பாலதாஸ்: Difference between revisions
(வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து Links added) |
(Corrected Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள் to Category:நாடகக் கூத்துக் கலைஞர்) |
||
(6 intermediate revisions by the same user not shown) | |||
Line 6: | Line 6: | ||
1810-1915 வரை ஆடப்பட்ட கிறுஸ்தவ கூத்துக்களை தன் சிறுபிராயத்தில் பாலதாஸ் பார்த்து வளர்ந்தார். ஆரம்ப குரு அண்ணாவியார் தியோ ராஜேந்திரரிடம் தாளம், ராகம் கற்றார். கண்டி அரசன் நாடகத்தை இயற்றிய புலவர் மதுரகவி. நீ. மிக்கோர்சிங்கத்திடம் நாடக எழுத்துரு வடிவங்களையும், பாடல்கள் இயற்றும் தன்மையையும் கற்றார். யாழ்ப்பாணத்தில் 50, 60-களில் இளைஞனான பாலதாஸின் நடிப்புத்திறன் பலராலும் ரசிக்கப்பட்டது. மரபுவழி கூத்தரங்கின் வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடல், ஹார்மோனிய வாசிப்புத் திறமைகளோடு பங்களிப்பு செய்தார். | 1810-1915 வரை ஆடப்பட்ட கிறுஸ்தவ கூத்துக்களை தன் சிறுபிராயத்தில் பாலதாஸ் பார்த்து வளர்ந்தார். ஆரம்ப குரு அண்ணாவியார் தியோ ராஜேந்திரரிடம் தாளம், ராகம் கற்றார். கண்டி அரசன் நாடகத்தை இயற்றிய புலவர் மதுரகவி. நீ. மிக்கோர்சிங்கத்திடம் நாடக எழுத்துரு வடிவங்களையும், பாடல்கள் இயற்றும் தன்மையையும் கற்றார். யாழ்ப்பாணத்தில் 50, 60-களில் இளைஞனான பாலதாஸின் நடிப்புத்திறன் பலராலும் ரசிக்கப்பட்டது. மரபுவழி கூத்தரங்கின் வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடல், ஹார்மோனிய வாசிப்புத் திறமைகளோடு பங்களிப்பு செய்தார். | ||
நடிப்பு பாவங்களை வெளிப்படுத்தக் கூடிய சதைப்பிடிப்புடைய முகமும், உச்சஸ்தாயி குரலும், மிடுக்கான நடிப்பும், கம்பீரமான உடலும் அவரின் பலம். 1965-ல் இலங்கை கலைக்கழக நாடகப்பிரிவு நடத்திய தேசிய நாடகப் போட்டியில் நடிகனாக பங்கு கொண்டார். இவர் இயக்கிய | நடிப்பு பாவங்களை வெளிப்படுத்தக் கூடிய சதைப்பிடிப்புடைய முகமும், உச்சஸ்தாயி குரலும், மிடுக்கான நடிப்பும், கம்பீரமான உடலும் அவரின் பலம். 1965-ல் இலங்கை கலைக்கழக நாடகப்பிரிவு நடத்திய தேசிய நாடகப் போட்டியில் நடிகனாக பங்கு கொண்டார். இவர் இயக்கிய "கண்டி அரசன்" நாடகம் 2000 மேடைகளைக் கண்டது. ராவணசேனன் நாடகத்தில் கும்பகர்ணனாக நடித்தார். 1960-களின் நடுப்பகுதியில் பாளையூர் "வளர்பிறைக் கலா மன்றம்" ஆரம்பிக்கப்பட்டு அதன் உபதலைவராக பாலதாஸ் இருந்தார். | ||
===== மாணவர் ===== | ===== மாணவர் ===== | ||
* ஜோன்சன் ராஜ்குமார் | * ஜோன்சன் ராஜ்குமார் | ||
Line 52: | Line 52: | ||
* ஏமாந்தன் ஏரோதன் | * ஏமாந்தன் ஏரோதன் | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* | * "நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்" பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021 | ||
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf | * [https://noolaham.net/project/75/7475/7475.pdf "இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு" செல்லையா - மெற்றாஸ்மயில்] | ||
* [http://globaltamilnews.net/2016/2403 ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு] | * [http://globaltamilnews.net/2016/2403 ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு] | ||
* [http://www.tamilmurasuaustralia.com/2016/08/blog-post_0.html ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும்-மௌனகுரு] | * [http://www.tamilmurasuaustralia.com/2016/08/blog-post_0.html ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும்-மௌனகுரு] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:38:17 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்]] |
Latest revision as of 14:06, 17 November 2024
பாலதாஸ் (ஏப்ரல் 26, 1940) ஈழத்து நாட்டுகூத்துக் கலைஞர். ஈழத்து மரபு வழி நாடக உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் உருவான நடிகர். மரபு வழிக்கூத்தை அப்படியே நடிக்காமல் காலமாற்றத்திற்கேற்ப புதுமைகளை செய்து நடித்தார். நாட்டுக்கூத்து, இசை நாடகத்துறையில் நடித்து, தயாரித்து, நெறியாள்கை செய்த அண்ணாவியார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை பாஷையூரில் ஏப்ரல் 26, 1940-ல் பிறந்தார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்.
