பேய்நிலை: Difference between revisions
No edit summary |
; Added info on Finalised date |
||
| (One intermediate revision by one other user not shown) | |||
| Line 20: | Line 20: | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0213-html-d0213553-19680 காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0213-html-d0213553-19680 காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|05-Mar-2025, 18:24:07 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 01:04, 6 March 2025
பேய்நிலை காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. பேய் போர்க்களத்தில் புண்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் காவல் காப்பது பேய்நிலை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் போர்க்களத்தில் தன்னுடைய வேலின் திறத்தை வெளிப்படுத்தும் காஞ்சி மறவன் ஒருவன் விழுப்புண்பட்டு வீழ்ந்துகிடக்க, அவனது நிலையைக் கண்ணால் கண்டு, மனத்தால் அன்பு கொண்டு பேய் ஒன்று அவனைப் பிரியாமல் காத்து நின்றதைக் கூறுவது பேய்நிலை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
செருவேலோன் திறம்நோக்கிப்
பிரிவின்றிப் பேய்ஓம்பின்று (4.16)
வெண்பா
ஆயும் அடுதிறலாற்கு அன்பிலார்இல் போலும்
தோயும் தழல்குருதி தோள்படைப்ப - பேயும்
களம் புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான்
உளம் புகல ஓம்பல் உறும் (76)
பொருள்:போர்க்களத்திலுள்ள மறவர்கள் விரும்பும் வண்ணம் வெகுண்டு போர் செய்தான் காஞ்சி மறவன் ஒருவன்; அவன், வஞ்சி மறவர் வேலினால் புண்பட்டு வீழ்ந்தான். வீழ்ந்தவனது மனம் மகிழும்படி பேய்கூட அவனைக் காவல்காத்து நிற்கின்றது. ஆதலால், பலரும் பாராட்டுதற்குரிய திறனுடைய இம்மறவனுக்கு அன்பில்லாதவர் யாரும் இவ்வுலகில் இல்லை போலும் என நினைக்க வேண்டியுள்ளது. இதைக் கண்டவர்கள் இவ்வாறு பேசினார்கள்.
உசாத்துணை
காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:24:07 IST