under review

வில்லியம் ஷேக்ஸ்பியர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(2 intermediate revisions by one other user not shown)
Line 16: Line 16:


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
வில்லியம் ஷேக்ஸ்பியர் 39 நாடகங்கள், 154 சொன்னெட்கள்(sonnets) (கவிதை), 3 நீள்கவிதைகள், சில பிற கவிதைகள் மற்றும் ஆசிரியர் யாரென்று உறுதி செய்யப்படாத கவிதைகள் ஆகியவற்றை எழுதினார். ஷேக்ஸ்பியர் தற்போது அறியப்படும் தன் பெரும்பாலான படைப்புகளை 1589 முதல்1613-க்கு இடைப்பட்ட காலத்தில் படைத்தார்.  1592-ல் லண்டனில் பிளேக் நோய் தாக்கப்பட்ட காலகட்டத்தில் ஷேக்ஸ்பியர் நிறைய நாடகங்கள், சோனெட் எனப்படும் கவிதைகள் எழுதினார். பிளேக் நோய் முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளி வரத் தொடங்கின. இவரது பெரும்பாலான நாடகங்கள் இவரது வாழ்நாளில் பதிப்பிக்கப்பட்டன. 1623-ல் ஷேக்ஸ்பியரின் நண்பர்களும், உடன் நடித்த நடிகர்களுமான யோவான் எம்மிங்ஸ், ஹென்றி கான்டல் ஆகிய இருவரும் இரு நாடகங்களைத் தவிர மற்ற அனைத்தையும் உள்ளடக்கிய இவரது நாடகங்களின் முழுமையான தொகுப்பினைப் பதிப்பித்தனர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முக்கியமான தற்கால மொழிகள் பலவற்றிற்கும் மொழிபெயர்க்கப்பட்டன.
வில்லியம் ஷேக்ஸ்பியர் 39 நாடகங்கள், 154 சோனெட்கள்(sonnets) (கவிதை), 3 நீள்கவிதைகள், சில பிற கவிதைகள் மற்றும் ஆசிரியர் யாரென்று உறுதி செய்யப்படாத கவிதைகள் ஆகியவற்றை எழுதினார். ஷேக்ஸ்பியர் தற்போது அறியப்படும் தன் பெரும்பாலான படைப்புகளை 1589 முதல்1613-க்கு இடைப்பட்ட காலத்தில் படைத்தார்.  1592-ல் லண்டனில் பிளேக் நோய் தாக்கப்பட்ட காலகட்டத்தில் ஷேக்ஸ்பியர் நிறைய நாடகங்கள், சோனெட் எனப்படும் கவிதைகள் எழுதினார். பிளேக் நோய் முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளி வரத் தொடங்கின. இவரது பெரும்பாலான நாடகங்கள் இவரது வாழ்நாளில் பதிப்பிக்கப்பட்டன. 1623-ல் ஷேக்ஸ்பியரின் நண்பர்களும், உடன் நடித்த நடிகர்களுமான யோவான் எம்மிங்ஸ், ஹென்றி கான்டல் ஆகிய இருவரும் இரு நாடகங்களைத் தவிர மற்ற அனைத்தையும் உள்ளடக்கிய இவரது நாடகங்களின் முழுமையான தொகுப்பினைப் பதிப்பித்தனர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முக்கியமான தற்கால மொழிகள் பலவற்றிற்கும் மொழிபெயர்க்கப்பட்டன.
 
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
ஆங்கில மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக ஷேக்ஸ்பியர் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் படைக்கப்படுகின்றன.
ஆங்கில மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக ஷேக்ஸ்பியர் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் படைக்கப்படுகின்றன.
Line 77: Line 78:
* [https://www.youtube.com/watch?v=IvnW_Z4SQLM&ab_channel=vallinammagazine பி. கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் மொழிப்பெயர்ப்பு: அருண்மொழிநங்கை உரை]
* [https://www.youtube.com/watch?v=IvnW_Z4SQLM&ab_channel=vallinammagazine பி. கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் மொழிப்பெயர்ப்பு: அருண்மொழிநங்கை உரை]
* [https://www.hindutamil.in/news/literature/533535-william-shakespeare-3.html வெண்ணிற நினைவுகள்: ஷேக்ஸ்பியரின் குரல்:எஸ்.ராமகிருஷ்ணன்]
* [https://www.hindutamil.in/news/literature/533535-william-shakespeare-3.html வெண்ணிற நினைவுகள்: ஷேக்ஸ்பியரின் குரல்:எஸ்.ராமகிருஷ்ணன்]
{{Second review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|09-Jun-2024, 14:29:27 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:54, 13 June 2024

