under review

மணவை முஸ்தபா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected category text)
(Added First published date)
 
(4 intermediate revisions by 3 users not shown)
Line 2: Line 2:
[[File:Mnavai Musrafa.jpg|thumb|மணவை முஸ்தபா]]

மணவை முஸ்தபா (ஜூன் 15, 1935-பிப்ரவரி 6, 2017) தமிழக எழுத்தாளர். இதழாளர், அறிவியல் தமிழ் ஆய்வாளர். ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். ‘பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம்’ நூல் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.  அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினியியல் உள்ளிட்ட பல  துறை சார்ந்த அகராதிகளை, கலைக் களஞ்சியங்களை உருவாக்கினார். தனது அறிவியல் தமிழ்ப் பணிக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
மணவை முஸ்தபா, திண்டுக்கல் மாவட்டம் பிலாத்து என்ற ஊரில், ஜூன் 15, 1935 அன்று, மீராசா ராவுத்தர்- சையது பீவி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை மணப்பாறை உயர்நிலைப் பள்ளியில் படித்தார். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் புதுமுக வகுப்பு படித்தார். அதே கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
மணவை முஸ்தபா, தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றினார். இதழாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் செயல்பட்டார். மனைவி, சௌதா. மகன்கள்: அண்ணல் முகமது, செம்மல் சையத் மீரான் சாகிப். மகள்: தேன்மொழி அஸ்மத்.

[[File:Manavai mustafa Books new 1.jpg|thumb|மணவை முஸ்தபா நூல்]]

[[File:Islamiya kalai kalanjiam.jpg|thumb|இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்]]

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
மணவை முஸ்தபா, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினியியல் சார்ந்து பல நூல்களை எழுதினார். மணப்பாறை என்பதன் சுருக்கமான ‘மணவை’ என்பதைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு எழுதினார். மொழிபெயர்ப்பாளராகவும், தொகுப்பாசிரியராகவும் செயல்பட்டார். அகராதிகளை, கலைக்களஞ்சியங்களை உருவாக்கினார். கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி, செம்மொழி களஞ்சிய பேரகராதி, செம்மொழி உள்ளும் புறமும், மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி எனப் பல நூல்களை எழுதினார்.

இஸ்லாமிய இலக்கியத்திற்கும் மணவை முஸ்தபா முக்கியப் பங்காற்றினார், ‘தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்', ‘பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்’, ‘இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?’, ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ போன்ற தலைப்புகளில் பல நூல்களை எழுதினார். மணவை முஸ்தபா எழுதிய ‘இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்' நூல் அவரது முக்கிய சாதனையாக மதிப்பிடப்படுகிறது. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தைத் தமிழில் தந்தார். வானொலிக்காகவும் தொலைக்காட்சிக்காகவும் பல நாடகங்களை எழுதினார்.

===== சிறார் இலக்கியம் =====
===== சிறார் இலக்கியம் =====
மணவை முஸ்தபா, சிறுவர்களுக்காக நிறைய எழுதினார். நிறைய தொகுப்பு நூல்களை உருவாக்கினார். ’சிறுவர் கலைக்களஞ்சியம்’ நூல் அவற்றில் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

== அமைப்புச் செயல்பாடுகள் ==
== அமைப்புச் செயல்பாடுகள் ==
மணவை முஸ்தபா, தமிழ் அறிவியல் கருத்தரங்கை 1986-ல் சென்னையில் நடத்தினார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளை’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அறிவியல் தமிழ் பணியாற்றினார். ‘மீரா அறக்கட்டளை’ என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பல இலக்கியக் கருத்தரங்குகளை முன்னெடுத்தார். தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப் பணிக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார். அறிவியல் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, அறிவியல் தமிழ் கருத்தரங்குகளை நடத்தினார். கூகுளில் பயன்படுத்தப்படும் கணினித் தமிழ் சொற்களை உருவாக்கினார். சுமார் எட்டு லட்சம் கலைச்சொற்களை உருவாக்கினார். தமிழை செம்மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பின்னணியில் இருந்து உழைத்தார். எந்தெந்த வகையில் தமிழ் செம்மொழித் தகுதி பெறத் தகுதியானது என்பதை ஆய்வுத் தரவுகள் மூலம் ஆவணப்படுத்தினார். அறிவியல் தமிழ் மெய்நிகர் இருக்கையை <ref>[https://scientifictamil.org/ அறிவியல் தமிழ் மெய்நிகர் இருக்கை]</ref> ஏற்படுத்தினார்.  

