under review

குறும்பனை சி.பெர்லின்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
No edit summary
 
(One intermediate revision by the same user not shown)
Line 22: Line 22:
* அன்னை ஆதா விருது
* அன்னை ஆதா விருது
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
===== அகராதி =====  
===== அகராதி =====
* நெய்தல் சொல்லகராதி
* நெய்தல் சொல்லகராதி
===== நாவல் =====
===== நாவல் =====
Line 63: Line 64:
* [http://kadarkarainews.com/2019/02/704/ அன்னை ஆதா விருது]
* [http://kadarkarainews.com/2019/02/704/ அன்னை ஆதா விருது]
* [http://kadarkarainews.com/2019/12/1708/ கோமகன் விருது]
* [http://kadarkarainews.com/2019/12/1708/ கோமகன் விருது]


{{Finalised}}
{{Finalised}}


{{Fndt|02-Mar-2023, 20:56:06 IST}}
{{Fndt|02-Mar-2023, 20:56:06 IST}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:கட்டுரையாளர்]]
[[Category:கட்டுரையாளர்]]

Latest revision as of 15:30, 12 October 2026

குறும்பனை சி.பெர்லின்
அன்னை ஆதா விருது
கோமகன் விருது.

குறும்பனை சி.பெர்லின் (பிறப்பு: மே 30, 1966) தமிழ் எழுத்தாளர், கட்டுரையாளர், களச்செயல்பாட்டாளர். கடல்சார்ந்த வாழ்க்கையை எழுதுபவராகவும், கடல்சார் மக்களின் நலனுக்காக போராடுபவராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

குறும்பனை சி.பெர்லின் கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை கிராமத்தில் கிறாசையன், அமிர்தம்மாள் இணையருக்கு மே 30, 1966-ல் பிறந்தார். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியம் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

குறும்பனை சி.பெர்லின் எல்.ஐ.சி. முகவராகப் பணியாற்றுகிறார். ஜனவரி 19, 1995-ல் மேரி இதழ் பிராட் என்பவரை மணந்தார். மகள் பெனிற்றா லின்ஜோ பொழில்.

இலக்கிய வாழ்க்கை

குறும்பனை சி.பெர்லினின் முதல்படைப்பு 'கடலுக்குள்ளே... கடலுக்குள்ளே...' என்னும் சிறுகதை. தொடர்ந்து கடல்சார்மக்களின் சித்திரங்களை அளிக்கும் சிறுகதைகளை எழுதியிருக்கிறார். குறும்பனை பெர்லின் ஆறு நாவல்களை எழுதியுள்ளார். இவை குமரிமாவட்ட கடல்சார் வாழ்கையின் யதார்த்தச் சித்தரிப்புகளாக அமைந்தவை.

தொ. சூசை மிக்கேல், வறீதையா கான்ஸ்தந்தின், தோப்பில் முகமது மீரான், பொன்னீலன், ஜோ டி குருஸ், இரையுமன் சாகர் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

குறும்பனை பெர்லில் கடற்கரைப்பகுதி பேச்சுமொழியின் சொற்களையும் கடல்சார் கலைச்சொற்களையும் திரட்டி நெய்தல் சொல்லகராதி வெளியிட்டுள்ளார்.

இலக்கிய இடம்

"நெய்தல் இலக்கிய படைப்புகள் சார்ந்து, தென் மேற்க்கு கடற்கரையின் துருவ நட்சத்திரம் குறும்பனை சி. பெர்லின். சேலுகேடு என்றால் கடல்கொந்தளிப்பு. கடல்கொந்தளிப்பில் அகப்படாத மீனவர்கள் இருப்பது அரிது. ஒவ்வொரு மீனவனிடமும் ஆயிரம் கதைகளிருக்கும். ஒரே கதை பல ஊர்களிலும் ஒரே மாதிரியாகவே நடந்திருக்கும். சேலுகேடும் ஒவ்வொரு ஊரிலும் நடந்த, இப்போது நடக்கும், இன்னும் நடக்கவிருக்கும் கதைகள்." என கிறிஸ்டோபர் ஆன்றணி குறும்பனை பெர்சிலின் 'சேலுகேடு' நாவலின் அணிந்துரையில் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம் NCBH தனுஷ்கோடி ராமசாமி விருது வழங்கியது.
  • சென்னையில் நெய்தல் இலக்கிய விழாவில், லெமூரியா தற்காப்பு கலை பள்ளி குறும்பனை சி.பெர்லினின் களப்பணி, இலக்கிய பணியை பாராட்டி கோமகன் பட்டம் வழங்கியது.
  • நெய்தல் இலக்கிய சாதனையாளர் விருது
  • SIGNIS வாழ்நாள் சாதனையாளர் விருது
  • அன்னை ஆதா விருது

நூல் பட்டியல்

அகராதி
  • நெய்தல் சொல்லகராதி
நாவல்
  • கடலடி
  • சேலுகேடு
  • நீவாடு
  • தலைச்சுமடுகாரி
  • மானத்துக்கு அஞ்சி
  • குளியாளி
சிறுகதைகள்
  • கடலுக்குள்ளே... கடலுக்குள்ளே...
  • கடலின் கருவறையில்
  • நீந்திக்களித்த கடல்
  • கடல் தண்ணி கரிக்குது
  • கண்ணீர்ச் சமுத்திரம்
  • நெஞ்சை நெகிழச் செய்யும் நெய்தல் கதைகள்
கட்டுரை
  • கடலோரக் கதைகள்
  • கடலில் கரையும் குமரிக் கடற்கரை
  • இனையம் காக்க இணைவோம்
  • ஒக்கி புயலும் நோக்கா செயலும்
  • மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் குப்பையில் போன
  • கடல் தண்ணிய குடிக்க...
  • கஜா புயல்; மறைக்கப்பட்ட சுனாமி
  • உரிமம் கேட்டு உரிமைக்குரல்
  • கன்னியாக்குமரி காக்க களம் காண்போம்
  • கதிகலக்கும் கதிரியக்கம்
  • நிறைவேறுமா மீனவர் கோரிக்கைகள்
  • காத்திருக்கும் கடலோடிகள்
  • சரக்குப் பெட்டகத் துறைமுகம்... தாங்குமா மாவட்டம்?!
  • தேவை தூண்டில் வளைவல்ல... மீன்பிடித்துறைமுகம்
  • மீன்வள தினமல்ல... மீனவர்தினம்
ஆங்கிலம்
  • The Trashed Documents

இணைப்புகள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2023, 20:56:06 IST