under review

சுரேஷ்குமார இந்திரஜித்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
 
(68 intermediate revisions by 10 users not shown)
Line 1: Line 1:
This page is being created by muthu_kalimuthu
{{Read English|Name of target article=Sureshkumara Indrajith|Title of target article=Sureshkumara Indrajith}}
 
[[File: சுரேஷ்குமார இந்திரஜித்.jpeg|thumb| சுரேஷ்குமார இந்திரஜித்]]
சுரேஷ்குமார இந்திரஜித், தமிழ் எழுத்தாளர்.
சுரேஷ்குமார இந்திரஜித் (அக்டோபர் 5, 1953) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். குறைத்துச் சொல்லும் அழகியலை தமிழ் இலக்கியத்தில் முன்வைத்த எழுத்தாளர்களில் முதன்மையானவர்.
 
== பிறப்பு, கல்வி ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[File:சுரேஷ்குமார இந்திரஜித்1.jpg|thumb|சுரேஷ்குமார இந்திரஜித்]]
 
இயற்பெயர் என்.ஆர். சுரேஷ்குமார். சுரேஷ்குமார இந்திரஜித் ராமேஸ்வரத்தில் ராமநாதன், காந்திமதி இணையருக்கு அக்டோபர் 5, 1953-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். மதுரை நாகமலையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். மதுரை மஜுரா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
=== பிறப்பு, கல்வி ===
== தனி வாழ்க்கை ==
 
சுரேஷ்குமார இந்திரஜித் 1983-ல் மல்லிகாவை திருமணம் செய்து கொண்டார். அபிநயா, ஶ்ரீஜனனி என இரு மகள்கள். தமிழக அரசில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கர்நாடக சங்கீத ரசனையுள்ளவர்.
இயற்பெயர் என். ஆர். சுரேஷ்குமார். பிறந்த ஊர் இராமேஸ்வரம். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். பியூசியை மதுரை நாகமலையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் படித்தார். இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பு மஜுரா கல்லூரியில். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம்.
== இலக்கிய வாழ்க்கை ==
 
[[File:அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்.jpeg|thumb| அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் நாவல்]]
=== தனி வாழ்க்கை ===
சுரேஷ்குமார இந்திரஜித் 1979 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் தொகுப்பு 'அலையும் சிறகுகள்’ 1982-ல் வெளியானது.எழுத்தாளர் [[ஜெயகாந்தன்]] கதைகள் வழி புனைவுலகம் அறிமுகம் பெற்றார். 1986-ல்'சந்திப்பு’ என்ற பெயரில் மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும், இரண்டாவது கூட்டத்தில் இவரும் பேசியுள்ளனர். சு.ரா. கலந்து கொண்ட பெரிய கூட்டமும் இதன் மூலம் நடைபெற்றது. 90 - க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நான்கு நாவல்களையும் இரு குறுநாவல்களையும் நூறுக்கும் மேற்பட்ட குறுங்கதைகளையும் எழுதியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார். தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார்.
 
== இலக்கிய இடம் ==
1979 முதல் எழுதி வருகிறார். தமிழக அரசில் சிராசுதாராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
[[File: கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்.jpeg|thumb| கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் நாவல்|345x345px]]
 
சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரு நாவல்களில் வரலாற்றுக் குறிப்புகளும் புனைவும் இணைந்துள்ளன. பிற இரண்டு நாவல்களும் குறுநாவல்களும் குறுங்கதைகளும் புதுமையான களத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளன.  
== பங்களிப்பு ==
 
=== இலக்கியம் ===
 
இவர் அதிகமாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர் ரகமல்ல. ரொம்பவும் நிதானமாக இயங்கும் நவீன படைப்பாளி. 'நவீனம் என்பது புதியது பழையது அல்லாதது. ஏற்கனவே சொல்லப்பட்ட கோணங்களில் இருந்தும் பார்வைகளில் இருந்தும் வடிவங்களில் இருந்தும் விடயங்களைப் பார்க்காமல் அவையல்லாத வேறு முறைகளில் இருந்து பார்க்கும் போது நவீனம் பிறக்கிறது. பிராந்தியத்துக்கு பிராந்தியம், மொழிக்கு மொழி இந்த நவீனம் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நவீனம் பழையதாக மாறும்போது அதனைத் துறக்கக் கூடிய சூழல் உருவாகும். எழுத்து, பார்வை, சிந்தனை, கோணம் இவையெல்லாம் புதியதாகும் போது பழையவற்றை அழித்துக் கொண்டு நவீனம் உயிர்க்கிறது.' இவ்வாறு நவீனம் பற்றிய பிரக்ஞையில் இயங்கிக் கொண்டிருப்பவர் சுரேஷ்குமார இந்திரஜித்.
 
