ஜான் கோஸ்ட்: Difference between revisions
(Corrected the links to Disambiguation page) |
|||
(12 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=ஜான்|DisambPageTitle=[[ஜான் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:Johncoast.jpg|thumb|ஜான் கோஸ்ட்]] | [[File:Johncoast.jpg|thumb|ஜான் கோஸ்ட்]] | ||
ஜான் கோஸ்ட் (John Coast ) பிரிட்டிஷ் ராணுவ வீரர். சயாம் மரண ரயில்பாதை பற்றிய ஆவணப்பதிவாகக் கருதப்படும் தன்வரலாற்று நூலை எழுதியவர் | [[File:John-Coast1.jpg|thumb|ஜான் கோஸ்ட் பாலியில்]] | ||
[[File:Railroad.png|thumb|ஜான் கோஸ்ட் .சயாம் மரணரயில் பற்றிய ஆவணநூல்]] | |||
ஜான் கோஸ்ட் (John Coast ) (1916-1989)பிரிட்டிஷ் ராணுவ வீரர். சயாம் மரண ரயில்பாதை பற்றிய ஆவணப்பதிவாகக் கருதப்படும் தன்வரலாற்று நூலை எழுதியவர் | |||
பார்க்க : [[சயாம் மரண ரயில்பாதை]] | பார்க்க : [[சயாம் மரண ரயில்பாதை]] | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
ஜான் கோஸ்ட் இங்கிலாந்தில் கெண்ட் (Kent) பகுதியில் 30 | ஜான் கோஸ்ட் இங்கிலாந்தில் கெண்ட் (Kent) பகுதியில் அக்டோபர் 30, 1916-ல் பிறந்தார். லண்டனில் பணியாற்றிக்கொண்டிருந்த ஜான் கோஸ்ட் பிரிட்டிஷ் ராணுவத்தில் கோல்ட்ஸ்ட்ரீம் கார்ட்ஸ் (Coldstream Guards) என்னும் பிரிவில் சேர்ந்தார். பின்னர் நார்போக்ஸ் ( Norfolks) பிரிவின் அதிகாரியானார். ஜப்பானியர் சிங்கப்பூரை கைப்பற்ற முயன்றபோது அப்போரில் உயிர்தப்பிய மிகச்சிலரில் அவரும் ஒருவர். அவர் சிறைக்கைதியாகப் பிடிக்கப்பட்டும் பர்மா ரயில்பாதைப் பணிக்கு அனுப்பப்பட்டார் | ||
== சயாம் மரண ரயில்பாதையில் == | |||
1942 முதல் 1945 வரை ஜான் கோஸ்ட் சயாம் மரண ரயில்பாதை திட்டத்தில் போர்க்கைதியாக பணியாற்றினார். அவ்வனுபவங்களை ஆவணப்படுத்தி அவர் 1946-ல் எழுதிய Railroad of Death என்னும் நூல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குவாய் ஆற்றுக்கு மீண்டும் ( Return to the River Kwai) என்ற பேரில் பிபிசி 1969-ல் எடுத்த ஆவணப்படம் அந்நூலை அடியொற்றியது. | |||
சயாம் மரணரயில் பணிகளின்போது கடுமையாக வதைக்கப்பட்ட பிரிட்டிஷ் கைதிகளின் உள்ளம் சோர்வடையாமலிருக்க கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்றவற்றை ஜான் கோஸ்ட் செய்தார். அவற்றை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். பிரிட்டிஷ் கைதிகளுக்கும் பிறருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். பின்னர் ஜப்பானுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின்போது அவருடைய நூல் முதன்மை ஆவணமாக கருத்தில்கொள்ளப்பட்டது | சயாம் மரணரயில் பணிகளின்போது கடுமையாக வதைக்கப்பட்ட பிரிட்டிஷ் கைதிகளின் உள்ளம் சோர்வடையாமலிருக்க கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்றவற்றை ஜான் கோஸ்ட் செய்தார். அவற்றை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். பிரிட்டிஷ் கைதிகளுக்கும் பிறருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். பின்னர் ஜப்பானுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின்போது அவருடைய நூல் முதன்மை ஆவணமாக கருத்தில்கொள்ளப்பட்டது | ||
== பிற்கால வாழ்க்கை == | == பிற்கால வாழ்க்கை == | ||
