under review

ஓராங் செலேதார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|நன்றி: benarnews.org ஓராங் செலேதார் இனக்குழு தீபகற்ப மலேசியாவின் மலாய் ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஓராங் செலேதார் பழங்குடியைக் கடல் ஜிப்ஸி வகையில் வகைப்படுத்துவர...")
 
(Added First published date)
 
(11 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:Seletar 1 .jpg|thumb|நன்றி: benarnews.org]]

ஓராங் செலேதார் இனக்குழு தீபகற்ப மலேசியாவின் மலாய் ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஓராங் செலேதார் பழங்குடியைக் கடல் ஜிப்ஸி வகையில் வகைப்படுத்துவர்.
ஓராங் செலேதார் (Orang Seletar) மலேசியப் பழங்குடிகள். தீபகற்ப மலேசியாவின் மலாய் ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஓராங் செலேதார் பழங்குடியைக் கடல் ஜிப்ஸி வகையில் வகைப்படுத்துவர்.
 
==வாழிடம்==
==வாழிடம்==
ஓராங் செலேதார் பழங்குடியினர் ஜொகூர் மாநிலத்தில் கம்போங் தெலூக் காபோங் (Kampung Telok Kabung), சிம்பாங் ஆராங் (Simpang Arang), சுங்காய் தெம்மோன் (Sungai Temon), பாக்கார் பாத்து (Bakar Batu), பாசீர் சாலாம் (Pasir Salam), பாசீர் பூத்தே (Pasir Putih), குவாலா மாசாய் (Kuala Masai) மற்றும் தெலுக் ஜாவா வில் (Teluk Jawa) வசிக்கின்றனர்ஒராங் செலேதாரில் சிலர் கடலிலும் நதியிலும் மிதக்கும் வீட்டில் தங்கியிருக்கின்றனர்.

==பெயர் விளக்கம்==
==பெயர் விளக்கம்==
செலேத்தார் எனும் சொல் (Seletar, Sěletar) செஜாரா மெலாயு (Sejarah Melayu)  வரலாற்றாவணத்தில் எழுதப்பட்டுள்ளது.

==மொழி==
==மொழி==
ஓராங் செலேதாரின் மொழி செலேதார் மொழியாகும். செலேதார் மொழி ஆஸ்த்ரோநேசிய வகையில் சேரும். ஓராங் செலேதார் பழங்குடியினர் மலாய் மொழியிலும் பேசுவர்.

==பின்னனி==
==பின்னனி==
பதினைந்தாம் நூற்றாண்டில், ஓராங் செலேதார் சிங்கப்பூரில் குடியேறினர். ஓராங் செலேதார் பழங்குடி லாவோட் மக்களின் (Orang Laut) வம்சாவளி. லாவோட் மக்கள் எனப்படுபவர் மலாக்கா அரசின் கடற்படையைச் சேர்ந்தவர்கள். ஓராங் செலேதார் மூதாதையர்களான லாவோட் மக்கள் ஸ்பைஸ் தீவைப் (Spice Island) பூர்விகமாகக் கொண்டவர்கள். மலாக்கா நீரிணையில் இவர்கள் கடற்கொள்ளையர்களாக வாழ்ந்தனர். செலேதார் பழங்குடியினர் சிங்கப்பூரின் வடக்கில் சதுப்புநில காடுகளிலும், வடமேற்கு கடற்கரைகளில், கிராஜி, காடூட் ஆறுகளின் முகத்துவாரங்களிலும் வசித்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜொகூர் தெமெங்கோங் சுல்தான் அபு பாக்கார், சிங்கப்பூரில் வசித்த செலேதார் பழங்குடியை ஜொகூரின் பூலாய் ரிவருக்கு அழைத்துச்சென்றார். எஞ்சிய செலேதார் பழங்குடி, 1980-களில் சிங்கப்பூர் விமானநிலையம் கட்டும்போது ஜொகூருக்கு இடம் பெயர்ந்தனர்.  சிங்கப்பூர் கட்டிய விமானநிலையத்திற்குச் ‘செலேதார் விமானநிலையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஓராங் செலேதார் பழங்குடி மலாய் மக்களுடன் ஒன்றினைந்து வாழ்ந்து வந்தனர். இதனால், பண்பாட்டு ரீதியில் மலாய் இனத்துடன் மிக நெருக்கமான வாழ்கையுடையவர்களாவர்.

