க. அன்பழகன்: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
No edit summary
 
(5 intermediate revisions by 3 users not shown)
Line 6: Line 6:


== பணி ==
== பணி ==
அன்பழகன் 1982 முதல் 1999 வரை தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அலுவலக நிலையில் பல பணிப்பொறுப்புகளில் இருந்தார்.  ஔவை நடராசன்,  கி. கருணாகரன் உள்ளிட்ட துணைவேந்தர்களின் உதவியாளராக இருந்து பணியாற்றினார். உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது க. இராசாராம் அவர்களின் உதவியாளராக இருந்து மாநாட்டிற்காக பணியாற்றினார்.
அன்பழகன் 1982 முதல் 1999 வரை தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அலுவலக நிலையில் பல பணிப்பொறுப்புகளில் இருந்தார்.  [[ஔவை நடராசன்]],  கி. கருணாகரன் உள்ளிட்ட துணைவேந்தர்களின் உதவியாளராக இருந்து பணியாற்றினார். உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது க. இராசாராம் அவர்களின் உதவியாளராக இருந்து மாநாட்டிற்காக பணியாற்றினார்.


== ஆசிரியப்பணி ==
== ஆசிரியப்பணி ==
அன்பழகன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2000-ம் ஆண்டு முதல் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தில் தமிழ் விரிவுரையாளர், பேராசிரியர், தமிழ்ப்பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றினார். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற அஞ்சல்வழிக் கல்வி வகுப்புகளில் கலந்துகொண்டு, தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பாடங்களாக நடத்தினார். 2021-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
அன்பழகன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2000-ம் ஆண்டு முதல் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தில் தமிழ் விரிவுரையாளர், பேராசிரியர், தமிழ்ப்பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றினார். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற அஞ்சல்வழிக் கல்வி வகுப்புகளில் கலந்துகொண்டு, தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பாடங்களாக நடத்தினார். 2021-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்றார்.


== பொறுப்புகள் ==
== பொறுப்புகள் ==
* அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்கத் தமிழ்ப்பிரிவின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.  
* அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்கத் தமிழ்ப்பிரிவின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.  


* தமிழ்ப்பிரிவுத் தலைவர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக்குழு உறுப்பினர், முனைவர் பட்ட ஆய்வுக்குழு உறுப்பினர், வல்லுநர்க்குழு உறுப்பினர், வினாத்தாள் தயாரிப்புக்குழுத் தலைவர், விடைத்தாள் மதிப்பீட்டுக்குழுத் தலைவர் உள்நாடு மற்றும் வெளிநாடு மானிட்டரிங் கமிட்டி உறுப்பினர், விடைத்தாள் தயாரிப்புக்குழு உறுப்பினர், நடுவர் – படைப்பிலக்கிய நூல்கள் தேர்வு (உள்நாடு மற்றும் வெளிநாடு), வாழ்நாள் உறுப்பினர் (உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்), ஒருங்கிணைப்பாளர் (தேசியக் கருத்தரங்குகள்) மற்றும் தொலைதூரத் தொடர்பு வகுப்புகள் புறநிலைத் தேர்வாளர் (எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வுகள்), தலைவர் (இணைய வழித்தேர்வுகள்), சோதிடவியல் பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை வாய்மொழித்தேர்வுகள் ஆகிய பொறுப்புகளில் இருந்தார்.
* தமிழ்ப்பிரிவுத் தலைவர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக்குழு உறுப்பினர், முனைவர் பட்ட ஆய்வுக்குழு உறுப்பினர், வல்லுநர்க்குழு உறுப்பினர், வினாத்தாள் தயாரிப்புக்குழுத் தலைவர், விடைத்தாள் மதிப்பீட்டுக்குழுத் தலைவர் உள்நாடு மற்றும் வெளிநாடு கண்காணிப்புக் குழு உறுப்பினர், விடைத்தாள் தயாரிப்புக்குழு உறுப்பினர், நடுவர் - படைப்பிலக்கிய நூல்கள் தேர்வு (உள்நாடு மற்றும் வெளிநாடு), வாழ்நாள் உறுப்பினர் (உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்), ஒருங்கிணைப்பாளர் (தேசியக் கருத்தரங்குகள்) மற்றும் தொலைதூரத் தொடர்பு வகுப்புகள் புறநிலைத் தேர்வாளர் (எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வுகள்), தலைவர் (இணைய வழித்தேர்வுகள்), சோதிடவியல் பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை வாய்மொழித்தேர்வுகள் ஆகிய பொறுப்புகளில் இருந்தார்.
[[File:க. அன்பழகன்1.png|thumb|க. அன்பழகன் குறள் நெறிச் செல்வர் விருது பெறும்போது]]
[[File:க. அன்பழகன்1.png|thumb|க. அன்பழகன் குறள் நெறிச் செல்வர் விருது பெறும்போது]]


