under review

கணேஷ்,வசந்த்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|கணேஷ் வசந்த் கணேஷ்,வசந்த் : எழுத்தாளர் சுஜாதா உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்கள். கணேஷ் வழக்கறிஞர், வசந்த் அவருடைய துணைவழக்கறிஞர். அவர்கள் தனிப்பட்டமுறையில்...")
 
(Added First published date)
 
(20 intermediate revisions by 8 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Ganesh, Vasanth|Title of target article=Ganesh, Vasanth}}
[[File:Ganesh-vasanth.jpg|thumb|கணேஷ் வசந்த்]]
[[File:Ganesh-vasanth.jpg|thumb|கணேஷ் வசந்த்]]
கணேஷ்,வசந்த் : எழுத்தாளர் சுஜாதா உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்கள். கணேஷ் வழக்கறிஞர், வசந்த் அவருடைய துணைவழக்கறிஞர். அவர்கள் தனிப்பட்டமுறையில் குற்றங்களை புலனாய்வு செய்கிறார்கள்.
[[File:கணேஷ் வசந்த்.jpg|thumb|கணேஷ் வசந்த் படக்கதை]]
கணேஷ், வசந்த்: எழுத்தாளர் சுஜாதா உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்கள். கணேஷ் வழக்கறிஞர், வசந்த் அவருடைய துணைவழக்கறிஞர். அவர்கள் தனிப்பட்டமுறையில் குற்றங்களைப் புலனாய்வு செய்கிறார்கள்.
== வரலாறு ==
கணேஷ் [[சுஜாதா]] ஆகஸ்ட் 1968-ல் குமுதம் இதழில் எழுதிய [[நைலான் கயிறு]] நாவலில் மும்பையில் தொழில் செய்யும் ஒரு சிறு கதாபாத்திரமாக அறிமுகமானார். அதில் துப்பறிவாளராக அன்றி குற்றம்சாட்டப்பட்டவரை வாதாடி விடுதலை வாங்கித்தரும் வழக்கறிஞராகவே இருந்தார். அதன்பின் கணேஷ் [[அனிதா இளம் மனைவி]] நாவலில் டெல்லியில் வழக்கறிஞராக வேலைபார்ப்பவராகவும், நேரடியாகவே துப்பறிபவராகவும் வந்தார். பாதி ராஜ்யம் என்னும் கதையில் நீரஜா என்னும் உதவியாளர் கணேஷுக்கு இருந்தார். ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் அவர் விரிவுபெற்றார். பின்னர் காணமலானார்.  


வரலாறு
1973-ல் ப்ரியா என்னும் நாவலில் வசந்த் அறிமுகமானார். காயத்ரியில் வசந்த் துப்பறிதலில் உதவுகிறார். தொடக்ககாலத்தில் கணேஷ் மட்டும் வரும் நாவல்களில் பின்னாளில் வசந்த்தின் குணச்சித்திரமாக வெளிப்படும் நையாண்டியாகப் பேசும் தன்மை போன்றவை கணேஷிடமே இருந்தன.


கணேஷ் சுஜாதா எழுதிய நைலான் கயிறு நாவலில் ஒரு சிறு கதாபாத்திரமாக அறிமுகமானார்.  
நிர்வாணநகரம் நாவலில் கணேஷ் வசந்த் இருவருடைய குணச்சித்திரங்களும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுவிட்டன. ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்கு முகங்களையும் அளித்துவிட்டார்.
== குணச்சித்திரங்கள் ==
கணேஷ் அறிவார்ந்த, அதிகம்பேசாத, கூர்மையான மனிதர். பெண்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பவர். வசந்த் பேசிக்கொண்டே இருக்கும் இளைஞன். பெண்களை துரத்துபவன். கணேஷ் படிப்படியாக ஆராய்ந்து பார்ப்பது, முற்றிலும் வழக்கத்துக்கு மாறான கோணத்தில் பார்ப்பது ஆகிய அணுகுமுறைகள் கொண்டவன். வசந்த் சட்டென்று உள்ளுணர்வால் புதியவற்றைக் கண்டடைபவன். கணேஷ் வசந்த் இருவரும் ஒருவரை ஒருவர் நிரப்பும் கதாபாத்திரங்களாக நாவல்களில் வெளிப்படுகிறார்கள். கணேஷ் வசந்த் இருவருமே திருமணமாகாதவர்களாகவும், குடும்பம் என ஏதும் இல்லாதவர்களாகவும்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.


