under review

வைகானஸம்: Difference between revisions

From Tamil Wiki
Tags: Reverted Visual edit
 
(12 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:Vikanasa Acharyan6.jpg|thumb|விகனஸ முனிவர்]]
[[File:Vikanasa Acharyan6.jpg|thumb|விகனஸ முனிவர்]]
வைகானஸம் (வைகானசம்) வைணவ ஆகமம். வைணவ வழிபாட்டு மரபு பின்னாளில் வைணவ ஆகமத்தொகுப்பாக மாறியது. இது விஷ்ணுவின் உருவங்கள் (வியூக நிலை) மட்டுமே முதன்மையாகக் கொள்ளத்தக்கவை என நம்பும் தூய உருவ வழிபாட்டு மரபாகும். தலைமுறையாகத் தொடரும் ஆசிரியர் மரபைக் கொண்டது. அம்மரபு பின்னாளில் சாதியாக ஆகியது.   
வைகானஸம் (வைகானசம்) வைணவ ஆகமம். வைணவ வழிபாட்டு மரபு பின்னாளில் வைணவ ஆகமத்தொகுப்பாக மாறியது. இது விஷ்ணுவின் உருவங்கள் (வியூக நிலை) மட்டுமே முதன்மையாகக் கொள்ளத்தக்கவை என நம்பும் தூய உருவவழிபாட்டு மரபாகும். தலைமுறையாகத் தொடரும் ஆசிரியர் மரபைக் கொண்டது. அம்மரபு பின்னாளில் சாதியாக ஆகியது.   

== ஆகமம் ==
== ஆகமம் ==
Line 6: Line 6:

== நிறுவனர் ==
== நிறுவனர் ==
வைகானஸ மரபை தொடங்கியவர் [[விகனஸ முனிவர்]] என்று தொன்மம் உள்ளது. விஷ்ணுவே நாராயணர் வடிவில் நைமிஷாரண்யத்திற்கு வந்து தன் வியூக (உருவ) வடிவங்களை காட்டி இந்த வழிபாட்டு முறையை விகனஸ முனிவருக்கு வழங்கினார் என நம்பப்படுகிறது. வைகானச கல்ப சூத்திரம் இந்த மரபின் முதன்மையான நூலாக மதிக்கப்படுகிறது. விகனஸரின் நான்கு மாணவர்கள் அந்நூலை விரித்தெழுதிய வைகானஸ சம்ஹிதைகள் (சாஸ்திரங்கள்) எனப்படும் துணைநூல்களும் வைகானஸ மரபின் வழிகாட்டு நூல்களாகும். (இந்நூல்களுக்கு தொன்மத்திலுள்ள முனிவர்களின் பெயர்களே ஆசிரியர்களாகச் சொல்லப்படுகிறது. அவர்கள்: அத்ரி, காசியபர், பிருகு, மரீசி)  இந்நூல்களின் மொழிநடையைக் கொண்டு இவை பொயு 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் உருவானவை என மதிப்பிடுகிறார்கள். வைகானஸர்கள் கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையை மட்டுமே தங்கள் முதன்மை நூலாகக் கொள்கின்றனர்.  
வைகானஸ மரபை தொடங்கியவர் [[விகனஸ முனிவர்]] என்று தொன்மம் உள்ளது. விஷ்ணுவே நாராயணர் வடிவில் நைமிஷாரண்யத்திற்கு வந்து தன் வியூக (உருவ) வடிவங்களை காட்டி இந்த வழிபாட்டு முறையை விகனஸ முனிவருக்கு வழங்கினார் என நம்பப்படுகிறது. வைகானச கல்ப சூத்திரம் இந்த மரபின் முதன்மையான நூலாக மதிக்கப்படுகிறது. விகனசரின் நான்கு மாணவர்கள் அந்நூலை விரித்தெழுதிய வைகானஸ சம்ஹிதைகள் (சாஸ்திரங்கள்) எனப்படும் துணைநூல்களும் வைகானஸ மரபின் வழிகாட்டு நூல்களாகும். (இந்நூல்களுக்கு தொன்மத்திலுள்ள முனிவர்களின் பெயர்களே ஆசிரியர்களாகச் சொல்லப்படுகிறது. அவர்கள்: அத்ரி, காசியபர், பிருகு , மரீசி)  இந்நூல்களின் மொழிநடையைக்கொண்டு இவை பொயு 3 அல்லது 4-ம் நூற்றாண்டில் உருவானவை என மதிப்பிடுகிறார்கள். வைகானஸர்கள் கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையை மட்டுமே தங்கள் முதன்மை நூலாகக் கொள்கின்றனர்.  

== வரலாறு ==
ஆனால் விகனஸ, வைகானஸ ஆகிய சொற்கள் நேரடியாக வானப்பிரஸ்தம் (வாழ்க்கையின் ஆசிரமங்களில் நான்காம் நிலை) என பொருள் கொள்பவை. அச்சொற்களை விகனஸ முனிவர், வைகானஸ மரபு என பொருள்கொண்டு, வைகானஸ வழிபாட்டு முறை உருவாக்கப்பட்டது என ஆய்வாளர் கருதுகிறார்கள். 
விகனஸ முனிவர் வகுத்த வழிபாட்டுச் சடங்கு நெறிகளும் வாழ்க்கைநெறிகளும் தொல்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கலாம். மனுஸ்மிருதி (மானவ தர்ம சாஸ்திரம்) பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாஸம் என்னும் நான்கு வாழ்க்கைக் காலகட்டங்களை (ஆசிரமங்கள்) விவரிக்கையில், வானப்பிரஸ்தம் வைகானஸ மரபின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகச் சொல்கிறது. வைகானஸ மரபு அந்தணர்கள் நடுவே ஒரு வழிபாட்டு முறை, வாழ்க்கைநெறியாக இருந்திருக்கலாம். பின்னர் அது வரையறை செய்யப்பட்டு ஆகமமாக ஆக்கப்பட்டது.
 
== வரலாறு ==
விகனஸ முனிவர் வகுத்த வழிபாட்டுச் சடங்கு நெறிகளும் வாழ்க்கைநெறிகளும் தொல்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கலாம். போதாயன சூத்திரத்தில் விமனஸர் வகுத்த வகையில் நெறிகள் நடைபெற்றன என்னும் வரி வருகிறது. மனுஸ்மிருதி (மானவ தர்ம சாஸ்திரம்) பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாஸம் என்னும் நான்கு வாழ்க்கைக் காலகட்டங்களை (ஆசிரமங்கள்) விவரிக்கையில் வானப்பிரஸ்தம் வைகானஸ மரபின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகச் சொல்கிறது. வைகானஸ மரபு அந்தணர்கள் நடுவே ஒரு வழிபாட்டு முறை, வாழ்க்கைநெறியாக இருந்திருக்கலாம். பின்னர் அது வரையறை செய்யப்பட்டு ஆகமமாக ஆக்கப்பட்டது.  

வைகானஸ ஆகம மரபு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கர்நாடகத்தின் தென்பகுதியிலும் மட்டுமே இருந்ததாகவே வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. வைகானஸ ஆகம நூல்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்தாலும், அவை தமிழகத்தில் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்றும்; இங்கிருந்த வைணவ ஆலயத்தின் பூசகக்குடியினரால் அவை உருவாக்கப்பட்டிருக்கலாமென்றும் ஶ்ரீனிவாஸ ராவ் கருதுகிறார்.  

வைகானஸ மரபு குறித்த கல்வெட்டுச்சான்றுகள் தமிழகத்தில் பொயு 9க்குப் பின்னர்தான் கிடைக்கின்றன. குறிப்பாக ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் கிடைக்கின்றன. ராஜராஜ சோழன் தமிழக ஆலயங்களை ஆகம முறைக்கு மாற்றியபோது வைணவத்துக்கு வைகானஸ மரபையே நெறியாக்கினார். அதற்கு முன், பல்லவர்களின் காலகட்டத்தில் வைணவ ஆலயங்கள் சிறிய அளவிலேயே இருந்தன, அவை வெவ்வேறு பூசகக்குடியினரின் வழிபாட்டுரிமையின்கீழ் இருந்திருக்கலாம். சோழப்பேரரசு உருவாகி, ஆலயங்கள் பெரிதாகக் கட்டப்பட்டபோது வைகானஸம் என்னும் பொதுமரபின் கீழ் அந்த வைணவ வழிபாட்டுமுறைமை தொகுக்கப்பட்டிருக்கலாம்.
வைகானஸ மரபு குறித்த கல்வெட்டுச்சான்றுகள் தமிழகத்தில் பொயு 9க்குப் பின்னர்தான் கிடைக்கின்றன, குறிப்பாக ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில். ராஜராஜ சோழன் தமிழக ஆலயங்களை ஆகம முறைக்கு மாற்றியபோது வைணவத்துக்கு வைகானஸ மரபையே நெறியாக்கினார். பல்லவர்களின் காலகட்டத்தில் வைணவ ஆலயங்கள் சிறிய அளவிலேயே இருந்தன, அவை வெவ்வேறு பூசகக்குடியினரின் வழிபாட்டுரிமையின்கீழ் இருந்திருக்கலாம். சோழப்பேரரசு உருவாகி, ஆலயங்கள் பெரிதாகக் கட்டப்பட்டபோது வைகானஸம் என்னும் பொதுமரபின் கீழ் அந்த வைணவ வழிபாட்டுமுறைமை தொகுக்கப்பட்டிருக்கலாம்.
 
பொயு 11-ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபு பரவத் தொடங்கியது. பாஞ்சராத்ர மரபு ஒரு துணைமதம் என்னும் அளவுக்கு விரிவான நெறிகளும், ஆகமநூல்களும் கொண்டது. அந்த நெறிகளை ஏற்றுக்கொண்டு, அதில் இணைபவர் அனைவருக்கும் அது வழிபாட்டுரிமை அளித்தது. அதன்பொருட்டு ஐந்து அடையாளக்குறிகளை ஏற்றுக்கொள்ளுதல் ([[பஞ்ச சம்ஸ்காரம்]]) போன்ற சடங்குகளையும் வகுத்தது. ஆனால் வைகானஸ மரபு முழுக்க முழுக்க குலமுறையாகவே நீடித்தது. பாஞ்சராத்ர மரபிற்கு எதிராக வைகானஸ மரபு தன்னை இறுக்கமாக்கிக் கொண்டது. அதில் ஒருவர் கருவில் இருக்கையிலேயே விஷ்ணுவுக்கு உரியவராக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் [[விஷ்ணுபலி]] போன்ற சடங்குகள் உருவாயின.

