumb|ம.பெ.ஸ்ரீனிவாசன்]] | ||
ம.பெ.ஸ்ரீனிவாசன் (ம.பெ.சீனிவாசன், ம.பெ.சீ. பிறப்பு:ஆகஸ்ட் 16,1943) வைணவ அறிஞர். தமிழாய்வாளர். தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆழ்வார்கள் பற்றிய அறிமுக நூல்களை எழுதியுள்ளார் | ம.பெ.ஸ்ரீனிவாசன் (ம.பெ.சீனிவாசன், ம.பெ.சீ. பிறப்பு:ஆகஸ்ட் 16,1943) வைணவ அறிஞர். தமிழாய்வாளர். தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆழ்வார்கள் பற்றிய அறிமுக நூல்களை எழுதியுள்ளார் | ||
Line 10: | Line 11: | ||
ம.பெ.ஸ்ரீனிவாசன் 1968 முதல் 1971 சென்னை து.கோ. வைஷ்ணவக் கல்லூரியிலும் 1971 முதல் 2002 வரை சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் அரசுக்கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். | ம.பெ.ஸ்ரீனிவாசன் 1968 முதல் 1971 சென்னை து.கோ. வைஷ்ணவக் கல்லூரியிலும் 1971 முதல் 2002 வரை சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் அரசுக்கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். | ||
== இலக்கியப் பணிகள் == | == இலக்கியப் பணிகள் == | ||
ம.பெ.ஸ்ரீனிவாசன் முதன்மையாக வைணவ ஆய்வாளர். [[ஆழ்வார்கள்]] பற்றிய அறிமுகநூல்களையும் ஆய்வுநூல்களையும் எழுதியிருக்கிறார். வைணவம் பற்றி ம.பெ.ஸ்ரீனிவாசன் எழுதிய நூல்கள் சாகித்ய அக்காதமி உள்ளிட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள், | ம.பெ.ஸ்ரீனிவாசன் முதன்மையாக வைணவ ஆய்வாளர். [[ஆழ்வார்கள்]] பற்றிய அறிமுகநூல்களையும் ஆய்வுநூல்களையும் எழுதியிருக்கிறார். வைணவம் பற்றி ம.பெ.ஸ்ரீனிவாசன் எழுதிய நூல்கள் சாகித்ய அக்காதமி உள்ளிட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள், வானொலி சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். கம்பன் கழகம், தமிழ்ச்சங்கம் அருளிச் செயல் ஆய்வகம், திவ்வியப் பிரபந்த அரங்குகள் அருள்நெறி மன்றம் போன்ற அரங்குகளில் உரையாற்றியிருக்கிறார். கொலம்பியா பல்கலை இந்து கலைக்களஞ்சியத்திற்காகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் (Encyclopedia of Hinduism and Indic religions, A project of IHRF, Columbia, U.S.A). | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* 2011 டாக்டர் மு வ இலக்கிய நினைவுப் பரிசு, கவிதை உறவு அமைப்பு சென்னை. |நூல்: ஆழ்வார்களும் தமிழ் மரபும்| | * 2011 டாக்டர் மு வ இலக்கிய நினைவுப் பரிசு, கவிதை உறவு அமைப்பு சென்னை. |நூல்: ஆழ்வார்களும் தமிழ் மரபும்| | ||
* 2012 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் விருது, சென்னை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்| | * 2012 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் விருது, சென்னை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்| | ||
* 2015 வள்ளல் சடையப்ப விருது, மதுரை கம்பன் கழகம் மதுரை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்| | * 2015 வள்ளல் சடையப்ப விருது, மதுரை கம்பன் கழகம் மதுரை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்| | ||
Line 38: | Line 38: | ||
* [http://www.tamilvu.org/courses/diploma/p202/p2022/html/p20221au.htm தமிழ் இணைய கல்விக் கழகம் தளம் ம.பெ.சீனிவாசன் அறிமுகம்] | * [http://www.tamilvu.org/courses/diploma/p202/p2022/html/p20221au.htm தமிழ் இணைய கல்விக் கழகம் தளம் ம.பெ.சீனிவாசன் அறிமுகம்] | ||
* [https://youtu.be/fNMFf25jUE0 ம.பெ.ஸ்ரீனிவாசன் உரை காணொளி] | * [https://youtu.be/fNMFf25jUE0 ம.பெ.ஸ்ரீனிவாசன் உரை காணொளி] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:39:21 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வைணவம்]] | |||
[[Category:வைணவ மத அறிஞர்]] |
Latest revision as of 14:10, 17 November 2024
- சீனிவாசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சீனிவாசன் (பெயர் பட்டியல்)
ம.பெ.ஸ்ரீனிவாசன் (ம.பெ.சீனிவாசன், ம.பெ.சீ. பிறப்பு:ஆகஸ்ட் 16,1943) வைணவ அறிஞர். தமிழாய்வாளர். தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆழ்வார்கள் பற்றிய அறிமுக நூல்களை எழுதியுள்ளார்
பிறப்பு, கல்வி
ம.பெ. ஸ்ரீனிவாசன் சிவகங்கையை அடுத்துள்ள சேந்தி உடையநாதபுரம் என்னும் ஊரில் பெரியசாமி – சிட்டாள் இணையருக்கு ஆகஸ்ட் 16, 1943-ல் பிறந்தார்.