வில்லியம் ஷேக்ஸ்பியர்

வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) (ஏப்ரல் 26, 1564 – ஏப்ரல் 23, 1616) செவ்வியல் எழுத்தாளர், ஆங்கிலக் கவிஞர், நாடக ஆசிரியர், நாடக நடிகர். தன் வாழ்நாளில் துன்பியல் இன்பியல் ஆகிய இரு வகைகளில் முப்பத்தியொன்பது நாடகங்களை எழுதி, அரங்காற்றுகை செய்தார். இவர் வாழும் காலத்திலேயே அவை பதிப்பிக்கப்பட்டு பிரபலமடைந்தன. ஆங்கில மறுமலர்ச்சிக் காலகட்டத்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்தின் தேசியக் கவிஞராக அறியப்பட்டார்.

பிறப்பு, கல்வி

ஷேக்ஸ்பியர் இங்கிலாந்து நாட்டிலுள்ள வார்விக்‌ஷயர் மாநிலத்தில் ஸ்ட்ராட்ஃபோர்டில் (Stratford-upon-Avon) ஜான் ஷேக்ஸ்பியர், மேரி ஆர்டன் இணையருக்கு எட்டு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தார். தந்தை கையுறை தயாரிப்பவர். தாய் நில உரிமையாளர் குடும்பத்ததைச் சேர்ந்தவர். ஏப்ரல் 26, 1564-ல் ஞானஸ்நானம் பெற்றார். பிறந்த தேதி தெரியவில்லை. ஏப்ரல் 23, 1564-ல் பிறந்ததாக அறிஞர்களால் நம்பப்படுகிறது. கிங்ஸ் நியூ ஸ்கூலில் பள்ளிக்கல்வி கற்றார். பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழியின் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

தனிவாழ்க்கை

ஷேக்ஸ்பியர் பதினெட்டு வயதில் இருபத்தியாறு வயதான அன்னா ஹேத்வேயை (Anne Hathaway) மணந்தார். மகள்கள் சூசன்னா ஹால் (Susanna Hall), ஜூடித் க்யுனே(Judith Quiney), மகன் ஹாம்னெட் (Hamnet). ஜூடித், ஹாம்னெட் இருவரும் இரட்டையர்கள். ஹாம்னெட் பதினோரு வயதில் இறந்தார்.

ஷேக்ஸ்பியர் பள்ளி ஆசிரியராக இருந்ததாக ஆய்வாளர்கள் கருதினர். 23 வயதில் வேலை தேடி லண்டன் வந்தார். அதன்பிறகு எட்டு ஆண்டுகள் அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை. ஒரு நாடகக் கொட்டகையில் குதிரைக்காவல் காக்கும் பணி செய்தார். அங்கு நாடகங்கள் அவருக்கு அறிமுகமாயின.

நாடக வாழ்க்கை

1585 மற்றும் 1592-க்கு இடைப்பட்ட காலத்தில் ஷேக்ஸ்பியர் லண்டனில் நாடக நடிகராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்டார். 1592-ல் பிளேக் நோய்க்குப் பின்னான காலகட்டத்தில் இவரின் நாடகங்கள் அதிகளவு அரங்கேற்றப்பட்டன. துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தலாம். ’A Midsummer Night's Dream’, ’As You Like It’, ’The Taming of the Shrew’, ’The Merchant of Venice’ போன்றவை இன்பியல் நாடகங்கள். ’Romeo and Juliet’, ’Hamlet’, ’Othello’, ’King Lear’, ’Julius Caesar’, ’Antony and Cleopatra’, போன்றவை அவரது புகழ் பெற்ற துன்பியல் நாடகங்கள். 39 நாடகங்கள் எழுதி அரங்காற்றுகை செய்தார்.