== இதழியல் ==
== இதழியல் ==
மணவை முஸ்தபா, ‘புத்தக நண்பன்’ இதழின் ஆசிரியராகப் பணியற்றினார். ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் 35 ஆண்டுகள் செயல்பட்டார்.  

== பதிப்புலகம் ==
== பதிப்புலகம் ==
மணவை முஸ்தபா, ‘மீரா பப்ளிகேஷன்ஸ்’ மற்றும் ‘மணவை பப்ளிகேஷன்ஸ்’ என்ற பெயரில் பதிப்பகங்களைத் தொடங்கி அதன் மூலம் தன் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். ’தென்மொழிகள் புத்தக நிறுவனம்' அமைப்பின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார்.

Line 30: Line 23:
[[File:Maruthuva kalai chol kalanjiam.jpg|thumb|மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்]]

[[File:Manavai Mustafa img.jpg|thumb|மணவை முஸ்தபா]]

== விருதுகள் ==
== விருதுகள் ==
* தமிழ்நாடு அரசின் [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழ் வளர்ச்சித் துறை]] சிறந்த நூலுக்கான முதல் பரிசு - மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் நூல் (1996).

* தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நூலுக்கான இரண்டாம் பரிசு - இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் நூல் (1996).

Line 75: Line 66:
* தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் வழங்கிய தமிழ்த் தூதுவர் பட்டம்

* புகழ் பதிந்த தமிழர் பட்டம்
* புகழ் பதிந்த தமிழர் பட்டம்
== பொறுப்புகள் ==
== பொறுப்புகள் ==
* தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத் தலைவர்

* செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன உறுப்பினர்  

Line 89: Line 78:
* தமிழ் எழுத்துச் சீர்திருத்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்

* அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர்.

== நாட்டுடைமை ==
== நாட்டுடைமை ==
மணவை முஸ்தபாவின் நூல்கள் அவர் வாழும் காலத்திலேயே தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

[[File:Manavai Mustafa Life Sketch Book.jpg|thumb|அறிவியல் தமிழின் விடிவெள்ளி- மணவை முஸ்தபா]]

== ஆவணம் ==
== ஆவணம் ==
மணவை முஸ்தபாவின் நூல்கள் தமிழ் இணையக் கல்விக் கழக இணைய நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. மணவை முஸ்தபாவைப் பற்றி ‘அறிவியல் தமிழின் விடிவெள்ளி’ என்ற நூலை ஆர். ராமசாமி தொகுத்துள்ளார். மீரா பப்ளிகேஷன் இந்த நூலை வெளியிட்டது. இந்நூலில் டாக்டர் பூவண்ணன், டாக்டர் வா.சா. பானு நூர்மைதீன், டாக்டர் இராதா செல்லப்பன், அமுதன், அமுதன் அடிகள், இரா. நடராசன் உள்ளிட்ட பலர் மணவை முஸ்தபாவின் பணிகளை ஆய்வு செய்து மதிப்பிட்டுள்ளனர்.  

மணவை முஸ்தபாவின் வாழ்க்கை செய்திப் படமாகப் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

== மறைவு ==
== மறைவு ==
மணவை முஸ்தபா பிப்ரவரி 06, 2017 அன்று தனது 82-ம் வயதில் காலமானார்.

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
மணவை முஸ்தபா, தமிழின் அறிவியல் சிறப்பை, செழுமையை வெளிக்கொணர்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். கலைக்களஞ்சிய உருவாக்கம், அகராதித் தயாரிப்பு எனத் தமிழின் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்தார். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை தமிழுக்குக் கொண்டு வந்தது மணவை முஸ்தபாவின் முதன்மையான சாதனை. மணவை முஸ்தபா உருவாக்கி அளித்த ‘கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி' கணினித் தமிழுக்கு மிக முக்கியமான கொடை என்று ஆய்வாளர்களால்  கூறப்படுகிறது. அரசு செய்ய வேண்டிய வேலைகளை தனியொரு மனிதனாகச் செய்தவராக ஆய்வாளர்களால் மதிக்கப்படுகிறார் மணவை முஸ்தபா. அகராதிகளும், கலைக்களஞ்சியமும் உருவாக்கிய தனி நபர்களில் முதன்மையானவராக மணவை முஸ்தபா மதிப்பிடப்படுகிறார்.