கலை வாழ்க்கை
1810-1915 வரை ஆடப்பட்ட கிறுஸ்தவ கூத்துக்களை தன் சிறுபிராயத்தில் பாலதாஸ் பார்த்து வளர்ந்தார். ஆரம்ப குரு அண்ணாவியார் தியோ ராஜேந்திரரிடம் தாளம், ராகம் கற்றார். கண்டி அரசன் நாடகத்தை இயற்றிய புலவர் மதுரகவி. நீ. மிக்கோர்சிங்கத்திடம் நாடக எழுத்துரு வடிவங்களையும், பாடல்கள் இயற்றும் தன்மையையும் கற்றார். யாழ்ப்பாணத்தில் 50, 60-களில் இளைஞனான பாலதாஸின் நடிப்புத்திறன் பலராலும் ரசிக்கப்பட்டது. மரபுவழி கூத்தரங்கின் வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடல், ஹார்மோனிய வாசிப்புத் திறமைகளோடு பங்களிப்பு செய்தார்.
நடிப்பு பாவங்களை வெளிப்படுத்தக் கூடிய சதைப்பிடிப்புடைய முகமும், உச்சஸ்தாயி குரலும், மிடுக்கான நடிப்பும், கம்பீரமான உடலும் அவரின் பலம். 1965-ல் இலங்கை கலைக்கழக நாடகப்பிரிவு நடத்திய தேசிய நாடகப் போட்டியில் நடிகனாக பங்கு கொண்டார். இவர் இயக்கிய "கண்டி அரசன்" நாடகம் 2000 மேடைகளைக் கண்டது. ராவணசேனன் நாடகத்தில் கும்பகர்ணனாக நடித்தார். 1960-களின் நடுப்பகுதியில் பாளையூர் "வளர்பிறைக் கலா மன்றம்" ஆரம்பிக்கப்பட்டு அதன் உபதலைவராக பாலதாஸ் இருந்தார்.
மாணவர்
- ஜோன்சன் ராஜ்குமார்
கூத்து பங்களிப்புகள்
- விடிய விடிய ஆடப்பட்ட பிரதான நாடகங்களை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஆற்றுகை செய்தார். இதனால் இக்கூத்துகள் பாடசாலைகளிலும் பிற இடங்களிலும் மேடையேற்றவும் யாழ்ப்பாணத்துக் குடாநாட்டினர் அல்லாதோரும் இவற்றைப் பார்க்கவுமான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது .
- கூத்துகளுக்கு மத்தளமும் தாளமும் பாவிப்பதே வழக்கம். ஹார்மோனியம் இசை நாடகங்களுக்கே பாவிக்கப்பட்டது . இசை நாடகங்களினால் ஈர்க்கப்பட்டவரும், நல்ல இசையாளனாகவும் இருந்த பாலதாஸ், நாடகத்தில் இசைக்கு அதன் சுருதிக்கு முக்கியத்துவமளித்தார். அவரது நாடகங்களில் ஹார்மோனியம் முக்கியப்பங்கு வகித்தது.
- பாலதாஸ் ஹார்மோனிய வித்துவான்.சுருதி மரியானிடமிருந்து ஹார்மோனியம் கற்றுக்கொண்டார். நாட்டுக்கூத்திற்கு ஹார்மோனியம் வாசிக்கும் மரபை சுருதி மரியான் எனும் மாசிலாமணி மரியாம்பிள்ளை ஆரம்பித்தார். முதல் முதலாக ஹார்மோனிய வாத்தியம் பாசையூரில் கண்டிஅரசன் நாட்டுக்கூத்திற்கு வாசிக்கப்பட்டது.
- பாலதாஸின் கூத்தில் பலரையும் கவர்ந்தது அவரின் குரல் வளமும் நடிப்பும்.
- யாழ்ப்பாணக் கத்தோலிக்கக் கூத்தின் ஆட்டங்களை உட்புகுத்தினார். யாழ்ப்பாணத் தென்மோடி மரபில் கண்டி அரசனில் ஆட்டத்தினைப் புகுத்தியமை அவரது ஒரு நாடகப் பங்களிப்பு.
விருதுகள்
பாடசாலை மட்டத்தில் வாங்கிய பரிசுகள்
- வீரத்தளபதி: நாட்டுக்கூத்து: இரண்டாம் பரிசு
- விசுவாமித்திரர் சபதம்: இசை நாடகம்: மூன்றாம் பரிசு
- சத்தியவேள்வி: இசை நாடகம்: இரண்டாம் பரிசு
- முத்தா மாணிக்கமா: முதலாம் இடம்
நடித்த நாடகங்கள்
நாட்டுக்கூத்து
- கண்டியரசன் நாடகம்
- ராவணசேனன் நாடகம்
- ஞானரூபன்
- கட்டபொம்மன்
- எஸ்தாக்கியோர்
- தேவசகாயம்பிள்ளை
- பூதத்தம்பி
- நீ ஒரு பாறை
- சங்கிலியன்
- தீர்க்கசுமங்கலி
கிறிஸ்தவ நாடகங்கள்
- நீ ஒரு பாறை
- அனைத்தும் அவரே
- கோடியற்புதர்
- பிலிப்பு நேரியார்
- பத்திரிசியார்
- யோசவ்வாஸ் முனிவர்
- யூடித்
- தாவீது கோலியாத்
- அன்பியம் மலர்ந்தது
- பியன்வெறு
- ஞானப்பிரகாசியார்
- இடமில்லை
- புரட்சியில் பூத்தயேசு
- தோமஸ் அடிகளார்
- ஏமாந்தன் ஏரோதன்
உசாத்துணை
- "நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்" பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021
- "இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு" செல்லையா - மெற்றாஸ்மயில்
- ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு
- ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும்-மௌனகுரு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:17 IST