under review

அஷ்டலிங்கங்கள், திருவண்ணாமலை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Tag: Reverted
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 6: Line 6:
[[File:Nnadhi Dharshan From Niruthi Lingam.jpg|thumb|நந்தி தரிசனம்: நிருதி லிங்கம் அருகிலிருந்து...]]
[[File:Nnadhi Dharshan From Niruthi Lingam.jpg|thumb|நந்தி தரிசனம்: நிருதி லிங்கம் அருகிலிருந்து...]]
அஷ்டலிங்கங்கள்: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ‘அஷ்ட லிங்கங்கள்’ அமைந்துள்ளன. இவை எட்டுவகையான சிவலிங்கங்கள். இவற்றை வழிபடுவது திருவண்ணாமலை கிரிவலத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது.
அஷ்டலிங்கங்கள்: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ‘அஷ்ட லிங்கங்கள்’ அமைந்துள்ளன. இவை எட்டுவகையான சிவலிங்கங்கள். இவற்றை வழிபடுவது திருவண்ணாமலை கிரிவலத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது.
பார்க்க [[அஷ்ட லிங்க வழிபாடு]]
பார்க்க [[அஷ்ட லிங்க வழிபாடு]]
==அஷ்ட லிங்கங்கள்==
==அஷ்ட லிங்கங்கள்==
திருவண்ணாமலையில், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டு மக்கள் கிரிவலத்தைத் தொடர்கின்றனர்.
திருவண்ணாமலையில், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டு மக்கள் கிரிவலத்தைத் தொடர்கின்றனர்.
திருவண்ணாமலையைக் காக்கும் எண்திசைக்கு உரிய தெய்வங்களாக ‘அஷ்ட லிங்கங்கள்’ கருதப்படுகின்றன. பௌர்ணமி நாள் அன்று அஷ்ட லிங்கங்களை வழிபடுவது வழக்கம்
திருவண்ணாமலையைக் காக்கும் எண்திசைக்கு உரிய தெய்வங்களாக ‘அஷ்ட லிங்கங்கள்’ கருதப்படுகின்றன. பௌர்ணமி நாள் அன்று அஷ்ட லிங்கங்களை வழிபடுவது வழக்கம்
==அஷ்டலிங்க வழிபாடு==
==அஷ்டலிங்க வழிபாடு==
Line 25: Line 27:
=====நிருதி லிங்கம் (தென்மேற்கு)=====
=====நிருதி லிங்கம் (தென்மேற்கு)=====
தென்மேற்கு திசைக்கு அதிபதி நிருதிக்குரிய லிங்கம். இதன் அருகே ’சனி தீர்த்தம்’ உள்ளது.
தென்மேற்கு திசைக்கு அதிபதி நிருதிக்குரிய லிங்கம். இதன் அருகே ’சனி தீர்த்தம்’ உள்ளது.
நிருதி லிங்கத்தின் அருகே, பார்வதி தேவிக்கு, சிவபெருமான், ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தார். இங்கிருந்து மலையைக் காணும்போது ’நந்தி’யின் (ரிஷபம்) முகம் தெரியும் என்று கூறப்படுகிறது
நிருதி லிங்கத்தின் அருகே, பார்வதி தேவிக்கு, சிவபெருமான், ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தார். இங்கிருந்து மலையைக் காணும்போது ’நந்தி’யின் (ரிஷபம்) முகம் தெரியும் என்று கூறப்படுகிறது
====== தொன்மம் ======
====== தொன்மம் ======
Line 103: Line 106:
*[https://kramans.blogspot.com/2015/06/blog-post.html அஷ்ட லிங்கங்கள்]
*[https://kramans.blogspot.com/2015/06/blog-post.html அஷ்ட லிங்கங்கள்]
*[https://brseetha.blogspot.com/2017/12/blog-post_7.html அஷ்ட லிங்க தரிசனம்]
*[https://brseetha.blogspot.com/2017/12/blog-post_7.html அஷ்ட லிங்க தரிசனம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|11-Dec-2022, 09:12:17 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 12:05, 13 June 2024

திருவண்ணாமலை
அஷ்டலிங்க அமைவிடம்
அஷ்ட லிங்கங்கள்
அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன்
திருவண்ணாமலை - புனிதக் கோபுரங்கள்
நந்தி தரிசனம்: நிருதி லிங்கம் அருகிலிருந்து...

அஷ்டலிங்கங்கள்: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ‘அஷ்ட லிங்கங்கள்’ அமைந்துள்ளன. இவை எட்டுவகையான சிவலிங்கங்கள். இவற்றை வழிபடுவது திருவண்ணாமலை கிரிவலத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது.

பார்க்க அஷ்ட லிங்க வழிபாடு

அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலையில், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டு மக்கள் கிரிவலத்தைத் தொடர்கின்றனர்.

திருவண்ணாமலையைக் காக்கும் எண்திசைக்கு உரிய தெய்வங்களாக ‘அஷ்ட லிங்கங்கள்’ கருதப்படுகின்றன. பௌர்ணமி நாள் அன்று அஷ்ட லிங்கங்களை வழிபடுவது வழக்கம்

அஷ்டலிங்க வழிபாடு

இந்திர லிங்கம் (கிழக்கு)

திருவண்ணாமலை தேரடி சாலையில் ராஜகோபுரத்திற்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ள லிங்கம் இந்திர லிங்கம். அஷ்ட திக்குப் பாலகர்களில் இந்திரன் கிழக்குத் திசையின் அதிபதி. ஐராவதம் என்னும் யானையை உடையவன்.