ஷேக்ஸ்பியர் 'Lord Chamberlain's Men' என்ற நாடக நிறுவனத்தின் பகுதியளவு உரிமையாளராக தன் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். மற்ற எந்த நாடகாசிரியரின் படைப்புகளையும் விட அடிக்கடி நடத்தப்படும் நாடகங்களாக இவரின் நாடகங்கள் இருந்தன. 1599-ல் "Globe" என்ற கம்பெனியின் பகுதி உரிமையாளராகவும், 1608-ல் "Blackfriars indoor theatre" என்ற கம்பெனியின் பகுதி உரிமையாளராகவும் ஆனார். இதன் மூலம் அதிக வருமானம் பெற்றார். 1597-ல் ஸ்ட்ராட்ஃபோர்டில் இரண்டாவது பெரிய வீட்டை வாங்கினார். 1594-ல் இவரின் நாடகங்கள் பல இதழ்களில் பிரசுரமாயின.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஆரம்பகால நாடகங்கள் முதன்மையாக நகைச்சுவை மற்றும் வரலாற்று நாடகங்களாக இருந்தன. பிறகு 1608 காலகட்டங்களில் ஹாம்லெட், ரோமியோ ஜூலியட், ஒத்தெல்லோ, லெயிர் மன்னன், மக்பெத் போன்ற துன்பியல் நாடகங்களை எழுதினார். தன் வாழ்வின் கடைசிக் காலத்தில் இவர் துன்ப நகைச்சுவை நாடகங்களை அல்லது காதல் நாடகங்களை எழுதினார். மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து படைப்புகளை உருவாக்கினார்.

இலக்கிய வாழ்க்கை

வில்லியம் ஷேக்ஸ்பியர் 39 நாடகங்கள், 154 சோனெட்கள்(sonnets) (கவிதை), 3 நீள்கவிதைகள், சில பிற கவிதைகள் மற்றும் ஆசிரியர் யாரென்று உறுதி செய்யப்படாத கவிதைகள் ஆகியவற்றை எழுதினார். ஷேக்ஸ்பியர் தற்போது அறியப்படும் தன் பெரும்பாலான படைப்புகளை 1589 முதல்1613-க்கு இடைப்பட்ட காலத்தில் படைத்தார். 1592-ல் லண்டனில் பிளேக் நோய் தாக்கப்பட்ட காலகட்டத்தில் ஷேக்ஸ்பியர் நிறைய நாடகங்கள், சோனெட் எனப்படும் கவிதைகள் எழுதினார். பிளேக் நோய் முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளி வரத் தொடங்கின. இவரது பெரும்பாலான நாடகங்கள் இவரது வாழ்நாளில் பதிப்பிக்கப்பட்டன. 1623-ல் ஷேக்ஸ்பியரின் நண்பர்களும், உடன் நடித்த நடிகர்களுமான யோவான் எம்மிங்ஸ், ஹென்றி கான்டல் ஆகிய இருவரும் இரு நாடகங்களைத் தவிர மற்ற அனைத்தையும் உள்ளடக்கிய இவரது நாடகங்களின் முழுமையான தொகுப்பினைப் பதிப்பித்தனர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முக்கியமான தற்கால மொழிகள் பலவற்றிற்கும் மொழிபெயர்க்கப்பட்டன.

இலக்கிய இடம்

ஆங்கில மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக ஷேக்ஸ்பியர் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் படைக்கப்படுகின்றன.

ஷேக்ஸ்பியரின் மொத்தத் தொகுப்பின் முன்னுரையில் பென் ஜான்சன் அவரை "ஒரு காலத்திற்கல்ல, எக்காலத்திற்கும் உரியவர்" என்று மதிப்பிட்டார். "நாடகத்தின் சாரத்தை கோமாளியின் வாயிலிருந்து வரவழைக்கும் அவரது நாடக தரிசனமே, உலகின் நாடகச் சாதனைகளில் தலையாயது. உதாரணம் மாக்பெத்தில் வரும் ‘யாரது தட்டுவது?’ எனும் வரி” என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டார்.