==தொழில்==
==தொழில்==
[[File:8063053-L.jpg|thumb]]ஓராங் செலேதார் பழங்குடியினர் கடல், கடற்கரை, சதுப்பு நிலக்காடுகளில் கிடைக்கும் தாவரங்கள், உயிரிங்களைச் சேகரிப்பர். அதில், கடற்பாசி, நண்டு, மீன்கள், இறால், மட்டி போன்றவை அடங்கும். மேலும் சிலர் நிலக்கரி ஆலைகளிலும் வேலை செய்கின்றனர்.
[[File:8063053-L.jpg|thumb]]
ஓராங் செலேதார் பழங்குடியினர் கடல், கடற்கரை, சதுப்பு நிலக்காடுகளில் கிடைக்கும் தாவரங்கள், உயிரிங்களைச் சேகரிப்பர். அதில், கடற்பாசி, நண்டு, மீன்கள், இறால், மட்டி போன்றவை அடங்கும். மேலும் சிலர் நிலக்கரி ஆலைகளிலும் வேலை செய்கின்றனர்.
==நம்பிக்கைகள்==
==நம்பிக்கைகள்==
ஓராங் செலேதார் பழங்குடியினர் கடலோர பகுதியிலும், கடல் ஆழத்திலும் வசிக்கும் ஆவிகளை வழிப்படுகின்றனர். மரணமும் நோயும் நிலத்துக்குரியவை என நினைக்கின்றனர். ஓராங் செலேதார் சமூதாயத்தில் ஒருவர் இறந்தால், அவரை கடற்கரையில் அடக்கம் செய்வர். ஓராங் செலேதார் பழங்குடி பேய்களையும் நம்புகின்றனர். இந்தப் பேய்கள் தண்ணீர், கல், காற்று, குகை என்று எங்கேயும் இருக்கிறதென நம்புகின்றனர். ஓராங் செலேதார் பழங்குடியினருக்கு ஆவிகளின் மீதும் இயற்கையின் மீதும் மிகுந்த மரியாதையுண்டு. அவ்வாறான மரியாதைகள் குறைவதனால்தான் பிரச்சனைகள், நோய்கள், மரணங்கள் நிகழ்வதாக நம்புகின்றனர். செமேலாங் பழங்குடியினர் தங்களது மன உளைச்சல்களை, பிரச்சனைகளைக் குறைக்க ஆவிகளிடம் ஆசி பெறுகின்றனர். அந்தப் பிரார்த்தனையில், புகையிலை சுருட்டு, புளி, ஊசி, மடித்த வெற்றிலை பாக்கு, மற்றும் உப்பை சிறிய தட்டில் வைத்து ஆவிகளுக்குப் படையலிட வேண்டும்.

Line 17: Line 17:
பாக்கார் பாத்துவில் (Bakar Batu) தங்கியிருக்கும் ஓராங் செலேதார் பழங்குடியின் நடனம் ‘தாரி செலேதார்’ என்றழைக்கப்படும். ஓராங் செலேதார் பழங்குடியின் நடனங்களில் ‘யோக் சாங்’ (Yok Sang) எனும் காண்டா நண்டு பாடல் ‘கேஜாங் கோகோல்’ (Kejang Kokol) எனும் சிப்பி பாடல், ‘கெதாம் போங்கோய்’ (Ketam Bongai) எனும் பூ நண்டு பாடல்], ‘என்ஜேட்-என்ஜேட் சீபோட்’ (Enjit-Enjit Siput), ‘லோக் போங்காய்’ (Lok Bongai), ‘குபாங் தாலி’ (Kupang Tali), போன்ற பாடல்கள் பாடப்படும்.  

==போட் காதே (Bot Kateh)==
==போட் காதே (Bot Kateh)==
[[File:Seletar 2 .jpg|thumb|நன்றி: benarnews.org]]ஓராங் செலேதார் பழங்குடி கடல் விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொள்வர். அதில் ஒன்று போட் காதே விளையாட்டு. போட் காதே என்றால் படகு பந்தயம். செலேதார் பழங்குடி தங்களின் Fiberglass மீன் பிடிக்கும் படகை வெட்டி பந்தயத்திற்கான படகாக மாற்றியமைக்கின்றனர். படகின் 15 குதிரை வேக இயந்திரத்திற்காக பல ஆயிரம் வெள்ளிகள் செலவு செய்கின்றனர். படகு பந்தய போட்டியில் கிடைக்கும் பரிசு தொகை ஒராயிரத்தைத் தாண்டுவதில்லை. இருப்பினும், ஓராங் செலேதார் பழங்குடியினர் தங்களின் கிராமத்தின் பெருமைக்காக படகு பந்தய போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர்.
[[File:Seletar 2 .jpg|thumb|நன்றி: benarnews.org]]
ஓராங் செலேதார் பழங்குடி கடல் விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொள்வர். அதில் ஒன்று போட் காதே விளையாட்டு. போட் காதே என்றால் படகு பந்தயம். செலேதார் பழங்குடி தங்களின் Fiberglass மீன் பிடிக்கும் படகை வெட்டி பந்தயத்திற்கான படகாக மாற்றியமைக்கின்றனர். படகின் 15 குதிரை வேக இயந்திரத்திற்காக பல ஆயிரம் வெள்ளிகள் செலவு செய்கின்றனர். படகு பந்தய போட்டியில் கிடைக்கும் பரிசு தொகை ஒராயிரத்தைத் தாண்டுவதில்லை. இருப்பினும், ஓராங் செலேதார் பழங்குடியினர் தங்களின் கிராமத்தின் பெருமைக்காக படகு பந்தய போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர்.
==புத்தகங்கள்==
==புத்தகங்கள்==
Orang Seletar (Juma’at Misman, Dewan Bahasa dan Pustaka, 2017)