தன்னளவில் நவீனத்தைப் புரிந்து கொள்ளல் மூலம் தனக்கான நடை, மொழிதல் பண்புகள் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து கடந்து செல்லும் முறைமை இவருக்கு இயல்பாகக் கைகூடி வருகிறது. இவரது பார்வையில் தமிழ்ச் சிறுகதை வரலாறு என்பது முதலில் கு.ப.ரா. புதுமைப்பித்தன், மௌனி இவர்களிடமிருந்து தொடங்குகிறது. குறிப்பாக இவர்கள்தாம் சிறுகதைப் பரப்பில் 'புதுத்தரப்பு' என்கிற பார்வைத் தேடல் இவரிடம் உண்டு. இத்தகைய படைப்பனுபவத் தேடல் இவரது கருத்துநிலைப் புலமாகவும் பார்வைக் கோணமாகவும் உருத்திரட்சி பெறுகிறது. இதனால் புலன்களால் அறியப்படும் புறவுலகத்தின் பின்னணியில் அகவயமான உலகத்தை எழுதுதல் இவரிடம் தனிச்சிறப்பாக உள்ளது. இவரது படைப்புலகம் உணர்த்தும் தரிசனம் இவ்வாறுதான் வெளிப்படுகிறது. அதாவது புறவுலகத்தையும் அகவுலகத்தையும் ஒழுங்கே இணைக்கும் பண்பாக உள்ளது. புறவுலக எதார்த்தத்தின் விளைவாக அகத்தில் தோற்றுவிக்கும் காட்சிப் படிமம் அல்லது தோற்றம் மூலம் வெவ்வேறு தளங்களில் படைப்பனுபவங்களை வாசகருக்குள் கடத்தும் உந்துதல் பெற்ற கதையாடல்களை வளர்த்துச் செல்லும் தனிப்பண்பு கொண்டவர் சுரேஷ்குமார இந்திரஜித்.
 
இவரது கதைகள் மனித மனத்தின் நுணுக்கங்களை வெளிப்படுத்துவதில் அவற்றினளவில் தர்க்கரீதியான பின்னல்களைக் கொண்டுள்ளன. சமூக நிகழ்ச்சிகளை மட்டுமல்லாமல், மனித உணர்வுகளின் சுளிப்புகள் ஓட்டங்கள் மோதல்கள் யாவும் அறிவுத் தளத்தில் இயங்கும் வேகத்தின் அழுத்தத்தையும் பதிவு செய்யும் முறைமை சாதாரணமாக உள்ளது. இதுவே இவரது படைப்பாக்கத் திறனின் புதிய அனுபவத் திரளாகவும் மேற்கிளம்புகிறது. பல்வேறு சிக்கல்களும் குழப்பங்களும் நிரம்பிய அகபுற உலகின் ஒத்திசைவு நெருக்கம் கதைகளாக விரியும்போது எத்தகைய மனித பிம்பங்கள் நம்முடன் உரையாடும் என்பதற்கு இவரது படைப்புக் களம் தெளிவான சான்று.
 
'பொதுவாக மனித சுபாவம் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யாது; அது பன்முக ரீதியில் குழப்பமாக, ஆனால் அதற்கான ஓர் ஒழுங்கமைவில் ஊடாட்டம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.
 
இவரது படைப்புலகத்துடன் உறவு கொள்ளும் எந்தவொரு தேர்ந்த வாசகரும் அவரவர் வாசிப்பு அனுபவம் சார்ந்து படைப்பனுபவங்களை வாசக அனுபவங்களாக தள மாற்றம் செய்ய முடியும். இது பொதுவான வாசகத்தளம் சார் பண்பாகப் பரிணமித்தாலும் சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற தலைமுறைப் படைப்பாளிகளது படைப்பனுபவம் வாசகர்களிடையே ஏற்படுத்தும் எதார்த்தமும் அனுபவமும் மிக வித்தியாசமாகவே உள்ளன. தமிழ்ச் சிறுகதை மரபில் இதற்கான அடையாளங்கள் நிறைய உள்ளன. இந்த மரபின் தொடர்ச்சியில் தான் சுரேஷ்குமார இந்திரஜித் எனும் படைப்பாளியின் சிறுகதைகள் அமைந்துள்ளன. அந்தப் படைப்பனுபவத்துடன் நாம் உறவும் ஊடாட்டமும் கொள்வது நமக்குள்ளே மறைந்து திரியும் மனிதர்களைக் கண்டுபிடிக்க உதவும்.
 