பொயு 11 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபு பரவத் தொடங்கியது. பாஞ்சராத்ர மரபு ஒரு துணைமதம் என்னும் அளவுக்கு விரிவான நெறிகளும், ஆகமநூல்களும் கொண்டது. அந்த நெறிகளை ஏற்றுக்கொண்டு, அதில் இணைபவர் அனைவருக்கும் அது வழிபாட்டுரிமை அளித்தது. அதன்பொருட்டு ஐந்து அடையாளக்குறிகளை ஏற்றுக்கொள்ளுதல் (பஞ்ச சம்ஸ்காரம்) போன்ற சடங்குகளையும் வகுத்தது. ஆனால் வைகானஸ மரபு முழுக்க முழுக்க குலமுறையாகவே நீடித்தது. பாஞ்சராத்ர மரபிற்கு எதிராக வைகானஸ மரபு தன்னை இறுக்கமாக்கிக் கொண்டது. அதில் ஒருவர் கருவில் இருக்கையிலேயே விஷ்ணுவுக்கு உரியவராக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் விஷ்ணுபலி போன்ற சடங்குகள் உருவாயின.
வைகானஸ மரபு பாஞ்சராத்ர மரபில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும்பொருட்டு கறாரான பல நெறிகளை உருவாக்கிக் கொண்டது. வைகானஸத்தில் பரம்பரை, பந்தம் போன்ற கருதுகோள்கள் முக்கியமானவை. ஒருவர் வைகானஸர்களின் குடும்பத்தில் பிறந்தாகவேண்டும், தலைமுறை தலைமுறையாக அதற்குள் ஒரு குரு மரபிலேயே நீடிக்கவேண்டும், ஒரு வழிபாட்டாளர் குழுவுக்குள் இறுதிவரை இருந்தாகவேண்டும். அவருடைய நெறிகளும் ஆசாரமும் அந்த குழுவின் தலைவரால் கண்காணிக்கப்படும்

வைகானஸ மரபு பாஞ்சராத்ர மரபில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும்பொருட்டு கறாரான பல நெறிகளை உருவாக்கிக் கொண்டது. வைகானஸத்தில் பரம்பரை, பந்தம் போன்ற கருதுகோள்கள் முக்கியமானவை. ஒருவர் வைகானஸர்களின் குடும்பத்தில் பிறந்தாகவேண்டும், தலைமுறை தலைமுறையாக ஒரு குருமரபிலேயே நீடிக்கவேண்டும், ஒரு வழிபாட்டாளர் குழுவுக்குள்ளும் இறுதி வரை இருந்தாகவேண்டும். பிற்கால வைகானஸ நூல்கள் இந்த பிறப்பு சார்ந்த தொடர்ச்சியை வலியுறுத்துகின்றன. வைகானஸர்கள் தமிழில் எழுந்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் போன்ற பக்திநூல்களை ஏற்பதில்லை. தங்கள் மரபு பக்தி நூல்களுக்கு முந்தையது என்றும், வேதத்திற்கு மட்டுமே அதிகாரபூர்வ ஏற்பு அளிப்பது என்றும் அவர்கள் கருதுகின்றனர். கிருஷ்ணயஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதை அவர்களின் மூலநூல்.  
பிற்கால வைகானஸ நூல்கள் இந்த பிறப்பு சார்ந்த தொடர்ச்சியை மிகவும் வலியுறுத்துகின்றன. வைகானஸர்கள் தமிழில் எழுந்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் போன்ற பக்திநூல்களை ஏற்பதில்லை. தங்கள் மரபு பக்திநூல்களுக்கு முந்தையது என்றும், வேதத்திற்கு மட்டுமே அதிகாரபூர்வ ஏற்பு அளிப்பது என்றும் அவர்கள் கருதுகின்றனர். கிருஷ்ணயஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதை அவர்களின் மூலநூல்.  

ராமானுஜர் வைகானஸ ஆகம முறைக்கு எதிரானவராக இருந்தார். ராமாஜுனரின் ஶ்ரீவைஷ்ணவ மரபு வைகானஸ மரபினரை ஆலயங்களில் இருந்து அகற்றி பாஞ்சராத்ர ஆகம முறையை நிறுவியது. இந்த போராட்டம் நூறாண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இன்றும் தென்னிந்தியாவில் ஏறத்தாழ பாதி வைணவ ஆலயங்களில் வைகானஸர்களே பூசகர்களாக நீடிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபே மிகப்பெரும்பாலும் உள்ளது. இந்த வழிபாட்டுரிமைப் போர் இன்றும் சாதிப்பூசலாக நீடிக்கிறது.  
ராமானுஜர் வைகானஸ ஆகம முறைக்கு எதிரானவராக இருந்தார். ராமாஜுனரின் ஶ்ரீவைஷ்ணவ மரபு வைகானஸ மரபினரை ஆலயங்களில் இருந்து அகற்றி பாஞ்சராத்ர ஆகம முறையை நிறுவியது. இந்த போராட்டம் நூறாண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இன்று தென்னிந்தியாவில் ஏறத்தாழ பாதி வைணவ ஆலயங்களில் வைகானஸர்களே பூசகர்களாக நீடிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபே மிகப்பெரும்பாலும் உள்ளது. இந்த வழிபாட்டுரிமைப்போர் இன்றும் சாதிப்பூசலாக நீடிக்கிறது.  

== ஆசிரியர்கள் ==
== ஆசிரியர்கள் ==
வைகானஸ ஆகமங்களுக்கு விளக்கவுரை எழுதி அந்த மரபை வலியுறுத்தியவர்கள் என ந்ருசிம்ஹ வாஜ்பேயி, பட்ட பாஸ்கராச்சார்யா, அனந்தாச்சார்யா மற்றும் ஶ்ரீனிவாச மகி  ஆகியோர் முக்கியமானவர்களாக கூறப்படுகின்றனர். இவர்களில் [[ஶ்ரீனிவாச மகி]] முதன்மையானவர். 'தச-வித-ஹேது-நிரூபணா' என்னும் நூலை அவர் எழுதினார்.
வைகானஸ ஆகமங்களுக்கு விளக்கவுரை எழுதி அந்த மரபை வலியுறுத்தியவர்கள் என ந்ருசிம்ஹ வாஜ்பேயி, பட்ட பாஸ்கராச்சார்யா, அனந்தாச்சார்யா மற்றும் ஶ்ரீனிவாச மகி  ஆகியோர் முக்கியமானவர்களாக கூறப்படுகின்றனர். இவர்களில் [[ஶ்ரீனிவாச மகி]] முதன்மையானவர். தச - வித - ஹேது-நிரூபணா என்னும் நூலை அவர் எழுதினார்

கேசவாச்சார்யாவின் 'அர்ச்சனா-நவனீதா' (அர்ச்சனை முறை வரையறை) குறிப்பிடத்தக்க நூல். கேசவாச்சாரியா வைணவ நோக்கில் பாதராயணரின் பிரம்மசூத்திரத்திற்கு ஒரு விருத்தியுரை எழுதினார்.  
கேசவாச்சார்யாவின் அர்ச்சனா-நவனீதா (அர்ச்சனை முறை வரையறை) குறிப்பிடத்தக்க நூல். கேசவாச்சாரியா வைணவநோக்கில் பாதராயணரின் பிரம்மசூத்திரத்திற்கு ஒரு விருத்தியுரை எழுதினார்.  

நிருசிம்ஹ வாஜபேயியின் மாணவரான பாஸ்கர பட்டாச்சார்யா, 'தெய்வீக சூத்திரம்' மற்றும் 'மனுஷ்ய சூத்திரம்' ஆகியவற்றுக்கு விளக்கவுரைகள் எழுதினார். சுந்தர ராஜர் எழுதிய 'பிரயோக விதி' சிலை வழிபாட்டின் நெறிகளை வகுத்துரைத்த புகழ்பெற்ற நூல்.  
நிருசிம்ஹ வாஜபேயியின் மாணவரான பாஸ்கர பட்டாச்சார்யா, தெய்வீக சூத்திரம் மற்றும் மனுஷ்ய சூத்திரம் ஆகியவற்றுக்கு விளக்கவுரைகள் எழுதினார். சுந்தர ராஜர் எழுதிய பிரயோக விதி சிலைவழிபாட்டின் நெறிகளை வகுத்துரைத்த புகழ்பெற்ற நூல்.  

'வைகானச-மந்திர-பிரஸ்னம்' ('தெய்விகா சதுஸ்த்யம்') அல்லது 'மந்திர சம்ஹிதை' என்னும் நூல் வைகானஸத்திற்கு அடிப்படையான தொன்மையான சடங்குகளை விளக்கும் குறிப்பிடத்தக்க நூல். ஆலய வழிபாட்டு முறைகளுக்கு தேவையான வேத மந்திரங்கள் அதில்தான் உள்ளன. அவை பெரும்பாலும் யஜுர்வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. முதல் பாதியில் (சி. 1-4) கிருஹ்ய சூத்திரத்தின் மந்திரங்கள் உள்ளன. 'தெய்விகா சதுஸ்த்யம்' எனப்படும் இரண்டாம் பாதியில் (அதிகாரம் 5-8) அத்ரி, காஸியபர், பிருகு, மரீசி ஆகிய நான்கு ரிஷிகளின் நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட கோவில் சடங்குகள் தொடர்பான பகுதிகள் உள்ளன.
வைகானச-மந்திர-பிரஸ்னம் (தெய்விகா சதுஸ்த்யம்) அல்லது மந்திர சம்ஹிதை என்னும் நூல் வைகானஸத்திற்கு அடிப்படையான தொன்மையான சடங்குகளை விளக்கும் குறிப்பிடத்தக்க நூல். ஆலய வழிபாட்டு முறைகளுக்கு தேவையான வேத மந்திரங்கள் அதில்தான் உள்ளன. அவை பெரும்பாலும் யஜுர்வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை .முதல் பாதியில் (சி. 1-4) கிருஹ்ய சூத்திரத்தின் மந்திரங்கள் உள்ளன. தெய்வீக சதுஸ்த்யம் எனப்படும் இரண்டாம் பாதியில் (அதிகாரம் 5-8) அத்ரி, காஸ்யபர், பிருகு, மரீசி ஆகிய நான்கு ரிஷிகளின் நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட கோவில் சடங்குகள் தொடர்பான பகுதிகள் உள்ளன.

