குகப்பிரியை: Difference between revisions
Meenambigai (talk | contribs) m (Spell Check done) |
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்) |
||
(14 intermediate revisions by 2 users not shown) | |||
Line 3: | Line 3: | ||
குகப்பிரியை (1902 - 1970) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், ஆன்மீகம் என பல தளங்களில் எழுதினார். குடும்பச்சூழலில் பெண்களின் பிரச்சினைகளை எழுதியவர். | குகப்பிரியை (1902 - 1970) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், ஆன்மீகம் என பல தளங்களில் எழுதினார். குடும்பச்சூழலில் பெண்களின் பிரச்சினைகளை எழுதியவர். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
குகப்பிரியையின் இயற்பெயர் சுவர்ணாம்பாள். கோவை மாவட்டம் காராத்தூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவருடைய தமையன் புகழ்பெற்ற இசை விமர்சகரும், கேசவர்த்தினி கூந்தல் எண்ணை தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனருமான கே.வி.ராமச்சந்திரன். குகப்பிரியை. காந்திய இயக்கத்தின்மேல் ஆர்வம் கொண்டவர். தன் கணவர் சுப்ரமணிய ஐயர் பெயரில் இருந்து குகப்பிரியை என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார் [https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88 . | குகப்பிரியையின் இயற்பெயர் சுவர்ணாம்பாள். கோவை மாவட்டம் காராத்தூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவருடைய தமையன் புகழ்பெற்ற இசை விமர்சகரும், கேசவர்த்தினி கூந்தல் எண்ணை தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனருமான கே.வி.ராமச்சந்திரன். குகப்பிரியை. காந்திய இயக்கத்தின்மேல் ஆர்வம் கொண்டவர். தன் கணவர் சுப்ரமணிய ஐயர் பெயரில் இருந்து குகப்பிரியை என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்<ref>[https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88 பசுபதிவுகள்-குகப்ரியை]</ref>. காந்தியத்தாக்கம் மிக்கவர். முத்துலட்சுமி ரெட்டி, லஷ்மி கிருஷ்ணமூர்த்தி, [[வசுமதி ராமசாமி]] போன்றோர் இவரது நண்பர்கள். | ||
== இதழியல் == | ==இதழியல்== | ||
குகப்பிரியை [[மங்கை]] என்னும் பெண்கள் இதழை 1946 முதல் 1950 வரை நடத்தினார். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் இருந்து வெளியிட்டார். புதுமைப்பெண் என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். இந்த இதழ்களில் குழந்தைகளைப் பேணல், பெண்கள் குறித்து காந்தி தந்த பேட்டிகள், பெண் அரசியல்வாதிகள் பற்றிய கட்டுரைகள், பெண் நிலைமை, வாழ்க்கை குறித்த கட்டுரைகள் இடம்பெற்றன. | குகப்பிரியை [[மங்கை]] என்னும் பெண்கள் இதழை 1946 முதல் 1950 வரை நடத்தினார். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் இருந்து வெளியிட்டார். புதுமைப்பெண் என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். இந்த இதழ்களில் குழந்தைகளைப் பேணல், பெண்கள் குறித்து காந்தி தந்த பேட்டிகள், பெண் அரசியல்வாதிகள் பற்றிய கட்டுரைகள், பெண் நிலைமை, வாழ்க்கை குறித்த கட்டுரைகள் இடம்பெற்றன. | ||
== இலக்கிய வாழ்க்கை == | ==இலக்கிய வாழ்க்கை== | ||