தமிழில் ஷேக்ஸ்பியர்

சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் பி. கிருஷ்ணன் ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஹேம்லெட், ஒதெல்லோ, மன்னன் லியர் (King Lear), ஜூலியஸ் சீஸர், சூறாவளி (The Tempest), ரோமியோ ஜூலியட் ஆகிய படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

திரைப்படம்

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து 1937-ல் வெளியான ‘அம்பிகாபதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஷேக்ஸ்பியர் அறிமுகமானார். ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகத்தின் பால்கனி காட்சியைப் பாகவதர் படத்துக்காக இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன் விரும்பி சேர்த்துக்கொண்டார். 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பார்சி தியேட்டரின் நாடகங்கள் மூலம் ஷேக்ஸ்பியர் இந்தியாவில்அறிமுகமானார். ‘ஒதெல்லோ’, ‘மெர்செண்ட் ஆஃப் வெனிஸ்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘ஹேம்லெட்’ ஆகிய நான்கு நாடகங்கள் இந்தியாவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டன. ஏனெனில் இந்த நாடகங்களின் கதை இந்திய வாழ்க்கைக்கும் அதிகாரப் போட்டிக்கும் நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன.

சிவாஜி கணேசன் ‘ஒதெல்லோ’, ‘சீசர்’, ‘ஹேம்லெட்’ ஆகிய முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். ‘ரத்த திலகம்’ படத்தில் ‘ஒதெல்லோ’ நாடகம் சிறிய பகுதியாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அதில் சிவாஜி ஒதெல்லோவாகவும் சாவித்திரி டெஸ்டிமோனாவாகவும் நடித்தார். ‘சொர்க்கம்’ படத்தில் ஜூலியஸ் சீசரின் கொலை காட்சிப்படுத்தப்பட்டது. சீசர் நாடகம் ‘ப்ரியா’ என்ற படத்தில் இடம்பெற்றது. ஷேக்ஸ்பியரின் ‘ட்வெல்த் நைட்’ நாடகத்தைத் தழுவித் தயாரிக்கப்பட்ட ‘கன்னியின் காதலி’ படத்தில் ஆண், பெண் என இரண்டு வேடங்களில் மாதுரி தேவி நடித்தார். ‘குணசுந்தரி’ என்ற படம் ‘கிங் லியர்’ நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘அறிவாளி’ திரைப்படம் ‘டேமிங் ஆஃப் தி ஸ்க்ரூ’ நாடகத்தை மையமாகக் கொண்டது. இரண்டாயிரங்களுக்குப் பிறகு இந்தப்போக்கு முற்றிலும் இல்லாமல் ஆனது.

மறைவு

ஷேக்ஸ்பியர் 1613-ல் தன் 49-ம் வயதில் ஸ்ட்ராட்ஃபோர்டு இல்லத்திற்கு ஓய்வில் சென்றார். அங்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின் காலமானார்.

நூல் பட்டியல்

கவிதை
  • sonnets
நாடகங்கள்
  • Love's Labour's Lost (1588–97)
  • Henry VI, Part 1 (1589–92)
  • Titus Andronicus
  • The Comedy of Errors (1589–94)
  • Henry VI, Part 2 (1590–92)
  • Henry VI, Part 3 (1590–93)
  • The Taming of the Shrew (1590–94)
  • The Two Gentlemen of Verona
  • Edward III (1590–95)
  • Richard III (1592–94)
  • King John (1594–96)
  • Romeo and Juliet
  • A Midsummer Night's Dream (1595–96)
  • Richard II
  • The Merchant of Venice (1596–97)
  • Henry IV, Part 1
  • Henry IV, Part 2 (1597–98)
  • The Merry Wives of Windsor (1597–1601)
  • Much Ado About Nothing (1598–99)
  • As You Like It (1598–1600)
  • Henry V (1599)
  • Julius Caesar (1599–1600)
  • Hamlet (1599–1601)
  • Twelfth Night (1600–02)
  • Troilus and Cressida (1601–02)
  • All's Well That Ends Well (1601–05)
  • Measure for Measure (1603–04)
  • Othello
  • King Lear (1605–06)
  • Timon of Athens (1605–08)
  • Macbeth (1606–07)
  • Antony and Cleopatra
  • Pericles (1606–08)
  • Coriolanus (1608)
  • Cymbeline (1608–10)
  • The Winter's Tale (1609–11)
  • The Tempest (1611)
  • The Two Noble Kinsmen (1612–14)
  • Henry VIII (1613)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 14:29:27 IST