ரகுபதி-பட்டாச்சார்யா (வாசுதேவா என்றும் அழைக்கப்படுபவர்) இயற்றிய 'மோக்ஷோபாய-பிரதீபிகா' என்ற நூலில் பன்னிரண்டு அத்தியாயங்களில், சரணாகதி, உணர்வுபூர்வ பக்தி, வழிபாடு (பிரபத்தி-பூர்வக-பகவத்-ஆராதனம்) ஆகியவற்றை முன்வைக்கிறார். மூலம் அவரது வெளிப்படையான வடிவத்தில் பிரம்மத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கிறது. ரகுபதி-பட்டாச்சார்யாவின் நூல்களில் வைகானச மற்றும் பாஞ்சராத்ர மரபுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி உள்ளது.  
ரகுபதி-பட்டாச்சார்யா (வாசுதேவா என்றும் அழைக்கப்படுபவர்) இயற்றிய மோக்ஷோபாய-பிரதீபிகா பன்னிரண்டு அத்தியாயங்களில் சரணாகதி , உணர்வுபூர்வ பக்தி, வழிபாடு (பிரபத்தி-பூர்வக-பகவத்-ஆராதனம்) ஆகியவற்றை முன்வைக்கிறார். மூலம் அவரது வெளிப்படையான வடிவத்தில் பிரம்மத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கிறது. ரகுபதி பட்டாச்சார்யாவின் நூல்களில் வைகானச மற்றும் பாஞ்சராத்ர மரபுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி உள்ளது.

== வைகானஸ தத்துவம் ==
== வைகானஸ தத்துவம் ==

====== வேத அடிப்படை ======
==== வேத அடிப்படை ====
வைகானஸர்கள் தங்களை தூயவைதிகர் என்றும் தங்கள் முறை முழுமையாகவே வேதம்சார்ந்தது என்றும் சொல்கிறார்கள். ஆனால் வேதங்களில் ஆலயவழிபாடு மற்றும் உருவ வழிபாடு இல்லை. வைகானஸ மரபு இவற்றை வேதங்களுக்கு வெளியே இருந்துதான் எடுத்துக்கொண்டுள்ளது. வழிபாட்டுச்சடங்குகள், ஆலயக் கட்டமைப்பு ஆகியவை தொன்மையான பழங்குடி மரபில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் வைகானச கிருஹ்ய சூத்திர அமைப்பு முன்பிருந்த வைதிக மரபைச் சேர்ந்த போதயான கிருஹ்ய சூத்திரம், ஆபஸ்தம்ப மந்திர பிரஸ்னம் மற்றும் சாமவேதத்தின் மந்திர பிராமணம் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது
வைகானஸர்கள் தங்களை தூயவைதிகர் என்றும் ,தங்கள் முறை முழுமையாகவே வேதம் சார்ந்தது என்றும் சொல்கிறார்கள். ஆனால் வேதங்களில் ஆலயவழிபாடு மற்றும் உருவ வழிபாடு இல்லை. வைகானஸ மரபு இவற்றை வேதங்களுக்கு வெளியே இருந்துதான் எடுத்துக்கொண்டுள்ளது. வழிபாட்டுச்சடங்குகள், ஆலயக் கட்டமைப்பு ஆகியவை தொன்மையான பழங்குடி மரபில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் வைகானச கிருஹ்ய சூத்திர அமைப்பு முன்பிருந்த வைதிக மரபைச் சேர்ந்த போதயான கிருஹ்ய சூத்திரம், ஆபஸ்தம்ப மந்திர பிரஸ்னம் மற்றும் சாமவேதத்தின் மந்திர பிராமணம் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது
 
பழைய வேத மரபுகளில் ஸ்ரௌத (வேள்வி) மற்றும் கிருஹ்ய (இல்லம்) அமைப்புகள் ஒன்றையொன்று ஈடுசெய்வதுபோல் உள்ளன. அதேபோலவே வைகானஸ மாபிலும் உள்ளது வைகானஸ மந்திரப் பிரஸ்னம் நூல் யஜூர்வேத மந்திரங்களை நேரடியாகவே ஆலயவழிபாட்டுக்கு பரிந்துரைத்து, வகுத்தும் அளிக்கிறது .

பழைய வேத மரபுகளில் ஸ்ரௌத (வேள்வி) மற்றும் கிருஹ்யா (இல்லம்) அமைப்புகள் ஒன்றையொன்று ஈடுசெய்வதுபோல் உள்ளன. அதேபோலவே வைகானஸ மாபிலும் உள்ளது வைகானஸ மந்திரப் பிரஸ்னம் நூல் யஜூர்வேத மந்திரங்களை நேரடியாகவே ஆலயவழிபாட்டுக்கு பரிந்துரைத்து, வகுத்தும் அளிக்கிறது .
==== தாந்த்ரீகம் ====
வைகானஸ முறை வேதமரபுக்கு புறம்பான தாந்த்ரீக மரபில் இருந்து பல சடங்குகளை எடுத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக கருவிலேயே விஷ்ணுவுக்கு தாசர்களாக ஆக்கும் விஷ்ணுபலி சடங்கு, விஷ்ணுவை பூசகர் தன்னுள் எழுப்பிக்கொள்ளும் [[ஆத்ம சூக்தம்]] ஆகியவை தாந்த்ரீக மரபைச் சேர்ந்தவை.

==== இருநிலை ====
==== சாங்கியம் ====
பிற வைணவ மரபுகளைப்போலவே வைகானஸமும் இறைவனாகிய விஷ்ணுவை இரண்டு நிலைகளில் ஒரே சமயம் உருவகிக்கிறது. அறியமுடியக்கூடிய, வழிபடத்தக்க உருவங்கள்; மற்றும் அறியமுடியாத, பிரபஞ்சரூபமான பிரம்மம். வைகானஸ மரபு என்பது தொன்மையான வேத ஞானதரிசனமாகிய பிரம்மம் என்னும் கருத்துருவை விஷ்ணுவாகவும், விஷ்ணுவை பல்வேறு வழிபாட்டு உருவங்களாகவும் மாற்றிக்கொள்வதற்கான தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக உருவானது. சடங்கு, அழகியல், தத்துவம் ஆகிய தளங்களில் வைகானஸம் இதைச் செய்கிறது.  
வைகானஸம் சாங்கிய தரிசனத்தை தன்னுடைய அருவ- உருவ தெய்வங்களின் இணைப்புக்குப் பயன்படுத்திக்கொள்கிறது. சாங்கிய தரிசனத்திலுள்ள புருஷ தத்துவம் , பரமபுருஷனாக அல்லது விஷ்ணுவாக இந்நூல்களில் உருவகிக்கப்படுகிறது. ரகுபதி பட்டாச்சார்யா சாங்கிய சித்தாந்தத்தின் விதிமுறைகளைப் பயன்படுத்தி வைகானச கோட்பாட்டை விளக்குகிறார்.

விஷ்ணு இரண்டு நிலைகளில் இருக்கிறார். அறியப்படவே முடியாத பிரம்மம் நிஷ்கல வடிவம் எனப்படுகிறது (நி+கல. கலை என்பது அடையாளம். அடையாளங்களே அற்றது); சகல வடிவம் (அனைத்து அடையாளங்களும் கொண்ட வடிவம்). இதை புஷ்கல வடிவம் (பொலிவுத் தோற்றம்) என்றும் கூறுகிறார்கள்
வைகானஸ மரபின்படி விஷ்ணு புருஷன், லட்சுமி பிரகிருதி. அவை ஒன்றை ஒன்று வரையறை செய்பவை, ஆகவே பிரிக்க முடியாதவை, அவற்றை தனித்தனியாக வழிபட முடியாது.   

இரண்டு ஆசிரியர்களான ஸ்ரீனிவாசா மகி தன்னுடைய 'தாத்பர்ய சிந்தாமணி நூலிலும்', ரகுபதி பட்டாச்சார்யா தன் நூலிலும் வைகானஸத்தின் அடிப்படையான இரட்டையிருப்பு கொள்கையை விளக்கிறார்கள். நாராயணன் ஆகிய பிரம்மம் இரட்டை இயல்பு கொண்டது. எதுவாகவும் மாறாத, எதையும் இயற்றாத, எந்த விவரணைக்கும் அப்பாற்பட்ட நாராயணன் நிஷ்கலா என்னும் நிலையில் இருப்பவர். அவரே தன் வியூக வடிவங்கள் வழியாக சகலா என்னும் வடிவங்களை கொள்கிறார். இவ்விரு இயல்புகளும் உண்மையில் விஷ்ணுவின் லீலைகள், அவற்றை பிரிக்கமுடியாது.
==== இருநிலை ====
பிற வைணவ மரபுகளைப்போலவே வைகானஸமும் இறைவனாகிய விஷ்ணுவை இரண்டு நிலைகளில் ஒரே சமயம் உருவகிக்கிறது. அறியமுடியக்கூடிய, வழிபடத்தக்க உருவங்கள். மற்றும் அறியமுடியாத, பிரபஞ்சரூபமான பிரம்மம். வைகானஸ மரபு என்பது தொன்மையான வேத ஞானதரிசனமாகிய பிரம்மம் என்னும் கருத்துருவை விஷ்ணுவாகவும், விஷ்ணுவை பல்வேறு வழிபாட்டு உருவங்களாகவும் மாற்றிக்கொள்வதற்கான தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக உருவானது.  சடங்கு,அழகியல், தத்துவம் ஆகிய தளங்களில் வைகானஸம் இதைச் செய்கிறது.  

