அ. சரவணமுத்துப்பிள்ளை: Difference between revisions
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்) |
(Corrected Category:புலவர்கள் to Category:புலவர்) |
||
Line 28: | Line 28: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:புலவர்]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 11:49, 17 November 2024
- சரவணமுத்துப்பிள்ளை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரவணமுத்துப்பிள்ளை (பெயர் பட்டியல்)
அ. சரவணமுத்துப்பிள்ளை (நாணலம் நித்திலக்கிழார்) (1882-1929) ஈழத்து தமிழ்ப் புலவர். நாடகக் கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
அ. சரவணமுத்துப்பிள்ளை இலங்கை மட்டக்களப்பு நகரில் அருணகிரி, கந்தம்மை இணையருக்கு மகனாக 1882-ல் பிறந்தார். பின்னாளில் தன் பெயரை தனித்தமிழில் 'நாணலம் நித்திலக்கிழார்' என மாற்றிக் கொண்டார். ஆங்கிலம் ஏழாம் வகுப்பு வரை படித்தார். அர்ச், மைக்கேல் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சுவாமி விபுலானந்தரிடம் இலக்கிய இலக்கண நூல்களைக் கற்றார்.
பணி
இந்து வாலிபர் சங்கத்தினரால் நடத்தப்பட்டு வந்த வாசகசாலைக் காப்பாளராகப் பணியாற்றினார். அரசாங்க சேவையில் எழுதுவினைஞராக மட்டக்களப்புக் காட்டுக்கந்தோரில் பணியாற்றினார். 1916-ல் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய வித்துவான் தேர்வில் தேர்ச்சிபெற்று சங்கத்தின் கலைக்குழுவில் அங்கத்தவரானார்.
இலக்கிய வாழ்க்கை
சந்தக்கவி, வசனங்களில் சிலேடை, கண்டனங்கள் ஆகியவை எழுதினார். செய்யுள்கள் பல இயற்றினார். நாடகங்கள் பல எழுதினார். நாடகக் கலைஞர்.
மறைவு
அ. சரவணமுத்துப்பிள்ளை 1929-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- மாமாங்கப் பிள்ளையார் பதிகம் (1915)
- கதிர்காமவேலவர் தோத்திர மாலை
- சனி வெண்பா
நாடகங்கள்
- இலங்கா தகனம்
- பாதுகா பட்டாபிஷேகம்
- இராமர் வனவாசம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:சரவணமுத்து, அருணகிரி (ஈழத்து நித்திலக்கிழார்):நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Dec-2022, 11:17:06 IST