சிவகங்கையில் பள்ளிப்படிப்பை முடித்த ம.பெ.ஸ்ரீனிவாசன் பொருளியலில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை (1965-67) பயின்றார். 1993-ல் வைணவ இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்
டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், ஒளவை. துரைசாமிப்பிள்ளை, அ.கி. பரந்தாமனார் மொ.அ. துரையரங்கனார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார்.
தனிவாழ்க்கை
ம.பெ.ஸ்ரீனிவாசன் 1968 முதல் 1971 சென்னை து.கோ. வைஷ்ணவக் கல்லூரியிலும் 1971 முதல் 2002 வரை சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் அரசுக்கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
இலக்கியப் பணிகள்
ம.பெ.ஸ்ரீனிவாசன் முதன்மையாக வைணவ ஆய்வாளர். ஆழ்வார்கள் பற்றிய அறிமுகநூல்களையும் ஆய்வுநூல்களையும் எழுதியிருக்கிறார். வைணவம் பற்றி ம.பெ.ஸ்ரீனிவாசன் எழுதிய நூல்கள் சாகித்ய அக்காதமி உள்ளிட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள், வானொலி சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். கம்பன் கழகம், தமிழ்ச்சங்கம் அருளிச் செயல் ஆய்வகம், திவ்வியப் பிரபந்த அரங்குகள் அருள்நெறி மன்றம் போன்ற அரங்குகளில் உரையாற்றியிருக்கிறார். கொலம்பியா பல்கலை இந்து கலைக்களஞ்சியத்திற்காகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் (Encyclopedia of Hinduism and Indic religions, A project of IHRF, Columbia, U.S.A).
விருதுகள்
- 2011 டாக்டர் மு வ இலக்கிய நினைவுப் பரிசு, கவிதை உறவு அமைப்பு சென்னை. |நூல்: ஆழ்வார்களும் தமிழ் மரபும்|
- 2012 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் விருது, சென்னை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்|
- 2015 வள்ளல் சடையப்ப விருது, மதுரை கம்பன் கழகம் மதுரை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்|
இலக்கிய இடம்
வைணவ ஆய்வுகள் வைணவ சம்பிரதாய மரபுக்குள்ளும் தமிழ் ஆய்வு மரபுக்குள்ளும் தனித்தனியாக நடைபெற்று வந்தன. அவற்றுக்கிடையே ஆய்வுமுறைமைகளிலும் வேறுபாடுகள் உண்டு. ம.பெ.ஸ்ரீனிவாசன் அவ்விரு ஆய்வுமரபுகளையும் ஒருங்கிணைத்து, தொகுப்புநோக்கில் தன் நூல்களை எழுதினார்.
நூல்கள்
- திருமங்கையாழ்வார் மடல்கள் 1987
- திருமங்கையாழ்வார் மடல்கள் 20022
- வைணவ இலக்கிய வகைகள் 1994
- திவ்வியப்பிரபந்த இலக்கிய வகைகள் 2013
- பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)சாகித்திய அகாதமி புதுதில்லி1996
- குலசேகராழ்வார் சாகித்திய அகாதமி புதுதில்லி 2003
- முதலாழ்வார்கள் சாகித்திய அகாதமி புதுதில்லி 2007
- திவ்வியப்பிரபந்தம் (பாசுரத்தொகுப்பு) ஆராய்ச்சி முன்னுரையுடன் 2010
- ஒரு நாள் ஒரு பாசுரம் 2006
- ஸ்ரீ இராமாநுசர் (ஞானபரம்பரை வரிசை) 2006
- திருமுருகாற்றுப்படை உரை விளக்கம் 2009
- ஆழ்வார்களும் தமிழ் மரபும் 2010
- கம்பனும் ஆழ்வார்களும் 2011
- கம்பனில் சங்க இலக்கியம் 2013
- வண்டாடப் பூமலர 2013
உசாத்துணை
- வண்டாட பூ மலர. மதிப்புரை
- தமிழ் இணைய கல்விக் கழகம் தளம் ம.பெ.சீனிவாசன் அறிமுகம்
- ம.பெ.ஸ்ரீனிவாசன் உரை காணொளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:21 IST