under review

ரிச்சர்ட் நீல்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 9: Line 9:
== மதப்பணிகள் ==
== மதப்பணிகள் ==
லண்டன்மிஷன் சொசைட்டி (London Missionary Society)-யில் இணைந்த நீல் ஏப்ரல் 20, 1816-ல் சென்னைக்கு வந்தார். அங்கே கோடையால் உடல்நலிந்தாலும் தமிழை கற்றுக்கொண்டார். செப்டெம்பர் 1818-ல் அவர் நாகர்கோயிலுக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்புக்குச் சென்று மீண்டார். நவம்பர் 30, 1819-ல் இங்கிலாந்து திரும்பினார்.  

அக்டோபர் 18, 1820-ல் நீல் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்றார். சைபீரியாவுக்கு கிறிஸ்தவ மதப்பரப்புநராகச் செல்ல எண்ணியிருந்தார். ஆனால் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நண்பர்களால் அதிலிருந்து தடுக்கப்பட்டு அங்கேயே தங்கியிருந்தார். ரஷ்ய அரசகுடும்பத்தின் நெருக்கத்தை அடைந்தார். அங்கே பல முக்கியமான ஆளுமைகளை மிஷன் பணிகளை நோக்கி ஈர்த்தார். ரெவெரெண்ட் [[சார்ல்ஸ் மீட்]] நாகர்கோயிலில் மிஷனரி பணிகளை தொடங்க உதவிசெய்தார். நாகர்கோயில் கற்கோயில் எனப்படும் ஆலயத்தை கட்ட அடிக்கல் நாட்டினார்.இன்று அது சி.எஸ்.ஐ.ஹோம்சர்ச் என அழைக்கப்படுகிறது. நாகர்கோயிலை காலரா தாக்கியபோது நீல் துணிவுடன் செய்த சேவைகளுக்காக நினைவுகூரப்படுகிறார். [[சாமுவேல் மெட்டீர்]] ரிச்சர்ட் நீலை நினைவுகூர்ந்து எழுதியுள்ளார்.

[[File:ஹோம்சர்ச்.jpg|thumb|ஹோம்சர்ச் நாகர்கோயில்]]
[[File:ஹோம்சர்ச்.jpg|thumb|ஹோம்சர்ச் நாகர்கோயில்]]
Line 34: Line 35:
*[https://tamilnadu-favtourism.blogspot.com/2017/09/csi-home-church-nagercoil-kanyakumari.html Tamilnadu Tourism: CSI Home Church, Nagercoil, Kanyakumari]
*[https://tamilnadu-favtourism.blogspot.com/2017/09/csi-home-church-nagercoil-kanyakumari.html Tamilnadu Tourism: CSI Home Church, Nagercoil, Kanyakumari]
*[https://archive.org/details/thegospelinsout00mateuoft/page/n25/mode/2up சாமுவேல் மெட்டீர். தென்னிந்தியாவில் கிறிஸ்தவ மதப்பரப்பு முயற்சிகள்]
*[https://archive.org/details/thegospelinsout00mateuoft/page/n25/mode/2up சாமுவேல் மெட்டீர். தென்னிந்தியாவில் கிறிஸ்தவ மதப்பரப்பு முயற்சிகள்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:37:19 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கிறிஸ்தவ மதபோதகர்கள்]]
[[Category:கிறிஸ்தவ மதபோதகர்கள்]]

Latest revision as of 16:22, 13 June 2024

ரிச்சர்ட் நீல்
நீல்

ரிச்சர்ட் நீல் (Richard Knill) (ஏப்ரல் 14, 1787 - ஜனவரி 28, 1857) லண்டன் மிஷன் மதப்பரப்புநர். நாகர்கோயிலில் குறுகிய காலம் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