80க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 60க்கும் மேற்பட்ட குறுங்கதைகள், மற்றும் இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார்.
 
மிகக் குறைந்த சொற்களில் தன்னுடைய புனைவை வடிவமைத்துக் கொள்வது அவருடைய எழுத்து முறை.
 
மிகக் குறைந்த சொற்களில் தன்னுடைய புனைவை வடிவமைத்துக் கொள்வது என்பதுதான் அது. மற்ற எந்த வகையான பொதுமைப்படுத்தல்களையும் இவருடைய படைப்புலகில் நாம் காண முடியாது. எல்லா வகையான கதை சொல்லும் முறைகளையும் தன்னுடைய சிறுகதைகளில் வெற்றிகரமாக அவர் கையாண்டிருக்கிறார். இது அவருடைய தனித்துவங்களில் ஒன்று.
 
தன்னுடைய சிறுகதைக்கான களங்களாக ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது பெரும்பாலும் காமமும் ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களும் தான். இதற்கு அப்பால் ஒரு உயர்ந்த கலைஞனின் நுண்ணுணர்வு காரணமாக நிராகரிக்கவே முடியாத சமூக அவலங்களும் அவருடைய சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன.
எத்தனை பேசினாலும் எழுதினாலும் தீராத ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள் இவருடைய கதைகளின் பேசுபொருளாக உள்ளன.
 
 
----/-
 
இந்த கொரோனா காலத்தில் சுமார் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார்.வாழ்நாளில் தன்னால் நாவல் எழுத முடியுமா எனத் தெரியவில்லை என்றவர் ‘கடலும் வண்ணத்துபூச்சிகளும்’ எனும் முதல்  நாவலை கடந்த ஆண்டு வெளியிட்டார்.  அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ எனும் ஒரு நாவலையும் எழுதி முடித்து விட்டார். அதுவும் விரைவில் வெளியாகவுள்ளது. புதிய நாவல் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
 
சுரேஷ்குமார இந்திரஜித்தின் அசலான பங்களிப்பு சிறுகதைகளில் தான். சிறுகதைகளின் எல்லையை முன்னகர்த்தியவர் என தயங்காமல் சொல்ல முடியும். நில காட்சியோ  புற விவரணையோ அற்ற கதை கூறும் முறை. மரபின் பின்புலம் மிக அரிதாகவே  வெளிப்படும். அவருடைய தத்துவ தளம். இருத்தலியல் சார்ந்தது.   கவித்துவமான படிமங்களும் மிக அரிதாகவே கையாளப்படும். உணர்ச்சிகரமான பயன்பாடுகள் நாடகீய உச்சங்கள் போன்றச்வையும் அவருடைய கதைகளில் அரிதுதான். கட்டுப்பாட்டை மீறி ஒரு சொல்லையும் கதையில் விழ விடமாட்டார் என்பதால் பித்து கணம் எதுவும் கதைகளில் வெளிப்படுவதில்லை.
எல்லைகள் என உள்ளவையே அவருடைய தனித்தன்மையாகவும் திகழ்கின்றன. கதைகூறு முறையில் இயல்பான இடைவெளிகளின் வழியாக அகத்தின் உள்ளே புதைந்திருப்பதை அவருடைய கதைகள் சுட்டிக்காட்டுபவை.  என சொல்லலாம். வெளிப்படுத்தப்படுபவை உள்ளே எப்படி தலைகீழாக உள்ளன என்பதை அவருடைய கதைகள் மீள மீள சொல்கின்றன. அவருடைய சிறுகதைகளில் மிக நீளமான கதை என்பது பன்னிரண்டு பக்கங்கள் நீளும்.
சொற் சிக்கனம் என்பது அவருடைய கதைகளின் மிக முக்கியமான இயல்பு. அபாரமான அங்கதம் வெளிப்படும் சில கதைகள் உண்டு. சுரேஷ்குமார இந்திரஜித் பலவிதமான வடிவங்களில் கதைகளை கூறியுள்ளார். அவ்வடிவங்கள் மிக வெற்றிகரமாக கதையின் வாசிப்பை மேம்படுத்த பங்களிப்பு ஆற்றியுள்ளன.
இந்த கொரோனா சூழலில் விழா நடத்த முடியாது என்பதே குறை. சிரஸ்தார் சுரேஷ்குமாருக்கு, சுரேஷ்குமார இந்திரஜித் எனும் தமிழ் எழுத்தாளராக வேறொரு இடமும் மதிப்பும் உண்டு என உணர்த்தியிருக்க முடியும்.
 
