under review

அபிநய தர்ப்பணம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Spell Check done)
 
Line 113: Line 113:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Spc]]

Latest revision as of 04:02, 10 February 2024

அபிநய தர்ப்பணம்

அபிநய தர்ப்பணம் (1957) நாட்டியக் கலை பற்றிய வடமொழி நூல். நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்டது. இதன் காலம் பத்தாம் நூற்றாண்டு. வீரராகவையன் என்பவர் அபிநய தர்ப்பணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். உ.வே.சா. நூல் நிலையம் இம்மொழிபெயர்ப்பை வெளியிட்டது. நாட்டியத் தோற்றம், நாட்டிய இலக்கணம் பற்றிய முழுமையான செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

பிரசுரம், வெளியீடு

அபிநய தர்ப்பணம், நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட வடமொழி நூல். இதன் தமிழ் மொழிபெயர்ப்பை, டெல்லி சங்கீத நாடக அகாடமி அளித்த பொருளுதவியுடன், உ.வே.சா. நூல் நிலையம், 1957-ல் வெளியிட்டது. கலாஷேத்ரா ருக்மிணி தேவி அருண்டேலுக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை இயற்றியவர் வீரராகவையன்.

“தமிழ்நாட்டில் நாட்டியம் பயிலும் மாணவர்க்கு வடமொழி அபிநய தர்ப்பணத்தின் நேர் மொழிபெயர்ப்பான இந்நூல் இன்றியமையாததாக விளங்கும் என்ற எண்ணத்தாலும், தாய்மொழியிலுள்ள பழைமையான இச்சிறந்த கலை நூல் முற்றிலும் அழிந்துபோகாமல் காப்பாற்றப்பட வேண்டுமென்ற கருத்தாலும் இது பிரசுரிக்கப் பெறுகின்றது.” என்று நூலின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

அபிநய தர்ப்பணம் நூலை மொழிபெயர்த்தவர் வீரராகவையன். இவரைப் பற்றிய பிற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நூல் அமைப்பு

அபிநய தர்ப்பணம் நூல் 284 சுலோகங்களைக் கொண்டது. நாட்டியத் தோற்றம், நாட்டிய இலக்கணம் பற்றிய முழுமையான செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அபிநய தர்ப்பணம் நூல் முற்சேர்பு, நூல், பிற்சேர்பு என்று மூன்று பிரிவுகளில் அமைந்துள்ளது.

முற்சேர்பு

முற்சேர்பு என்ற பிரிவில் 61 பாடல்கள் உள்ளன. கீழ்காணும் தலைப்புகளில் அவை இடம் பெற்றுள்ளன.

  • திருநடன வணக்கம்
  • நாட்டியத் தோற்றமும் வளர்ச்சியும்
  • சபாமண்டபம்
  • நாட்டியக் கிரமம்
  • நடன பேதங்கள்
  • திரியாங்கம்
  • அபிநயம் .
  • தாண்டவம், லாஸ்யம்
நூல்

நூல் என்ற பிரிவில் 129 பாடல்கள் அமைந்துள்ளன. கீழ்காணும் தலைப்புகளில் அவை அமைந்துள்ளன.

  • பாயிரம்
  • ஒன்பதுவகைச் சிரசுகள்
  • எட்டு திருஷ்டி பேதங்கள்
  • கண்ட பேதங்கள்
  • ஒற்றைக் கைகள்
  • இரட்டைக்கை வகை
  • தேவர்களுக்குக் கைகள்
  • தசாவதாரங்கள்
  • நான்கு சாதிகள்
  • பாந்தவ்யக் கைகள்
  • பொது
  • சுவைகள்
பிற்சேர்பு

பிற்சேர்பு என்ற பிரிவில் 94 பாடல்கள் உள்ளன. அவை, கீழ்காணும் தலைப்புகளில் அமைந்துள்ளன.

