under review

கடல்புறா: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கடல்புறா (1974 ) சாண்டில்யன் எழுதிய வரலாற்று சாகச நாவல். கலிங்கத்துப் பரணி குறுங்காவியத்தின் கதைநாயகனாகிய கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற பின்னணியில் இந்நாவல் அமைந்துள்ள...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(21 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
கடல்புறா (1974 ) சாண்டில்யன் எழுதிய வரலாற்று சாகச நாவல். கலிங்கத்துப் பரணி குறுங்காவியத்தின் கதைநாயகனாகிய கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற பின்னணியில் இந்நாவல் அமைந்துள்ளது
{{Read English|Name of target article=Kadal Pura|Title of target article=Kadal Pura}}
 
[[File:கடல்புறா.jpg|thumb|கடல்புறா]]
[[File:Kadalpuraa1a (1).png|thumb|கடல்புறா குமுதம் ஓவியம் லதா]]
[[File:Kadalpuraa2a.png|thumb|கடல்புறா]]
கடல்புறா (1974) [[சாண்டில்யன்]] எழுதிய வரலாற்று சாகச நாவல். கலிங்கத்துப் பரணி குறுங்காவியத்தின் கதைநாயகனாகிய கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற பின்னணியில் இந்நாவல் அமைந்துள்ளது.
== எழுத்து, வெளியீடு ==
== எழுத்து, வெளியீடு ==
கடல்புறா 1974ல் குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. வானதி பதிப்பத்தால் நூலாக்கப் பட்டது.  
கடல்புறா 1974-ல் குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. வானதி பதிப்பத்தால் நூலாக்கப் பட்டது.
== ஆதாரங்கள் ==
முன்னுரையில் சாண்டில்யன் போஜன் எழுதிய 'யுக்தி கல்பதரு’ என்ற மரக்கல அமைப்பு பற்றிய நூல், வரலாற்றாசிரியர் ராதா குமுத் முகர்ஜி எழுதிய 'இந்தியன் ஷிப்பிங்’ என்ற நூல், கடாரத்தின் சரித்திரம் மற்றும் சைலேந்தர்களின் வம்சாவளி ஆகியவற்றைச் சொல்லும் டாக்டர் மஜும்தாரின் ஸ்வர்ணத்வீபம், வீரராஜேந்திரன் காலத்தில் ஏற்பட்ட கடாரப் போரைப் பற்றிய சில குறிப்புகளை அளிக்கும் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் நூல்கள், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், திரு. பி.டி.ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆகியோரின் வரலாற்று நூல்கள் ஆகியவற்றை ஆதாரங்களாக கொண்டதாகச் சொல்கிறார்.

ஆதாரங்கள்
முதலாம் குலோத்துங்கனாக முடிசூடிய அநபாயன் கி.பி. 1063-வது ஆண்டிலிருந்து 1070-ம் அண்டு வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலை நிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077-வது ஆண்டில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலைவன் பெயர் 'தேவகுலோ’. 'இந்த தேவகுலோ என்ற சொல் குலோத்துங்கனைக் குறிக்கும்’ என்று சாண்டில்யன் குறிப்பிடுகிறார். குலோத்துங்கனின் தளபதி கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற கதையைச் சொல்லும் கலிங்கத்துப் பரணி நூலும் தனக்கு ஆதாரமாகியது என்கிறார்.
== வரலாற்றுப்பின்புலம் ==
முதலாம் குலோத்துங்க சோழன் (1070 -1122) அநபாயன் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். சோழ இளவரசிக்கு வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜராஜ நரேந்திரனின் மகனாக கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையில் பிறந்த இவரை இராசேந்திர சோழர் வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார் என கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது. ஆனால் ராஜேந்திரசோழன் மறைந்தபின் இளவரசனாகிய அநபாயன் ஆட்சிக்கு வரவில்லை. ராஜேந்திர சோழனின் இன்னொரு மகன் அதிராஜேந்திரனுக்குபின் பொ.யு. 1070-ல் குலோத்துங்க சோழன் என்னும் பெயரில் ஆட்சிக்கு வந்தார். அதிராஜேந்திரன் நோயாளியாக இருந்தமையால் அநபாயன் தத்தெடுக்கப்பட்டிருக்கலாம். அதிராஜேந்திரன் மிகச்சில ஆண்டுகளே அரசராக இருந்தார்.

