ச. மெய்யப்பன்: Difference between revisions
(Corrected Category:ஆளுமைகள் to) |
(Corrected Category:தமிழறிஞர்கள் to Category:தமிழறிஞர்Corrected Category:பேராசிரியர்கள் to Category:பேராசிரியர்) |
||
Line 50: | Line 50: | ||
[[Category:ஈழம்]] | [[Category:ஈழம்]] | ||
[[Category: | [[Category:தமிழறிஞர்]] | ||
[[Category: | [[Category:பேராசிரியர்]] |
Latest revision as of 12:18, 17 November 2024
- மெய்யப்பன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மெய்யப்பன் (பெயர் பட்டியல்)
To read the article in English: S. Meiyappan.
ச. மெய்யப்பன் தமிழறிஞர், பதிப்பாளர், தமிழ்ப் பேராசிரியர். மணிவாசகர் பதிப்பகம், மெய்யப்பன் நூலகம் ஆகிய வெளியீட்டகங்களை நடத்தினார். சிதம்பரத்தில் தமிழுக்கென்று நாற்பதாயிரம் நூல்களுடன் முதல் தனியார் ஆய்வகம் ஒன்றை அமைத்தார்.
பிறப்பு, கல்வி
புதுக்கோட்டை மாவட்டம், இராமச்சந்திராபுரம், கடியாபட்டியில் குங்கிலியம் சண்முகனாருக்கு மகனாக மெய்யப்பன் பிறந்தார். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தனிவாழ்க்கை
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 36 ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். வ.சுப. மாணிக்கனாரின் மாணவர்.
இலக்கிய வாழ்க்கை
மெய்யப்பன் மணிவாசகர் பதிப்பகத்தையும் பின்னர் மெய்யப்பன் நூலகத்தையும் தொடங்கி, அதன் வழியாகப் பல தமிழ் நூல்களை வெளியிட்டார். மணிவாசகர் நூலகம் 3500 நூல்களையும், மெய்யப்பன் பதிப்பகம் 750 நூல்களையும் வெளியிட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்காக "வெற்றித் துணைவன்" எனும் பெயரில் பாட நூல்களு கையேடுகளை வெளியிட்டுள்ளார். தமிழாய்வு நூல்களை அதிகமாக வெளியிட்டார். சிதம்பரத்தில் இவருடைய பெயரிலேயே மெய்யப்பன் பதிப்பகம் நிறுவப்பட்டுள்ளது.
மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூல்களைச் செம்பதிப்பாக வெளியிட்டார். துறைவாரியான நூல்களைத் தக்க அறிஞர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்ட்டார். மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள், பேராசிரியர் சு. சக்திவேல் எழுதிய நாட்டுப்புறவியல் ஆய்வு, பேராசிரியர் ஆறு. இராமநாதன் எழுதிய நாட்டுப்புறவியல் துறை சார்ந்த களஞ்சியங்கள், அறிஞர் ச.வே.சுப்பிரமணியனாரைக் கொண்டு வெளியிட்ட தமிழ் இலக்கிய நூல்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய விளக்கவுரை என்னும் நூலும், Tholkaappiyam in English Content and Cultural Translation (With short commentary) என்னும் ஆங்கில நூலும் தொல்காப்பியத்தைத் தொடக்க நிலையில் பயில்பவர்களுக்குப் பயன்படும் சிறந்த நூல்கள்.
மெய்யப்பன் நூலகம்
மெய்யப்பன் நூலகம் மெய்யப்பனால் சிதம்பரத்தில் உருவாக்கப்பட்ட ஆய்வுநூலகம் (பார்க்க மெய்யப்பன் நூலகம்)
விருது
- குன்றக்குடி அடிகளார் இவருக்கு "தமிழவேள்" என்ற பட்டத்தை அளித்தார்.
- தருமபுரம் ஆதீனத் தலைவர் "செந்தமிழ்க் காவலர்" என்ற பட்டத்தை அளித்தார்.
- இவரின் தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
பதிப்பித்த நூல்கள்
- தொல்காப்பிய விளக்கவுரை
- பாரதியார் பாடல்கள்
- பாரதியார் கவிதைகள்
- திருவாசகம்
- பதிப்புரை இலக்கியம்
- தாயுமானவர் பாடல்கள்
- சித்தர் பாடல்கள்
- பட்டினத்தார் பாடல்கள்
- பாரதிதாசன் பாடல்கள்
- இலக்கிய வினாவிடை
- நகரத்தார் கலைக்கலஞ்சியம்
- தாகூர் வாழ்க்கை வரலாறு
- வள்ளலார் வாழ்க்கை வரலாறு
- Tholkaappiyam in English Content and Cultural Translation
இதர இணைப்புகள்
உசாத்துணை
- https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6kZQy#book1/
- மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் - முனைவர் மு.இளங்கோவன் (muelangovan.blogspot.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:08 IST