under review

பன்மணிமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
Line 26: Line 26:
*[[பாட்டியல்]]
*[[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|16-Nov-2023, 02:32:08 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Latest revision as of 16:08, 13 June 2024

திருவாரூர் பன்மணிமாலை-தமிழ் இணைய கல்விக் கழகம்

பன்மணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையில் ஒருபோகு, அம்மானை, ஊசல் என்னும் மூன்று உறுப்புக்களும் நீங்கலாக பிற இலக்கணங்கள் அனைத்தும் அமையப் பெற்றது பன்மணிமாலை

பன்மணி மாலை பன்னிற் கலம்பகத்
தொருபோ கம்மானை யூச லிவைநீத்
தகவல் வெள்ளை யருங்கலித் துறையென்
றவைசெறி நூறந் தாதியாய் வருமே

என்று தொன்னூல் விளக்கமும்

அவற்றுள்,
ஒருபோகு அம்மானை ஊசல் இன்றி
வருவது பன்மணி மாலை ஆகும்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல் - பாடல் 814

என்று இலக்கண விளக்கமும் பன்மொழிமாலைக்கான இலக்கணத்தை வகுக்கின்றன.

அம்மானை, ஊசல், ஒருபோகு, இல்லாது வெண்பா வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா ஆசிரியத்தாழிசையும் கலிப்பா கலித்தாழிசையும், வஞ்சிப்பா வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடி, முடிவிலே வெள்ளை விருத்தம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சிவிருத்தம் இப்படி நூறு பாடப்படுவது பன்பணிமாலை இதில் புயவகுப்பு, மதங்கம், காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, என்னும் பதினாறு பொருள் கூற்று உறுப்புக்கள் அமைந்திருக்கும்

பன்மணிமாலை நூல்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2023, 02:32:08 IST