முன்னுரையில் சாண்டில்யன் ‘போஜன் எழுதிய 'யுக்தி கல்பதரு" என்ற மரக்கல அமைப்புபற்றிய நூல், ராசிரியர் ராதாமுகுத் முகர்ஜி எழுதிய 'இந்தியன் ஷிப்பிங்" என்ற நூல், கடாரத்தின் சரித்திரம் மற்றும் சைலேந்தர்களின் வம்சாவளி ஆகியவற்றைச் சொல்லும் டாக்டர் மஜும்தாரின் ஸ்வர்ணத்வீபம், வீரராஜேந்திரன் காலத்தில் ஏற்பட்ட கடாரப் போரப் பற்றிய சில குறிப்புகளை அளிக்கும் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, டாக்டர் எஸ். கிரிஷ்ணசாமி ஐயங்கார், திரு. பி.டி.ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆகியோரின் வரலாற்று நூல்கள் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டதாகச் சொல்கிறார்இவர்கள் வரலாற்று நூல்களில்லிருந்தும் எடுத்துக் கொண்டேன்.  
முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் சோழநாட்டு எல்லைகள் மிகப்பெரியதாக அகன்றிருந்தன. எனவே எல்லைநாடுகளில் எல்லாம் போர்கள் நிகழ்ந்தன. உள்நாட்டில் வலங்கை இடங்கை பூசல்கள் உருவாயின. ஆனால் சோழர்காலத்தின் சிறந்த மன்னர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். இளவரசன் ராஜேந்திர சோழன், அரையன் காளிங்கராயர், சேனாதிபதி இருங்கோவேள், அரையன் சயந்தன் கருணாகரப் பல்லவன் உடையன் ஆதித்தன், அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர், அழகிய மணவாள நம்பி, ராஜ ராஜ மதுராந்தகன் ஆகிய ஆற்றல்மிக்க படைத்தளபதிகள் இவருக்கு இருந்தனர். சாளுக்கியநாடு, சேரநாடு, ஈழம்,வெங்கி ஆகியநாடுகளை போரில் வென்று அடக்கினார்.

’முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அநபாயன் கி.பி. 1063வது வருஷத்திலிருந்து 1070ம் வருஷம் வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலை நிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலவன் பெயர் 'தேவகுலோ." இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும்’ என்று சாண்டில்யன் குறிப்பிடுகிறார். குலோத்துங்கனின் தளபதி கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற கதையைச் சொல்லும் கலிங்கத்துப் பரணி நூலும் தனக்கு ஆதாரமாகியது என்கிறார்
குலோத்துங்கன் இரண்டு கலிங்கப்போர்களை நடத்தினார். சோழநாட்டுக்கு அணுக்கமான வெங்கியை கைப்பற்ற கலிங்கர்கள் முயன்றபோது சோழர்படைகள் இளவரசர் விக்ரம சோழன் தலைமையில் காளிங்கராயர், கருணாகர தொண்டைமான் துணைவர படைகொண்டு சென்று கலிங்கர்களை வென்று துரத்தினர். இரண்டாவது கலிங்கப்போர் கருணாகரப் பல்லவன், அரையன் காளிங்கராயர், அரையன் ராஜ நாராயணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்போரைப் பற்றி ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி விரிவாக பாடுகிறது. இப்போரில் கலிங்கம் முழுமையாக அழிக்கப்பட்டதாகச் சொல்கிறது. இப்போர் குலோத்துங்க சோழனின் 33-ம் முடிசூட்டு ஆண்டில் (பொ.யு. 1102) நடைபெற்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

வரலாற்றுப்பின்புலம்
கருணாகரத் தொண்டைமான் கலிங்க அரசன் அனந்தவர்மன் சோடகங்கனை (1077-1150) வென்றான். அனந்தவர்மன் மூன்று கலிங்க நாடுகளில் ஒன்றான கீழைக் கங்கநாட்டை ஆட்சி செய்தவர். கங்கமன்னன் ராஜராஜ தேவனுக்கும் சோழச் சகக்ரவர்த்தி வீரராஜேந்திரனின் மகள் ராஜசுந்தரிக்கும் பிறந்தவர். குலோத்துங்க சோழனின் மருமகன் (வரலாற்றாய்வாளர்களில் சிலர் பேரன்முறை என்றும் சொல்வதுண்டு) கலிங்கப்படையெடுப்பு குடும்ப உறவுகளுக்குள் நிகழ்ந்த பூசலின் விளைவாக இருக்கலாம் என ஆய்வாளர் கூறுகிறார்கள்.

