under review

மானசாதேவி: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 1: Line 1:
[[File:Manasadevi.jpg|thumb]]
[[File:Manasadevi4.jpg|thumb|மானசாதேவி ஆஸ்திகனுடன் (வெண்முரசு முதற்கனல் நாவலுக்கு சண்முகவேல் வரைந்த படம்)]]
[[File:Manasa3.webp|thumb]]
மானசாதேவி நாகர்குலத்து கடவுள். மானசாதேவி தொன்மங்களின் படி காசியபரின் மகள், முனிவர் ஜரத்காருவின் மனைவி, வாசுகியின் தங்கையாக கருதப்படுகிறாள். மகாபாரத்தத்தில் ஜனமேஜெயன் யாகத்தை தடுக்க வந்த ஆஸ்திகன் என்னும் நாகனின் அன்னை.

== பெயர் காரணம் ==
== பெயர் காரணம் ==
[[File:Manasa1.jpg|thumb]]
[[File:Manasa1.jpg|thumb]]
[[File:Manasadevi.jpg|thumb]]
மானசாதேவி தேவி பாகவத புராணத்தின் படி காசியப பிரஜாபதியின் மனதில் பிறந்ததால் மானசாதேவி எனப் பெயர் பெற்றாள். (மானசா - மனதில் உதித்தவள்). மனதின் கடவுள் என்பதால் மானசாதேவி எனப் பெயர் பெற்றாள் எனக் கூறும் புராணங்களும் உண்டு. மூன்று யுகங்களாக கிருஷ்ணனின் வருகையை மனதில் பிராத்தித்தவள் என்பதால் மானசாதேவி எனப் பெயர் பெற்றாள் என பாகவதம் குறிப்பிடுகிறது. மானசாதேவிக்கு மொத்தம் பன்னிரெண்டு பெயர்கள்.

Line 23: Line 23:

== மானசாதேவி மந்திரம் ==
== மானசாதேவி மந்திரம் ==
[[File:Manasa3.webp|thumb]]
“ஓம் ஹிரீம்-ஸ்ரீரீம்-க்ளீம்-ஐய்ம் மானசாதேவியே ஸ்வாகா”
“ஓம் ஹிரீம்-ஸ்ரீரீம்-க்ளீம்-ஐய்ம் மானசாதேவியே ஸ்வாகா”

Line 71: Line 72:

== கோவில்கள் ==
== கோவில்கள் ==
[[File:Manasadevi4.jpg|thumb|மானசாதேவி ஆஸ்திகனுடன் (வெண்முரசிற்கு சண்முகவேல் வரைந்த படம்)]]
ஹரியானாவிலுள்ள பஞ்சகுளா என்னும் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மகாராஜா பாட்டியாலா கட்டிய மானசாதேவி கோவில் உள்ளது. ஹரித்துவாரில் இமயமலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சிவாலிக் மலையில் மானசாதேவிக்கு தனி கோவில் ஒன்றுள்ளது.

Revision as of 22:43, 17 May 2024

மானசாதேவி ஆஸ்திகனுடன் (வெண்முரசு முதற்கனல் நாவலுக்கு சண்முகவேல் வரைந்த படம்)

மானசாதேவி நாகர்குலத்து கடவுள். மானசாதேவி தொன்மங்களின் படி காசியபரின் மகள், முனிவர் ஜரத்காருவின் மனைவி, வாசுகியின் தங்கையாக கருதப்படுகிறாள். மகாபாரத்தத்தில் ஜனமேஜெயன் யாகத்தை தடுக்க வந்த ஆஸ்திகன் என்னும் நாகனின் அன்னை.

பெயர் காரணம்

Manasa1.jpg
Manasadevi.jpg

மானசாதேவி தேவி பாகவத புராணத்தின் படி காசியப பிரஜாபதியின் மனதில் பிறந்ததால் மானசாதேவி எனப் பெயர் பெற்றாள். (மானசா - மனதில் உதித்தவள்). மனதின் கடவுள் என்பதால் மானசாதேவி எனப் பெயர் பெற்றாள் எனக் கூறும் புராணங்களும் உண்டு. மூன்று யுகங்களாக கிருஷ்ணனின் வருகையை மனதில் பிராத்தித்தவள் என்பதால் மானசாதேவி எனப் பெயர் பெற்றாள் என பாகவதம் குறிப்பிடுகிறது. மானசாதேவிக்கு மொத்தம் பன்னிரெண்டு பெயர்கள்.