கணேஷின் முதல் தோற்றம் '''நைலான் கயிறு''' நாவலில். அறுபதுகளின் பின் பாதியில் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. கணேஷ் ஒரு துணை கதாபாத்திரம். அப்போதெல்லாம் அவருக்கு டெல்லி வாசம். வசந்த் கிடையாது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கோ ஆஜராகி அவருக்கு விடுதலை வாங்கித் தருவார். பாதி கதையில் காணாமல் போய்விடுவார்.
கணேஷ் மட்டும் தோன்றும் நாவல்கள்
# நைலான் கயிறு
# அனிதா-இளம் மனைவி
# ப்ரியா
கணேஷ்-வசந்த் இணைந்து தோன்றும் நாவல்கள்
# ஆ..!
# மேற்கே ஒரு குற்றம்
# மேலும் ஒரு குற்றம்
# மீண்டும் ஒரு குற்றம்
# இதன் பெயரும் கொலை
# கொலை அரங்கம்
# வஸந்த் வஸந்த்
# பேசும் பொம்மைகள்
# மேகத்தை துரத்தியவன்
# யவனிகா
# கொலையுதிர் காலம்
# நில்லுங்கள் ராஜாவே
# ஐந்தாவது அத்தியாயம்
# மலை மாளிகை
# மறுபடியும் கணேஷ்
# ஆயிரத்தில் இருவர்
# அம்மன் பதக்கம்
# கணேஷ் X வசந்த்
# 24 ரூபாய் தீவு
# ஓடாதே
# நிர்வாண நகரம்
# எதையும் ஒரு முறை
# காயத்ரி
# மூன்று நிமிஷம் கணேஷ்
# விபரீதக் கோட்பாடு
# காந்தளூர் வசந்தகுமாரன் கதை
== உசாத்துணை ==
* [https://koottanchoru.wordpress.com/tag/ganesh-vasanth/ கணேஷ்-வசந்த் கூட்டாஞ்சோறு (koottanchoru.wordpress.com)]
* [https://siliconshelf.wordpress.com/category/ganesh-vasanth/ கணேஷ்-வசந்த் – சிலிகான் ஷெல்ஃப் (siliconshelf.wordpress.com)]
* [https://ganeshvasanth.wordpress.com/ கணேஷ் வசந்த் கதைகள் | Celebration of Ganesh Vasanth - ganeshvasanth.wordpress.com]
* [https://umajee.blogspot.com/2010/12/blog-post_28.html சுஜாதா = கணேஷ் + வசந்த்? ~ வானம் தாண்டிய சிறகுகள்.. (umajee.blogspot.com)]
*[https://minivet10.rssing.com/chan-6395419/article67.html ரசிகன்: கணேஷ்-வசந்த் (minivet10.rssing.com)]
*[https://imsivam.wordpress.com/2017/08/28/%EF%BB%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/ கணேஷ்-வசந்த் | அன்பே சிவம் (imsivam.wordpress.com)]


வசந்துக்கு முன்னால் கணேஷுக்கு நீரஜா என்று ஒரு அசிஸ்டன்ட் உண்டு. '''பாதி''' '''ராஜ்யம்''' என்ற கொஞ்சம் நீளமான கதையில் முதன் முதலாக க்ளையன்டாக வருவார். பிறகு '''ஒரு''' '''விபத்தின் அனாடமி''' என்ற கதையில் அசிஸ்டன்டாக ப்ரமோஷன்.