==உசாத்துணை==
 
பார்க்க: [[தீபகற்ப மலேசியாவில் பழங்குடியினர்]]
== உசாத்துணை ==
*Keterancaman Bahasa Orang Asli Duano & Kanaq (Mohd Sharifudin Yusop, Penerbit Universiti Putra Malaysia, 2013)

*Some Aspects of the language of the Orang Seletar (Tan Zhi Xuan, Nanyang Technological University, 2020)

Line 29: Line 32:
*[https://youtu.be/o3LM2_zkzdc Orang Seletar: The People Who Were Here Before Singapore Was Singapore]

*[https://youtu.be/o8hDReyNmzw செலெத்தார் மக்களின் பாடலும் நடனமும்]

{{Standardised}}
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:39:24 IST}}
 
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:03, 13 June 2024

நன்றி: benarnews.org

ஓராங் செலேதார் (Orang Seletar) மலேசியப் பழங்குடிகள். தீபகற்ப மலேசியாவின் மலாய் ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஓராங் செலேதார் பழங்குடியைக் கடல் ஜிப்ஸி வகையில் வகைப்படுத்துவர்.

வாழிடம்

ஓராங் செலேதார் பழங்குடியினர் ஜொகூர் மாநிலத்தில் கம்போங் தெலூக் காபோங் (Kampung Telok Kabung), சிம்பாங் ஆராங் (Simpang Arang), சுங்காய் தெம்மோன் (Sungai Temon), பாக்கார் பாத்து (Bakar Batu), பாசீர் சாலாம் (Pasir Salam), பாசீர் பூத்தே (Pasir Putih), குவாலா மாசாய் (Kuala Masai) மற்றும் தெலுக் ஜாவா வில் (Teluk Jawa) வசிக்கின்றனர்ஒராங் செலேதாரில் சிலர் கடலிலும் நதியிலும் மிதக்கும் வீட்டில் தங்கியிருக்கின்றனர்.

பெயர் விளக்கம்

செலேத்தார் எனும் சொல் (Seletar, Sěletar) செஜாரா மெலாயு (Sejarah Melayu) வரலாற்றாவணத்தில் எழுதப்பட்டுள்ளது.

மொழி

ஓராங் செலேதாரின் மொழி செலேதார் மொழியாகும். செலேதார் மொழி ஆஸ்த்ரோநேசிய வகையில் சேரும். ஓராங் செலேதார் பழங்குடியினர் மலாய் மொழியிலும் பேசுவர்.

பின்னனி

பதினைந்தாம் நூற்றாண்டில், ஓராங் செலேதார் சிங்கப்பூரில் குடியேறினர். ஓராங் செலேதார் பழங்குடி லாவோட் மக்களின் (Orang Laut) வம்சாவளி. லாவோட் மக்கள் எனப்படுபவர் மலாக்கா அரசின் கடற்படையைச் சேர்ந்தவர்கள். ஓராங் செலேதார் மூதாதையர்களான லாவோட் மக்கள் ஸ்பைஸ் தீவைப் (Spice Island) பூர்விகமாகக் கொண்டவர்கள். மலாக்கா நீரிணையில் இவர்கள் கடற்கொள்ளையர்களாக வாழ்ந்தனர். செலேதார் பழங்குடியினர் சிங்கப்பூரின் வடக்கில் சதுப்புநில காடுகளிலும், வடமேற்கு கடற்கரைகளில், கிராஜி, காடூட் ஆறுகளின் முகத்துவாரங்களிலும் வசித்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜொகூர் தெமெங்கோங் சுல்தான் அபு பாக்கார், சிங்கப்பூரில் வசித்த செலேதார் பழங்குடியை ஜொகூரின் பூலாய் ரிவருக்கு அழைத்துச்சென்றார். எஞ்சிய செலேதார் பழங்குடி, 1980-களில் சிங்கப்பூர் விமானநிலையம் கட்டும்போது ஜொகூருக்கு இடம் பெயர்ந்தனர். சிங்கப்பூர் கட்டிய விமானநிலையத்திற்குச் ‘செலேதார் விமானநிலையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஓராங் செலேதார் பழங்குடி மலாய் மக்களுடன் ஒன்றினைந்து வாழ்ந்து வந்தனர். இதனால், பண்பாட்டு ரீதியில் மலாய் இனத்துடன் மிக நெருக்கமான வாழ்கையுடையவர்களாவர்.