தமிழில் உருவாகியுள்ள எந்த படைப்பாளி வரிசையிலும் அவரை அத்தனை சுலபமாக பொருத்த முடியாது.
 
அவருடைய கதைகள் நுட்பங்கள் புதைந்த ‘புதையல் வேட்டை’ விளையாட்டை ஒத்தது. வாசகன் சிறு சிறு குறிப்புகளைக் கொண்டு கதையை தன் மனதில் பின்னியபடி வருகிறான். நுட்பங்களின் சங்கிலிப் பிணைப்பு இதில் முக்கியம். நுட்பங்களைத் தவறவிட தவறவிட கதை அவனுக்கு பிடிபடாமல் ஆகிறது. இறுதியில் அவன் இலக்கை அடையும்போது அது கதாசிரியர் உத்தேசித்த இலக்காக இருக்க வேண்டியதில்லை. இன்னும் சொல்வதானால் எழுத்தாளன் எந்த இலக்கையுமே உத்தேசிக்கவில்லை என்பதே உண்மை. ஜெயமோகன் ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும், என்று கூறினார். அவருடைய கதைகளின் ஒன்றிற்கு தலைப்பே அவருடைய கதைகளின் இந்தத் தன்மையை சுட்டுகிறது. ‘ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள் ஒரு காலத்திற்குப் பல சரித்திரங்கள்’ (மாபெரும் சூதாட்டம் தொகுப்பு). தமிழில் வாசக சுதந்திரத்தை அதிகமாக அளிக்கும் எழுத்துக்கள் என்று சுரேஷ்குமார இந்திரஜித் மற்றும் யுவன் சந்திரசேகரின் எழுத்துக்களை கூறலாம். நாம் எண்ணுவது போல் வாழ்க்கையோ காலமோ நேர்க்கோட்டில் இல்லை. எத்தனையோ தளங்கள் உள்ளன. இணை வரலாறுகள் இயங்குகின்றன. ’மறைந்து திரியும் கிழவன்’, சமூரியா கதைகள், போன்றவை அப்படி அவர் உருவாக்க முனையும் இணை வரலாறின் பிரதிகள். நியதிகள் அற்ற அல்லது நியதிகள் பிடிபடாத இந்தச் சிடுக்குகள் மிகுந்த பேரியக்கத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தை காணும்போது ஏற்படும் பிரமிப்பை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் வாசகருக்கு கடத்த முயல்கின்றன.
 
 
------
இளம் வயதில் ‘சந்திப்பு’ என்ற பெயரில் 1986இல் கூட்டங்கள்ச நடத்தியிருக்கிறார்.
முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும் இரண்டாவது கூட்டத்தில் நானும் பேசினோம். இருபது, இருபத்தைந்து பேர் கலந்துகொள்கிற கூட்டமாக இருந்தது. நடைபெற்ற கூட்டங்களிலேயே சு.ரா. கலந஢துகொண்ட கூட்டம்தான் பெரியது. மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நடந்தது. செல்வராஜ் எங்களோடு இருந்தார். Sponsorship வாங்கித் தந்தார். சைக்ளோஸ்டைல் முறையில் கூட்டங்களைப் பற்றியும் பேசுவது குறித்தும் தெரியப்படுத்தினோம்.


சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகளின் எல்லையை முன்னகர்த்தியவர். இவருடையது நிலக் காட்சியோ,புற விவரணையோ அற்ற கதை கூறும் முறை. மரபின் பின்புலம் மிக அரிதாகவே வெளிப்படும். அவருடைய தத்துவ தளம், இருத்தலியல்சார்ந்தது. கவித்துவமான படிமங்களும் மிக அரிதாகவே கையாளப்படும். உணர்ச்சிகரமான பயன்பாடுகள், நாடகீயஉச்சங்கள் போன்றவையும் அவருடைய கதைகளில் அரிதுதான். எல்லைகள்எனஉள்ளவையே அவருடைய தனித்தன்மையாகவும் திகழ்கின்றன. கதைகூறு முறையில் இயல்பான இடைவெளிகளின் வழியாக அகத்தின் உள்ளே புதைந்திருப்பதை அவருடைய கதைகள் சுட்டிக்காட்டுபவை.