போருக்குப்பின் | போருக்குப்பின் 1947-ல் ஜான் கோஸ்ட் தாய்லாந்தில் பாங்காங் வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். பின்னர் 1948 முதல் இந்தோனேசியாவின் சுதந்திரப்போரின்போது அதன் பிற்கால அதிபர் சுகர்ணோவின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார். 1952-ல் எழுதப்பட்ட தன் Recruit to Revolution என்னும் நூலில் அவர் இந்தோனேசியாவின் சுதந்திரப்போரை விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார். 1950-ல் இந்தோனேசியாவின் அரசியலில் இருந்து ஒதுங்கி பாலி தீவில் குடியேறினார். பாலியின் கலைஞர்களை ஐரோப்பாவுக்கு அழைத்துச்சென்று நடனநிகழ்ச்சிகளை நடத்தும் முதல் கலைச்சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தார். மிக வெற்றிகரமான அப்பயணத்தை 1953-ல் எழுதிய Dancing out of Bali என்னும் நூலில் விவரித்தார். | ||
ஜான் கோஸ்ட் | ஜான் கோஸ்ட் 1956-ல் லண்டன் திரும்பி ஓப்பரா கலைஞர்களான மரியோ லான்ஸா (Mario Lanza) லூசியானோ பரவோட்டி( Luciano Pavarotti) போன்றவர்களின் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றினார். பாப் டைலன் Bob Dylan பண்டிட் ரவிசங்கர் போன்றவர்களை லண்டனில் அறிமுகம் செய்தவர் ஜான் கோஸ்ட்தான். | ||
ஜான் கோஸ்ட் கிழக்காசிய அரசியல் மற்றும் கலை பற்றி அமெரிக்க, ஐரோப்பிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். டேவிட் அட்டன்பரோ பாலி பற்றி எடுத்த ஆவணப்படத்திற்கு அவர்தான் முதன்மைப் பங்களிப்பாளர். | |||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
ஜான் கோஸ்ட்இந்தோனேசியா (ஜாவா)வைச் சேர்ந்த சுபியாந்தி ( Supianti) யை மணந்தார். நடனக்கலைஞரான சுபியாந்தி ஜான் கோஸ்டின் கலைச்சுற்றுலாக்களை ஒருங்கிணைத்தவரும்கூட. | ஜான் கோஸ்ட்இந்தோனேசியா (ஜாவா)வைச் சேர்ந்த சுபியாந்தி ( Supianti) யை மணந்தார். நடனக்கலைஞரான சுபியாந்தி ஜான் கோஸ்டின் கலைச்சுற்றுலாக்களை ஒருங்கிணைத்தவரும்கூட. | ||
== மறைவு == | |||
ஜான் கோஸ்ட் 1989-ல் லண்டனில் மறைந்தார் | |||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* Railroad to Death (1946) | * Railroad to Death (1946) | ||
* Recruit to Revolution (1952) | * Recruit to Revolution (1952) | ||
* ''Dancing out of Bali (1953)'' | * ''Dancing out of Bali (1953)'' | ||
* Some Aspects of Siamese Politics | * Some Aspects of Siamese Politics | ||
== உசாத்துணை == | |||
*[http://www.johncoast.org/ ஜான் கோஸ்ட் இணையதளம்] | |||
*[https://myrmidonbooks.com/john-coast/ ஜான்கோஸ்ட் குறிப்புகள்] | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:38:30 IST}} | |||
[[Category:Tamil Content]] |
Latest revision as of 18:23, 27 September 2024
- ஜான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜான் (பெயர் பட்டியல்)
ஜான் கோஸ்ட் (John Coast ) (1916-1989)பிரிட்டிஷ் ராணுவ வீரர். சயாம் மரண ரயில்பாதை பற்றிய ஆவணப்பதிவாகக் கருதப்படும் தன்வரலாற்று நூலை எழுதியவர்
பார்க்க : சயாம் மரண ரயில்பாதை
பிறப்பு, கல்வி
ஜான் கோஸ்ட் இங்கிலாந்தில் கெண்ட் (Kent) பகுதியில் அக்டோபர் 30, 1916-ல் பிறந்தார். லண்டனில் பணியாற்றிக்கொண்டிருந்த ஜான் கோஸ்ட் பிரிட்டிஷ் ராணுவத்தில் கோல்ட்ஸ்ட்ரீம் கார்ட்ஸ் (Coldstream Guards) என்னும் பிரிவில் சேர்ந்தார். பின்னர் நார்போக்ஸ் ( Norfolks) பிரிவின் அதிகாரியானார். ஜப்பானியர் சிங்கப்பூரை கைப்பற்ற முயன்றபோது அப்போரில் உயிர்தப்பிய மிகச்சிலரில் அவரும் ஒருவர். அவர் சிறைக்கைதியாகப் பிடிக்கப்பட்டும் பர்மா ரயில்பாதைப் பணிக்கு அனுப்பப்பட்டார்
சயாம் மரண ரயில்பாதையில்
1942 முதல் 1945 வரை ஜான் கோஸ்ட் சயாம் மரண ரயில்பாதை திட்டத்தில் போர்க்கைதியாக பணியாற்றினார். அவ்வனுபவங்களை ஆவணப்படுத்தி அவர் 1946-ல் எழுதிய Railroad of Death என்னும் நூல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குவாய் ஆற்றுக்கு மீண்டும் ( Return to the River Kwai) என்ற பேரில் பிபிசி 1969-ல் எடுத்த ஆவணப்படம் அந்நூலை அடியொற்றியது.