நிஷ்கலா அம்சம் எங்கும் உள்ளுறையாக உள்ளது. பாலில் நெய், எள்ளில் எண்ணெய், பூவில் நறுமணம், பழத்தில் சாறு, மரத்தில் நெருப்பு என எல்லாவற்றிலும் உள்ளேயும் வெளியேயும் நிறைந்திருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் ஆகாயத்தில் திகழ்வதுபோல நிஷ்கலாவில் பிரபஞ்சமும் சகலா வடிவ தெய்வங்களும் திகழ்கின்றன. எல்லாவற்றிலும் ஆகாயமே இருப்பதுபோல நிஷ்கலா எங்கும் எல்லாவற்றிலும் உள்ளது. அவர் இருக்கிறாரா, இல்லையா என்றுகூட நம்மால் கூற முடியாது, ஏனென்றால் எல்லா அறியும் முறைமைகளுக்கும் அப்பாற்பட்டது.  
விஷ்ணு இரண்டு நிலைகளில் இருக்கிறார். அறியப்படவே முடியாத பிரம்மம் நிஷ்கல வடிவம் எனப்படுகிறது (நி+கல. கலை என்பது அடையாளம். அடையாளங்களே அற்றது) சகல வடிவம் (அனைத்து அடையாளங்களும் கொண்ட வடிவம்). இதை புஷ்கல வடிவம் (பொலிவுத்தோற்றம்) என்றும் கூறுகிறார்கள்

==== சாங்கியம் ====
இரண்டு ஆசிரியர்களான ஸ்ரீனிவாசா மகி தன்னுடைய  தாத்பர்ய சிந்தாமணி நூலிலும் , ரகுபதி பட்டாச்சார்யா தன் நூலிலும் வைகானஸத்தின் அடிப்படையான இரட்டையிருப்பு கொள்கையை விளக்கிறார். நாராயணன் ஆகிய பிரம்மம் இரட்டை இயல்பு கொண்டது. எதுவாகவும் மாறாத, எதையும் இயற்றாத, எந்த விவரணைக்கும் அப்பாற்பட்ட நாராயணன் நிஷ்கலா என்னும் நிலையில் இருப்பவர். அவரே தன் வியூக வடிவங்கள் வழியாக சகலா என்னும் வடிவங்களை கொள்கிறார். இவ்விரு இயல்புகளும் உண்மையில் விஷ்ணுவின் லீலைகள், அவற்றை பிரிக்கமுடியாது.
வைகானஸம் சாங்கிய தரிசனத்தை இந்த இணைப்புக்குப் பயன்படுத்திக்கொள்கிறது. சாங்கிய தரிசனத்திலுள்ள புருஷ தத்துவம், பரமபுருஷனாக அல்லது விஷ்ணுவாக இந்நூல்களில் உருவகிக்கப்படுகிறது. ரகுபதி பட்டாச்சார்யா சாங்கிய சித்தாந்தத்தின் விதிமுறைகளைப் பயன்படுத்தி வைகானச கோட்பாட்டை விளக்குகிறார்.

வைகானஸ மரபின்படி விஷ்ணு புருஷன், லட்சுமி பிரகிருதி. அவை ஒன்றை ஒன்று வரையறை செய்பவை, ஆகவே பிரிக்க முடியாதவை, அவற்றை தனித்தனியாக வழிபட முடியாது.
நிஷ்கலா அம்சம் எங்கும் உள்ளுறையாக உள்ளது.  பாலில் நெய், எள்ளில் எண்ணெய், பூவில் நறுமணம், பழத்தில் சாறு, மரத்தில் நெருப்பு என எல்லாவற்றிலும் உள்ளேயும் வெளியேயும் நிறைந்திருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் ஆகாயத்தில் திகழ்வதுபோல நிஷ்கலாவில் பிரபஞ்சமும் சகலா வடிவ தெய்வங்களும் திகழ்கின்றன. எல்லாவற்றிலும் ஆகாயமே இருப்பதுபோல நிஷ்கலா எங்கும் எல்லாவற்றிலும் உள்ளது.  அவர் இருக்கிறாரா, இல்லையா என்றுகூட நம்மால் கூற முடியாது, ஏனென்றால் எல்லா அறியும்முறைமைகளுக்கும் அப்பாற்பட்டது.  

==== உருவத்தெய்வ வழிபாடு ====
==== உருவத்தெய்வ வழிபாடு ====
வைகானச ஆகம நூல்களின் ஞான பாத பகுதி, சடங்குகள் பற்றிய விவாதத்துடன் ஒப்பிடும்போது சுருக்கமாக உள்ளது.  வைகானஸம் முதன்மையாக அருவமான தெய்வத்தை உருவத்தெய்வமாக உருவகித்து வாழ்க்கையின் ஒவ்வொரு அன்றாடச் செயலுடனும் இணைக்கிறது.   

விஷ்ணுவை ஜபம், ஹுதா, அர்ச்சனை, தியானம் ஆகிய நான்கு வழிகளில் வழிபடலாம். ஒருவர் தன்னுள் உறைபவராக விஷ்ணுவை வழிபடலாம் (அந்தர்யாமி) அல்லது வெளியே திகழ்பவராக வழிபடலாம் (பஹிர்யாமி). ஆனால் மனித மனதின் எல்லைகளின் காரணமாக உருவம் இல்லாத நிஷ்கலா என்னும் வடிவத்தை மனிதர்களால் வழிபட முடியாது. மானுடமனம் வடிவமற்றதை விட வடிவங்களையும் அவற்றின்  பண்புகளையும் வழிபடுவதே எளிதானது. விஷ்ணுவின் அழகிய, ஆற்றல் கொண்ட சிலைவடிவை தொடர்ச்சியாக பார்த்து, வழிபட்டு வருவதன் வழியாக பக்தன் அன்பும், பணிவும், உளவிரிவும் கொண்டவனாக ஆகிறான். முழுமையான சரணாகதி (பிரபத்தி) வழியாக அந்த சிலை மெய்யான விஷ்ணு வடிவமாகவே ஆகிவிடுகிறது. உலகியல் நன்மை (ஐகிஹம்), முக்தி (அமுஷ்மிகம்) ஆகியவற்றை அருள்கிறது.   
விஷ்ணுவை ஜபம், ஹுதா, அர்ச்சனை,தியானம் ஆகிய நான்கு வழிகளில் வழிபடலாம். ஒருவர் தன்னுள் உறைபவராக விஷ்ணுவை வழிபடலாம் (அந்தர்யாமி) அல்லது வெளியே திகழ்பவராக வழிபடலாம் (பஹிர்யாமி) ஆனால் மனித மனதின் எல்லைகளின் காரணமாக உருவம் இல்லாத நிஷ்கலா என்னும் வடிவத்தை மனிதர்களால் வழிபட முடியாது. மானுடமனம்   வடிவமற்றதை விட வடிவங்களையும் அவற்றின்  பண்புகளையும் வழிபடுவதே எளிதானது. விஷ்ணுவின் அழகிய, ஆற்றல் கொண்ட சிலைவடிவை தொடர்ச்சியாக பார்த்து, வழிபட்டு வருவதன் வழியாக பக்தன் அன்பும், பணிவும், உளவிரிவும் கொண்டவனாக ஆகிறான். முழுமையான சரணாகதி (பிரபத்தி) வழியாக அந்த சிலை மெய்யான விஷ்ணுவடிவமாகவே ஆகிவிடுகிறது. உலகியல் நன்மை (ஐகிஹம்) முக்தி (அமுஷ்மிகம்) ஆகியவற்றை அருள்கிறது.   

====== ஐந்து வகை சிலைகள் ======
====== ஐந்து வகை சிலைகள். ======
வைகானச கோவிலில், கருவறையில் நிறுவப்பட்டுள்ள நிலையான சிலை (துருவ-பிம்பம் அல்லது துருவ-பேரம்) முதன்மையானது. அது முதன்மை தெய்வம் (அர்ச்சா-மூர்த்தி) எனப்படுகிறது. விஷ்ணு தத்துவத்தின் ஏதேனும் ஒரு வடிவில் அது அமையவேண்டும். அது மூன்று வடிவங்கள் கொள்கிறது

* கௌதுக-பேரம் (பொதுவாக ரத்தினம், கல், தாமிரம், வெள்ளி, தங்கம் அல்லது மரம் ஆகியவற்றில் அமையும்). தினசரி வழிபாடுகளையும் (நித்ய-அர்ச்சனை) பெறுகிறது.
* கௌதுக-பேரம் (பொதுவாக ரத்தினம், கல், தாமிரம், வெள்ளி, தங்கம் அல்லது மரம் ஆகியவற்றில் அமையும். தினசரி வழிபாடுகளையும் (நித்ய-அர்ச்சனை) பெறுகிறது  
* ஸ்நாபன பேரம்  (பொதுவாக உலோகத்தால் ஆனது). சடங்குகள் மற்றும் நீராட்டு (அபிஷேகம்) ஆகியவை உரிய நாட்களில் மட்டும் (நைமித்த-அர்ச்சனை) நிகழ்கிறது.
* ஸ்நாபன பேரம்  (பொதுவாக உலோகத்தால் ஆனது.) சடங்குகள் மற்றும் நீராட்டு (அபிஷேகம்) ஆகியவை உரிய நாட்களில் மட்டும் (நைமித்த-அர்ச்சனை) நிகழ்கிறது
* உத்ஸவ-பேரம் (உலோகத்தால் ஆனது). பண்டிகை நிகழ்வுகளுக்காகவும், ஊர்வலங்களில் எடுத்துச் செல்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
* உத்ஸவ-பேரம் ( உலோகத்தால் ஆனது) பண்டிகை நிகழ்வுகளுக்காகவும், ஊர்வலங்களில் எடுத்துச் செல்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் இரு வடிவங்கள் பின்னர் சேர்ந்தன
இதில் மேலுமிரு வடிவங்கள் பின்னர் சேர்ந்தன

* பாலி பேரம் ( உலோகம். இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும், ஜெய மற்றும் விஜயா ஆகியோருக்கும்)
* பாலி பேரம் ( உலோகம். இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும், ஜெய மற்றும் விஜயா ஆகியோருக்கும்)  
* போகபேரம் (உலோகம். தினசரி வழிபாடு, சிறப்பு சடங்குகள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் உணவுப் பிரசாதம் ஆகியவற்றிற்கான சிலைகள்)
* போகபேரம் (உலோகம். தினசரி வழிபாடு, சிறப்பு சடங்குகள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் உணவுப் பிரசாதம் ஆகியவற்றிற்காந சிலைகள்)க 

இந்த ஐந்து வடிவங்களும் சேர்ந்து பஞ்ச பேரம் அல்லது பஞ்ச மூர்த்திகளை எனப்படுகின்றன ராவின் அச்சுதா; மற்றும் பாலி பெராவின் அனிருத்தா.
இந்த ஐந்து வடிவங்களும் சேர்ந்து பஞ்ச பேரம் அல்லது பஞ்ச மூர்த்திகளை எனப்படுகின்றன ராவின் அச்சுதா; மற்றும் பாலி பெராவின் அனிருத்தா.
Line 90: Line 97:

===== மந்திரங்கள் =====
===== மந்திரங்கள் =====
மூலமந்திரங்கள்வைகானஸ மரபு இரண்டு மந்திரங்களை முன்வைக்கிறது. பரவாசுதேவன், நாராயணன் ஆகிய இரண்டு பெருந்தெய்வ உருவகங்களைப் போற்றும் மந்திரங்கள் அவை
 
