under review

ப்ரியம்வதா ராம்குமார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Added First published date)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Priyamvada|Title of target article=Priyamvada}}
{{Read English|Name of target article=Priyamvada Ramkumar|Title of target article=Priyamvada Ramkumar}}
[[File:33A8B8D3-8966-4437-A719-120DE9AA5617.jpg|thumb|ப்ரியம்வதா]]

Line 9: Line 9:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ப்ரியம்வதாவின் முதல் படைப்பு ”மீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி” என்ற விமர்சனக்கட்டுரை ஜெயமோகன் தளத்தில் வெளியானது. 2021-ல் South Asia Speaks Fellowship Programme என்ற இலக்கியப் பட்டறையில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'அறம்' தொகுதியை மொழியாக்கம் செய்தார். ப்ரியம்வதாவின் முதல் படைப்பு ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத்தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Stories of the True' 2022-ல் ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியீடாக வெளியானது. அ.முத்துலிங்கம் எழுதிய 'என்னை திருப்பி எடு' என்ற சிறுகதை 'Take me back' என்ற பெயரில் Spillswords இணைய இதழில் பிரசுரமானது.  

2022-ல் American Literary Translators Association (ALTA) நிறுவனம் நடத்தும் இளம் மொழியாக்கக்காரர்களுக்கான சர்வதேச பட்டறையில் (ALTA Emerging Translator's Mentorship Program) பங்கெடுக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'வெள்ளை யானை' நாவலை மொழியாக்கம் செய்கிறார். இந்த மொழியாக்கத்திற்காக PEN/Heim Translation Fund Grant என்ற சர்வதேச நிதியுதவி பெற்றார். மொழியாக்கங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இலக்கிய ஆதர்சங்களாக [[ஜெயமோகன்]], [[அசோகமித்திரன்]], டால்ஸ்டாய் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

== விருதுகள்==
== விருதுகள்==
Line 25: Line 26:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|17-Jan-2023, 11:15:58 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கட்டுரையாளர்கள்]]
[[Category:கட்டுரையாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]

Latest revision as of 16:35, 13 June 2024

To read the article in English: Priyamvada Ramkumar. ‎

ப்ரியம்வதா

ப்ரியம்வதா (பிறப்பு: அக்டோபர் 14, 1982) மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு புனைவுகளை மொழியாக்கம் செய்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

ப்ரியம்வதா சென்னையில் ராம்குமார், சுஜாதா இணையருக்கு அக்டோபர் 14, 1982-ல் பிறந்தார். சென்னை மைலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் இளங்கலைப்பட்டம் பெற்றார். ஜாம்ஷட்பூர் XLRI மையத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ப்ரியம்வதா விஜய் ரங்கனாதனை ஜூலை 12, 2020-ல் மணந்தார். ப்ரியம்வதா தனியார் சமபங்கு நிதித்துறையில் பணியாற்றி வருகிறார். வணிக ரீதியில் மட்டும் அல்லாமல் சமூக அளவில் நலன் பயக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதோடு அந்நிறுவனங்களின் இயக்குநர் குழுமத்திலும் பங்காற்றுகிறார். கணவர் விஜய் ரங்கனாதன் முதலீட்டு வங்கியில் பணிபுரிந்தவர், தற்போது திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ப்ரியம்வதாவின் முதல் படைப்பு ”மீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி” என்ற விமர்சனக்கட்டுரை ஜெயமோகன் தளத்தில் வெளியானது. 2021-ல் South Asia Speaks Fellowship Programme என்ற இலக்கியப் பட்டறையில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'அறம்' தொகுதியை மொழியாக்கம் செய்தார். ப்ரியம்வதாவின் முதல் படைப்பு ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத்தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Stories of the True' 2022-ல் ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியீடாக வெளியானது. அ.முத்துலிங்கம் எழுதிய 'என்னை திருப்பி எடு' என்ற சிறுகதை 'Take me back' என்ற பெயரில் Spillswords இணைய இதழில் பிரசுரமானது.

2022-ல் American Literary Translators Association (ALTA) நிறுவனம் நடத்தும் இளம் மொழியாக்கக்காரர்களுக்கான சர்வதேச பட்டறையில் (ALTA Emerging Translator's Mentorship Program) பங்கெடுக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'வெள்ளை யானை' நாவலை மொழியாக்கம் செய்கிறார். இந்த மொழியாக்கத்திற்காக PEN/Heim Translation Fund Grant என்ற சர்வதேச நிதியுதவி பெற்றார். மொழியாக்கங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், அசோகமித்திரன், டால்ஸ்டாய் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • விஜயா வாசகர் வட்டம் வழங்கும் 'அ.முத்துலிங்கம் விருது', 2023. Stories of the True மொழிபெயர்ப்பு நூலுக்காக[1]

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • Stories of the True (2022)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jan-2023, 11:15:58 IST