குலோத்துங்க சோழன் ஸ்ரீவிஜயப் பேரரசின் ஆட்சிப்பூசலில் தலையிட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. ஸ்ரீவிஜயம், கெமெர் ஆகிய பேரரசுகளுடன் அவர் தொடர்பிலிருந்தார். பொ.யு. 1077-ல் குலோத்துங்க சோழன் சீனாவுக்கு தூதர்களை அனுப்பியமைக்குச் சான்றுகள் உள்ளன என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். பொ.யு. 1114-ல் ஆங்கோர்வாட் கோயிலைக் கட்டிய கெமர் இன மன்னன் சூரியவர்மன் குலோத்துங்க சோழனுக்கு அரிய வைரங்களை பரிசளித்ததாக கல்வெட்டுக்குறிப்பு உள்ளது. பொ.யு. 1063-ல் குலோத்துங்க சோழன் தன் படைகளுடன் ஸ்ரீவிஜய நாட்டுக்கு சென்று அங்குள்ள அரியணைப் பூசலை தீர்த்தார் என்பதற்கு வீரராஜேந்திரன் தன் ஏழாம் முடிசூட்டு ஆண்டில் (பொ.யு.1063) பொறிக்கப்பட்ட கல்வெட்டில் சோழப்படைகள் கடாரத்தை வென்று தன் காலடியை வந்து பணிந்த மன்னனுக்கே அதை அளித்துவிட்டதாக குறிப்பிடுவதைச் சான்றாகச் சொல்கிறார்கள். பொ.யு. 1067 வரை குலோத்துங்கன் ஸ்ரீவிஜய நாட்டில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஸ்ரீவிஜய பேரரசு குலோத்துங்க சோழருடன் நல்லுறவுடன் இருந்தது. ராஜராஜசோழன் கட்டிய நாகை சூடாமணி விகாரத்தை புதுப்பிக்க ஸ்ரீவிஜய மன்னர் நிதியளித்ததற்கு சான்று உள்ளது.
== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
கதைநாயகன் சோழர் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான். ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து சோழர்களின் உதவி தேடி வந்த இளவரசனுக்கும் அவர் மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயன் என்னும் முதலாம் குலோத்துங்கன் உதவுகிறான். அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உடன் நின்ற்கின்றனர்.
கதைநாயகன் சோழர் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான். ஸ்ரீவிஜய நாட்டில் ஜெயவர்மனின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக அவர் தம்பி குணவர்மர் சோழர்களின் உதவியை நாடுகிறார். அவர் தன் மகள் காஞ்சனா தேவியுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் ஸ்ரீவிஜய மன்னன் ஜெயவர்மனின் நண்பன். ஆகவே ஜெயவர்மன் கலிங்க மன்னனின் உதவியுடன் குணவர்மனை கொல்ல திட்டமிடுகிறான். இச்செய்தி சோழ மன்னர் வீரராஜேந்திரனுக்கு தெரியவரும்போது குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் பாதுகாத்து அழைத்து வர கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென்கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார்.  
 
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.
 
கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.
 
பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

ஆனால் பீமன் அந்த ஓலையை மதிக்காமல் கருணாகரனை சிறையிலடைக்கிறான். சோழர்களின் கடல் ஆதிக்கத்தை வெல்ல திட்டமிடுகிறான். பல சாகசச் செயல்களுக்குப்பின் கலிங்கத்தில் இருந்து தப்புகிறான் கருணாகரன். வீரராஜேந்திரனின் மகன் அநபாயன் என்னும் முதலாம் குலோத்துங்கன் அவனுக்கு உதவுகிறான். அநபாயனின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உடன் நிற்கின்றனர். அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல்புறா என்னும் போர்க்கப்பலை உருவாக்கும் கருணாகரன் பலவகை சாகசங்கள் செய்து கடல்கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனா தேவியின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான். பின்னர் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியணையில் ஏற்றுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
== இலக்கிய இடம் ==
கடல்புறா சோழர்களின் கலிங்கப்போர், சோழர்கள் ஸ்ரீவிஜயப் பேரரசின் அரசியலில் தலையிட்டது, ஸ்ரீவிஜயத்தின் அரசியல் சிக்கல்கள் ஆகியவற்றை மிக மேலோட்டமாகவே தொட்டுச் செல்கிறது. இந்நாவல் பெரும்பாலும் பிரிட்டிஷ் கடற்கொள்ளை நாவல்களின் பாதிப்பில் கடல்சாகசங்களையே விரித்து எழுதுகிறது. இதிலுள்ள நிலப்பரப்பு வர்ணனைகளும் முற்றிலும் கற்பனையானவை. சாண்டில்யன் நாவல்களில் ஒப்புநோக்க வரலாற்றுச் சார்பு மிகக்குறைவான நாவல் இது. கற்பனை நிலப்பரப்புகளில் கற்பனையான சாகசங்கள் யுலிஸஸின் சாகசங்கள் முதல் ஐரோப்பிய இலக்கியங்களில் பேசப்படுபவை. அவற்றை தமிழில் கொண்டுவந்ததே இந்நாவலின் பங்களிப்பு.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
http://tamilaivugal.org/TamilPhd/TamilKallooriAayvugal?collegeResearchId=370
* [http://tamilaivugal.org/TamilPhd/TamilKallooriAayvugal?collegeResearchId=370 சாண்டில்யன் நாவல்கள் ஒரு வரலாற்றுப் பார்வை, நா கணேசன், பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2004]
 
* [https://powsdouble.blogspot.com/2013/07/blog-post_3189.html கடல்புறா முன்னுரை]
[http://powsdouble.blogspot.com/2013/07/blog-post_3189.html கடல்புறா முன்னுரை]
* சோழர்கள் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 07:26, 24 February 2024

To read the article in English: Kadal Pura. ‎

கடல்புறா
கடல்புறா குமுதம் ஓவியம் லதா
கடல்புறா

கடல்புறா (1974) சாண்டில்யன் எழுதிய வரலாற்று சாகச நாவல். கலிங்கத்துப் பரணி குறுங்காவியத்தின் கதைநாயகனாகிய கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற பின்னணியில் இந்நாவல் அமைந்துள்ளது.

எழுத்து, வெளியீடு

கடல்புறா 1974-ல் குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. வானதி பதிப்பத்தால் நூலாக்கப் பட்டது.

ஆதாரங்கள்

முன்னுரையில் சாண்டில்யன் போஜன் எழுதிய 'யுக்தி கல்பதரு’ என்ற மரக்கல அமைப்பு பற்றிய நூல், வரலாற்றாசிரியர் ராதா குமுத் முகர்ஜி எழுதிய 'இந்தியன் ஷிப்பிங்’ என்ற நூல், கடாரத்தின் சரித்திரம் மற்றும் சைலேந்தர்களின் வம்சாவளி ஆகியவற்றைச் சொல்லும் டாக்டர் மஜும்தாரின் ஸ்வர்ணத்வீபம், வீரராஜேந்திரன் காலத்தில் ஏற்பட்ட கடாரப் போரைப் பற்றிய சில குறிப்புகளை அளிக்கும் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் நூல்கள், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், திரு. பி.டி.ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆகியோரின் வரலாற்று நூல்கள் ஆகியவற்றை ஆதாரங்களாக கொண்டதாகச் சொல்கிறார்.

முதலாம் குலோத்துங்கனாக முடிசூடிய அநபாயன் கி.பி. 1063-வது ஆண்டிலிருந்து 1070-ம் அண்டு வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலை நிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077-வது ஆண்டில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலைவன் பெயர் 'தேவகுலோ’. 'இந்த தேவகுலோ என்ற சொல் குலோத்துங்கனைக் குறிக்கும்’ என்று சாண்டில்யன் குறிப்பிடுகிறார். குலோத்துங்கனின் தளபதி கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற கதையைச் சொல்லும் கலிங்கத்துப் பரணி நூலும் தனக்கு ஆதாரமாகியது என்கிறார்.