இசையைப் பொறுத்தவரை எனக்கு மணி அய்யர் மிக முக்கியமானவர். காபி நாராயணி, கௌட மாலா, உமாபரணம் ஆகிய மூன்றில் அமைந்த அவரது பாடல்கள் மிக அருமையானவை.
மிகக் குறைந்த சொற்களில் தன்னுடைய புனைவை வடிவமைத்துக் கொள்வது அவருடைய எழுத்து முறை. மற்ற எந்த வகையான பொதுமைப்படுத்தல்களையும் இவருடைய படைப்புலகில் காணமுடியாது. எல்லா வகையான கதை சொல்லும் முறைகளையும் தன்னுடைய சிறுகதைகளில் வெற்றிகரமாக அவர் கையாண்டிருக்கிறார். இது அவருடைய தனித்துவங்களில் ஒன்று. தமிழில் உருவாகியுள்ள எந்த படைப்பாளி வரிசையிலும் அவரை அத்தனை சுலபமாக பொருத்த முடியாது. அபாரமானஅங்கதம் வெளிப்படும் சிலகதைகள் உண்டு.
 
ஏறத்தாழ மூன்றரை அல்லது நான்கு பதிற்றாண்டுகளாக சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் எழுதி வருகிறார். அவ்வப்போது மதிப்புரைகளும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். எழுதுபவர்.


[[ஜெயமோகன்]] 'இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது 'சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
== விருது ==
== விருது ==
 
* 2020-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது 
 
* 2023-ம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் விருது 
== இலக்கிய இடம் ==
 
அ.குறைவான சொற்களில் கதைமாந்தர்களின் மனநிலைகள் விளக்கப்படுகின்றன என்பதனால் ஒரு நல்ல வாசிப்புக்கு வாசகர்களின் கற்பனை மிக முக்கியமானதாக அமைந்து விடுகிறது.
 
ஆ.மனித உறவுகளைப் பற்றிய சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் மேலும் சில அவதானிப்புகள் சுவாரசியமானவை.
 
இ. தற்செயல் நிகழ்வுகளின் மர்மங்கள் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுகளில் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.
 
ஈ.சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகின் மிக முக்கியமான அம்சமாக நான் கருதுவது ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறையை குறித்த பதிவுகள்.
 
உ. இறுதியாக சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுகளில் பகடி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
 
கதாபாத்திரங்கள் மற்றும் கதை நிகழும் சூழல்களின் விரிவான சித்தரிப்புகள் மூலம் எழுத்தாளர் தன்னுடைய புனைவுலகை உருவாக்குதல் என்பது கலை. ஆனால் மிகக் குறைவான சொற்களில் சித்தரிப்புகளில் அதை சாதிப்பது என்பது மேலான கலை. சுரேஷ்குமார இந்திரஜித் இரண்டாவது வகையில் மிக முக்கியமான எழுத்தாளர்.
 
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
====== நாவல்கள்  ======
* கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் (காலச்சுவடு பதிப்பகம், 2019)
* அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (காலச்சுவடு பதிப்பகம், 2020)
* ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி (காலச்சுவடு பதிப்பகம், 2021)
* நான் லலிதா பேசுகிறேன் (காலச்சுவடு பதிப்பகம், 2022)


=== நாவல்கள்  ===
====== குறு நாவல்கள் ======
 
* எடின்பரோவின் குறிப்புகள் (காலச்சுவடு பதிப்பகம், 2023)
* கடலும் வண்ணத்துப்பூச்சியும்
* அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்
 
=== சிறுகதை தொகுப்புகள் ===
 
* அலையும் சிறகுகள்
* மறைந்து திரியும் கிழவன்
* மாபெரும் சூதாட்டம்
* அவரவர் வழி
* நானும் ஒருவன்
* நடன மங்கை
* நள்ளிரவில் சூரியன்
* பின்நவீனத்துவவாதியின் மனைவி
* பின்னணிப் பாடகர்
 
