under review

சகாப்தம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 3: Line 3:
சென்னையில் 1977-ல் ஜெயபாலன் (கலாமணி), மாரியப்பன் (கார்க்கியன்), தங்கமுத்து(ஜீவகன்), ரங்கசாமி (பார்த்திபன்) ஆகியோருடன் இணைந்து மு. சிவலிங்கம் 'சகாப்தம்' என்ற பெயரில் இலக்கியச் சிற்றிதழை வெளியிட்டார். இலவச இதழ். மாதம் ஒருமுறை வெளிவந்தது. நன்கொடை மூலம் நடத்தப்பட்டது. திருச்சியில் கரிகாலன் அச்சகம் நடத்திய பாலு சகாப்தம் இதழை அச்சிட்டுத் தந்தார். ஆறு இதழ்களுக்குப்பின் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு 'மக்கள் சகாப்தம்' என்ற பெயரில், 50 காசு விலையில், விற்பனைக்குரிய ஒரு பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது.

== உள்ளடக்கம் ==  
== உள்ளடக்கம் ==  
சகாப்தம் இதழ்  இலக்கியப் பத்திரிகையான [[கணையாழி]]யின் வடிவத்தில் 24 பக்கங்களோடு வெளிவந்தது. இதழில் கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம், திரைப்பட விமர்சனம், கட்டுரைகள், பேட்டிகள் வெளிவந்தன. கலாமணியின் சிறுகதை ‘படிதாண்டிய பத்தினி’ கார்க்கியன் கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், கோயில் வாசல் பிச்சைக்காரர்களிடம் எடுத்த பேட்டிகளான, ‘மணல்வெளி மனிதர்கள்’, ‘ஒரு தெய்வ சன்னதியில் சில மனித தரிசனங்கள்’ ஆகியவை பரவலான பாராட்டைப் பெற்றன. பாரதிராஜாவின் முதல்படம் ‘பதினாறு வயதினிலே’ வெளிவந்தபோது அவரின் பேட்டி வெளியானது.
சகாப்தம் இதழ்  இலக்கியப் பத்திரிகையான [[கணையாழி]]யின் வடிவத்தில் 24 பக்கங்களில் வெளிவந்தது. இதழில் கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம், திரைப்பட விமர்சனம், கட்டுரைகள், பேட்டிகள் வெளிவந்தன. கலாமணியின் சிறுகதை ‘படிதாண்டிய பத்தினி’ கார்க்கியன் கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், கோயில் வாசல் பிச்சைக்காரர்களிடம் எடுத்த பேட்டிகளான, ‘மணல்வெளி மனிதர்கள்’, ‘ஒரு தெய்வ சன்னதியில் சில மனித தரிசனங்கள்’ ஆகியவை பரவலான பாராட்டைப் பெற்றன. பாரதிராஜாவின் முதல்படம் ‘பதினாறு வயதினிலே’ வெளிவந்தபோது அவரின் பேட்டி வெளியானது.
== பங்களிப்பாளர்கள் ==
== பங்களிப்பாளர்கள் ==
* [[விட்டல் ராவ்|விட்டல்ராவ்]]
* [[விட்டல் ராவ்|விட்டல்ராவ்]]
Line 17: Line 17:
* [https://www.sivalingam.in/ மு. சிவலிங்கம்: வலைதளம்]
* [https://www.sivalingam.in/ மு. சிவலிங்கம்: வலைதளம்]

{{First review completed}}
 
{{Finalised}}
 
{{Fndt|22-Feb-2024, 21:51:44 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:54, 13 June 2024

சகாப்தம் (மக்கள் சகாப்தம்) (1977) இலக்கியச் சிற்றிதழ். மு. சிவலிங்கம் ஆரம்பித்த இதழ்.

வெளியீடு

சென்னையில் 1977-ல் ஜெயபாலன் (கலாமணி), மாரியப்பன் (கார்க்கியன்), தங்கமுத்து(ஜீவகன்), ரங்கசாமி (பார்த்திபன்) ஆகியோருடன் இணைந்து மு. சிவலிங்கம் 'சகாப்தம்' என்ற பெயரில் இலக்கியச் சிற்றிதழை வெளியிட்டார். இலவச இதழ். மாதம் ஒருமுறை வெளிவந்தது. நன்கொடை மூலம் நடத்தப்பட்டது. திருச்சியில் கரிகாலன் அச்சகம் நடத்திய பாலு சகாப்தம் இதழை அச்சிட்டுத் தந்தார். ஆறு இதழ்களுக்குப்பின் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு 'மக்கள் சகாப்தம்' என்ற பெயரில், 50 காசு விலையில், விற்பனைக்குரிய ஒரு பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது.

உள்ளடக்கம்

சகாப்தம் இதழ் இலக்கியப் பத்திரிகையான கணையாழியின் வடிவத்தில் 24 பக்கங்களில் வெளிவந்தது. இதழில் கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம், திரைப்பட விமர்சனம், கட்டுரைகள், பேட்டிகள் வெளிவந்தன. கலாமணியின் சிறுகதை ‘படிதாண்டிய பத்தினி’ கார்க்கியன் கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், கோயில் வாசல் பிச்சைக்காரர்களிடம் எடுத்த பேட்டிகளான, ‘மணல்வெளி மனிதர்கள்’, ‘ஒரு தெய்வ சன்னதியில் சில மனித தரிசனங்கள்’ ஆகியவை பரவலான பாராட்டைப் பெற்றன. பாரதிராஜாவின் முதல்படம் ‘பதினாறு வயதினிலே’ வெளிவந்தபோது அவரின் பேட்டி வெளியானது.

பங்களிப்பாளர்கள்

இதழ் நிறுத்தம்

சகாப்தம் இதழ் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. முதல் ஆண்டில் பத்து இதழ்கள் வெளியானது. இரண்டாம் ஆண்டின் முதலாவது இதழ் ஏப்ரல் 1978-ல் வெளியிடப்பட்டது. பதின்மூன்று இதழ்களோடு சகாப்தம் இதழ் நின்று போனது.

மதிப்பீடு

வல்லிக்கண்ணன் எழுதிய இலக்கிய வரலாற்றில் சிற்றிதழ்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”இலக்கிய வானில் சகாப்தம் மின்னல்போல் தோன்றி மறைந்தாலும் ஓர் ஆழமான முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2024, 21:51:44 IST