சயாம் மரணரயில் பணிகளின்போது கடுமையாக வதைக்கப்பட்ட பிரிட்டிஷ் கைதிகளின் உள்ளம் சோர்வடையாமலிருக்க கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்றவற்றை ஜான் கோஸ்ட் செய்தார். அவற்றை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். பிரிட்டிஷ் கைதிகளுக்கும் பிறருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். பின்னர் ஜப்பானுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின்போது அவருடைய நூல் முதன்மை ஆவணமாக கருத்தில்கொள்ளப்பட்டது
பிற்கால வாழ்க்கை
போருக்குப்பின் 1947-ல் ஜான் கோஸ்ட் தாய்லாந்தில் பாங்காங் வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். பின்னர் 1948 முதல் இந்தோனேசியாவின் சுதந்திரப்போரின்போது அதன் பிற்கால அதிபர் சுகர்ணோவின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார். 1952-ல் எழுதப்பட்ட தன் Recruit to Revolution என்னும் நூலில் அவர் இந்தோனேசியாவின் சுதந்திரப்போரை விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார். 1950-ல் இந்தோனேசியாவின் அரசியலில் இருந்து ஒதுங்கி பாலி தீவில் குடியேறினார். பாலியின் கலைஞர்களை ஐரோப்பாவுக்கு அழைத்துச்சென்று நடனநிகழ்ச்சிகளை நடத்தும் முதல் கலைச்சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தார். மிக வெற்றிகரமான அப்பயணத்தை 1953-ல் எழுதிய Dancing out of Bali என்னும் நூலில் விவரித்தார்.
ஜான் கோஸ்ட் 1956-ல் லண்டன் திரும்பி ஓப்பரா கலைஞர்களான மரியோ லான்ஸா (Mario Lanza) லூசியானோ பரவோட்டி( Luciano Pavarotti) போன்றவர்களின் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றினார். பாப் டைலன் Bob Dylan பண்டிட் ரவிசங்கர் போன்றவர்களை லண்டனில் அறிமுகம் செய்தவர் ஜான் கோஸ்ட்தான்.
ஜான் கோஸ்ட் கிழக்காசிய அரசியல் மற்றும் கலை பற்றி அமெரிக்க, ஐரோப்பிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். டேவிட் அட்டன்பரோ பாலி பற்றி எடுத்த ஆவணப்படத்திற்கு அவர்தான் முதன்மைப் பங்களிப்பாளர்.
தனிவாழ்க்கை
ஜான் கோஸ்ட்இந்தோனேசியா (ஜாவா)வைச் சேர்ந்த சுபியாந்தி ( Supianti) யை மணந்தார். நடனக்கலைஞரான சுபியாந்தி ஜான் கோஸ்டின் கலைச்சுற்றுலாக்களை ஒருங்கிணைத்தவரும்கூட.
மறைவு
ஜான் கோஸ்ட் 1989-ல் லண்டனில் மறைந்தார்
நூல்கள்
- Railroad to Death (1946)
- Recruit to Revolution (1952)
- Dancing out of Bali (1953)
- Some Aspects of Siamese Politics
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:30 IST