under review

வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 39: Line 39:
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_97.html தமிழ்ச்சுரங்கம் -குறுந்தொகை 97]
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_97.html தமிழ்ச்சுரங்கம் -குறுந்தொகை 97]
* [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kuruntokai/kuruntokai174.html#.YnYWmdpBzIU வைரத்தமிழ்-குறுந்தொகை 174]
* [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kuruntokai/kuruntokai174.html#.YnYWmdpBzIU வைரத்தமிழ்-குறுந்தொகை 174]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Sep-2023, 04:24:32 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:28, 13 June 2024

வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார் சங்க காலப் புலவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் குறுந்தொகையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

வெண்பூதியார் வெள்ளூர்கிழாரின் மகன். சங்க காலப் புலவர்.

இலக்கிய வாழ்க்கை

வெண்பூதியார் பாடிய மூன்று பாடல்கள் குறுந்தொகையில்(97,174,219) உள்ளன. சிறு சிறு சொற்றொடர்களாக தெளிவான கருத்துக்களை உணர்த்தும் பாடல்களைப் பாடினார். மூன்று பாடல்களும் தலைவியின் கூற்றாக உள்ளன. தலைவியின் தனிமையும், பசலை நோயும் சொல்லப்படும் காதல் பாட்டாக அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • அருள், பொருள் இரண்டனுள் உண்மை அறிவுடையோர் பொருளினும் அருளையே விரும்புவர்.

பாடல் நடை

  • குறுந்தொகை: 97

யானே ஈண்டை யேனே யென்னலனே
ஆனா நோயொடு கான லதே
துறைவன் தம்மூ ரானே
மறையல ராகி மன்றத் ததே.

  • குறுந்தொகை: 174

பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவித் துணைப்புற விரிக்கும்
அத்தம் அரிய என்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆருமில் லதுவே.

  • குறுந்தொகை: 219

பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே
வல்லா கூறியிருக்கு முள்ளிலைத்
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Sep-2023, 04:24:32 IST