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
க. அன்பழகன் ஆறாம் வகுப்பில் பயிலும்பொழுதே எழுதத் தொடங்கினார். 1979-ல் முதல் கவிதை வெளியானது. 1983-84-ல் இவரின் சிறுகதை வெளிவரத் தொடங்கியது. [[தீபம் (இலக்கிய இதழ்)|தீபம்]], ஆரண்யா, [[கொல்லிப்பாவை]], [[சுபமங்களா]] உள்ளிட்ட சிற்றிதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. இதயம் பேசுகிறது இதழில் 'பறக்க மறந்த சிறகுகள்' என்ற கதையை எழுதி கவனம் பெற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதினார். 1990 முதல் 1995 வரை தமிழகத்தில் வெளிவந்த பல்வேறு சிற்றிதழ்களில் க.அன்பழகன் என்ற பெயரிலும் ஹரணி என்ற பெயரிலும் தொடர்ச்சியாக எழுதினார். 1993-ல் 'உயிர்க்குடில்' என்ற சிறுகதைத் தொகுப்பை ஔவை. நடராசனின் அணிந்துரையுடன் வெளியிட்டார். உயிர்க்குடில் என்ற சிறுகதை [[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] இதழில் நட்சத்திர சிறுகதையாக வெளிவந்தது. 2003-ல் இலங்கையில் உலக இந்து மாநாட்டிலும்,  மலேசியாவில் ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.  
க. அன்பழகன் ஆறாம் வகுப்பில் பயிலும்பொழுதே எழுதத் தொடங்கினார். 1979-ல் முதல் கவிதை வெளியானது. 1983-84-ல் இவரின் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. [[தீபம் (இலக்கிய இதழ்)|தீபம்]], ஆரண்யா, [[கொல்லிப்பாவை]], [[சுபமங்களா]] உள்ளிட்ட சிற்றிதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. [[இதயம் பேசுகிறது (இதழ்)|இதயம் பேசுகிறது]] இதழில் 'பறக்க மறந்த சிறகுகள்' என்ற கதையை எழுதி கவனம் பெற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதினார். 1990 முதல் 1995 வரை தமிழகத்தில் வெளிவந்த பல்வேறு சிற்றிதழ்களில் க.அன்பழகன் என்ற பெயரிலும் ஹரணி என்ற பெயரிலும் தொடர்ச்சியாக எழுதினார். 1993-ல் 'உயிர்க்குடில்' என்ற சிறுகதைத் தொகுப்பை ஔவை. நடராசனின் அணிந்துரையுடன் வெளியிட்டார். 'உயிர்க்குடில்' என்ற சிறுகதை [[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] இதழில் நட்சத்திர சிறுகதையாக வெளிவந்தது. 2003-ல் இலங்கையில் உலக இந்து மாநாட்டிலும்,  மலேசியாவில் ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் கலந்துகொண்டார்.  


===== பாடநூல்கள் =====
===== பாடநூல்கள் =====
Line 24: Line 24:


== சிறப்புகள் ==
== சிறப்புகள் ==
* இவரின் படைப்புகளை ஆராய்ந்து இதுவரை ஐந்துபேர் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இளம் முனைவர் பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளனர்.
* அன்பழகனின் படைப்புகளை ஆராய்ந்து இதுவரை ஐந்துபேர் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இளம் முனைவர் பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளனர்.


* பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இவரின் படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.  
* பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இவரின் படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.  
Line 34: Line 34:
* தியாக துருகம் பாரதி தமிழ்ச்சங்க விருது (2013)
* தியாக துருகம் பாரதி தமிழ்ச்சங்க விருது (2013)
* மண்ணின் சிறந்த படைப்பாளி விருது (2014)
* மண்ணின் சிறந்த படைப்பாளி விருது (2014)
* சென்னைக் கம்பன் கழகம் – தமிழ் நிதி விருது (2016)
* சென்னைக் கம்பன் கழகம் - தமிழ் நிதி விருது (2016)
* உலகத் திருக்குறள் பேரவை  – குறள்நெறிச் செல்வர் விருது (2017)
* உலகத் திருக்குறள் பேரவை  - குறள்நெறிச் செல்வர் விருது (2017)
* திருப்பூர் இலக்கிய விருது (2022)
* திருப்பூர் இலக்கிய விருது (2022)
* பொதிகை மின்னல் சிறந்த நூல் இலக்கிய விருது மற்றும் பொற்கிழி (2023)
* பொதிகை மின்னல் சிறந்த நூல் இலக்கிய விருது மற்றும் பொற்கிழி (2023)
Line 44: Line 44:


== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
===== கவிதைத் தொகுப்பு =====  
===== கவிதைத் தொகுப்பு =====
* உதிரிலைகள் (2017)
* உதிரிலைகள் (2017)
* விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி (2019)
* விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி (2019)
Line 70: Line 71:
* பூக்கள் பூத்துக்கொண்டேயிருக்கின்றன (2024)  
* பூக்கள் பூத்துக்கொண்டேயிருக்கின்றன (2024)  


===== சிறுகதைத் தொகுப்பு =====  
===== சிறுகதைத் தொகுப்பு =====
* உயிர்க்குடில் (1993)
* உயிர்க்குடில் (1993)
* ஒவ்வொரு மழை நாளிலும் (2000)
* ஒவ்வொரு மழை நாளிலும் (2000)
Line 88: Line 90:
* நதியின் பிழையன்று (2024)
* நதியின் பிழையன்று (2024)


===== ஆய்வு நூல்கள் =====  
===== ஆய்வு நூல்கள் =====
* மின்மினித்தடங்கள் (2004)
* மின்மினித்தடங்கள் (2004)
* ஒருபொருட்பல சொற்கள் (2004)
* ஒருபொருட்பல சொற்கள் (2004)
Line 98: Line 101:
* இலக்கிய நிழல் (2024)  
* இலக்கிய நிழல் (2024)  


===== கட்டுரை =====  
===== கட்டுரை =====
* பெண்ணியல் கட்டுரைகள் (2004)
* பெண்ணியல் கட்டுரைகள் (2004)
* பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா (2010)
* பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா (2010)
* நத்தையோட்டுத் தண்ணீர் (2012)   
* நத்தையோட்டுத் தண்ணீர் (2012)   
* மாண்புமிகு வள்ளுவம் (2016)
* மாண்புமிகு வள்ளுவம் (2016)
* விழையாமை என்னும் பேராண்மை – திருக்குறள் நூல் (2022)
* விழையாமை என்னும் பேராண்மை - திருக்குறள் நூல் (2022)
* The Magnanimity called Non-interference (திருக்குறள் நூல் ஆங்கிலத்தில்)
* The Magnanimity called Non-interference (திருக்குறள் நூல் ஆங்கிலத்தில்)
* செம்மொழி அறங்கள் – (2022) (இணைய நூல்கள்)  
* செம்மொழி அறங்கள் - (2022) (இணைய நூல்கள்)  


===== இணைய நூல்கள் =====  
===== இணைய நூல்கள் =====
* ஜால்ரா
* ஜால்ரா
* என்னமோ நடக்குது
* என்னமோ நடக்குது
Line 116: Line 121:
* [https://karanthaijayakumar.blogspot.com/2017/02/blog-post_15.html ஹரணி - கரந்தை ஜெயக்குமார்]
* [https://karanthaijayakumar.blogspot.com/2017/02/blog-post_15.html ஹரணி - கரந்தை ஜெயக்குமார்]


{{Second review completed}}
{{Finalised}}
 
{{Fndt|02-Jun-2024, 20:59:57 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:27, 12 October 2026

க. அன்பழகன்

க. அன்பழகன் (ஹரணி) (பிறப்பு: ஜூன் 2, 1961) தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர், பேராசிரியர். கவிதை, சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். சங்க இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, அகராதியியல், அறிவியல், உளவியல், அறிவியல் தமிழ், சிறுவர் இலக்கியம் ஆகியவை சார்ந்து எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

க. அன்பழகன் தஞ்சாவூரில் பொ. கலியபெருமாள், ஞானாம்பாள் இணையருக்கு ஜூன் 2, 1961-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர். தந்தை மருந்தாளுநராக இருந்தார். அன்பழகன் கரந்தை உமாமகேசுவரனார் உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். புகுமுக வகுப்பு, இளம் அறிவியல் (வேதியியல்) வகுப்புகளைத் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழியாகப் பெற்றார். முனைவர் பா. மதிவாணன், முனைவர் பெ. மாதையன் ஆகியோர் இவரின் நெறியாளர்களாக அமைந்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 'ஒரு பொருட் பல சொற்கள் (பெயர்கள்)' குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார்.

