under review

சுந்தரமூர்த்தி (தெருக்கூத்து): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 17: Line 17:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|01-Jan-2025, 15:30:32 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 01:04, 2 January 2025

சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி (பிறப்பு: 1956) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுந்தரமூர்த்தி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கோரைகேணியில் 1956-ல் பிறந்தார். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம் செய்தார். சுந்தரமூர்த்தியின் அப்பா, தாத்தா, அப்பா பாட்டியின் தம்பி முத்துகிருஷ்ணன் ஆகியோர் கூத்துக் கலைஞர்கள்.

கலை வாழ்க்கை

சுந்தரமூர்த்தியின் வாத்தியார் கோவிந்த கவுண்டர். சுந்தரமூர்த்தி சித்தி விநாயகர் நாடக சபா, பக்கிரிபாளையம் மாயக்கிருஷ்ணன் சபா, புதுவை கோனேறு இராமசாமி சபா, செங்கழனியம்மன் நாடக சபா ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். பொன்னம் பூண்டி அரிகிருஷ்ணன் சபாவின் வாத்தியார்.

சுந்தரமூர்த்தி கூத்து வாத்தியாராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். மாணவர்களுக்கு இவரே கூத்து விருத்தங்களை வெள்ளைத்தாளில் எழுதி வாசிக்கக் கற்றுக் கொடுப்பார். ஒவ்வொரு நாளும் ஊர்க்கோவிலில் மாலை முதல் இரவு வரை பயிற்சி அளித்து மாணவர்களை உருவாக்கினார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்துக்கள்
  • ராமாயணம்
  • நாவல்ஸ்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:30:32 IST