=== கவிதைத் தொகுப்பு ===
 
=== கட்டுரை ===
 
=== மொழிபெயர்க்கப் படைப்பு ===
 
== உசாத்துணை ==


* [https://www.jeyamohan.in/139381/]
====== சிறுகதை தொகுப்புகள் ======
* அலையும் சிறகுகள் (இலக்கியத் தேடல் அமைப்பு, 1982)
* மறைந்து திரியும் கிழவன் (அன்னம் பதிப்பகம், 1993)
* மாபெரும் சூதாட்டம் (காலச்சுவடு பதிப்பகம், 2005)
* அவரவர் வழி (உயிர்மை பதிப்பகம், 2009)
* நானும் ஒருவன் (காலச்சுவடு பதிப்பகம், 2012)
* நடன மங்கை (உயிர்மை பதிப்பகம், 2013)
* நள்ளிரவில் சூரியன் (நற்றினை பதிப்பகம், 2014)
* இடப்பக்க மூக்குத்தி (உயிர்மை பதிப்பகம், 2017)
* பின்நவீனத்துவவாதியின் மனைவி (காலச்சுவடு பதிப்பகம், 2018)
* ஒரு பெண் ஒரு சிறுவன் - இரண்டு கதைகள் (அமேஸான் கிண்டில்)
* பெரியம்மை (காலச்சுவடு பதிப்பகம், 2023)
* சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் 1981 - 2020 ( காலச்சுவடு பதிப்பகம் 2022 )


* [https://www.jeyamohan.in/137569/]
====== குறுங்கதைகள் ======
* பின்னணிப் பாடகர் (எழுத்துப் பிரசுரம், 2020)
* தாரணியின் சொற்கள் (காலச்சுவடு பதிப்பகம், 2022)


*[https://padhaakai.com/2018/04/21/intro/]
====== நேர்காணல் ======
* சுரேஷ்குமார இந்திரஜித் நேர்காணல்கள் (அழிசி பதிப்பகம், 2022)


{{ being created}}
== இணைப்புகள் ==
* [https://www.jeyamohan.in/137520/ விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு]
* [https://www.jeyamohan.in/139381/ சுரேஷ்குமார இந்திரஜித்- கலையாகும் தருணங்கள்]
* [https://www.jeyamohan.in/137569/ சுரேஷ்குமார இந்திரஜித், விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்]
* [https://padhaakai.com/2018/04/21/intro/ சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை]
* [https://www.jeyamohan.in/142127/ சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 23:52, 24 February 2024

To read the article in English: Sureshkumara Indrajith. ‎

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித் (அக்டோபர் 5, 1953) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். குறைத்துச் சொல்லும் அழகியலை தமிழ் இலக்கியத்தில் முன்வைத்த எழுத்தாளர்களில் முதன்மையானவர்.

பிறப்பு, கல்வி

சுரேஷ்குமார இந்திரஜித்

இயற்பெயர் என்.ஆர். சுரேஷ்குமார். சுரேஷ்குமார இந்திரஜித் ராமேஸ்வரத்தில் ராமநாதன், காந்திமதி இணையருக்கு அக்டோபர் 5, 1953-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். மதுரை நாகமலையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். மதுரை மஜுரா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சுரேஷ்குமார இந்திரஜித் 1983-ல் மல்லிகாவை திருமணம் செய்து கொண்டார். அபிநயா, ஶ்ரீஜனனி என இரு மகள்கள். தமிழக அரசில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கர்நாடக சங்கீத ரசனையுள்ளவர்.

இலக்கிய வாழ்க்கை

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் நாவல்

சுரேஷ்குமார இந்திரஜித் 1979 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் தொகுப்பு 'அலையும் சிறகுகள்’ 1982-ல் வெளியானது.எழுத்தாளர் ஜெயகாந்தன் கதைகள் வழி புனைவுலகம் அறிமுகம் பெற்றார். 1986-ல்'சந்திப்பு’ என்ற பெயரில் மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும், இரண்டாவது கூட்டத்தில் இவரும் பேசியுள்ளனர். சு.ரா. கலந்து கொண்ட பெரிய கூட்டமும் இதன் மூலம் நடைபெற்றது. 90 - க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நான்கு நாவல்களையும் இரு குறுநாவல்களையும் நூறுக்கும் மேற்பட்ட குறுங்கதைகளையும் எழுதியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார். தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார்.