பணி

அன்பழகன் 1982 முதல் 1999 வரை தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அலுவலக நிலையில் பல பணிப்பொறுப்புகளில் இருந்தார். ஔவை நடராசன், கி. கருணாகரன் உள்ளிட்ட துணைவேந்தர்களின் உதவியாளராக இருந்து பணியாற்றினார். உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது க. இராசாராம் அவர்களின் உதவியாளராக இருந்து மாநாட்டிற்காக பணியாற்றினார்.

ஆசிரியப்பணி

அன்பழகன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2000-ம் ஆண்டு முதல் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தில் தமிழ் விரிவுரையாளர், பேராசிரியர், தமிழ்ப்பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றினார். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற அஞ்சல்வழிக் கல்வி வகுப்புகளில் கலந்துகொண்டு, தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பாடங்களாக நடத்தினார். 2021-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்றார்.

பொறுப்புகள்

  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்கத் தமிழ்ப்பிரிவின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
  • தமிழ்ப்பிரிவுத் தலைவர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக்குழு உறுப்பினர், முனைவர் பட்ட ஆய்வுக்குழு உறுப்பினர், வல்லுநர்க்குழு உறுப்பினர், வினாத்தாள் தயாரிப்புக்குழுத் தலைவர், விடைத்தாள் மதிப்பீட்டுக்குழுத் தலைவர் உள்நாடு மற்றும் வெளிநாடு கண்காணிப்புக் குழு உறுப்பினர், விடைத்தாள் தயாரிப்புக்குழு உறுப்பினர், நடுவர் - படைப்பிலக்கிய நூல்கள் தேர்வு (உள்நாடு மற்றும் வெளிநாடு), வாழ்நாள் உறுப்பினர் (உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்), ஒருங்கிணைப்பாளர் (தேசியக் கருத்தரங்குகள்) மற்றும் தொலைதூரத் தொடர்பு வகுப்புகள் புறநிலைத் தேர்வாளர் (எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வுகள்), தலைவர் (இணைய வழித்தேர்வுகள்), சோதிடவியல் பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை வாய்மொழித்தேர்வுகள் ஆகிய பொறுப்புகளில் இருந்தார்.
க. அன்பழகன் குறள் நெறிச் செல்வர் விருது பெறும்போது

இலக்கிய வாழ்க்கை

க. அன்பழகன் ஆறாம் வகுப்பில் பயிலும்பொழுதே எழுதத் தொடங்கினார். 1979-ல் முதல் கவிதை வெளியானது. 1983-84-ல் இவரின் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. தீபம், ஆரண்யா, கொல்லிப்பாவை, சுபமங்களா உள்ளிட்ட சிற்றிதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. இதயம் பேசுகிறது இதழில் 'பறக்க மறந்த சிறகுகள்' என்ற கதையை எழுதி கவனம் பெற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதினார். 1990 முதல் 1995 வரை தமிழகத்தில் வெளிவந்த பல்வேறு சிற்றிதழ்களில் க.அன்பழகன் என்ற பெயரிலும் ஹரணி என்ற பெயரிலும் தொடர்ச்சியாக எழுதினார். 1993-ல் 'உயிர்க்குடில்' என்ற சிறுகதைத் தொகுப்பை ஔவை. நடராசனின் அணிந்துரையுடன் வெளியிட்டார். 'உயிர்க்குடில்' என்ற சிறுகதை குங்குமம் இதழில் நட்சத்திர சிறுகதையாக வெளிவந்தது. 2003-ல் இலங்கையில் உலக இந்து மாநாட்டிலும், மலேசியாவில் ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் கலந்துகொண்டார்.

பாடநூல்கள்

அன்பழகன் அஞ்சல் வழிக் கல்விக்காகப் பல்வேறு பாட நூல்களை எழுதினார். பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்காகவும் பல்வேறு பாட நூல்களை எழுதி வழங்கினார்.