தொன்மம்

தேவர்களுக்குத் தலைவனான இந்திரன், தனது இந்திர பதவி நிலைத்திருக்க வேண்டி, தவம் செய்து அண்ணாமலையாரை வணங்கி வழிபட்டான். அவ்வாறு அவன் வழிபட்ட லிங்கம், அவன் பெயரில் ‘இந்திர லிங்கம்’ என அழைக்கப்படுகிறது.

அக்னி லிங்கம் (தென் கிழக்கு)

அண்ணாமலையாரை, அக்னிக் கடவுள் வழிபட்ட லிங்கமே அக்னி லிங்கம். இந்த லிங்கத்தின் அருகில் அக்னி தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தம், அண்ணாமலையில் உள்ள 360 புனிதத் தீர்த்தங்களுள் ஒன்று.

தொன்மம்

பஞ்சபூதத் தலங்களில் நெருப்பைக் குறிக்கும் இத்தல ஈசனை, வேத வழிபாட்டில் மிக முக்கிய இடம் பிடித்த வேள்விக் கடவுளான அக்னி, வழிபட்டு புனிதமடைந்தான்.

ஸ்ரீ எமலிங்கம் (தெற்கு)

எமன் பூஜித்த லிங்கம் இது எனப்படுகிறது

தொன்மம்

எமனின் கட்டளைகளை நிறைவேற்றும் கிங்கரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டுச் செல்கின்றனர் என்ற நம்பிக்கை உள்ளது.

நிருதி லிங்கம் (தென்மேற்கு)

தென்மேற்கு திசைக்கு அதிபதி நிருதிக்குரிய லிங்கம். இதன் அருகே ’சனி தீர்த்தம்’ உள்ளது.

நிருதி லிங்கத்தின் அருகே, பார்வதி தேவிக்கு, சிவபெருமான், ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தார். இங்கிருந்து மலையைக் காணும்போது ’நந்தி’யின் (ரிஷபம்) முகம் தெரியும் என்று கூறப்படுகிறது

தொன்மம்

நிருதி வழிபட்ட லிங்கம் இது என நம்பப்படுகிறது

ஸ்ரீ வருண லிங்கம் (மேற்கு திசை)

வருணன் வழிபட்ட லிங்கம் வருண லிங்கம். இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது.

ஸ்ரீ வாயு லிங்கம் (வட மேற்குத்திசை)

காற்றுக் கடவுள் வாயுவுக்குரிய லிங்கம். இதன் அருகே ‘வாயு தீர்த்தம்’ உள்ளது.

குபேர லிங்கம் (வடக்கு)

குபேரன் வழிபட்ட லிங்கம்

தொன்மம்

சாபத்தால் தன் செல்வங்களை இழந்த குபேரன், இங்கு இறைவனை பூஜித்து, இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றார்.

ஈசான்ய லிங்கம் (வட கிழக்கு)

ஈசான்ய திசைக்கு அதிபதி ஈசானன் வழிபட்ட லிங்கம். ஈசான்ய லிங்கம், கிரிவலப்பாதையின் முடிவில் இடுகாட்டை ஒட்டி அமைந்துள்ளது. இதன் எதிரே ஈசான்ய மடமும், அம்மணி அம்மாளின் சமாதி ஆலயமும் அமைந்துள்ளன. அஷ்ட லிங்க வழிபாட்டில் இதுவே இறுதி லிங்க வழிபாடாகும்.

தொன்மம்

பார்வதி தேவி கிரிவலம் வருகையில், வடகிழக்குப் பகுதியான ஈசான்ய திசைக்கு வந்தபோது, சிவபெருமான், ரிஷப வாகனத்தில் அன்னைக்குக் காட்சி அளித்தார். அன்னைக்கு இடப்பாகம் தந்து அரவணைத்தார்.

பிறலிங்கங்கள்

கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்க வரிசையில் சேராத சூரிய லிங்கம், சந்திர லிங்கம் போன்றவையும் உள்ளன. சூரிய தேவனும், சந்திர தேவனும் அண்ணாமலைக்கு வந்து தவம் செய்து வழிபட்ட லிங்கங்களாக இவை கருதப்படுகின்றன.

அஷ்டலிங்க தரிசனப் பலன்கள்

லிங்கத்தின் பெயர் திசை பிரதிஷ்டை செய்தவர் சம்பந்தப்பட்ட நவக்கிரகம் வழிபடுதலால் கிடைக்கும் பலன்கள்
இந்திர லிங்கம் கிழக்கு இந்திரன் சுக்கிரன் நீண்டஆயுள், புகழ், செல்வ வளம்
அக்னி லிங்கம் தென் கிழக்கு அக்னி சூரியன் நோய்களிலிருந்து நிவாரணம்
எம லிங்கம் தெற்கு எமன் செவ்வாய் நீண்ட ஆயுள்
நிருதி லிங்கம் தென்மேற்கு நிருதி ராகு உடல் நலம், செல்வம், பிள்ளைப்பேறு
வருண லிங்கம் மேற்கு வருணன் சனி நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள்)
வாயு லிங்கம் வடமேற்கு வாயு கேது நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக இதயம், நுரையீரல் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள்)
குபேரலிங்கம் வடக்கு குபேரன் சுக்கிரன் செல்வம் மற்றும் உன்னதமான வாழ்க்கை
ஈசான்ய லிங்கம் வடகிழக்கு ஈசான்யன் புதன் மன அமைதி, ஞானம்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2022, 09:12:17 IST