under review

இருவரும் தபுநிலை: Difference between revisions

From Tamil Wiki
(; Added info on Finalised date)
(Corrected typo errors;)
 
(One intermediate revision by the same user not shown)
Line 2: Line 2:
==விளக்கம்==
==விளக்கம்==
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
இருதிறத்துப் படையும் போரிட்டு மடிந்தமையால் ‘தும்பை அரசர் இருவரும் போரிட்டு மடிதல், இரு அரசரும் போரிட்டு மடிந்த பின்னர், இரு படையினரும் போரிட்டு மடிதல்’ என இருவகையாக இதைக் கொள்ளலாம்.  
இருதிறத்துப் படையும் போரிட்டு மடிந்தமையால் 'தும்பை அரசர் இருவரும் போரிட்டு மடிதல், இரு அரசரும் போரிட்டு மடிந்த பின்னர், இரு படையினரும் போரிட்டு மடிதல்' என இருவகையாக இதைக் கொள்ளலாம்.  


புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் இரு அரசரும் போரிட்டு மடிந்த பின்னர், இரு படையினரும் போரிட்டு மடிதல்                                  என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் இரு அரசரும் போரிட்டு மடிந்த பின்னர், இரு படையினரும் போரிட்டு மடிதல்                                  என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

Latest revision as of 17:40, 22 November 2025

இருவரும் தபுநிலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. தும்பைப் போரில் ஈடுபட்ட இரு வேந்தரும் படையினரும் போரில் இறந்து போதலைக் குறிப்பது இத்துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

இருதிறத்துப் படையும் போரிட்டு மடிந்தமையால் 'தும்பை அரசர் இருவரும் போரிட்டு மடிதல், இரு அரசரும் போரிட்டு மடிந்த பின்னர், இரு படையினரும் போரிட்டு மடிதல்' என இருவகையாக இதைக் கொள்ளலாம்.

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் இரு அரசரும் போரிட்டு மடிந்த பின்னர், இரு படையினரும் போரிட்டு மடிதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

பொரு படை களத்து அவிய
இருவேந்தரும் இகல் அவிந்தன்று (கொளு 7.12)

வெண்பா

காய்ந்து கடும்களிறு கண்கனலக் கைகூடி
வேந்தர் இருவரும் விண்படர - ஏந்து
பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி
இருபடையும் நீங்கா இகல் (138)

பொருள் : அரசும் படையும் இருதிறத்தும் பட்டதனைக் கண்டு பிறர் இரங்கிக்கூறியது- பகைத்துப் போரிட்ட மன்னர்கள் இருவரும், கடிய போர்க்களிறுகள் கண்ணழலக் கைகலந்து வீர மரணம் எய்தினர். அவர்கள் படைகளும் தாம் ஏந்திய போரிடும் படைக்கலன்கள் மின்ன, புறமுதுகிடாமல் வெகுண்டு, தம் பகை நீங்காமல் போரிட்டு களத்தில் வீழ்ந்தன.

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2025, 12:13:58 IST