under review

நோய்பாடியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(6 intermediate revisions by 4 users not shown)
Line 4: Line 4:

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
நோய்பாடியார் சங்கத்தொகை நூலான அகநானூற்றில் 67-வது பாடலைப் பாடினார். பாலைத்திணைப்பாடல். பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியதாக பாடல் அமைந்துள்ளது. தலைவன் செல்லும் பாலை வழியில் மழை பெய்யத் தலைவி வேண்டியும் மழைபெய்யாதது குறித்தும், அப்பாலை வழியில் உள்ள மறவர்கள் பற்றிய குறிப்பும், அப்பாதையிலுள்ள இடர்கள் குறித்தும் தலைவி தோழிக்குக் கூறுவதாக பாடல் உள்ளது.
நோய்பாடியார் சங்கத்தொகை நூலான [[அகநானூறு|அகநானூற்றில்]] 67-வது பாடலைப் பாடினார். [[பாலைத் திணை|பாலைத்திணை]]ப்பாடல். பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியதாக பாடல் அமைந்துள்ளது. தலைவன் செல்லும் பாலை வழியில் மழை பெய்யத் தலைவி வேண்டியும் மழைபெய்யாதது குறித்தும், அப்பாலை வழியில் உள்ள மறவர்கள் பற்றிய குறிப்பும், அப்பாதையிலுள்ள இடர்கள் குறித்தும் தலைவி தோழிக்குக் கூறுவதாக பாடல் உள்ளது.
== பாடல் வழி அறியவரும் செய்திகள் ==
== பாடல் வழி அறியவரும் செய்திகள் ==
* பாலையில் வாழும் மறவர்கள் நிரம்பாத மனத்துடன் நரகம் அடைந்தவர் போலப் பிறரைப் பார்ப்பார்கள். அரத்தால் தீட்டிய அம்பு கொண்டிருப்பர். நெல்லிமரக் காட்டில் பகலெல்லாம் இருப்பர்.
* பாலையில் வாழும் மறவர்கள் நிரம்பாத மனத்துடன் நரகம் அடைந்தவர் போலப் பிறரைப் பார்ப்பார்கள். அரத்தால் தீட்டிய அம்பு கொண்டிருப்பர். நெல்லிமரக் காட்டில் பகலெல்லாம் இருப்பர்.
* மறவர்கள் பள்ளம் (உவல்) தோண்டி, மூடி, ஆள் விழும் பதுக்கை அமைத்திருப்பர். அது கயிறு கட்டித் தோல்வரிசை தொங்குவது போல இருக்கும்.
* மறவர்கள் பள்ளம் (உவல்) தோண்டி, மூடி, ஆள் விழும் பதுக்கை அமைத்திருப்பர். அது கயிறு கட்டித் தோல்வரிசை தொங்குவது போல இருக்கும்.
* பாலை: இலை உதிர்ந்து பறைந்துபோன மரங்கள் இருக்கும். நிலம் முரம்பு பட்ட கட்டாந்தரையாக இருக்கும். பேய்தேர் (கானல் நீர்) ஓடும். அதுதான் உருவம் இல்லாத பேய். இரவில் மின்மினிப் பூச்சி மின்னுவது போலப் பகலில் கூழாங்கற்கள் வெயிலில் மின்னும்.  
* பாலை: இலை உதிர்ந்து பொலிவற்றுப்போன மரங்கள் இருக்கும். நிலம் முரம்பு பட்ட கட்டாந்தரையாக இருக்கும். பேய்தேர் (கானல் நீர்) ஓடும். அதுதான் உருவம் இல்லாத பேய். இரவில் மின்மினிப் பூச்சி மின்னுவது போலப் பகலில் கூழாங்கற்கள் வெயிலில் மின்னும்.  
* நடுகல் கோயில்: இங்கு போரில் வென்று மாண்ட ஒவ்வொரு மறவனுக்கும் அவனது வேலை ஊன்றி அவன் பயன்படுத்திய வில்நாண் கயிற்றால் அவனது கேடயத்தைக் கட்டி மாட்டியிருப்பர். அது பகைவர் படை தாக்க வருவது போலத் தோற்றமளிக்கும்.

* சொற்கள்:
 
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
அகநானூறு: 67 (திணை: பாலை)
அகநானூறு: 67 (திணை: பாலை)
Line 35: Line 35:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* சங்ககால புலவர்கள் வரிசை, புலவர் கா. கோவிந்தன். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் கழகம்
* சங்ககால புலவர்கள் வரிசை, புலவர் கா. கோவிந்தன். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் கழகம்
* [https://vaiyan.blogspot.com/2016/04/agananuru-67.html அகநானூறு 67: வேல் ஊன்று பலகை: vaiyanblogspot]

{{ready for review}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 19:08, 25 March 2024

நோய்பாடியார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

தலைவி தன் காமநோய் குறித்து பாடியதாக பாடல் அமைந்துள்ளதால் ”நோய்பாடியார்” என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

நோய்பாடியார் சங்கத்தொகை நூலான அகநானூற்றில் 67-வது பாடலைப் பாடினார். பாலைத்திணைப்பாடல். பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியதாக பாடல் அமைந்துள்ளது. தலைவன் செல்லும் பாலை வழியில் மழை பெய்யத் தலைவி வேண்டியும் மழைபெய்யாதது குறித்தும், அப்பாலை வழியில் உள்ள மறவர்கள் பற்றிய குறிப்பும், அப்பாதையிலுள்ள இடர்கள் குறித்தும் தலைவி தோழிக்குக் கூறுவதாக பாடல் உள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பாலையில் வாழும் மறவர்கள் நிரம்பாத மனத்துடன் நரகம் அடைந்தவர் போலப் பிறரைப் பார்ப்பார்கள். அரத்தால் தீட்டிய அம்பு கொண்டிருப்பர். நெல்லிமரக் காட்டில் பகலெல்லாம் இருப்பர்.
  • மறவர்கள் பள்ளம் (உவல்) தோண்டி, மூடி, ஆள் விழும் பதுக்கை அமைத்திருப்பர். அது கயிறு கட்டித் தோல்வரிசை தொங்குவது போல இருக்கும்.
  • பாலை: இலை உதிர்ந்து பொலிவற்றுப்போன மரங்கள் இருக்கும். நிலம் முரம்பு பட்ட கட்டாந்தரையாக இருக்கும். பேய்தேர் (கானல் நீர்) ஓடும். அதுதான் உருவம் இல்லாத பேய். இரவில் மின்மினிப் பூச்சி மின்னுவது போலப் பகலில் கூழாங்கற்கள் வெயிலில் மின்னும்.
  • நடுகல் கோயில்: இங்கு போரில் வென்று மாண்ட ஒவ்வொரு மறவனுக்கும் அவனது வேலை ஊன்றி அவன் பயன்படுத்திய வில்நாண் கயிற்றால் அவனது கேடயத்தைக் கட்டி மாட்டியிருப்பர். அது பகைவர் படை தாக்க வருவது போலத் தோற்றமளிக்கும்.

பாடல் நடை

அகநானூறு: 67 (திணை: பாலை)

யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
வானம் வாழ்த்திப் பாடவும், அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
அரம் போழ் நுதிய வாளி அம்பின்,
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
"உரு இல் பேஎய் ஊராத் தேரொடு
நிலம் படு மின்மினி போல, பல உடன்
இலங்கு பரல் இமைக்கும்" என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!

உசாத்துணை

✅Finalised Page