====== மூலமந்திரங்கள் ======
வைகானஸ மரபு இரண்டு மந்திரங்களை முன்வைக்கிறது. பரவாசுதேவன், நாராயணன் ஆகிய இரண்டு பெருந்தெய்வ உருவகங்களைப் போற்றும் மந்திரங்கள் அவை

* ஓம் நமோ பகவதே வாசுதேவாய
* ஓம் நமோ பகவதே வாசுதேவாய
* ஓம் நமோ நாராயணாய.
* ஓம் நமோ நாராயணாய.
வழிபாட்டு மந்திரங்கள்

====== வழிபாட்டு மந்திரங்கள் ======
* வைகானஸ மரபு மந்திரங்களை ஐந்து, பத்து, பதினைந்து என எண்ணிக்கைகளில் வகுத்துள்ளது. இவை கிருஷ்ண யஜுர்வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.  
* வைகானஸ மரபு மந்திரங்களை ஐந்து, பத்து, பதினைந்து என எண்ணிக்கைகளில் வகுத்துள்ளது. இவை கிருஷ்ண யஜுர்வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.  
* பஞ்ச-சூக்தங்கள் (ஐந்து) விஷ்ணு, புருஷன், நாராயண, ஸ்ரீ தேவி(லட்சுமி) , ஃபூ தேவி (பூமி) அல்லது, விஷ்ணு, ந்ருசிம்ஹா, ஸ்ரீ, பூ மற்றும் ஏகாக்ஷர சூக்தம்.
* பஞ்ச-சூக்தங்கள் (ஐந்து) விஷ்ணு, புருஷன், நாராயண, ஸ்ரீ தேவி(லட்சுமி) , ஃபூ தேவி (பூமி) அல்லது, விஷ்ணு, ந்ருசிம்ஹா, ஸ்ரீ, பூ மற்றும் ஏகாக்ஷர சூக்தம்.
Line 103: Line 112:
இந்த சூக்தங்களில், ஆத்ம சூக்தம் (ஸ்ரீ வைகானஸ மந்திர பிரஸ்னம், 5.120.1-12 )  வைகானஸ மரபுக்கு மிக முக்கியமானது. அர்ச்சகர் தன்னை விஷ்ணுவுக்கு அர்ப்பணித்து தன்னில் விஷ்ணுவை ஏற்றுக்கொள்ளுதலுக்கு உரிய மந்திரம் இது.

====== மீட்பு ======
===== மீட்பு =====
வைகானஸ மரபின்படி வீடுபேறு (மோக்ஷம்) என்பது விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைதல். அதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன
வைகானஸ மரபின்படி வீடுபேறு (மோக்ஷம்) என்பது விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைதல். அதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன

Line 109: Line 118:
* ஹூத (வேள்வி)
* ஹூத (வேள்வி)
* அர்ச்சனை (வழிபாடு)
* அர்ச்சனை (வழிபாடு)
* தியானம் (யோகம், தியானம்)
* தியானம் ([[யோகம்]], தியானம்)

ஆனால் வைகானஸ ஆகமநூல்கள் மரீசி சம்ஹிதை போன்றவை நான்கில் அர்ச்சனையே முதன்மையானது, அதுவே போதுமானது என்று சொல்கின்றன.
ஆனால் வைகானஸ ஆகமநூல்கள் மரீசி சம்ஹிதை போன்றவை நான்கில் அர்ச்சனையே முதன்மையானது, அதுவே போதுமானது என்று சொல்கின்றன.
Line 126: Line 135:

====== துணைச்சடங்குகள் ======
====== துணைச்சடங்குகள் ======
கானஸ ஆகமம் கடைப்பிடிக்கப்படும் ஆலயங்களில் ஶ்ரீபலி எனப்படும் ஒரு சடங்கு உண்டு. ஆலயத்தைச் சுற்றி நிறுவப்பட்டிருக்கும் பலிக்கற்களில் குடிகொள்ளும் ஏராளமான தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் பலி அளிக்கப்படுகிறது. (சிவந்த மலர், சோறு ஆகியவை பலியாக அளிக்கப்படும்) இது பலிபிரதட்சிணை என்றும் சொல்லப்படுகிறது. இறுதியாக புஷ்பாஞ்சலி என்னும் மலர்வழிபாடு நடைபெறுகிறது.  
வைகானஸ ஆகமம் கடைப்பிடிக்கப்படும் ஆலயங்களில் ஶ்ரீபலி எனப்படும் ஒரு சடங்கு உண்டு. ஆலயத்தைச் சுற்றி நிறுவப்பட்டிருக்கும் பலிக்கற்களில் குடிகொள்ளும் ஏராளமான தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் பலி அளிக்கப்படுகிறது. (சிவந்த மலர், சோறு ஆகியவை பலியாக அளிக்கப்படும்) இது பலிபிரதட்சிணை என்றும் சொல்லப்படுகிறது. இறுதியாக புஷ்பாஞ்சலி என்னும் மலர்வழிபாடு நடைபெறுகிறது.  

== ஆலய அமைப்பு ==
== ஆலய அமைப்பு ==
Line 210: Line 219:

{{Being created}}
 
{{Finalised}}
 
{{Fndt|05-Jun-2024, 09:00:44 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:52, 17 June 2024

விகனஸ முனிவர்

வைகானஸம் (வைகானசம்) வைணவ ஆகமம். வைணவ வழிபாட்டு மரபு பின்னாளில் வைணவ ஆகமத்தொகுப்பாக மாறியது. இது விஷ்ணுவின் உருவங்கள் (வியூக நிலை) மட்டுமே முதன்மையாகக் கொள்ளத்தக்கவை என நம்பும் தூய உருவவழிபாட்டு மரபாகும். தலைமுறையாகத் தொடரும் ஆசிரியர் மரபைக் கொண்டது. அம்மரபு பின்னாளில் சாதியாக ஆகியது.

ஆகமம்

ஆகமம் என்பது மதங்களின் வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக அமைந்த நூல். வைணவ ஆகமங்களில் முதன்மையானவை பாஞ்சராத்ரம், வைகானஸம் ஆகியவை.

நிறுவனர்

வைகானஸ மரபை தொடங்கியவர் விகனஸ முனிவர் என்று தொன்மம் உள்ளது. விஷ்ணுவே நாராயணர் வடிவில் நைமிஷாரண்யத்திற்கு வந்து தன் வியூக (உருவ) வடிவங்களை காட்டி இந்த வழிபாட்டு முறையை விகனஸ முனிவருக்கு வழங்கினார் என நம்பப்படுகிறது. வைகானச கல்ப சூத்திரம் இந்த மரபின் முதன்மையான நூலாக மதிக்கப்படுகிறது. விகனசரின் நான்கு மாணவர்கள் அந்நூலை விரித்தெழுதிய வைகானஸ சம்ஹிதைகள் (சாஸ்திரங்கள்) எனப்படும் துணைநூல்களும் வைகானஸ மரபின் வழிகாட்டு நூல்களாகும். (இந்நூல்களுக்கு தொன்மத்திலுள்ள முனிவர்களின் பெயர்களே ஆசிரியர்களாகச் சொல்லப்படுகிறது. அவர்கள்: அத்ரி, காசியபர், பிருகு , மரீசி) இந்நூல்களின் மொழிநடையைக்கொண்டு இவை பொயு 3 அல்லது 4-ம் நூற்றாண்டில் உருவானவை என மதிப்பிடுகிறார்கள். வைகானஸர்கள் கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையை மட்டுமே தங்கள் முதன்மை நூலாகக் கொள்கின்றனர்.

ஆனால் விகனஸ, வைகானஸ ஆகிய சொற்கள் நேரடியாக வானப்பிரஸ்தம் (வாழ்க்கையின் ஆசிரமங்களில் நான்காம் நிலை) என பொருள் கொள்பவை. அச்சொற்களை விகனஸ முனிவர், வைகானஸ மரபு என பொருள்கொண்டு, வைகானஸ வழிபாட்டு முறை உருவாக்கப்பட்டது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.

வரலாறு

விகனஸ முனிவர் வகுத்த வழிபாட்டுச் சடங்கு நெறிகளும் வாழ்க்கைநெறிகளும் தொல்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கலாம். போதாயன சூத்திரத்தில் விமனஸர் வகுத்த வகையில் நெறிகள் நடைபெற்றன என்னும் வரி வருகிறது. மனுஸ்மிருதி (மானவ தர்ம சாஸ்திரம்) பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாஸம் என்னும் நான்கு வாழ்க்கைக் காலகட்டங்களை (ஆசிரமங்கள்) விவரிக்கையில் வானப்பிரஸ்தம் வைகானஸ மரபின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகச் சொல்கிறது. வைகானஸ மரபு அந்தணர்கள் நடுவே ஒரு வழிபாட்டு முறை, வாழ்க்கைநெறியாக இருந்திருக்கலாம். பின்னர் அது வரையறை செய்யப்பட்டு ஆகமமாக ஆக்கப்பட்டது.

வைகானஸ ஆகம மரபு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கர்நாடகத்தின் தென்பகுதியிலும் மட்டுமே இருந்ததாகவே வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. வைகானஸ ஆகம நூல்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்தாலும், அவை தமிழகத்தில் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்றும்; இங்கிருந்த வைணவ ஆலயத்தின் பூசகக்குடியினரால் அவை உருவாக்கப்பட்டிருக்கலாமென்றும் ஶ்ரீனிவாஸ ராவ் கருதுகிறார்.

வைகானஸ மரபு குறித்த கல்வெட்டுச்சான்றுகள் தமிழகத்தில் பொயு 9க்குப் பின்னர்தான் கிடைக்கின்றன, குறிப்பாக ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில். ராஜராஜ சோழன் தமிழக ஆலயங்களை ஆகம முறைக்கு மாற்றியபோது வைணவத்துக்கு வைகானஸ மரபையே நெறியாக்கினார். பல்லவர்களின் காலகட்டத்தில் வைணவ ஆலயங்கள் சிறிய அளவிலேயே இருந்தன, அவை வெவ்வேறு பூசகக்குடியினரின் வழிபாட்டுரிமையின்கீழ் இருந்திருக்கலாம். சோழப்பேரரசு உருவாகி, ஆலயங்கள் பெரிதாகக் கட்டப்பட்டபோது வைகானஸம் என்னும் பொதுமரபின் கீழ் அந்த வைணவ வழிபாட்டுமுறைமை தொகுக்கப்பட்டிருக்கலாம்.