தொழில்

8063053-L.jpg

ஓராங் செலேதார் பழங்குடியினர் கடல், கடற்கரை, சதுப்பு நிலக்காடுகளில் கிடைக்கும் தாவரங்கள், உயிரிங்களைச் சேகரிப்பர். அதில், கடற்பாசி, நண்டு, மீன்கள், இறால், மட்டி போன்றவை அடங்கும். மேலும் சிலர் நிலக்கரி ஆலைகளிலும் வேலை செய்கின்றனர்.

நம்பிக்கைகள்

ஓராங் செலேதார் பழங்குடியினர் கடலோர பகுதியிலும், கடல் ஆழத்திலும் வசிக்கும் ஆவிகளை வழிப்படுகின்றனர். மரணமும் நோயும் நிலத்துக்குரியவை என நினைக்கின்றனர். ஓராங் செலேதார் சமூதாயத்தில் ஒருவர் இறந்தால், அவரை கடற்கரையில் அடக்கம் செய்வர். ஓராங் செலேதார் பழங்குடி பேய்களையும் நம்புகின்றனர். இந்தப் பேய்கள் தண்ணீர், கல், காற்று, குகை என்று எங்கேயும் இருக்கிறதென நம்புகின்றனர். ஓராங் செலேதார் பழங்குடியினருக்கு ஆவிகளின் மீதும் இயற்கையின் மீதும் மிகுந்த மரியாதையுண்டு. அவ்வாறான மரியாதைகள் குறைவதனால்தான் பிரச்சனைகள், நோய்கள், மரணங்கள் நிகழ்வதாக நம்புகின்றனர். செமேலாங் பழங்குடியினர் தங்களது மன உளைச்சல்களை, பிரச்சனைகளைக் குறைக்க ஆவிகளிடம் ஆசி பெறுகின்றனர். அந்தப் பிரார்த்தனையில், புகையிலை சுருட்டு, புளி, ஊசி, மடித்த வெற்றிலை பாக்கு, மற்றும் உப்பை சிறிய தட்டில் வைத்து ஆவிகளுக்குப் படையலிட வேண்டும்.

நடனம்

பாக்கார் பாத்துவில் (Bakar Batu) தங்கியிருக்கும் ஓராங் செலேதார் பழங்குடியின் நடனம் ‘தாரி செலேதார்’ என்றழைக்கப்படும். ஓராங் செலேதார் பழங்குடியின் நடனங்களில் ‘யோக் சாங்’ (Yok Sang) எனும் காண்டா நண்டு பாடல் ‘கேஜாங் கோகோல்’ (Kejang Kokol) எனும் சிப்பி பாடல், ‘கெதாம் போங்கோய்’ (Ketam Bongai) எனும் பூ நண்டு பாடல்], ‘என்ஜேட்-என்ஜேட் சீபோட்’ (Enjit-Enjit Siput), ‘லோக் போங்காய்’ (Lok Bongai), ‘குபாங் தாலி’ (Kupang Tali), போன்ற பாடல்கள் பாடப்படும்.

போட் காதே (Bot Kateh)

நன்றி: benarnews.org

ஓராங் செலேதார் பழங்குடி கடல் விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொள்வர். அதில் ஒன்று போட் காதே விளையாட்டு. போட் காதே என்றால் படகு பந்தயம். செலேதார் பழங்குடி தங்களின் Fiberglass மீன் பிடிக்கும் படகை வெட்டி பந்தயத்திற்கான படகாக மாற்றியமைக்கின்றனர். படகின் 15 குதிரை வேக இயந்திரத்திற்காக பல ஆயிரம் வெள்ளிகள் செலவு செய்கின்றனர். படகு பந்தய போட்டியில் கிடைக்கும் பரிசு தொகை ஒராயிரத்தைத் தாண்டுவதில்லை. இருப்பினும், ஓராங் செலேதார் பழங்குடியினர் தங்களின் கிராமத்தின் பெருமைக்காக படகு பந்தய போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர்.

புத்தகங்கள்

Orang Seletar (Juma’at Misman, Dewan Bahasa dan Pustaka, 2017)

பார்க்க: தீபகற்ப மலேசியாவில் பழங்குடியினர்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:24 IST