வரலாற்றுப்பின்புலம்

முதலாம் குலோத்துங்க சோழன் (1070 -1122) அநபாயன் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். சோழ இளவரசிக்கு வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜராஜ நரேந்திரனின் மகனாக கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையில் பிறந்த இவரை இராசேந்திர சோழர் வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார் என கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது. ஆனால் ராஜேந்திரசோழன் மறைந்தபின் இளவரசனாகிய அநபாயன் ஆட்சிக்கு வரவில்லை. ராஜேந்திர சோழனின் இன்னொரு மகன் அதிராஜேந்திரனுக்குபின் பொ.யு. 1070-ல் குலோத்துங்க சோழன் என்னும் பெயரில் ஆட்சிக்கு வந்தார். அதிராஜேந்திரன் நோயாளியாக இருந்தமையால் அநபாயன் தத்தெடுக்கப்பட்டிருக்கலாம். அதிராஜேந்திரன் மிகச்சில ஆண்டுகளே அரசராக இருந்தார்.

முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் சோழநாட்டு எல்லைகள் மிகப்பெரியதாக அகன்றிருந்தன. எனவே எல்லைநாடுகளில் எல்லாம் போர்கள் நிகழ்ந்தன. உள்நாட்டில் வலங்கை இடங்கை பூசல்கள் உருவாயின. ஆனால் சோழர்காலத்தின் சிறந்த மன்னர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். இளவரசன் ராஜேந்திர சோழன், அரையன் காளிங்கராயர், சேனாதிபதி இருங்கோவேள், அரையன் சயந்தன் கருணாகரப் பல்லவன் உடையன் ஆதித்தன், அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர், அழகிய மணவாள நம்பி, ராஜ ராஜ மதுராந்தகன் ஆகிய ஆற்றல்மிக்க படைத்தளபதிகள் இவருக்கு இருந்தனர். சாளுக்கியநாடு, சேரநாடு, ஈழம்,வெங்கி ஆகியநாடுகளை போரில் வென்று அடக்கினார்.

குலோத்துங்கன் இரண்டு கலிங்கப்போர்களை நடத்தினார். சோழநாட்டுக்கு அணுக்கமான வெங்கியை கைப்பற்ற கலிங்கர்கள் முயன்றபோது சோழர்படைகள் இளவரசர் விக்ரம சோழன் தலைமையில் காளிங்கராயர், கருணாகர தொண்டைமான் துணைவர படைகொண்டு சென்று கலிங்கர்களை வென்று துரத்தினர். இரண்டாவது கலிங்கப்போர் கருணாகரப் பல்லவன், அரையன் காளிங்கராயர், அரையன் ராஜ நாராயணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்போரைப் பற்றி ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி விரிவாக பாடுகிறது. இப்போரில் கலிங்கம் முழுமையாக அழிக்கப்பட்டதாகச் சொல்கிறது. இப்போர் குலோத்துங்க சோழனின் 33-ம் முடிசூட்டு ஆண்டில் (பொ.யு. 1102) நடைபெற்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

கருணாகரத் தொண்டைமான் கலிங்க அரசன் அனந்தவர்மன் சோடகங்கனை (1077-1150) வென்றான். அனந்தவர்மன் மூன்று கலிங்க நாடுகளில் ஒன்றான கீழைக் கங்கநாட்டை ஆட்சி செய்தவர். கங்கமன்னன் ராஜராஜ தேவனுக்கும் சோழச் சகக்ரவர்த்தி வீரராஜேந்திரனின் மகள் ராஜசுந்தரிக்கும் பிறந்தவர். குலோத்துங்க சோழனின் மருமகன் (வரலாற்றாய்வாளர்களில் சிலர் பேரன்முறை என்றும் சொல்வதுண்டு) கலிங்கப்படையெடுப்பு குடும்ப உறவுகளுக்குள் நிகழ்ந்த பூசலின் விளைவாக இருக்கலாம் என ஆய்வாளர் கூறுகிறார்கள்.