குகப்பிரியை [[வை.மு.கோதைநாயகி அம்மாள்]] நடத்திய [[ஜகன்மோகினி]], [[நந்தவனம்]] போன்ற இதழ்களிலும் [[ஆனந்தபோதினி]], [[கலைமகள்]], சிந்தாமணி, கிரஹலஷ்மி, திருமகள், காவேரி பாரதமணி போன்ற இதழ்களிலும் கதைகள், கட்டுரைகள் எழுதினார். பத்திரிகை உலகில் முதல் பெரிய நாவல் போட்டியை 1933-ல் | குகப்பிரியை [[வை.மு.கோதைநாயகி அம்மாள்]] நடத்திய [[ஜகன்மோகினி]], [[நந்தவனம்]] போன்ற இதழ்களிலும் [[ஆனந்தபோதினி]], [[கலைமகள் (இதழ்)|கலைமகள்]], சிந்தாமணி, கிரஹலஷ்மி, திருமகள், காவேரி பாரதமணி போன்ற இதழ்களிலும் கதைகள், கட்டுரைகள் எழுதினார். பத்திரிகை உலகில் முதல் பெரிய நாவல் போட்டியை 1933-ல் '[[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]’ விகடனில் 1000/- ரூபாய் பரிசுத்தொகையோடு வைத்தார். இதில் தேர்வான இரண்டு நாவல்களில் ஒன்று "குகப்ரியை"யின் "சந்திரிகா". பின்னர் விகடனில் அது தொடராக வந்து நூலாகவும் வெளிவந்தது. | ||
குகப்பிரியையின் நூல்களில் 'ஸ்ரீமகா பக்த விஜயம்' மாபெரும் வெற்றிபெற்ற நூல். 60 பக்தர்களின் வரலாறுகளின் தொகுப்பு இது. தொடர்ந்து இந்நூலின் பல பதிப்புகள் வெளியாகியபடியே இருந்தன. | குகப்பிரியையின் நூல்களில் 'ஸ்ரீமகா பக்த விஜயம்' மாபெரும் வெற்றிபெற்ற நூல். 60 பக்தர்களின் வரலாறுகளின் தொகுப்பு இது. தொடர்ந்து இந்நூலின் பல பதிப்புகள் வெளியாகியபடியே இருந்தன. 'இருள்’, 'தேவகி முதலிய கதைகள்’, ’ஜீவகலை’ போன்றவை குறிப்பிடத்தகுந்த சிறுகதைத்தொகுப்பு. "சஞ்சலராணி", "தேவி செளதுராணி" போன்றவை இவரது மொழிபெயர்ப்புகள். வானொலியில் உரைகள் பல ஆற்றினார். | ||
== இலக்கிய இடம் == | ==இலக்கிய இடம்== | ||
அக்காலப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். சந்திரிகா நாவலின் முகவுரையில் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] | அக்காலப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். சந்திரிகா நாவலின் முகவுரையில் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] "குகப்ரியையின் தமிழ்நடை உயிருள்ள நடை, தங்கு தடையின்றி இனிய நீரோட்டம்போல் செல்லும் நடை" என்று எழுதினார். இவரது சிறுகதைத்தொகுப்புகளுக்கு கல்கி, ரா.ஸ்ரீ. தேசிகன், [[கா.சி.வேங்கடரமணி|கா.சி. வேங்கடரமணி]] போன்றோர் அணிந்துரை அளித்து பாராட்டினர். | ||
== நூல்கள் == | ==நூல்கள்== | ||
====== நாவல் ====== | ======நாவல்====== | ||
* சந்திரிகா (1933) | * சந்திரிகா (1933) | ||
* கானல் நீர் | *கானல் நீர் | ||
* ஒலி | *ஒலி | ||
* இன்பத்தொல்லை (1962) | *இன்பத்தொல்லை (1962) | ||
* தம்பி மனைவி (1950) | *தம்பி மனைவி (1950) | ||
====== சிறுகதைத் தொகுப்பு ====== | ======சிறுகதைத் தொகுப்பு====== | ||
* சஞ்சீவி முதலிய கதைகள் (1946) | *சஞ்சீவி முதலிய கதைகள் (1946) | ||
* தேவகி முதலிய கதைகள் (1949) | *தேவகி முதலிய கதைகள் (1949) | ||
* ஜீவகலை | *ஜீவகலை | ||
* இருள் | *இருள் | ||
===== நாடகம் ===== | =====நாடகம் ===== | ||
* சுகன்யை சரித்திரம் | *சுகன்யை சரித்திரம் | ||
====== வரலாறு ====== | ======வரலாறு====== | ||
* திப்பு சுல்தான் | *திப்பு சுல்தான் | ||