இலக்கிய இடம்

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் நாவல்

சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரு நாவல்களில் வரலாற்றுக் குறிப்புகளும் புனைவும் இணைந்துள்ளன. பிற இரண்டு நாவல்களும் குறுநாவல்களும் குறுங்கதைகளும் புதுமையான களத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளன.

சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகளின் எல்லையை முன்னகர்த்தியவர். இவருடையது நிலக் காட்சியோ,புற விவரணையோ அற்ற கதை கூறும் முறை. மரபின் பின்புலம் மிக அரிதாகவே வெளிப்படும். அவருடைய தத்துவ தளம், இருத்தலியல்சார்ந்தது. கவித்துவமான படிமங்களும் மிக அரிதாகவே கையாளப்படும். உணர்ச்சிகரமான பயன்பாடுகள், நாடகீயஉச்சங்கள் போன்றவையும் அவருடைய கதைகளில் அரிதுதான். எல்லைகள்எனஉள்ளவையே அவருடைய தனித்தன்மையாகவும் திகழ்கின்றன. கதைகூறு முறையில் இயல்பான இடைவெளிகளின் வழியாக அகத்தின் உள்ளே புதைந்திருப்பதை அவருடைய கதைகள் சுட்டிக்காட்டுபவை.

மிகக் குறைந்த சொற்களில் தன்னுடைய புனைவை வடிவமைத்துக் கொள்வது அவருடைய எழுத்து முறை. மற்ற எந்த வகையான பொதுமைப்படுத்தல்களையும் இவருடைய படைப்புலகில் காணமுடியாது. எல்லா வகையான கதை சொல்லும் முறைகளையும் தன்னுடைய சிறுகதைகளில் வெற்றிகரமாக அவர் கையாண்டிருக்கிறார். இது அவருடைய தனித்துவங்களில் ஒன்று. தமிழில் உருவாகியுள்ள எந்த படைப்பாளி வரிசையிலும் அவரை அத்தனை சுலபமாக பொருத்த முடியாது. அபாரமானஅங்கதம் வெளிப்படும் சிலகதைகள் உண்டு.

ஜெயமோகன் 'இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது 'சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

விருது

  • 2020-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது
  • 2023-ம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் விருது

நூல் பட்டியல்

நாவல்கள்
  • கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் (காலச்சுவடு பதிப்பகம், 2019)
  • அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (காலச்சுவடு பதிப்பகம், 2020)
  • ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி (காலச்சுவடு பதிப்பகம், 2021)
  • நான் லலிதா பேசுகிறேன் (காலச்சுவடு பதிப்பகம், 2022)
குறு நாவல்கள்
  • எடின்பரோவின் குறிப்புகள் (காலச்சுவடு பதிப்பகம், 2023)
சிறுகதை தொகுப்புகள்
  • அலையும் சிறகுகள் (இலக்கியத் தேடல் அமைப்பு, 1982)
  • மறைந்து திரியும் கிழவன் (அன்னம் பதிப்பகம், 1993)
  • மாபெரும் சூதாட்டம் (காலச்சுவடு பதிப்பகம், 2005)
  • அவரவர் வழி (உயிர்மை பதிப்பகம், 2009)
  • நானும் ஒருவன் (காலச்சுவடு பதிப்பகம், 2012)
  • நடன மங்கை (உயிர்மை பதிப்பகம், 2013)
  • நள்ளிரவில் சூரியன் (நற்றினை பதிப்பகம், 2014)
  • இடப்பக்க மூக்குத்தி (உயிர்மை பதிப்பகம், 2017)
  • பின்நவீனத்துவவாதியின் மனைவி (காலச்சுவடு பதிப்பகம், 2018)
  • ஒரு பெண் ஒரு சிறுவன் - இரண்டு கதைகள் (அமேஸான் கிண்டில்)
  • பெரியம்மை (காலச்சுவடு பதிப்பகம், 2023)
  • சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் 1981 - 2020 ( காலச்சுவடு பதிப்பகம் 2022 )
குறுங்கதைகள்
  • பின்னணிப் பாடகர் (எழுத்துப் பிரசுரம், 2020)
  • தாரணியின் சொற்கள் (காலச்சுவடு பதிப்பகம், 2022)
நேர்காணல்
  • சுரேஷ்குமார இந்திரஜித் நேர்காணல்கள் (அழிசி பதிப்பகம், 2022)

இணைப்புகள்


✅Finalised Page