கணேஷ் எப்போது டெல்லியிலிருந்து சென்னை வந்தார் என்று சரியாகத் தெரியவில்லை. சென்னை வந்தபிறகுதான் வசந்த் வந்து ஒட்டிக்கொள்வார். வசந்தின் முதல் தோற்றம் '''காயத்ரி'''யில் என்று நினைக்கிறேன். சாவி ஆசிரியராக இருந்த பத்திரிகை, எது என்று சரியாக நினவு இல்லை. தினமணி கதிரோ? ஜெயராஜின் ஒரு படம் பார்த்து மனம் கிளர்ந்தது ஞாபகம் இருக்கிறது. அன்றைய சூழ்நிலையில் அது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி கதைதான். பிறகு '''பிரியா'''வில் வசந்துக்கு ஒரு கௌரவத் தோற்றம்.
{{Finalised}}


'''நிர்வாண''' '''நகரம்''' வந்த நாட்களில் அவர்கள் காரக்டர்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டுவிட்டன.  '''மேற்கே''' '''ஒரு''' '''குற்றம்''' போன்ற மாத நாவல்களில் அவர்கள் இருவருக்குமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மனதில் முடிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன. '''வசந்த்! வசந்த்!''' நாவல் கல்கியில் வந்தபோது வசந்துக்குத்தான் அதிக ரசிகர்கள் என்று தோன்றியது.
{{Fndt|15-Nov-2022, 13:31:15 IST}}


எண்பதுகளின் ஆரம்பத்தில் குமுதம் இல்லாவிட்டால் விகடன் இல்லாவிட்டால் கல்கி இல்லாவிட்டால் குங்குமம் என்று எங்கேயாவது ஒரு கணேஷ் வசந்த் தொடர்கதை வந்துகொண்டே இருக்கும். ஒன்றும் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு மாத நாவலிலாவது வந்துவிடுவார்கள்.


எண்பதுகளின் முடிவில் பாலகுமாரன் புதிய நட்சத்திரமாக தோன்றிவிட்டார். இருந்தாலும் இவர்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. '''சில்வியா''', '''மெரீனா''' போன்ற நீள் கதைகளில் வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால் படிக்கும் எனக்கு வயதாகிவிட்டதாலோ என்னவோ கதையின் முடிச்சுகள் சுலபமாக பிடிபட ஆரம்பித்துவிட்டன. கணேஷ் வசந்த் கதைகள் ஒரு ஆம்னிபஸ் வடிவில் வெளியிடப்பட்டால் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். வந்திருக்கிறதா?
[[Category:Tamil Content]]
 
[[Category:Spc]]
ஜெய்ஷங்கர் காயத்ரி, இது எப்படி இருக்கு (அனிதா இளம் மனைவியின் படமாக்கல்) ஆகியவற்றிலும் ரஜினிகாந்த் ப்ரியாவிலும் கணேஷாக நடித்திருக்கிறார்கள். காயத்ரியில் வெண்ணிற ஆடை மூர்த்திதான் வசந்த்!
 
<s>டிவி சீரியல் எதுவும் இன்னும் வரவில்லையா?</s> டிவி சீரியலாகவும் வந்திருக்கிறதாம். எண்பதுகளின் டம்மி ஹீரோக்களில் ஒருவரான சுரேஷ் கணேஷாகவும், விஜய் ஆதி ராஜ் வசந்தாகவும் நடித்திருக்கிறார்களாம். விவரம் சொன்ன வெங்கட்டுக்கு நன்றி. சுரேஷுக்கு வேஷப்பொருத்தம் நன்றாக இருக்கும். ஆனால் விஜய் ஆதி ராஜுக்கு கொஞ்சம் முற்றிய முகம். அவருக்கும் கணேஷ் வேஷம்தான் நன்றாக பொருத்தும் என்று தோன்றுகிறது.
 
எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்கள் கனவுகளில் கண்ணாடியுடன் ரஜினி கணேஷாகவும், கமல் வசந்தாகவும் இருந்தார். இன்றைக்கு பிரகாஷ் ராஜ் நல்ல கணேஷாக இருப்பார் என்று நினைக்கிறேன். வசந்த்தாக சிம்பு?

Latest revision as of 16:25, 13 June 2024

To read the article in English: Ganesh, Vasanth. ‎

கணேஷ் வசந்த்
கணேஷ் வசந்த் படக்கதை

கணேஷ், வசந்த்: எழுத்தாளர் சுஜாதா உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்கள். கணேஷ் வழக்கறிஞர், வசந்த் அவருடைய துணைவழக்கறிஞர். அவர்கள் தனிப்பட்டமுறையில் குற்றங்களைப் புலனாய்வு செய்கிறார்கள்.