* மார்த்தாண்ட வர்மன் | *மார்த்தாண்ட வர்மன் | ||
* சாம்ராட் அசோகன் (1954) | *சாம்ராட் அசோகன் (1954) | ||
====== மதம், ஆன்மிகம் ====== | ======மதம், ஆன்மிகம்====== | ||
* ஸ்ரீ மகாபக்த விஜயம் (1959) | *ஸ்ரீ மகாபக்த விஜயம் (1959) | ||
* ஆறுமுகன் தோத்திரம் பதிகம் கீர்த்தனை நலங்கு | *ஆறுமுகன் தோத்திரம் பதிகம் கீர்த்தனை நலங்கு | ||
====== பொது ====== | ====== பொது====== | ||
*பெண்களுக்கு (1954) | *பெண்களுக்கு (1954) | ||
===== மொழிபெயர்ப்புகள் ===== | =====மொழிபெயர்ப்புகள்===== | ||
* சஞ்சலராணி | *சஞ்சலராணி | ||
* தேவி செளதுராணி | *தேவி செளதுராணி | ||
== உசாத்துணை == | ==உசாத்துணை== | ||
* [https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88 பாரதமணி' இதழில் | *[https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88 பாரதமணி' இதழில் 1939-ல் வந்த "குகப்ரியை" யின் படைப்பு] | ||
* [http://www.sirukathaigal.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88/ குகப்பிரியையின் கதை பச்சைமோதிரம்] | *[http://www.sirukathaigal.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88/ குகப்பிரியையின் கதை பச்சைமோதிரம்] | ||
*[https://www.worldcat.org/title/tamilp-pen-eluttukalin-varalaru-1901-1950-cennaip-palkalaikkalakattirku-alikkapperra-munaivar-pattattirkana-ayvetu/oclc/466340065&referer=brief_results தமிழ் பெண்ணெழுத்தாளர் ஆய்வேடு] | *[https://www.worldcat.org/title/tamilp-pen-eluttukalin-varalaru-1901-1950-cennaip-palkalaikkalakattirku-alikkapperra-munaivar-pattattirkana-ayvetu/oclc/466340065&referer=brief_results தமிழ் பெண்ணெழுத்தாளர் ஆய்வேடு] | ||
* | *"விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ். | ||
== அடிக்குறிப்புகள் == | |||
<references /> | |||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|16-Jun-2022, 00:06:44 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category:எழுத்தாளர்]] | |||
[[Category:நாவலாசிரியர்]] | |||
[[Category:சிறுகதையாசிரியர்]] |
Latest revision as of 12:12, 17 November 2024
To read the article in English: Gugappriai.
குகப்பிரியை (1902 - 1970) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், ஆன்மீகம் என பல தளங்களில் எழுதினார். குடும்பச்சூழலில் பெண்களின் பிரச்சினைகளை எழுதியவர்.
தனிவாழ்க்கை
குகப்பிரியையின் இயற்பெயர் சுவர்ணாம்பாள். கோவை மாவட்டம் காராத்தூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவருடைய தமையன் புகழ்பெற்ற இசை விமர்சகரும், கேசவர்த்தினி கூந்தல் எண்ணை தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனருமான கே.வி.ராமச்சந்திரன். குகப்பிரியை. காந்திய இயக்கத்தின்மேல் ஆர்வம் கொண்டவர். தன் கணவர் சுப்ரமணிய ஐயர் பெயரில் இருந்து குகப்பிரியை என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்[1]. காந்தியத்தாக்கம் மிக்கவர். முத்துலட்சுமி ரெட்டி, லஷ்மி கிருஷ்ணமூர்த்தி, வசுமதி ராமசாமி போன்றோர் இவரது நண்பர்கள்.