சிறப்புகள்

  • அன்பழகனின் படைப்புகளை ஆராய்ந்து இதுவரை ஐந்துபேர் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இளம் முனைவர் பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளனர்.
  • பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இவரின் படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

விருதுகள்

  • வைரமுத்து சமூக இலக்கியப்பேரவை விருது (1995)
  • செழுந்தமிழ்ச் செம்மல் விருது (2009)
  • கரூர் சிகரம் விருது (2012)
  • தியாக துருகம் பாரதி தமிழ்ச்சங்க விருது (2013)
  • மண்ணின் சிறந்த படைப்பாளி விருது (2014)
  • சென்னைக் கம்பன் கழகம் - தமிழ் நிதி விருது (2016)
  • உலகத் திருக்குறள் பேரவை - குறள்நெறிச் செல்வர் விருது (2017)
  • திருப்பூர் இலக்கிய விருது (2022)
  • பொதிகை மின்னல் சிறந்த நூல் இலக்கிய விருது மற்றும் பொற்கிழி (2023)
  • கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறந்த நூல்விருது (2023)
  • சிறந்த எழுத்தாளருக்கான திருக்கருகாவூர், அக்கினி அறக்கட்டளை விருது (2024)
  • புதுச்சேரி பனுவல் நூல் போட்டி 2023 -க்கான விருது (2024)
  • அமெரிக்க மின்னிதழ் ஆனந்தச் சந்திரிகை மற்றும் சென்னை நூலேணிப் பதிப்பக விருது.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • உதிரிலைகள் (2017)
  • விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி (2019)
  • வானம் விழுங்கும் வானவில் (2021)
  • வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் கூடுகளாய் (2022)
  • வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் இருந்து கூடுகளாய் (2024)
நாவல்கள்
  • ரௌத்ரம் பழகு (1996)
  • பேருந்து (2014)
  • அப்பிராணி (2016)
  • வாழ்ந்தே தீருவேன் (2021)
  • கனையெரி (2021)
குறுநாவல்கள்
  • சரஸ்வதி (1995)
  • நெருப்பில் புதைந்த கனவுகள் (1997)
  • நிழல்கள் (1998)
  • பெரிதினும் பெரிது கேள் (1999)
  • சாபப் பட்சிகள் (1999)
  • காக்கை விருட்சம் (1999)
  • பெண் எனும் நல்லாள் (2021)
  • பிச்சைக்காரர்கள் (2024)
  • முல்லை (2024)
  • பூக்கள் பூத்துக்கொண்டேயிருக்கின்றன (2024)
சிறுகதைத் தொகுப்பு
  • உயிர்க்குடில் (1993)
  • ஒவ்வொரு மழை நாளிலும் (2000)
  • மறுபடியும் நதி வரும் (2003)
  • வலை (2004)
  • புரண்டு படுக்கும் வாழ்க்கை (2011)
  • செல்லாத நோட்டு (2012)
  • காலம் தின்றவர்கள் (2014,)
  • அப்பா (2020)
  • மிட்டாய் வண்டி (2016)
  • காந்தியும் குமரேசனும் (2017)
  • மனிதர்கள் நடைபாதையில் இருக்கிறார்கள் (2021)
  • செல்போன் வாங்கப்போன முயல்குட்டி (2021)
  • சதிகார நரியும் அதிகார ஓநாயும் (2021).
  • சான்றோர் இளமையியல் (2022)
  • தீம்பெயல் (2024)
  • நதியின் பிழையன்று (2024)
ஆய்வு நூல்கள்
  • மின்மினித்தடங்கள் (2004)
  • ஒருபொருட்பல சொற்கள் (2004)
  • வண்ணச்சிறகுகள் (2005)
  • தமிழ் நாவல்களில் பெண்கள் (2005)
  • சொல்லும்பொருளும் (2009)
  • திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார் (2015)
  • தண்டியலங்காரம் (2015)
  • இலக்கிய நிழல் (2024)
கட்டுரை
  • பெண்ணியல் கட்டுரைகள் (2004)
  • பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா (2010)
  • நத்தையோட்டுத் தண்ணீர் (2012)
  • மாண்புமிகு வள்ளுவம் (2016)
  • விழையாமை என்னும் பேராண்மை - திருக்குறள் நூல் (2022)
  • The Magnanimity called Non-interference (திருக்குறள் நூல் ஆங்கிலத்தில்)
  • செம்மொழி அறங்கள் - (2022) (இணைய நூல்கள்)
இணைய நூல்கள்
  • ஜால்ரா
  • என்னமோ நடக்குது
  • நத்தைகள் (2022)

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jun-2024, 20:59:57 IST