வரலாறு

கணேஷ் சுஜாதா ஆகஸ்ட் 1968-ல் குமுதம் இதழில் எழுதிய நைலான் கயிறு நாவலில் மும்பையில் தொழில் செய்யும் ஒரு சிறு கதாபாத்திரமாக அறிமுகமானார். அதில் துப்பறிவாளராக அன்றி குற்றம்சாட்டப்பட்டவரை வாதாடி விடுதலை வாங்கித்தரும் வழக்கறிஞராகவே இருந்தார். அதன்பின் கணேஷ் அனிதா இளம் மனைவி நாவலில் டெல்லியில் வழக்கறிஞராக வேலைபார்ப்பவராகவும், நேரடியாகவே துப்பறிபவராகவும் வந்தார். பாதி ராஜ்யம் என்னும் கதையில் நீரஜா என்னும் உதவியாளர் கணேஷுக்கு இருந்தார். ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் அவர் விரிவுபெற்றார். பின்னர் காணமலானார்.

1973-ல் ப்ரியா என்னும் நாவலில் வசந்த் அறிமுகமானார். காயத்ரியில் வசந்த் துப்பறிதலில் உதவுகிறார். தொடக்ககாலத்தில் கணேஷ் மட்டும் வரும் நாவல்களில் பின்னாளில் வசந்த்தின் குணச்சித்திரமாக வெளிப்படும் நையாண்டியாகப் பேசும் தன்மை போன்றவை கணேஷிடமே இருந்தன.

நிர்வாணநகரம் நாவலில் கணேஷ் வசந்த் இருவருடைய குணச்சித்திரங்களும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுவிட்டன. ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்கு முகங்களையும் அளித்துவிட்டார்.

குணச்சித்திரங்கள்

கணேஷ் அறிவார்ந்த, அதிகம்பேசாத, கூர்மையான மனிதர். பெண்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பவர். வசந்த் பேசிக்கொண்டே இருக்கும் இளைஞன். பெண்களை துரத்துபவன். கணேஷ் படிப்படியாக ஆராய்ந்து பார்ப்பது, முற்றிலும் வழக்கத்துக்கு மாறான கோணத்தில் பார்ப்பது ஆகிய அணுகுமுறைகள் கொண்டவன். வசந்த் சட்டென்று உள்ளுணர்வால் புதியவற்றைக் கண்டடைபவன். கணேஷ் வசந்த் இருவரும் ஒருவரை ஒருவர் நிரப்பும் கதாபாத்திரங்களாக நாவல்களில் வெளிப்படுகிறார்கள். கணேஷ் வசந்த் இருவருமே திருமணமாகாதவர்களாகவும், குடும்பம் என ஏதும் இல்லாதவர்களாகவும்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.

கணேஷ் மட்டும் தோன்றும் நாவல்கள்

  1. நைலான் கயிறு
  2. அனிதா-இளம் மனைவி
  3. ப்ரியா

கணேஷ்-வசந்த் இணைந்து தோன்றும் நாவல்கள்

  1. ஆ..!
  2. மேற்கே ஒரு குற்றம்
  3. மேலும் ஒரு குற்றம்
  4. மீண்டும் ஒரு குற்றம்
  5. இதன் பெயரும் கொலை
  6. கொலை அரங்கம்
  7. வஸந்த் வஸந்த்
  8. பேசும் பொம்மைகள்
  9. மேகத்தை துரத்தியவன்
  10. யவனிகா
  11. கொலையுதிர் காலம்
  12. நில்லுங்கள் ராஜாவே
  13. ஐந்தாவது அத்தியாயம்
  14. மலை மாளிகை
  15. மறுபடியும் கணேஷ்
  16. ஆயிரத்தில் இருவர்
  17. அம்மன் பதக்கம்
  18. கணேஷ் X வசந்த்
  19. 24 ரூபாய் தீவு
  20. ஓடாதே
  21. நிர்வாண நகரம்
  22. எதையும் ஒரு முறை
  23. காயத்ரி
  24. மூன்று நிமிஷம் கணேஷ்
  25. விபரீதக் கோட்பாடு
  26. காந்தளூர் வசந்தகுமாரன் கதை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:15 IST