பொயு 11-ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபு பரவத் தொடங்கியது. பாஞ்சராத்ர மரபு ஒரு துணைமதம் என்னும் அளவுக்கு விரிவான நெறிகளும், ஆகமநூல்களும் கொண்டது. அந்த நெறிகளை ஏற்றுக்கொண்டு, அதில் இணைபவர் அனைவருக்கும் அது வழிபாட்டுரிமை அளித்தது. அதன்பொருட்டு ஐந்து அடையாளக்குறிகளை ஏற்றுக்கொள்ளுதல் (பஞ்ச சம்ஸ்காரம்) போன்ற சடங்குகளையும் வகுத்தது. ஆனால் வைகானஸ மரபு முழுக்க முழுக்க குலமுறையாகவே நீடித்தது. பாஞ்சராத்ர மரபிற்கு எதிராக வைகானஸ மரபு தன்னை இறுக்கமாக்கிக் கொண்டது. அதில் ஒருவர் கருவில் இருக்கையிலேயே விஷ்ணுவுக்கு உரியவராக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் விஷ்ணுபலி போன்ற சடங்குகள் உருவாயின.

வைகானஸ மரபு பாஞ்சராத்ர மரபில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும்பொருட்டு கறாரான பல நெறிகளை உருவாக்கிக் கொண்டது. வைகானஸத்தில் பரம்பரை, பந்தம் போன்ற கருதுகோள்கள் முக்கியமானவை. ஒருவர் வைகானஸர்களின் குடும்பத்தில் பிறந்தாகவேண்டும், தலைமுறை தலைமுறையாக அதற்குள் ஒரு குரு மரபிலேயே நீடிக்கவேண்டும், ஒரு வழிபாட்டாளர் குழுவுக்குள் இறுதிவரை இருந்தாகவேண்டும். அவருடைய நெறிகளும் ஆசாரமும் அந்த குழுவின் தலைவரால் கண்காணிக்கப்படும்

பிற்கால வைகானஸ நூல்கள் இந்த பிறப்பு சார்ந்த தொடர்ச்சியை மிகவும் வலியுறுத்துகின்றன. வைகானஸர்கள் தமிழில் எழுந்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் போன்ற பக்திநூல்களை ஏற்பதில்லை. தங்கள் மரபு பக்திநூல்களுக்கு முந்தையது என்றும், வேதத்திற்கு மட்டுமே அதிகாரபூர்வ ஏற்பு அளிப்பது என்றும் அவர்கள் கருதுகின்றனர். கிருஷ்ணயஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதை அவர்களின் மூலநூல்.

ராமானுஜர் வைகானஸ ஆகம முறைக்கு எதிரானவராக இருந்தார். ராமாஜுனரின் ஶ்ரீவைஷ்ணவ மரபு வைகானஸ மரபினரை ஆலயங்களில் இருந்து அகற்றி பாஞ்சராத்ர ஆகம முறையை நிறுவியது. இந்த போராட்டம் நூறாண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இன்று தென்னிந்தியாவில் ஏறத்தாழ பாதி வைணவ ஆலயங்களில் வைகானஸர்களே பூசகர்களாக நீடிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபே மிகப்பெரும்பாலும் உள்ளது. இந்த வழிபாட்டுரிமைப்போர் இன்றும் சாதிப்பூசலாக நீடிக்கிறது.

ஆசிரியர்கள்

வைகானஸ ஆகமங்களுக்கு விளக்கவுரை எழுதி அந்த மரபை வலியுறுத்தியவர்கள் என ந்ருசிம்ஹ வாஜ்பேயி, பட்ட பாஸ்கராச்சார்யா, அனந்தாச்சார்யா மற்றும் ஶ்ரீனிவாச மகி ஆகியோர் முக்கியமானவர்களாக கூறப்படுகின்றனர். இவர்களில் ஶ்ரீனிவாச மகி முதன்மையானவர். தச - வித - ஹேது-நிரூபணா என்னும் நூலை அவர் எழுதினார்

கேசவாச்சார்யாவின் அர்ச்சனா-நவனீதா (அர்ச்சனை முறை வரையறை) குறிப்பிடத்தக்க நூல். கேசவாச்சாரியா வைணவநோக்கில் பாதராயணரின் பிரம்மசூத்திரத்திற்கு ஒரு விருத்தியுரை எழுதினார்.

நிருசிம்ஹ வாஜபேயியின் மாணவரான பாஸ்கர பட்டாச்சார்யா, தெய்வீக சூத்திரம் மற்றும் மனுஷ்ய சூத்திரம் ஆகியவற்றுக்கு விளக்கவுரைகள் எழுதினார். சுந்தர ராஜர் எழுதிய பிரயோக விதி சிலைவழிபாட்டின் நெறிகளை வகுத்துரைத்த புகழ்பெற்ற நூல்.

வைகானச-மந்திர-பிரஸ்னம் (தெய்விகா சதுஸ்த்யம்) அல்லது மந்திர சம்ஹிதை என்னும் நூல் வைகானஸத்திற்கு அடிப்படையான தொன்மையான சடங்குகளை விளக்கும் குறிப்பிடத்தக்க நூல். ஆலய வழிபாட்டு முறைகளுக்கு தேவையான வேத மந்திரங்கள் அதில்தான் உள்ளன. அவை பெரும்பாலும் யஜுர்வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை .முதல் பாதியில் (சி. 1-4) கிருஹ்ய சூத்திரத்தின் மந்திரங்கள் உள்ளன. தெய்வீக சதுஸ்த்யம் எனப்படும் இரண்டாம் பாதியில் (அதிகாரம் 5-8) அத்ரி, காஸ்யபர், பிருகு, மரீசி ஆகிய நான்கு ரிஷிகளின் நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட கோவில் சடங்குகள் தொடர்பான பகுதிகள் உள்ளன.

ரகுபதி-பட்டாச்சார்யா (வாசுதேவா என்றும் அழைக்கப்படுபவர்) இயற்றிய மோக்ஷோபாய-பிரதீபிகா பன்னிரண்டு அத்தியாயங்களில் சரணாகதி , உணர்வுபூர்வ பக்தி, வழிபாடு (பிரபத்தி-பூர்வக-பகவத்-ஆராதனம்) ஆகியவற்றை முன்வைக்கிறார். மூலம் அவரது வெளிப்படையான வடிவத்தில் பிரம்மத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கிறது. ரகுபதி பட்டாச்சார்யாவின் நூல்களில் வைகானச மற்றும் பாஞ்சராத்ர மரபுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி உள்ளது.

வைகானஸ தத்துவம்

வேத அடிப்படை

வைகானஸர்கள் தங்களை தூயவைதிகர் என்றும் ,தங்கள் முறை முழுமையாகவே வேதம் சார்ந்தது என்றும் சொல்கிறார்கள். ஆனால் வேதங்களில் ஆலயவழிபாடு மற்றும் உருவ வழிபாடு இல்லை. வைகானஸ மரபு இவற்றை வேதங்களுக்கு வெளியே இருந்துதான் எடுத்துக்கொண்டுள்ளது. வழிபாட்டுச்சடங்குகள், ஆலயக் கட்டமைப்பு ஆகியவை தொன்மையான பழங்குடி மரபில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் வைகானச கிருஹ்ய சூத்திர அமைப்பு முன்பிருந்த வைதிக மரபைச் சேர்ந்த போதயான கிருஹ்ய சூத்திரம், ஆபஸ்தம்ப மந்திர பிரஸ்னம் மற்றும் சாமவேதத்தின் மந்திர பிராமணம் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது

பழைய வேத மரபுகளில் ஸ்ரௌத (வேள்வி) மற்றும் கிருஹ்ய (இல்லம்) அமைப்புகள் ஒன்றையொன்று ஈடுசெய்வதுபோல் உள்ளன. அதேபோலவே வைகானஸ மாபிலும் உள்ளது வைகானஸ மந்திரப் பிரஸ்னம் நூல் யஜூர்வேத மந்திரங்களை நேரடியாகவே ஆலயவழிபாட்டுக்கு பரிந்துரைத்து, வகுத்தும் அளிக்கிறது .

தாந்த்ரீகம்

வைகானஸ முறை வேதமரபுக்கு புறம்பான தாந்த்ரீக மரபில் இருந்து பல சடங்குகளை எடுத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக கருவிலேயே விஷ்ணுவுக்கு தாசர்களாக ஆக்கும் விஷ்ணுபலி சடங்கு, விஷ்ணுவை பூசகர் தன்னுள் எழுப்பிக்கொள்ளும் ஆத்ம சூக்தம் ஆகியவை தாந்த்ரீக மரபைச் சேர்ந்தவை.

சாங்கியம்

வைகானஸம் சாங்கிய தரிசனத்தை தன்னுடைய அருவ- உருவ தெய்வங்களின் இணைப்புக்குப் பயன்படுத்திக்கொள்கிறது. சாங்கிய தரிசனத்திலுள்ள புருஷ தத்துவம் , பரமபுருஷனாக அல்லது விஷ்ணுவாக இந்நூல்களில் உருவகிக்கப்படுகிறது. ரகுபதி பட்டாச்சார்யா சாங்கிய சித்தாந்தத்தின் விதிமுறைகளைப் பயன்படுத்தி வைகானச கோட்பாட்டை விளக்குகிறார்.

வைகானஸ மரபின்படி விஷ்ணு புருஷன், லட்சுமி பிரகிருதி. அவை ஒன்றை ஒன்று வரையறை செய்பவை, ஆகவே பிரிக்க முடியாதவை, அவற்றை தனித்தனியாக வழிபட முடியாது.

இருநிலை

பிற வைணவ மரபுகளைப்போலவே வைகானஸமும் இறைவனாகிய விஷ்ணுவை இரண்டு நிலைகளில் ஒரே சமயம் உருவகிக்கிறது. அறியமுடியக்கூடிய, வழிபடத்தக்க உருவங்கள். மற்றும் அறியமுடியாத, பிரபஞ்சரூபமான பிரம்மம். வைகானஸ மரபு என்பது தொன்மையான வேத ஞானதரிசனமாகிய பிரம்மம் என்னும் கருத்துருவை விஷ்ணுவாகவும், விஷ்ணுவை பல்வேறு வழிபாட்டு உருவங்களாகவும் மாற்றிக்கொள்வதற்கான தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக உருவானது. சடங்கு,அழகியல், தத்துவம் ஆகிய தளங்களில் வைகானஸம் இதைச் செய்கிறது.

