ரம்யா அருண் ராயன்: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
SakthivelS (talk | contribs)
→இணைப்புகள்: இலக்கிய இடத்தில் கொடுக்கப்பட்ட மதிப்பீடு இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் வலைப்பக்க இணைப்பு அளிக்கப்பட்டது.
 
(One intermediate revision by one other user not shown)
Line 30: Line 30:
=====கவிதைத்தொகுப்பு=====
=====கவிதைத்தொகுப்பு=====
*செருந்தி (2022, வாசகசாலை பதிப்பகம்)
*செருந்தி (2022, வாசகசாலை பதிப்பகம்)
=====சிறுகதைத்தொகுப்பு=====  
=====சிறுகதைத்தொகுப்பு=====
*கழி ஓதம் (2024, ஜீரோ டிகிரி பதிப்பகம்)
*கழி ஓதம் (2024, ஜீரோ டிகிரி பதிப்பகம்)
*ட்ரெமோலோ (2026, ஜீரோ டிகிரி பதிப்பகம்)
*ட்ரெமோலோ (2026, ஜீரோ டிகிரி பதிப்பகம்)
Line 38: Line 39:
*[https://www.youtube.com/watch?v=ik5l4P4of1U கவிஞர் ரம்யா அருண் ராயன் ஏற்புரை - செருந்தி]
*[https://www.youtube.com/watch?v=ik5l4P4of1U கவிஞர் ரம்யா அருண் ராயன் ஏற்புரை - செருந்தி]
*[https://www.youtube.com/watch?v=59Y1eaEw4zk ரம்யா அருண் ராயன் 'செருந்தி' கவிதைத் தொகுப்பு - அமிர்தம் சூர்யா சிறப்புரை| வாசகசாலை]
*[https://www.youtube.com/watch?v=59Y1eaEw4zk ரம்யா அருண் ராயன் 'செருந்தி' கவிதைத் தொகுப்பு - அமிர்தம் சூர்யா சிறப்புரை| வாசகசாலை]
*[https://manalkadigai50.blogspot.com/2026/01/blog-post_85.html கடலோரக் கதைகள் - ரம்யா அருண்ராயனின் ‘கழிஓதம்’ - எம்.கோபாலகிருஷ்ணன்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|31-Jan-2026, 08:33:27 IST}}
{{Fndt|31-Jan-2026, 08:33:27 IST}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 18:14, 12 November 2026

ரம்யா அருண் ராயன்

ரம்யா அருண் ராயன் (பிறப்பு: நவம்பர் 20, 1979) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார்.

பிறப்பு, கல்வி

ரம்யா அருண் ராயன் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணத்தில் சேவியர் ராயன், ஹியஸிந்தா பின்றோ இணையருக்கு நவம்பர் 20, 1979-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரு சகோதரர்கள், ஒரு சகோதரி. தங்கை ப்ரிம்யா கிராஸ்வின் எழுத்தாளர்.

ரம்யா வீரபாண்டியன் பட்டணத்திலுள்ள தூய மரியன்னை துவக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்றார். தூய தோமையார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் கல்வியியலில் இளையர் (B.Ed) பட்டம் பெற்றார். சாயர்புரம் போப்ஸ் கல்லூரி இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியலில் "மந்த வாயுக்களின் இரண்டாவது தலைகீழ் மோலார் பருமன்கெழுக்கள்" என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ரம்யா அருண்ராயன் மே 7, 2008-ல் அருண் மஸ்கரனாஸ் என்பவரை மணந்தார். மகள் ஆன்ட்ரேயா.

ரம்யா அருண்ராயன் 2004 முதல் நீலகிரி, ராமநாதபுரம் என இரு மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 2011 முதல் தற்போது வரை கோவை மாவட்டம் அன்னூரிலுள்ள அஏமுக அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார். கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ரம்யா அருண் ராயனின் முதல் கவிதை 'ஆலாபனை' 2019-ல் 'இனிய உதயம்' இதழில் வெளியானது. முதல் சிறுகதை 'பூட்ஸ்' தகவு இதழில் 2023-ல் வெளியானது. முதல் கவிதைத்தொகுப்பு 'செருந்தி' 2022-ல் வாசகசாலை வெளியீடாக வந்தது. ஜீரோடிகிரி பதிப்பகம் வெளியீடாக 2024-ல் 'கழி ஓதம்' சிறுகதைத் தொகுப்பும், 2026-ல் 'ட்ரெமோலோ' என்ற சிறுகதைத்தொகுப்பும் வெளியாகின. அந்திமழை, ஆவநாழி, படைப்பு தகவு, வாசகசாலை, தமிழ்வெளி, ஆனந்த விகடன், கலகம், நுட்பம், திணை, உதிரிகள், கொலுசு, இனிய உதயம், காணிநிலம் ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன.

'கானல் அமீரகம்' நடத்திய பரிசுப்போட்டியில் வெற்றிபெற்ற கதை, அந்த அமைப்பின் 'சிலுவையை சுரண்டித் தின்றவர்கள்' எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

ஆதர்ச எழுத்தாளர்களாக நேசமித்ரன், அசோகமித்திரன், அ. முத்துலிங்கம் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • செருந்தி கவிதைத்தொகுப்பு 'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்' வழங்கிய சிறந்த கவிதைத்தொகுப்பிற்கான 'கோவை சரோஜினி சுப்பிரமணியன் நினைவு விருது' பெற்றது.
  • 'கழி ஓதம்' சிறுகதைத்தொகுப்பு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான 'தோழர் பால்வண்ணம் நினைவிலக்கிய' விருது; கம்பம் 'பாரதி தமிழ் இலக்கியப்பேரவை'யின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு; கனவு இலக்கிய வட்டத்தின் 'திருப்பூர் இலக்கிய விருது' ஆகிய விருதுகளைப் பெற்றது

இலக்கிய இடம்

"கடலோர வாழ்க்கையை வலுவாகச் சித்தரித்திருக்கும் நாவல்கள் தமிழில் உண்டு. அந்த அளவுக்கு பரதவர் வாழ்வின் ஆழ அகலங்களைக் காட்டியிருக்கும் சிறுகதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த முதல் தொகுப்பில் உள்ள சில கதைகள், ரம்யா அருண் ராயனால் அவ்வாறான கதைகளை எழுத முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன." என எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • செருந்தி (2022, வாசகசாலை பதிப்பகம்)
சிறுகதைத்தொகுப்பு
  • கழி ஓதம் (2024, ஜீரோ டிகிரி பதிப்பகம்)
  • ட்ரெமோலோ (2026, ஜீரோ டிகிரி பதிப்பகம்)

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jan-2026, 08:33:27 IST