இதழியல்
குகப்பிரியை மங்கை என்னும் பெண்கள் இதழை 1946 முதல் 1950 வரை நடத்தினார். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் இருந்து வெளியிட்டார். புதுமைப்பெண் என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். இந்த இதழ்களில் குழந்தைகளைப் பேணல், பெண்கள் குறித்து காந்தி தந்த பேட்டிகள், பெண் அரசியல்வாதிகள் பற்றிய கட்டுரைகள், பெண் நிலைமை, வாழ்க்கை குறித்த கட்டுரைகள் இடம்பெற்றன.
இலக்கிய வாழ்க்கை
குகப்பிரியை வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய ஜகன்மோகினி, நந்தவனம் போன்ற இதழ்களிலும் ஆனந்தபோதினி, கலைமகள், சிந்தாமணி, கிரஹலஷ்மி, திருமகள், காவேரி பாரதமணி போன்ற இதழ்களிலும் கதைகள், கட்டுரைகள் எழுதினார். பத்திரிகை உலகில் முதல் பெரிய நாவல் போட்டியை 1933-ல் 'கல்கி’ விகடனில் 1000/- ரூபாய் பரிசுத்தொகையோடு வைத்தார். இதில் தேர்வான இரண்டு நாவல்களில் ஒன்று "குகப்ரியை"யின் "சந்திரிகா". பின்னர் விகடனில் அது தொடராக வந்து நூலாகவும் வெளிவந்தது.
குகப்பிரியையின் நூல்களில் 'ஸ்ரீமகா பக்த விஜயம்' மாபெரும் வெற்றிபெற்ற நூல். 60 பக்தர்களின் வரலாறுகளின் தொகுப்பு இது. தொடர்ந்து இந்நூலின் பல பதிப்புகள் வெளியாகியபடியே இருந்தன. 'இருள்’, 'தேவகி முதலிய கதைகள்’, ’ஜீவகலை’ போன்றவை குறிப்பிடத்தகுந்த சிறுகதைத்தொகுப்பு. "சஞ்சலராணி", "தேவி செளதுராணி" போன்றவை இவரது மொழிபெயர்ப்புகள். வானொலியில் உரைகள் பல ஆற்றினார்.
இலக்கிய இடம்
அக்காலப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். சந்திரிகா நாவலின் முகவுரையில் கல்கி "குகப்ரியையின் தமிழ்நடை உயிருள்ள நடை, தங்கு தடையின்றி இனிய நீரோட்டம்போல் செல்லும் நடை" என்று எழுதினார். இவரது சிறுகதைத்தொகுப்புகளுக்கு கல்கி, ரா.ஸ்ரீ. தேசிகன், கா.சி. வேங்கடரமணி போன்றோர் அணிந்துரை அளித்து பாராட்டினர்.
நூல்கள்
நாவல்
- சந்திரிகா (1933)
- கானல் நீர்
- ஒலி
- இன்பத்தொல்லை (1962)
- தம்பி மனைவி (1950)
சிறுகதைத் தொகுப்பு
- சஞ்சீவி முதலிய கதைகள் (1946)
- தேவகி முதலிய கதைகள் (1949)
- ஜீவகலை
- இருள்
நாடகம்
- சுகன்யை சரித்திரம்
வரலாறு
- திப்பு சுல்தான்
- மார்த்தாண்ட வர்மன்
- சாம்ராட் அசோகன் (1954)
மதம், ஆன்மிகம்
- ஸ்ரீ மகாபக்த விஜயம் (1959)
- ஆறுமுகன் தோத்திரம் பதிகம் கீர்த்தனை நலங்கு
பொது
- பெண்களுக்கு (1954)
மொழிபெயர்ப்புகள்
- சஞ்சலராணி
- தேவி செளதுராணி
உசாத்துணை
- பாரதமணி' இதழில் 1939-ல் வந்த "குகப்ரியை" யின் படைப்பு
- குகப்பிரியையின் கதை பச்சைமோதிரம்
- தமிழ் பெண்ணெழுத்தாளர் ஆய்வேடு
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jun-2022, 00:06:44 IST