விஷ்ணு இரண்டு நிலைகளில் இருக்கிறார். அறியப்படவே முடியாத பிரம்மம் நிஷ்கல வடிவம் எனப்படுகிறது (நி+கல. கலை என்பது அடையாளம். அடையாளங்களே அற்றது) சகல வடிவம் (அனைத்து அடையாளங்களும் கொண்ட வடிவம்). இதை புஷ்கல வடிவம் (பொலிவுத்தோற்றம்) என்றும் கூறுகிறார்கள்

இரண்டு ஆசிரியர்களான ஸ்ரீனிவாசா மகி தன்னுடைய தாத்பர்ய சிந்தாமணி நூலிலும் , ரகுபதி பட்டாச்சார்யா தன் நூலிலும் வைகானஸத்தின் அடிப்படையான இரட்டையிருப்பு கொள்கையை விளக்கிறார். நாராயணன் ஆகிய பிரம்மம் இரட்டை இயல்பு கொண்டது. எதுவாகவும் மாறாத, எதையும் இயற்றாத, எந்த விவரணைக்கும் அப்பாற்பட்ட நாராயணன் நிஷ்கலா என்னும் நிலையில் இருப்பவர். அவரே தன் வியூக வடிவங்கள் வழியாக சகலா என்னும் வடிவங்களை கொள்கிறார். இவ்விரு இயல்புகளும் உண்மையில் விஷ்ணுவின் லீலைகள், அவற்றை பிரிக்கமுடியாது.

நிஷ்கலா அம்சம் எங்கும் உள்ளுறையாக உள்ளது. பாலில் நெய், எள்ளில் எண்ணெய், பூவில் நறுமணம், பழத்தில் சாறு, மரத்தில் நெருப்பு என எல்லாவற்றிலும் உள்ளேயும் வெளியேயும் நிறைந்திருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் ஆகாயத்தில் திகழ்வதுபோல நிஷ்கலாவில் பிரபஞ்சமும் சகலா வடிவ தெய்வங்களும் திகழ்கின்றன. எல்லாவற்றிலும் ஆகாயமே இருப்பதுபோல நிஷ்கலா எங்கும் எல்லாவற்றிலும் உள்ளது. அவர் இருக்கிறாரா, இல்லையா என்றுகூட நம்மால் கூற முடியாது, ஏனென்றால் எல்லா அறியும்முறைமைகளுக்கும் அப்பாற்பட்டது.

உருவத்தெய்வ வழிபாடு

வைகானச ஆகம நூல்களின் ஞான பாத பகுதி, சடங்குகள் பற்றிய விவாதத்துடன் ஒப்பிடும்போது சுருக்கமாக உள்ளது. வைகானஸம் முதன்மையாக அருவமான தெய்வத்தை உருவத்தெய்வமாக உருவகித்து வாழ்க்கையின் ஒவ்வொரு அன்றாடச் செயலுடனும் இணைக்கிறது.

விஷ்ணுவை ஜபம், ஹுதா, அர்ச்சனை,தியானம் ஆகிய நான்கு வழிகளில் வழிபடலாம். ஒருவர் தன்னுள் உறைபவராக விஷ்ணுவை வழிபடலாம் (அந்தர்யாமி) அல்லது வெளியே திகழ்பவராக வழிபடலாம் (பஹிர்யாமி) ஆனால் மனித மனதின் எல்லைகளின் காரணமாக உருவம் இல்லாத நிஷ்கலா என்னும் வடிவத்தை மனிதர்களால் வழிபட முடியாது. மானுடமனம் வடிவமற்றதை விட வடிவங்களையும் அவற்றின் பண்புகளையும் வழிபடுவதே எளிதானது. விஷ்ணுவின் அழகிய, ஆற்றல் கொண்ட சிலைவடிவை தொடர்ச்சியாக பார்த்து, வழிபட்டு வருவதன் வழியாக பக்தன் அன்பும், பணிவும், உளவிரிவும் கொண்டவனாக ஆகிறான். முழுமையான சரணாகதி (பிரபத்தி) வழியாக அந்த சிலை மெய்யான விஷ்ணுவடிவமாகவே ஆகிவிடுகிறது. உலகியல் நன்மை (ஐகிஹம்) முக்தி (அமுஷ்மிகம்) ஆகியவற்றை அருள்கிறது.

ஐந்து வகை சிலைகள்.

வைகானச கோவிலில், கருவறையில் நிறுவப்பட்டுள்ள நிலையான சிலை (துருவ-பிம்பம் அல்லது துருவ-பேரம்) முதன்மையானது. அது முதன்மை தெய்வம் (அர்ச்சா-மூர்த்தி) எனப்படுகிறது. விஷ்ணு தத்துவத்தின் ஏதேனும் ஒரு வடிவில் அது அமையவேண்டும். அது மூன்று வடிவங்கள் கொள்கிறது

  • கௌதுக-பேரம் (பொதுவாக ரத்தினம், கல், தாமிரம், வெள்ளி, தங்கம் அல்லது மரம் ஆகியவற்றில் அமையும். தினசரி வழிபாடுகளையும் (நித்ய-அர்ச்சனை) பெறுகிறது
  • ஸ்நாபன பேரம் (பொதுவாக உலோகத்தால் ஆனது.) சடங்குகள் மற்றும் நீராட்டு (அபிஷேகம்) ஆகியவை உரிய நாட்களில் மட்டும் (நைமித்த-அர்ச்சனை) நிகழ்கிறது
  • உத்ஸவ-பேரம் ( உலோகத்தால் ஆனது) பண்டிகை நிகழ்வுகளுக்காகவும், ஊர்வலங்களில் எடுத்துச் செல்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மேலுமிரு வடிவங்கள் பின்னர் சேர்ந்தன

  • பாலி பேரம் ( உலோகம். இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும், ஜெய மற்றும் விஜயா ஆகியோருக்கும்)
  • போகபேரம் (உலோகம். தினசரி வழிபாடு, சிறப்பு சடங்குகள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் உணவுப் பிரசாதம் ஆகியவற்றிற்காந சிலைகள்)க

இந்த ஐந்து வடிவங்களும் சேர்ந்து பஞ்ச பேரம் அல்லது பஞ்ச மூர்த்திகளை எனப்படுகின்றன ராவின் அச்சுதா; மற்றும் பாலி பெராவின் அனிருத்தா.

நான்கு நிலைகள்

வைகானஸம் முன்வைக்கும் விஷ்ணுவின் நான்கு நிலைகள் குறிப்பிடத்தக்கவை

  • புருஷன்: பிரபஞ்சத்தின் சாரமான பேருள்ளம், முழுமையுள்ளம்
  • சத்யம் : பிரபஞ்சமே ஆகி நின்றுள்ள முழுமுதல் உண்மை
  • அச்சுதன்: பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றிலும் உணரப்படும் மாறாநெறி
  • அனிருத்தன்: எவருடைய எச்செயல்களும் எதனாலும் குறைவுபடாதிருக்கும் பிரபஞ்சத்தன்மை
ஐந்து வடிவங்கள்

பாஞ்சராத்ர ஆகமத்தில் விஷ்ணுவின் ஐந்து வடிவங்கள் சொல்லப்படுவதுபோல வைகானஸ மரபில் ஐந்து நிலைகள் சொல்லப்படுகின்றன

  • பர (இங்குள்ள எதுவும் அல்லாத, முழுமுதல்வடிவம். பரம்பொருள் வடிவம்)
  • வியூக (வெவ்வேறு உருவங்கள்)
  • விபவ (மானுடத்தோற்றம் கொண்ட உருவங்கள். அவதாரங்கள்)
  • அந்தர்யாமி (அனைத்துக்கும் உள்ளுறைந்து இருக்கும் நிலை)
  • அர்ச்ச (வழிபாட்டுச்சிலைகள்)
மந்திரங்கள்
மூலமந்திரங்கள்

வைகானஸ மரபு இரண்டு மந்திரங்களை முன்வைக்கிறது. பரவாசுதேவன், நாராயணன் ஆகிய இரண்டு பெருந்தெய்வ உருவகங்களைப் போற்றும் மந்திரங்கள் அவை

  • ஓம் நமோ பகவதே வாசுதேவாய
  • ஓம் நமோ நாராயணாய.
வழிபாட்டு மந்திரங்கள்
  • வைகானஸ மரபு மந்திரங்களை ஐந்து, பத்து, பதினைந்து என எண்ணிக்கைகளில் வகுத்துள்ளது. இவை கிருஷ்ண யஜுர்வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
  • பஞ்ச-சூக்தங்கள் (ஐந்து) விஷ்ணு, புருஷன், நாராயண, ஸ்ரீ தேவி(லட்சுமி) , ஃபூ தேவி (பூமி) அல்லது, விஷ்ணு, ந்ருசிம்ஹா, ஸ்ரீ, பூ மற்றும் ஏகாக்ஷர சூக்தம்.
  • தச சூக்தங்கள்(பத்து) ருத்ர, துருவ, துர்கா, ராதிரி, சரஸ்வதம், விஸ்வஜித், புருஷ, அகமர்ஷணம், கோதன மற்றும் ஆத்ம சூக்தங்கள்
  • பஞ்சதச (பதினைந்து) சூக்தங்கள் மேற்கண்ட இரண்டின் தொகுப்பு

இந்த சூக்தங்களில், ஆத்ம சூக்தம் (ஸ்ரீ வைகானஸ மந்திர பிரஸ்னம், 5.120.1-12 ) வைகானஸ மரபுக்கு மிக முக்கியமானது. அர்ச்சகர் தன்னை விஷ்ணுவுக்கு அர்ப்பணித்து தன்னில் விஷ்ணுவை ஏற்றுக்கொள்ளுதலுக்கு உரிய மந்திரம் இது.

மீட்பு

வைகானஸ மரபின்படி வீடுபேறு (மோக்ஷம்) என்பது விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைதல். அதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன

  • ஜபம் (மந்திரங்களை உளம்கொள்ளுதல்)
  • ஹூத (வேள்வி)
  • அர்ச்சனை (வழிபாடு)
  • தியானம் (யோகம், தியானம்)

ஆனால் வைகானஸ ஆகமநூல்கள் மரீசி சம்ஹிதை போன்றவை நான்கில் அர்ச்சனையே முதன்மையானது, அதுவே போதுமானது என்று சொல்கின்றன.

வழிபாட்டு முறை

வைகானஸ முறை உருவவழிபாட்டிற்கு முதன்மை இடம் அளிக்கும் ஒரு மரபு. பாஞ்சராத்ர மரபில் உருவவழிபாட்டுடன், கூடவே தத்துவஞானத்திற்கும் இடமுண்டு. வைகானஸம் தத்துவசிந்தனைக்கு இடமளிப்பதில்லை.