ரிச்சர்ட் நீல் இங்கிலாந்தில் பிரான்டன் (Braunton, Devon) என்னும் ஊரில் ஏப்ரல் 14,1787-ல் மரவேலைக்காரராகிய ரிச்சர்ட் நீல் சீனியருக்கும் மேரி டக்கருக்கும் பிறந்தார். 1804-ல் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்தார். ஆக்ஸ்மினிஸ்டர் மேற்கு அகாதெமி (Western Academy at Axminister)யில் இறைக்கல்விக்காக 1812-ல் சேர்ந்தார். டாக்டர் அலக்ஸாண்டர் வாவ் (Dr. Alexander Waugh) அவர்களால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ மதப்பரப்பாளர் ஆனார்

தனிவாழ்க்கை

நீல் ஜனவரி 9, 1823-ல் சாரா நாட்மான் (Sarah Notman) னை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள்.

நீல் நாகர்கோயிலில் மதப்பிரச்சாரம் செய்கிறார். மரவெட்டு ஓவியம்

மதப்பணிகள்

லண்டன்மிஷன் சொசைட்டி (London Missionary Society)-யில் இணைந்த நீல் ஏப்ரல் 20, 1816-ல் சென்னைக்கு வந்தார். அங்கே கோடையால் உடல்நலிந்தாலும் தமிழை கற்றுக்கொண்டார். செப்டெம்பர் 1818-ல் அவர் நாகர்கோயிலுக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்புக்குச் சென்று மீண்டார். நவம்பர் 30, 1819-ல் இங்கிலாந்து திரும்பினார்.

அக்டோபர் 18, 1820-ல் நீல் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்றார். சைபீரியாவுக்கு கிறிஸ்தவ மதப்பரப்புநராகச் செல்ல எண்ணியிருந்தார். ஆனால் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நண்பர்களால் அதிலிருந்து தடுக்கப்பட்டு அங்கேயே தங்கியிருந்தார். ரஷ்ய அரசகுடும்பத்தின் நெருக்கத்தை அடைந்தார். அங்கே பல முக்கியமான ஆளுமைகளை மிஷன் பணிகளை நோக்கி ஈர்த்தார். ரெவெரெண்ட் சார்ல்ஸ் மீட் நாகர்கோயிலில் மிஷனரி பணிகளை தொடங்க உதவிசெய்தார். நாகர்கோயில் கற்கோயில் எனப்படும் ஆலயத்தை கட்ட அடிக்கல் நாட்டினார்.இன்று அது சி.எஸ்.ஐ.ஹோம்சர்ச் என அழைக்கப்படுகிறது. நாகர்கோயிலை காலரா தாக்கியபோது நீல் துணிவுடன் செய்த சேவைகளுக்காக நினைவுகூரப்படுகிறார். சாமுவேல் மெட்டீர் ரிச்சர்ட் நீலை நினைவுகூர்ந்து எழுதியுள்ளார்.

ஹோம்சர்ச் நாகர்கோயில்

மறைவு

நீல் ஜனவரி 28, 1857-ல் இங்கிலாந்து குயீன்ஸ் ஸ்ட்ரீட் செஸ்டரில் மறைந்தார்.

பங்களிப்பு

நீல் நாகர்கோயில் நகர் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்களில் ஒருவர். சீர்திருத்த கிறிஸ்தவம் நாகர்கோயிலில் வேரூன்ற காரணமானவர். மதப்பணியுடன் கல்விப்பணியும் மருத்துவப்பணியும் செய்தார்

நூல்கள்

ஆங்கிலம்
  • The Farmer and his Family, 1814
  • Memoir of the Life and Character of Walter Venning, 1822
  • The Influence of Pious Women in Promoting a Revival of Religion, 1830
  • Some Account of John Knill, 1830
  • The Happy Death-bed, 1833
  • A Traveller arrived at the End of the Journey, 1836
  • A Dialogue between a Romish Priest and R. Knill, Missionary, 1841
  • A Scotchman Abroad, 1841
தமிழாக்கங்கள்
  • தேசாந்திர முடிவு
  • அன்பின் மாதிரிகை
  • கிருபைப் பிரசாதம்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:19 IST