அடிமறிமண்டில ஆசிரியப்பா: Difference between revisions
From Tamil Wiki
(Added/Moved to end: Category:ஆசிரியப்பா) |
(Removed Category:Spc) |
||
| Line 28: | Line 28: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஆசிரியப்பா]] | [[Category:ஆசிரியப்பா]] | ||
Latest revision as of 21:36, 8 January 2026
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, நாற்சீரடியாகத் தொடங்கி, நாற்சீரடியாகவே தொடர்ந்து நாற்சீரடியாகவே முடிவது அடிமறிமண்டில ஆசிரியப்பா. அடிகளை மறித்து (இடம் மாற்றி) வைத்தாலும் ஓசையும் பொருளும் பிழைபடாது வருவதால் இதற்கு அடிமறி மண்டில ஆசிரியப்பா என்ற பெயர் வந்தது.
அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணம்
- ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று வரும்.
- நாற்சீரடியாகத் தொடங்கி, நாற்சீரடியாகவே தொடர்ந்து நாற்சீரடியாகவே முடியும்.
- அடிகளை மாற்றி வைத்தாலும் பாடலின் ஓசையோ பொருளோ கெடாது.
உதாரணப் பாடல்
தீர்த்தம் என்பது சிவகங் கையே
ஏத்த ருந்தலம் எழிற்புலி யூரே
மூர்த்தி அம்பலக் கூத்தன துருவே.
மேற்காணும் பாடலில் எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டதாக இருக்கின்றன. அடிகளை முன் பின்னாக மாற்றிப் பார்த்தாலும் பொருளோ ஓசையோ மாறவில்லை என்பதனால் இது அடிமறிமண்டில ஆசிரியப்பா.
உசாத்துணை
- யாப்பருங்கலக்காரிகை: சென்னை நூலகம்
- யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்: பதிப்பாசிரியர்: முனைவர் சோ. கண்ணதாசன் தமிழ் இணைய மின்னூலகம்
- இலக்கண விளக்கம்: வைத்தியநாத தேசிகர்: பதிப்பாசிரியர்: தி.வே. கோபாலையர்: தமிழ் இணைய மின்னூலகம்
- யாப்பிலக்கணம்: விசாகப்பெருமாளையர்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
07-Aug-2023, 13:01:10 IST