[[File:Manavai Mustafa Books 2.jpg|thumb|மணவை முஸ்தபா நூல்கள்]]

== நூல்கள் ==
== நூல்கள் ==
* அண்ணலாரும் அறிவியலும்
* அண்ணலாரும் அறிவியலும்
* அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்
* அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்
Line 136: Line 119:
* பிறசமயக் கண்ணோட்டம்
* பிறசமயக் கண்ணோட்டம்
* விழா தந்த விழிப்பு<br />
* விழா தந்த விழிப்பு<br />
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [http://www.keetru.com/index.php/2010-08-20-14-34-38/samuga-vilipunaruvu-may06/10558-2010-08-22-02-51-56 மணவை முஸ்தபா நேர்காணல் : கீற்று இணையதளம்]  

* [https://www.facebook.com/aloor.shanavas/videos/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%812004-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-/2209398275951450/ மணவை முஸ்தபாவின் வாழ்க்கை வரலாறு]  

Line 146: Line 127:
* [https://www.vikatan.com/news/miscellaneous/80031-manavai-mustafas-legacy-will-live-forever மணவை முஸ்தபா: விகடன் கட்டுரை]  

* [https://www.commonfolks.in/books/manavai-mustafa மணவை முஸ்தபா நூல்கள்: காமன் ஃபோல்க்ஸ் தளம்]  

== அடிக்குறிப்புகள் ==
<references />
{{Finalised}}
{{Fndt|31-Aug-2023, 20:39:28 IST}}

== அடிக்குறிப்புகள் ==
<references  />

{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:49, 13 June 2024

மணவை முஸ்தபா (படம் நன்றி: தினமலர்)
மணவை முஸ்தபா

மணவை முஸ்தபா (ஜூன் 15, 1935-பிப்ரவரி 6, 2017) தமிழக எழுத்தாளர். இதழாளர், அறிவியல் தமிழ் ஆய்வாளர். ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். ‘பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம்’ நூல் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினியியல் உள்ளிட்ட பல துறை சார்ந்த அகராதிகளை, கலைக் களஞ்சியங்களை உருவாக்கினார். தனது அறிவியல் தமிழ்ப் பணிக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மணவை முஸ்தபா, திண்டுக்கல் மாவட்டம் பிலாத்து என்ற ஊரில், ஜூன் 15, 1935 அன்று, மீராசா ராவுத்தர்- சையது பீவி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை மணப்பாறை உயர்நிலைப் பள்ளியில் படித்தார். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் புதுமுக வகுப்பு படித்தார். அதே கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மணவை முஸ்தபா, தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றினார். இதழாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் செயல்பட்டார். மனைவி, சௌதா. மகன்கள்: அண்ணல் முகமது, செம்மல் சையத் மீரான் சாகிப். மகள்: தேன்மொழி அஸ்மத்.

மணவை முஸ்தபா நூல்
இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்

இலக்கிய வாழ்க்கை

மணவை முஸ்தபா, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினியியல் சார்ந்து பல நூல்களை எழுதினார். மணப்பாறை என்பதன் சுருக்கமான ‘மணவை’ என்பதைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு எழுதினார். மொழிபெயர்ப்பாளராகவும், தொகுப்பாசிரியராகவும் செயல்பட்டார். அகராதிகளை, கலைக்களஞ்சியங்களை உருவாக்கினார். கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி, செம்மொழி களஞ்சிய பேரகராதி, செம்மொழி உள்ளும் புறமும், மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி எனப் பல நூல்களை எழுதினார்.

இஸ்லாமிய இலக்கியத்திற்கும் மணவை முஸ்தபா முக்கியப் பங்காற்றினார், ‘தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்', ‘பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்’, ‘இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?’, ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ போன்ற தலைப்புகளில் பல நூல்களை எழுதினார். மணவை முஸ்தபா எழுதிய ‘இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்' நூல் அவரது முக்கிய சாதனையாக மதிப்பிடப்படுகிறது. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தைத் தமிழில் தந்தார். வானொலிக்காகவும் தொலைக்காட்சிக்காகவும் பல நாடகங்களை எழுதினார்.