  • காலங்களின் அபிநயம்
  • ஸ்தாவராதி அபிநயம்
  • ஐல ஐந்துக்கள்
  • பறவைகள்
  • விலங்குகள்
  • மனிதப் பகுதி
  • நவரசம்
  • சர்வாங்க அபிநயம்
  • சாஸ்திரம்
  • சிவகணங்கள்
  • தேவியர்

உள்ளடக்கம்

நாட்டிய உற்பத்தி, நாட்டியத்தின் புகழ், நடன அபிநய வகைகள், சபாபதி, மந்திரி, சபா, சபாரசனா, பாத்திர அமைப்பு, அபாத்திர அமைப்பு, பாத்திரப் பிரகிரமம், அபிநயங்கள், அங்கம், பிரத்தியாங்கம், உபாங்கம் ஆகியன பற்றிய செய்திகள் மிக விரிவாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கை முத்திரை, அங்க முத்திரை, கண்ட முத்திரை என நாட்டிய சாஸ்திரம் பற்றிய பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

ஆடல்களில் மனிதர்களை எப்படிக் குறிப்பது, தேவர்களை, தேவியர்களை எப்படிக் குறிப்பது, விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் விதம், கையால் காட்டப்படும் முத்திரைகளின் விரிவான விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மதிப்பீடு

அபிநய தர்ப்பணம் நூல், நடன மாணவர்கள் மற்றும் நடன ஆசிரியர்களால் பயன்படுத்தப்படும் பொதுவான நூல். நாட்டிய சாஸ்திரம் பற்றிய பல்வேறு செய்திகள் மிக விரிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பாடல் நடை

நாட்டியத் தோற்றம்

ஆதியாம் பொருளில் முக்குணஞ் சேர௮ம்
பரமெனுஞ் சத்தப் பிரமம்
ஆயதிற் றோன்று காதம் தேவானாத்
மகம் தொன் னியாத்து மகமென்(று)
ஓதிய விரண்டு வகையுடன் தனித்த
உமையொரு பாகன்முன் நாளில்
உலகெனுங் கலைகள் ஈரெட்டை மேவி
ஓப்பிலா ஆனந்தம் முதலா
ஏதமில் தாண்டவம் பதினாறும் ஏற்கையாய்
ஆடிடும் அப்போது ஏந்திய
உடுக்குக் கிண்கிணி கெச்சை இவற்றுள்
வியாகரண சூத்தி ரங்கள்
மீதுறும் கணமுத லாகிய நூல்கள்
விளங்குறும் அவற்றுள் இப் பரதம்
விண்ணவர் புகழ ஆடி, இப் பயனை
விரிஞ்சனுக் கோதினன் அரனே.

உல்லோகிதம் (மேலே பார்த்தல்)

உயரவே பார்த்த திட்டி உல்லோகி தம்தா னாகும்
சயமுறு வினியோ கங்கேள் தேவமண் டலங்கள் சந்திரன்
நயமுறு சிகரி கட்கும் நற்கொடி நுனிக ளுக்கும்
உயர்பாலிற் பொருட்கும் பூர்வ முறுசென்மங் கட்கும் தானே.

அவலோகிதம் (கீழ் நோக்கும் பார்வை)

அவனியைப் பார்த்த திட்டி அவலோகி தந்தா னாகும்
நவில்வினி யோகங் கேளாய் ௩டக்கநன் னீழற் பார்க்கப்
புவியினில் விசாரம் சூசம் புராணங்கள் படிப்ப தற்கும்
கவனம தாகத் தன்தே கம்பார்க் கவுந்தா னாமே.

வீரபத்திரன்

தார்வலக் கையுத் வேஷ்டி தச்சிக ரம்மி டக்கைச்
சீரதோ முகமுட் டிக்கை வலக்காலைத் தூக்கிச் சேரக்
கூருட னிடக்கா றன்னைக் குஞ்சித மாக வைத்தால்
வீரபத் திரனுக் கென்று விண்டனர் பரத: நூலோர்

உசாத்துணை


✅Finalised Page