வைகானஸ மரபின் வழிபாடுகள் வைகானஸ கிருஹ்யசூத்திரம் வைகானஸ தர்மசூத்திரம் ஆகிய இரண்டு நூல்களால் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவை கிருஷ்ண யஜுர்வேத மரபைச் சேர்ந்த நூல்கள்.

மையச்சடங்குகள்

ஆலயங்களில் விஷ்ணுவின் நிஷ்கல எனப்படும் பிரபஞ்சத்தோற்றம் மையச்சிலையாக ஏதேனும் ஒரு வடிவில் நிறுவப்பட்டிருக்கும். (நின்ற, அமர்ந்த, படுத்த கோலங்களில்). சகலா எனப்படும் பல்வேறு விஷ்ணு உருவங்களும் வழிபடப்படும். நிஷ்கல வடிவம் முழுமுதல் தெய்வம், சகல தெய்வங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக வழிபடப்படுபவை. முக்தியை மட்டும் விரும்புபவர் நிஷ்கல வடிவை மட்டும் வணங்கலாம்.

வைணவராக தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட பக்தர் தேவையான உடல், மனத் தூய்மையை அடைந்தபின் விஷ்ணுவின் சகல உருவத்தை நீராட்டுவதுடன் சடங்குகள் தொடங்குகின்றன. சகல விஷ்ணுவை நிஷ்கல விஷ்ணுவுடன் இணைத்து ஒற்றைப்பெருந்தெய்வமாக உருவகிக்கும் மந்திரங்கள் வழிபாட்டுக்காக உச்சரிக்கப்படுகின்றந. தன்னை விஷ்ணுவுக்கு அர்ப்பணம் செய்யும் ஆத்மசூக்தம் என்னும் மந்திரம் உச்சரிக்கப்படுகிறது. விஷ்ணுவின் பரம்பொருள் வடிவை தியானிக்கும் மந்திரங்கள் தொடர்ந்து உளம்கொள்ளப்படுகின்றன. நிஷ்கல விஷ்ணுவை சகல விஷ்ணுவின் உருவங்களில் தோன்றுமாறு மந்திரங்கள் வழியாக வேண்டிக்கொள்ளப்படுகிறது.

அதன்பின் சகல விஷ்ணுவுக்கு அரசர்களுக்குரிய 16 வகையான உபச்சாரங்கள் செய்யப்படுகின்றன. (சந்தனம் முதலியவை பூசுதல், நறுமணம் காட்டுதல், ஆடை அணிகள் அணிவித்தல், தாம்பூலம் அளித்தல் முதலியவை). விஷ்ணுவுக்கு வேள்வி (ஹோமம்) செய்யப்படுகிறது. நெருப்பில் அவி படைக்கப்படுகிறது. விஷ்ணுவின் சகல உருவங்களுக்கு பலி அளிக்கப்படுகிறது. இது உயிர்ப்பலியின் குறியீட்டு ரீதியான சடங்காக இருக்கும். அதன்பின் விஷ்ணுவுக்கு படையல் (நைவேத்யம்) போடப்படுகிறது. அது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும்.

துணைச்சடங்குகள்

வைகானஸ ஆகமம் கடைப்பிடிக்கப்படும் ஆலயங்களில் ஶ்ரீபலி எனப்படும் ஒரு சடங்கு உண்டு. ஆலயத்தைச் சுற்றி நிறுவப்பட்டிருக்கும் பலிக்கற்களில் குடிகொள்ளும் ஏராளமான தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் பலி அளிக்கப்படுகிறது. (சிவந்த மலர், சோறு ஆகியவை பலியாக அளிக்கப்படும்) இது பலிபிரதட்சிணை என்றும் சொல்லப்படுகிறது. இறுதியாக புஷ்பாஞ்சலி என்னும் மலர்வழிபாடு நடைபெறுகிறது.

ஆலய அமைப்பு

வைகானச கோவில் அமைப்பில், விஷ்ணுவின் நான்கு அம்சங்களும் விஷ்ணுவின் மையச்சிலையைச் சுற்றி அமைந்துள்ள நான்கு தெய்வங்களாக காட்சிப்படுத்தப்படுகின்றன: கிழக்கு நோக்கி புருஷன்; தெற்கு நோக்கி சத்யம்; மேற்கு நோக்கி அச்சுதன்; வடக்கே அனிருத்தன் (பிரகதி சதுர் - திக்ஷு).

விஷ்ணுவின் நான்கு இயல்புகள்ல அல்லது விமானங்கள் பிரம்மனின் நான்கு காலாண்டுகளாக (பாதா) கருதப்படுகிறது: ஆமோதா, பிரமோதா, சம்மோதா மற்றும் வைகுண்டலோகம் (சாயுஜ்யம்) . அதில் மிக உயர்ந்தது பரம பதமம், விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டம் (விஷ்ணோத் பரமம் பதம்).

வைகானஸ மரபின்படி ஜீவாத்மா நான்கு தொடர்ச்சியான நிலைகளில் வைகுண்டத்தின் வட்டத்திற்குள் நுழையும் போது ஒவ்வொரு கட்டமும் ஒரு இறையனுபவமாக சித்தரிக்கப்படுகிறது. இவ்வடிவிலேயே விஷ்ணு ஆலயங்களின் கோபுரங்கள் அமைக்கப்படும்.

  • ஆமோதம் (விஷ்ணுவின் உலகுவடன் இருக்கும் இன்பம் (சாலோக்யா) ஜீவாத்மாவுக்கு கிடைக்கிறது. தெய்வம் அனிருத்தன்)
  • பிரமோதம் (விஷ்ணுவின் அருகாமை (சாமீப்யா) அமைகிறது. தெய்வம் அச்சுதன்)
  • சாமோதம் ( விஷ்ணுவின் அதே வடிவை தானும் அடையும் இன்பம் (ச-ரூப்யா). தெய்வம் சத்ய)
  • வைகுண்டம். (ஜீவாத்மா கடவுளான வியாபி-நாராயணனுடன் தானும் இணைகிறது (சாயுஜ்யம்) தெய்வம் பரமபுருஷன்)

வைகானஸ ஆலயங்கள்

வைகானச ஆகமத்தைப் பின்பற்றும் சில முதன்மையான பெருமாள் கோயில்கள்

  • வெங்கடேஸ்வரா கோவில், திருமலை
  • ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
  • யோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மட்டப்பள்ளி
  • அருள்மிகு வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம்
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவில் (சின்ன திருப்பதி), துவாரகாத்திருமலை, எலுரு மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ வீரநாராயண சுவாமி கோவில், பெலவாடி, சிக்மகளூர் மாவட்டம், கர்நாடகா
  • ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் (கோணசீமா திருப்பதி), வடபள்ளி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயில் (திருமலை கிரி), திருமலை கிரி, ஜக்கையாபேட்டை, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
  • ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் பல்லாப்பூர் பெட், பெங்களூர் கர்நாடகா
  • ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில், ஸ்ரீகிரி, ஓங்கோல், ஆந்திரப் பிரதேசம்
  • ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில், மங்களகிரி, ஆந்திரப் பிரதேசம்
  • ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில், வேதாத்ரி, ஜக்கய்யப்பேட்டை, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ பிலிகிரிரங்கசுவாமி கோவில் பிலிகிரிரங்கனா பெட்டா, எலந்தூர் Tq சாமராஜநகர் மாவட்டம் கர்நாடகா
  • ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில், கேரே தொண்டனூர் பாண்டவபுரா, மாண்டியா மாவட்டம், கர்நாடகா
  • ஸ்ரீ வீராஞ்சநேய சுவாமி கோவில் மூலபாகிலு , கோலார் மாவட்டம், கர்நாடகா
  • ஸ்ரீ வால்மீகி ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் சஜ்ஜனராவ் வட்டம் பெங்களூரு கர்நாடகா
  • கிரேட்டர் சிகாகோவின் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி (பாலாஜி) கோவில்
  • ஸ்ரீ லக்ஷ்மி கோவில் Ashland Boston US
  • சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்
  • டெக்சாஸின் மலர் மேடு இந்து கோவில்
  • ஸ்ரீ தேவநாதன் பெருமாள் கோவில் திருவஹிந்தராபுரம், கடலூர், இந்தியா
  • ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் புதுச்சேரி, இந்தியா
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில், திருமலை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்
  • ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில், குராசா, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
  • ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், தரகதுரு, மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், மல்லவோலு, மச்சிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், வள்ளிபாலம், ரேபள்ளே, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
  • ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில், கோடாலி, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
  • ஸ்ரீ லக்ஷ்மிநரசிமா சுவாமி கோவில், சோளிங்கர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமி கோவில், பெத்தமங்களா, கோலார் மாவட்டம், கர்நாடகா, இந்தியா
  • ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில், வெளியநல்லூர் கிராமம், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், மல்லவோலு, மச்சிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ கள்ளழகர் கோயில், திருமாலிருஞ்சோலை, அழகர்கோயில், மதுரை, தமிழ்நாடு, இந்தியா.
  • ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, ராம்நாடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ வேகு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில், சக்கரமல்லூர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
  • ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில், மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ கேசவ சுவாமி கோவில், கந்த்ரேடு, பெடபுடி மண்டலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்.
  • ஸ்ரீ திருவேங்கடமுடியன் கோவில், தெற்கு திருப்பதி, அரியக்குடி சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு.
  • வெங்கடாசலபதி கோவில், குமாரபுரம் கிராமம்
  • ஸ்ரீமத் காத்ரி லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில், கதிரி, ஆந்திரப் பிரதேசம்.
  • மதனகோபாலசுவாமி கோயில், டாங்கேரு, கே. கங்காவரம் மண்டலம், கோனசீமா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ பூ சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், சீவாலா, கே. கங்காவரம் மண்டலம், கோனசீமா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
  • ஸ்ரீ சீதாராமச்சந்திரசுவாமி கோயில், கோட்டா, கே. கங்காவரம் மண்டல், கோனசீமா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவில், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
  • ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
  • ஸ்ரீ கஜேந்திர வரத ராஜ பெருமாள் கோவில், திருப்பத்தூர் (635601), தமிழ்நாடு
  • ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், ஸ்ரீநிவாச மங்காபுரம், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
  • ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோவில், நாகலாபுரம், ஆந்திரப் பிரதேசம்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jun-2024, 09:00:44 IST