குலோத்துங்க சோழன் ஸ்ரீவிஜயப் பேரரசின் ஆட்சிப்பூசலில் தலையிட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. ஸ்ரீவிஜயம், கெமெர் ஆகிய பேரரசுகளுடன் அவர் தொடர்பிலிருந்தார். பொ.யு. 1077-ல் குலோத்துங்க சோழன் சீனாவுக்கு தூதர்களை அனுப்பியமைக்குச் சான்றுகள் உள்ளன என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். பொ.யு. 1114-ல் ஆங்கோர்வாட் கோயிலைக் கட்டிய கெமர் இன மன்னன் சூரியவர்மன் குலோத்துங்க சோழனுக்கு அரிய வைரங்களை பரிசளித்ததாக கல்வெட்டுக்குறிப்பு உள்ளது. பொ.யு. 1063-ல் குலோத்துங்க சோழன் தன் படைகளுடன் ஸ்ரீவிஜய நாட்டுக்கு சென்று அங்குள்ள அரியணைப் பூசலை தீர்த்தார் என்பதற்கு வீரராஜேந்திரன் தன் ஏழாம் முடிசூட்டு ஆண்டில் (பொ.யு.1063) பொறிக்கப்பட்ட கல்வெட்டில் சோழப்படைகள் கடாரத்தை வென்று தன் காலடியை வந்து பணிந்த மன்னனுக்கே அதை அளித்துவிட்டதாக குறிப்பிடுவதைச் சான்றாகச் சொல்கிறார்கள். பொ.யு. 1067 வரை குலோத்துங்கன் ஸ்ரீவிஜய நாட்டில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஸ்ரீவிஜய பேரரசு குலோத்துங்க சோழருடன் நல்லுறவுடன் இருந்தது. ராஜராஜசோழன் கட்டிய நாகை சூடாமணி விகாரத்தை புதுப்பிக்க ஸ்ரீவிஜய மன்னர் நிதியளித்ததற்கு சான்று உள்ளது.

கதைச்சுருக்கம்

கதைநாயகன் சோழர் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான். ஸ்ரீவிஜய நாட்டில் ஜெயவர்மனின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக அவர் தம்பி குணவர்மர் சோழர்களின் உதவியை நாடுகிறார். அவர் தன் மகள் காஞ்சனா தேவியுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் ஸ்ரீவிஜய மன்னன் ஜெயவர்மனின் நண்பன். ஆகவே ஜெயவர்மன் கலிங்க மன்னனின் உதவியுடன் குணவர்மனை கொல்ல திட்டமிடுகிறான். இச்செய்தி சோழ மன்னர் வீரராஜேந்திரனுக்கு தெரியவரும்போது குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் பாதுகாத்து அழைத்து வர கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென்கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார்.

ஆனால் பீமன் அந்த ஓலையை மதிக்காமல் கருணாகரனை சிறையிலடைக்கிறான். சோழர்களின் கடல் ஆதிக்கத்தை வெல்ல திட்டமிடுகிறான். பல சாகசச் செயல்களுக்குப்பின் கலிங்கத்தில் இருந்து தப்புகிறான் கருணாகரன். வீரராஜேந்திரனின் மகன் அநபாயன் என்னும் முதலாம் குலோத்துங்கன் அவனுக்கு உதவுகிறான். அநபாயனின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உடன் நிற்கின்றனர். அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல்புறா என்னும் போர்க்கப்பலை உருவாக்கும் கருணாகரன் பலவகை சாகசங்கள் செய்து கடல்கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனா தேவியின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான். பின்னர் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியணையில் ஏற்றுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

இலக்கிய இடம்

கடல்புறா சோழர்களின் கலிங்கப்போர், சோழர்கள் ஸ்ரீவிஜயப் பேரரசின் அரசியலில் தலையிட்டது, ஸ்ரீவிஜயத்தின் அரசியல் சிக்கல்கள் ஆகியவற்றை மிக மேலோட்டமாகவே தொட்டுச் செல்கிறது. இந்நாவல் பெரும்பாலும் பிரிட்டிஷ் கடற்கொள்ளை நாவல்களின் பாதிப்பில் கடல்சாகசங்களையே விரித்து எழுதுகிறது. இதிலுள்ள நிலப்பரப்பு வர்ணனைகளும் முற்றிலும் கற்பனையானவை. சாண்டில்யன் நாவல்களில் ஒப்புநோக்க வரலாற்றுச் சார்பு மிகக்குறைவான நாவல் இது. கற்பனை நிலப்பரப்புகளில் கற்பனையான சாகசங்கள் யுலிஸஸின் சாகசங்கள் முதல் ஐரோப்பிய இலக்கியங்களில் பேசப்படுபவை. அவற்றை தமிழில் கொண்டுவந்ததே இந்நாவலின் பங்களிப்பு.

உசாத்துணை

✅Finalised Page