ஹரிஹரசுதன் தங்கவேலு: Difference between revisions
(Created page with "thumb|<small>ஹரிஹரசுதன் தங்கவேலு (2023)</small> ஹரிஹரசுதன் தங்கவேலு ஓர் எழுத்தாளர், இணைய குற்றங்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப ஆய்வாளர். சர்வதேச மின்னணு வர்த்தக சப...") |
(No difference)
|
Revision as of 04:34, 26 June 2024
ஹரிஹரசுதன் தங்கவேலு ஓர் எழுத்தாளர், இணைய குற்றங்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப ஆய்வாளர்.
சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார்.
பிறப்பு, கல்வி & திருமணம்
ஹரிஹரசுதன் தங்கவேலு கோவையில் பிறந்தார். இணைய குற்றங்கள் தொடர்பான சர்வதேச சான்றிதழ் கொண்ட கல்வி பின்புலத்திலிருந்து வந்தவர் தமிழக அரசின் இணைய குற்றங்கள் வாரியத்தின் நடவடிக்கைகளில் பங்களிக்கிறார். மனைவி ஐஸ்வர்யா நல்லமுத்து. இவர்களுக்கு ஆர்யா என்ற ஒரு மகன் உள்ளார்.
படைப்புலகம்
2018-ம் ஆண்டு மின்னம்பலம் இணைய இதழில், நிழல் உலக தாதா ’தாவூத் இப்ராஹிம்’ பற்றி ஹரிஹரசுதன் எழுதிய கட்டுரைத்தொடர் நல்ல வரவேற்பைப்பெற்றதுடன் கணிசமான இணைய வாசகர்களையும் பெற்றுத்தந்தது.
இஸ்ரோவின் வளர்ச்சியைப்பற்றிய ஹரிஹரசுதனின் ‘எங்கள் கனா’ என்ற கட்டுரைத்தொகுப்பு, 2019 ஆம் ஆண்டு அமேசான் நடத்திய எழுத்தாளர்களுக்கான போட்டியில் அமேசான் கிண்டில் பதிப்பாக வெளியாகி வாசகர்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது[1]. இதன் விளைவாக, 2021-ம் ஆண்டு 'இஸ்ரோவின் கதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் அச்சுப்பிரதியாக வெளியானது[2]. இந்து திசை இதழின் கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் பட்டியலில் இடம் பெற்றது[3].
ஹரிஹரசுதன் A.I (Artificial intelligence) தொழில்நுட்பம் குறித்து 2023-ம் ஆண்டு குமுதம் வார இதழில் முப்பது வாரமாக எழுதிய 'A.I எனும் ஏழாம் அறிவு‘ கட்டுரைத்தொடர் 2024-ம் ஆண்டு புத்தகத்திருவிழாவையொட்டி வெளியாகி வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது[4]. இவர் தற்போது ஆனந்த விகடன் வார இதழில் ‘இருள் வலை வில்லன்கள்’ என்ற பெயரில் தொலைதொடர்பு சாதனங்கள் வழியே நிகழும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுக்கட்டுரைகளைத்தொடர்களை எழுதி வருகிறார்.
படைப்புகள்
கட்டுரைத் தொடர்கள்
- 2018 - தாவூத் இப்ராஹிம் - மின்னம்பலம்
- 2023 - A.I எனும் ஏழாம் அறிவு - குமுதம்
- 2024 - இருள் வலை வில்லன்கள் - ஆனந்த விகடன்
புத்தகங்கள்
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- புதிய கல்வி - அறிவியல் நூல்கள் (இந்து தமிழ் திசை)
- இஸ்ரோவின் கதை - புத்தக விமர்சனம் (காவேரி தொலைக்காட்சி)
- இஸ்ரோவின் கதை - நூல் குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை (காணொளி)
- இஸ்ரோவின் கதை - நூலறிமுகம் (மீடியம்.காம்)
- AI எனும் ஏழாம் அறிவு - நூலறிமுகம் (புக் டே இணையதளம்)
- AI எனும் ஏழாம் அறிவு - நூல் குறித்து பா. ராகவன் (காணொளி)