under review

காட்சி(கைக்கிளை): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 19: Line 19:
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214552-19925 கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214552-19925 கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]


{{Second review completed}}
{{Finalised}}
{{Fndt|14-Jul-2025, 20:13:59 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 15 July 2025

காட்சி(காண்டல்) புறத்திணைகளில் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. தலைவன் ஒரு பெண்ணைக் கண்டு அவளை விரும்புதல் காட்சி.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வண்டுகள் சுற்றும் பூக்களையுடைய சோலையில், வேலினை ஏந்திய காளை, கறுத்த பெரிய கண்களைக் கொண்ட பெண்ணைக் கண்டு விரும்புதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

தேம்பாய் தெரியல் விடலையைத் திருநுதல்
காம்புஏர் தோளி கண்டு சேர்ந்தன்று(கொளு 15.1)

வெண்பா

கடைநின்று காமம் நலியக் கலங்கி
இடைநின்ற ஊரலர் தூற்றப் - புடைநின்ற
என்கண்டிலன் அந்நெடுந்தகை
தன்கண்டன் என் யான் கண்ட ஆறே (294)

பொருள்: மூங்கில் போன்ற தோள்களையும் பெண் தன்மையையும் கொண்ட இப்பெண்ணின் சிவந்த வாய் தளிர்போலவும், அரும்பு மார்புகள் பூங்கொத்தாகவும், பூங்கொடி போன்ற பெண்ணின் கண்களே பூக்களை மொய்க்கும் வண்டுகளாகவும் தோன்றும். ;இத்தகைய பெண்ணைப் பார்த்து என் விழிகள் மகிழ்ந்தன என்று தலைவன் கூறுகிறான்.

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Jul-2025, 20:13:59 IST