under review

சீனிச்சர்க்கரைப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 15: Line 15:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ தமிழ்ப்புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ தமிழ்ப்புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|03-Dec-2022, 08:40:11 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:47, 13 June 2024

சீனிச்சர்க்கரைப் புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கை வரலாறு

சீனிச்சர்க்கரைப் புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சாந்துப்புலவர், சீனிப்புலவர், முத்துமுருகப்புலவர், சர்க்கரைப்புலவர்.

இலக்கிய வாழ்க்கை

சீனிச்சர்க்கரைப் புலவர், ராமநாதபுர சமஸ்தான வித்வானாக இருந்தவர். மயூரகிரிக்கோவை இயற்றிய சாந்துப்புலவர் இவரது சகோதரர். சீனிச்சர்க்கரைப் புலவர், பெரும் புலவராக விளங்கிய தனது பாட்டனார் சாந்தப் பிள்ளையிடமும், தந்தையார் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப் புலவரிடமும் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தானப் புலவராக இருந்தார்.

சீனிச்சர்க்கரைப் புலவர் ராமாயணச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 'திருச்செந்தூர்ப் பரணி’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். திருவாவடுதுறை ஆதீனத்தின் மீது பற்று கொண்டவர். ஆதினகர்த்தராக இருந்த திருச்சிற்றம்பல தேசிகர் மீது கலம்பகம் பாடியனார். திருச்சிற்றம்பல தேசிகரிடம் தீட்சை பெற்றவர். சீனிச்சர்க்கரைப் புலவர் இயற்றிய முக்கியமான நூல்களில் ஒன்று புகையிலை விடு தூது

புகையிலை விடு தூது

பழநி மலையில் குடிகொண்டுள்ள பாலசுப்பிரமணியக் கடவுளின் மீது ஒரு தலைவி புகையிலையைத் தூதாக அனுப்புவதே புகையிலை விடு தூது. இந்த நூலில் சீனிச்சர்க்கரைப் புலவர் புகையிலையின் பெருமையை 59 கண்ணிகளில் பாடலாக அமைத்துள்ளார். அவற்றுள் 53 கண்ணிகள் புகையிலையின் பெருமையைப் பேசுகின்றன. இறைவனுக்கும் புகையிலைக்கும், தமிழுக்கும் புகையிலைக்கும் எனப் பல சிலேடைப் பாடல்கள் இந்த நூலில் அமைந்துள்ளன. தமிழில் வெளியான தூது இலக்கியங்களுள் நகைச்சுவைப் பாடல்கள் அதிகம் கொண்ட தூது இலக்கிய நூல் புகையிலை விடு தூது.

நூல்கள் பட்டியல்

  • புகையிலைவிடு தூது
  • திருச்செந்தூர்ப் பரணி
  • திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2022, 08:40:11 IST