under review

தானவன் என்ற போலிஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected Category:நாவல்கள் to Category:நாவல்)
 
(3 intermediate revisions by the same user not shown)
Line 8: Line 8:
== முகப்புச் செய்யுள்கள் ==
== முகப்புச் செய்யுள்கள் ==
இந்நாவலில் பழைய காவியங்களைப்போல அர்ப்பணச் செய்யுள் ஒன்றும் காப்புச்செய்யுள் ஒன்றும் நூலின் முகப்பில் அளிக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் பிரம்மஸ்ரீ வே. சாமிநாதய்யரால் இயற்றப்பட்டவை எனக் குறிக்கப்பட்டுள்ளது. அச்செய்யுட்கள்: <blockquote>அயன்படைத்த புவியுடையூர் காப்பாளர் மதிநுட்பம் அடையும்வண்ணம்

நயன்படைத்த கதை மிகுத்த நலம்படைத்த ஒரு நூலை நவிலுகென்று
நயன்படைத்த கதை மிகுத்த நலம்படைத்த ஒரு நூலை நவிலுகென்று

Line 13: Line 14:

பயன்படைத்த இந்நூலை அக்கனவான் பேருக்கர்ப்பணம் செய்தேனால்
பயன்படைத்த இந்நூலை அக்கனவான் பேருக்கர்ப்பணம் செய்தேனால்
மன்னிய வரசி செங்கோல் வாழ்க நல்லோர்கள் வாழ்க
மன்னிய வரசி செங்கோல் வாழ்க நல்லோர்கள் வாழ்க

Line 27: Line 29:
* சம்மனைக் கிழித்த முத்தண்ணாவின் கேஸ்
* சம்மனைக் கிழித்த முத்தண்ணாவின் கேஸ்
* நீலியின் கதை
* நீலியின் கதை

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:35:07 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவல்கள்]]
[[Category:நாவல்]]

Latest revision as of 13:49, 17 November 2024

To read the article in English: Thanavan Entra Police Nibunan Kandupiditha Arpudha Kuttrangal. ‎

தானவன் என்ற போலீஸ் நிபுணன்

தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள் (ஐந்து கதைகள்) (1894) தமிழின் முதல் துப்பறியும் கதைகளின் தொகுதி. பண்டித நடேச சாஸ்திரி எழுதியது. ஐந்து கதைகளுக்கும் பொதுவான சரடு இருப்பதனால் நாவல் என்றும் கொள்ளப்படுகிறது. தமிழ் நவீன இலக்கியத்தின் முதல் துப்பறியும் நிபுணர் தானவன்.

எழுத்து, பிரசுரம்

பண்டித நடேச சாஸ்திரியின் நண்பரான A. Porteous என்னும் ஆங்கில நண்பர் தமிழில் துப்பறியும் கதைகள் உண்டா என்று கேட்டார். அதனால் தூண்டுதல் கொண்ட நடேச சாஸ்திரி தானவன் என்னும் துப்பறியும் நிபுணரை நாயகனாக்கி தானவன் துப்பறிந்த வழக்குகளை கதைத்தொகையாக வெளியிட்டார். Joyce Emmerson Preston Muddock (1842-1934) எழுதிய Dick Donovan என்ற பிரிட்டிஷ் துப்பறியும் நிபுணர் இக்கதாபாத்திரத்தின் முன்மாதிரி. தமிழின் முதல் துப்பறியும் கதாபாத்திரம் தானவன்தான். "தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அத்புத குற்றங்கள் என்று பெயரிட்டிருக்கும் இச்சிறு புத்தகத்தை நமது நாட்டு போலீஸ் டிபார்ட்மெண்டுக்குத் தலைவரான ஸ்ரீ கர்னல் போரிஸியஸ் துரை அவர்கள் வேண்டுகோளின்படி நமது தமிழ் தேசிய போலிஸ் உத்தியோகஸ்தர் அனைவருக்கும் பயன்படும் பொருட்டு நாம் எழுதி அச்சிடத் துணிந்தோம்." என்று முன்னுரையில் நடேச சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

தானவன் தமிழில் முதல் துப்பறியும் நிபுணர். இந்நூலே தமிழில் எழுதப்பட்ட முதல் துப்பறியும் கதைகளின் தொகுதி. இது பின்னாளில் வந்த எழுத்தாளர்கள் மர்மநாவல்களையும் துப்பறியும் நாவல்களையும் எழுத பெரும் தூண்டுதலை அளித்தது.

முகப்புச் செய்யுள்கள்

இந்நாவலில் பழைய காவியங்களைப்போல அர்ப்பணச் செய்யுள் ஒன்றும் காப்புச்செய்யுள் ஒன்றும் நூலின் முகப்பில் அளிக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் பிரம்மஸ்ரீ வே. சாமிநாதய்யரால் இயற்றப்பட்டவை எனக் குறிக்கப்பட்டுள்ளது. அச்செய்யுட்கள்:

அயன்படைத்த புவியுடையூர் காப்பாளர் மதிநுட்பம் அடையும்வண்ணம்

நயன்படைத்த கதை மிகுத்த நலம்படைத்த ஒரு நூலை நவிலுகென்று

வியன்படைத்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் போர்சியஸவர்கள் விளம்ப யான்செய்

பயன்படைத்த இந்நூலை அக்கனவான் பேருக்கர்ப்பணம் செய்தேனால்

மன்னிய வரசி செங்கோல் வாழ்க நல்லோர்கள் வாழ்க

துன்னிய புல்லோர் மாய்க தோன்றுமிந்நூலை கற்று

பின்னிய திருட்டை கண்டுபிடித்தென்றும் ஊர்க்காப்பாளர்

உன்னிய பகையை வெல்க ஒரு தனிக் கடவுள் காக்க

உள்ளடக்கம்

இந்நூலில் உள்ள ஐந்து துப்பறியும் கதைகள்

  • சாமர்த்தியத் திருட்டு
  • விசித்திரக்கொலை
  • விஷக்கொலை
  • சம்மனைக் கிழித்த முத்தண்ணாவின் கேஸ்
  • நீலியின் கதை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:07 IST