சிறார் இலக்கியம்

மணவை முஸ்தபா, சிறுவர்களுக்காக நிறைய எழுதினார். நிறைய தொகுப்பு நூல்களை உருவாக்கினார். ’சிறுவர் கலைக்களஞ்சியம்’ நூல் அவற்றில் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

அமைப்புச் செயல்பாடுகள்

மணவை முஸ்தபா, தமிழ் அறிவியல் கருத்தரங்கை 1986-ல் சென்னையில் நடத்தினார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளை’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அறிவியல் தமிழ் பணியாற்றினார். ‘மீரா அறக்கட்டளை’ என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பல இலக்கியக் கருத்தரங்குகளை முன்னெடுத்தார். தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப் பணிக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார். அறிவியல் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, அறிவியல் தமிழ் கருத்தரங்குகளை நடத்தினார். கூகுளில் பயன்படுத்தப்படும் கணினித் தமிழ் சொற்களை உருவாக்கினார். சுமார் எட்டு லட்சம் கலைச்சொற்களை உருவாக்கினார். தமிழை செம்மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பின்னணியில் இருந்து உழைத்தார். எந்தெந்த வகையில் தமிழ் செம்மொழித் தகுதி பெறத் தகுதியானது என்பதை ஆய்வுத் தரவுகள் மூலம் ஆவணப்படுத்தினார். அறிவியல் தமிழ் மெய்நிகர் இருக்கையை [1] ஏற்படுத்தினார்.

இதழியல்

மணவை முஸ்தபா, ‘புத்தக நண்பன்’ இதழின் ஆசிரியராகப் பணியற்றினார். ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் 35 ஆண்டுகள் செயல்பட்டார்.

பதிப்புலகம்

மணவை முஸ்தபா, ‘மீரா பப்ளிகேஷன்ஸ்’ மற்றும் ‘மணவை பப்ளிகேஷன்ஸ்’ என்ற பெயரில் பதிப்பகங்களைத் தொடங்கி அதன் மூலம் தன் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். ’தென்மொழிகள் புத்தக நிறுவனம்' அமைப்பின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார்.

மணவை முஸ்தபா புத்தகங்கள்
மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்
மணவை முஸ்தபா

விருதுகள்

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நூலுக்கான முதல் பரிசு - மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் நூல் (1996).
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நூலுக்கான இரண்டாம் பரிசு - இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் நூல் (1996).
  • அனந்தாச்சாரி ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா வழங்கிய முதல் பரிசு - அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல்.
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பரிசு - கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல்.
  • அறிவியல் தமிழ்த் தந்தை விருது
  • அறிவியல் கலைச் சொல் தந்தை விருது
  • அறிவியல் தமிழ் கலைசொல் வேந்தர் விருது
  • அறிவியல் செல்வம் விருது
  • அறிவியல் களஞ்சியம் விருது
  • அறிவியல் தமிழேறு விருது
  • அறிவியல் தமிழ்ச் சிற்பி விருது
  • அறிவியல் தமிழ் வித்தகர் விருது
  • தமிழக அரசின் திரு.வி.க. விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • சிகாகோ தமிழ் மன்றம் வழங்கிய அறிவியல் தமிழருவி விருது
  • முத்தமிழ் வித்தகர் விருது
  • மாமனிதர் விருது
  • சீறாச் செல்வர் விருது
  • பாலம் கலியாணசுந்தரனாரின் அன்புப் பாலம் அமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது
  • ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை வழங்கிய பாரதி விருது
  • உலகத் தமிழர் பேரமைப்பு வழங்கிய உலகப் பெருந்தமிழர் விருது
  • தமிழ் வாகைச் செம்மல் விருது
  • பண்பாட்டு காப்பாளர் விருது
  • இளையான்குடி டாக்டர் ஜாஹீர் உசேன் கல்லூரி அறிவியல் மன்றம் வழங்கிய வளர் தமிழ்ச் செம்மல் விருது
  • கரந்தை தமிழ்ச்சங்கம் வழங்கிய உமா மகேசுவரனார் விருது
  • கணினி கலைச் சொல் வேந்தர் விருது
  • ராஜா சர் முத்தையா செட்டியார் விருது
  • ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டு சிறப்பு விருது
  • முகம் இதழ் வழங்கிய சாதனையாளர் விருது
  • தமிழேந்தி விருது
  • காஞ்சி காமகோடி பீடம் வழங்கிய சேவா ரத்னா விருது
  • செம்மொழிச் செம்மல் விருது
  • செம்மொழிக் காவலர் விருது
  • இயல் செல்வம் விருது
  • சான்றோர் விருது
  • ஆதித்தனார் முத்தமிழ் பேரவை வழங்கிய ஆதித்தனார் விருது
  • எம்ஜி.ஆர். விருது
  • முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருது
  • திராவிடர் கழகம் வழங்கிய தந்தை பெரியார் விருது
  • மூப்பனார் விருது
  • தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் வழங்கிய தமிழ்த் தூதுவர் பட்டம்
  • புகழ் பதிந்த தமிழர் பட்டம்

