தானை நிலை.: Difference between revisions
No edit summary |
(; Added info on Finalised date) |
||
| (One intermediate revision by one other user not shown) | |||
| Line 33: | Line 33: | ||
[https://www.tamilvu.org/courses/degree/d021/d0214/html/d02141nd.htm தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/courses/degree/d021/d0214/html/d02141nd.htm தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|05-Jul-2025, 21:27:47 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 6 July 2025
தானை நிலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று.வீரம் மிக்க ஒருவனைப் போர்க்களத்தில் உள்ள அனைத்து வீரர்களும் பாராட்டுதல் தானை நிலை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் போரிட்ட இருபடைகளும் வீரன் ஒருவனின் விரத்தைப் புகழ்ந்து போற்றுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
இருபடையும் மறம் பழிச்சப்
பொருகளத்துப் பொலிவு எய்தின்று(கொளு 7.22)
வெண்பா
நேரார் பகையின் நிலைமை நெடுந்தகை
ஓரான் உறைகழியான் ஒள்வாளும் - தேர் ஆர்க்கும்
வெம்பரிமா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும்
கம்பமா நின்றான் களத்து (148)
பொருள்: பகைவரது படை வலிமை பற்றிக் கவலை கொள்ளாது, தன் வாளையும் உறையிலிருந்து எடுக்காது, வாட்படை, குதிரைப் படை, யானைப் படை எனத் தம் படையினர் அனைவரையும் தாங்கித் தூண்போல நின்றான் என வீரன் ஒருவன் போற்றப்படுகிறான்.
எடுத்துக்காட்டு
புறநானூறு 276
- பாடியவர்: மதுரைப் பூதன் இளநாகனார்
- திணை: தும்பை ; துறை: தானை நிலை
நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.
பொருள்: நல்ல மணமுள்ள பொருள்களைப் பயன்படுத்தாத, நரைத்த, வெண்மையான கூந்தலையும், இரவமரத்தின் விதைபோன்ற வற்றிய முலையையும் உடைய சிறந்த முதியவளுடைய அன்புச் சிறுவன், இளம் இடைக்குலப் பெண் ஒருத்தி ஒரு குடப்பாலில் தன் (சிறிய) நகத்தால் தெளித்த சிறிய உறைபோலப் பகைவரின் படைக்குத் தானே துன்பம் தருபவனாயினன். ஓரு குடம் பாலில் சிறிதளவே பிரைமோர் இட்டாலும், பால் தன் நிலையிலிருந்து மாறிவிடும். அதுபோல், இவ்வீரன், தனி ஒருவனாகவே, பகைவரின் படையை நிலைகலங்கச் செய்தான்.
உசாத்துணை
தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jul-2025, 21:27:47 IST