under review

எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Tag: Reverted
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 6: Line 6:
== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
டி.பி. பொன்னுசாமி பிள்ளை முறையான மேடை நாடகப்பயிற்சி பயின்றவர். சிட்டி அமெச்சூர்ஸ் என்ற நாடகக் கலைக்குழுவை திருச்சியில் உருவாக்க முன்னின்றவர். தமிழிசையில் ஆர்வம் கொண்டிருந்தார். நடிகர், கதாசிரியர், நாடக அமைப்பாளராக முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டார்.  

பி. ஜெகன்னாதய்யரின் கம்பெனி நின்றுபோன பிறகு, அதிலிருந்த பல நடிக நண்பர்களை ஒன்றுசேர்த்து, எதார்த்தம் டி.பி. பொன்னுசாமி பிள்ளையும் மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து, ஸ்ரீமங்களபாலகான சபா என்ற நாடக நிறுவனத்தைத் தொடங்கினர். அதன்வழி ராமாயணம், கிருஷ்ணலீலா போன்ற பல பழைய நாடகங்களுடன், திருச்சி சிட்டி அமைச்சூர் சபையின் இழந்த காதல், விமலா அல்லது விதவையின் கண்ணீர் போன்ற துன்பியல் சீர்திருத்த நாடகங்களையும் அரங்கேற்றினர். இந்நாடகங்கள் மூலம் உருவானவர் சிவாஜி கணேசன். இவருடைய குழுவில் [[பொன்னுசாமிப் படையாச்சி]] பணியாற்றினார்.  

பின்னர் ஸ்ரீமங்களபாலகான சபையின் உரிமையைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாங்கி, என்.எஸ்.கே. நாடகசபை என்ற பெயரில், சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் கே.ஆர். ராமசாமி, வி.கே. ராமசாமி, எஸ்.வி சகஸ்ரநாமம் ஆகியோர்களைக் கொண்டு மனோரமா, பூம்பாவை ஆகிய நாடகங்களை நடத்தினார்.  

===== மாணவர்கள் =====
===== மாணவர்கள் =====
Line 41: Line 43:
*[https://youtu.be/Bez4uFoeW4k யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை ஒரு நகைச்சுவைக் காட்சி]
*[https://youtu.be/Bez4uFoeW4k யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை ஒரு நகைச்சுவைக் காட்சி]
*[https://antrukandamugam.wordpress.com/2014/12/06/yathartham-ponnusami-pillai/ அன்றுகண்ட முகம் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை]
*[https://antrukandamugam.wordpress.com/2014/12/06/yathartham-ponnusami-pillai/ அன்றுகண்ட முகம் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:39:02 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 16:51, 13 June 2024

எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை

எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை (யதார்த்தம் பொன்னுச்சாமிப் பிள்ளை) நாடக முன்னோடிகளில் ஒருவர். நடிகர், கதாசிரியர், நாடக அமைப்பாளர். திருச்சியில் நாடக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.

வாழ்க்கைக்குறிப்பு

டி.பி. பொன்னுசாமி பிள்ளை திருச்சியில் உறையூரில் பிறந்தார். டி.பி. பொன்னுசாமி பிள்ளைக்கு, 'எதார்த்தம்' பொன்னுசாமி என்று பெயர் சூட்டியவர் 'கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணன்.

நீதிபதி படம்,1955-4

கலை வாழ்க்கை

டி.பி. பொன்னுசாமி பிள்ளை முறையான மேடை நாடகப்பயிற்சி பயின்றவர். சிட்டி அமெச்சூர்ஸ் என்ற நாடகக் கலைக்குழுவை திருச்சியில் உருவாக்க முன்னின்றவர். தமிழிசையில் ஆர்வம் கொண்டிருந்தார். நடிகர், கதாசிரியர், நாடக அமைப்பாளராக முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டார்.

பி. ஜெகன்னாதய்யரின் கம்பெனி நின்றுபோன பிறகு, அதிலிருந்த பல நடிக நண்பர்களை ஒன்றுசேர்த்து, எதார்த்தம் டி.பி. பொன்னுசாமி பிள்ளையும் மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து, ஸ்ரீமங்களபாலகான சபா என்ற நாடக நிறுவனத்தைத் தொடங்கினர். அதன்வழி ராமாயணம், கிருஷ்ணலீலா போன்ற பல பழைய நாடகங்களுடன், திருச்சி சிட்டி அமைச்சூர் சபையின் இழந்த காதல், விமலா அல்லது விதவையின் கண்ணீர் போன்ற துன்பியல் சீர்திருத்த நாடகங்களையும் அரங்கேற்றினர். இந்நாடகங்கள் மூலம் உருவானவர் சிவாஜி கணேசன். இவருடைய குழுவில் பொன்னுசாமிப் படையாச்சி பணியாற்றினார்.

பின்னர் ஸ்ரீமங்களபாலகான சபையின் உரிமையைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாங்கி, என்.எஸ்.கே. நாடகசபை என்ற பெயரில், சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் கே.ஆர். ராமசாமி, வி.கே. ராமசாமி, எஸ்.வி சகஸ்ரநாமம் ஆகியோர்களைக் கொண்டு மனோரமா, பூம்பாவை ஆகிய நாடகங்களை நடத்தினார்.

மாணவர்கள்
  • சிவாஜி கணேசன்
  • எம்.ஆர். ராதா
  • டணால் தங்கவேலு
  • வி.கே. ராமசாமி
  • எம்.என். ராஜம்
  • 'காக்கா’ ராதாகிருஷ்ணன்
  • டி.எஸ்.பாலையா
அரங்கேற்றிய நாடகங்கள்
  • ராமாயணம்
  • கிருஷ்ணலீலா
  • இழந்த காதல்
  • விமலா அல்லது விதவையின் கண்ணீர்

திரைப்படம்

எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நடித்த பெரும்பாலான படங்களில் அவருடன் நடித்தவர் எதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை. பிற்காலத்தில் சிவாஜி நடித்த தூக்குத் தூக்கி படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனின் தந்தையாகவும் பத்மினி, ராகினி ஆகியோரின் வாத்தியாராகவும் நடித்தார். வி.கே.ராமசாமி, ஏ.பி.நாகராஜன் இருவரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான வெற்றிப் படமான 'நல்ல இடத்து சம்பந்தம்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 1942-ல் ’மனோன்மணி’ படத்தில் எதார்த்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது என்.எஸ். கிருஷ்ணன் இவருக்கு எதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை என்று பெயரிட்டார். இப்படத்தில், மதுரத்திற்கு தந்தையாக நடித்திருந்தார் பொன்னுசாமி பிள்ளை.

நடித்த திரைப்படங்கள்
  • ஆசை மகன் (1953)
  • பொன்னி (1953)
  • நீதிபதி (1955)
  • மனோன்மணி (1942)
  • தூக்கு தூக்கி (1954)
  • நல்ல இடத்து சம்பந்தம்

விருது

  • 1966-ல் எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகத் தயாரிப்பாளருக்காக கலைமாமணி விருது பெற்றார்.
  • நவம்பர் 4, 1956-ல் பொன்னுசாமி பிள்ளையின் 40 ஆண்டுக்கால நாடகப் பணியைப் பாராட்டி விழா எடுத்து நாடகம் நடத்தி நிதியளித்து நன்றி செலுத்தினார் எம்.ஆர்.ராதா.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:02 IST