பொறுப்புகள்

  • தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத் தலைவர்
  • செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன உறுப்பினர்
  • தமிழ்மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினர்
  • தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகர்
  • என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா களஞ்சியம் தமிழ்ப் பதிப்பின் பொறுப்பாசிரியர்
  • அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க இணைச் செயலாளர்
  • சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் இணைச் செயலாளர்
  • திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
  • பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு உறுப்பினர்
  • தமிழ் எழுத்துச் சீர்திருத்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்
  • அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர்.

நாட்டுடைமை

மணவை முஸ்தபாவின் நூல்கள் அவர் வாழும் காலத்திலேயே தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

அறிவியல் தமிழின் விடிவெள்ளி- மணவை முஸ்தபா

ஆவணம்

மணவை முஸ்தபாவின் நூல்கள் தமிழ் இணையக் கல்விக் கழக இணைய நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. மணவை முஸ்தபாவைப் பற்றி ‘அறிவியல் தமிழின் விடிவெள்ளி’ என்ற நூலை ஆர். ராமசாமி தொகுத்துள்ளார். மீரா பப்ளிகேஷன் இந்த நூலை வெளியிட்டது. இந்நூலில் டாக்டர் பூவண்ணன், டாக்டர் வா.சா. பானு நூர்மைதீன், டாக்டர் இராதா செல்லப்பன், அமுதன், அமுதன் அடிகள், இரா. நடராசன் உள்ளிட்ட பலர் மணவை முஸ்தபாவின் பணிகளை ஆய்வு செய்து மதிப்பிட்டுள்ளனர்.

மணவை முஸ்தபாவின் வாழ்க்கை செய்திப் படமாகப் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மறைவு

மணவை முஸ்தபா பிப்ரவரி 06, 2017 அன்று தனது 82-ம் வயதில் காலமானார்.

இலக்கிய இடம்

மணவை முஸ்தபா, தமிழின் அறிவியல் சிறப்பை, செழுமையை வெளிக்கொணர்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். கலைக்களஞ்சிய உருவாக்கம், அகராதித் தயாரிப்பு எனத் தமிழின் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்தார். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை தமிழுக்குக் கொண்டு வந்தது மணவை முஸ்தபாவின் முதன்மையான சாதனை. மணவை முஸ்தபா உருவாக்கி அளித்த ‘கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி' கணினித் தமிழுக்கு மிக முக்கியமான கொடை என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. அரசு செய்ய வேண்டிய வேலைகளை தனியொரு மனிதனாகச் செய்தவராக ஆய்வாளர்களால் மதிக்கப்படுகிறார் மணவை முஸ்தபா. அகராதிகளும், கலைக்களஞ்சியமும் உருவாக்கிய தனி நபர்களில் முதன்மையானவராக மணவை முஸ்தபா மதிப்பிடப்படுகிறார்.

மணவை முஸ்தபா நூல்கள்

நூல்கள்

  • அண்ணலாரும் அறிவியலும்
  • அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்
  • அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி
  • இளையர் அறிவியல் களஞ்சியம்
  • தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்
  • கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி
  • கணினி களஞ்சிய அகராதி
  • கணினி களஞ்சியப் பேரகராதி-1
  • கணினி களஞ்சியப் பேரகராதி-2
  • மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்
  • மருத்துவக் களஞ்சியப் பேரகராதி
  • அன்றாட வாழ்வில் அழகுதமிழ்
  • இன்றைய தென்னக இலக்கியப் போக்கு
  • சிறுவர் கலைக் களஞ்சியம்
  • சிறுவர்க்குச் சுதந்திரம்
  • செம்மொழி உள்ளும் புறமும்
  • காலம் தேடும் தமிழ்
  • இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?
  • இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்
  • இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்
  • சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்
  • சிந்தைக்கினிய சீறா
  • தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்
  • தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்
  • திருப்புமுனை
  • தெளிவு பிறந்தது
  • பிறசமயக் கண்ணோட்டம்
  • விழா தந்த விழிப்பு

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Aug-2023, 20:39:28 IST