உருவம்

Manasa2.webp

மானசாதேவி அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கரங்களில் இரண்டில் பத்மமும், ஒன்றில் நாகமும் கொண்டும் ஒரு கையை அபய ஹஸ்தத்தில் காட்டி நாகங்களால் ஆன கிரீட மகுடம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்.

பிறப்பு

மனிதர்களின் வேட்டைக்கு உலகிலுள்ள பாம்புகள் அனைத்து இரையான போது அவர்கள் காசியப பிரஜாபதியிடம் சென்று முறையிட்டனர். காசியபர் பிரம்மாவிடம் முறையிடவே, பிரம்மா காசியபரை தவத்திலிருந்து மந்திரங்களை உருவாக்கும்படி வேண்டினார். காசியபர் மந்திரங்களை உருவாக்கிய போது அவற்றுடன் மானசாதேவியும் பிறந்தாள் என தேவி பாகவதம் ஒன்பதாவது ஸ்கந்தம் குறிப்பிடுகிறது.

தவம்

மானசாதேவி தன் இளம் வயதிலேயே கைலாச மலைக்குச் சென்று சிவனை வேண்டி தவமிருந்தாள். அவள் தவத்தின் பயனாக சிவன் அவள் முன் தோன்றி அஷ்டக்சாரி எனும் ஸ்ரீ கிருஷ்ண மந்திரமும், த்ரைலோகியமங்கலம் எனும் ஸ்ரீ கிருஷ்ண கவசமும் வழங்கினார். மானசாதேவி அவற்றை அணிந்து கிருஷ்ணனை நோக்கி மூன்று யுகங்களாக தவமிருந்தாள். மானசாதேவியின் தவத்தின் பயனாக கிருஷ்ணர் துவாபர யுகத்தின் இறுதியில் தோன்றி மானசாதேவிக்கு அவள் வேண்டும் வரங்களைக் கொடுத்தார். மேலும் அவள் உலகமும் முழுவதும் வழிபடப்படுவாள் என்றும். தன்னை வேண்டி தவமிருப்பவர்களுக்கு வரம் வழங்கும் ஆற்றலும் அவள் பெறுவாள் என கிருஷ்ண வரமருளியதாக பாகவத புராண தொன்மம் குறிப்பிடுகிறது.

திருமணமும் நிராகரிப்பும்

மானசாதேவியை கசியபர் ஜரத்காரு என்னும் முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஒரு முறை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தன் மனைவியின் பாதத்தில் தலைவைத்து ஒரு முனிவர் படுத்திருப்பதைக் கண்டு கோபமுற்ற ஜரத்காரு முனிவர் அவளை நிராகரித்து சென்றார். அப்போது பிரம்மா ஜரத்காரு முனிவர் முன் தோன்றி ’ஒரு குழந்தை பிறக்கும் முன் முனிவர் தன் மனைவியை நீங்கி செல்வது முறையல்ல’ எனக் கூறவே ஜரத்காரு தன் தவ வல்லமையால் மானசாதேவியை கருவுற செய்தார்.

ஜரத்காரு தவ வல்லமையால் மானசாதேவி கருவுற்ற ஆஸ்திகனை பெற்றெடுத்தாள். ஆஸ்திகன் வளர்ந்து ஜனமேஜெயன் யாகத்தை நிறுத்த சென்ற போது மானசாதேவி மீண்டும் கைலாசம் சென்று பரமசிவன் பார்வதியுடன் இணைந்தாள்.

மானசாதேவி மந்திரம்

Manasa3.webp

“ஓம் ஹிரீம்-ஸ்ரீரீம்-க்ளீம்-ஐய்ம் மானசாதேவியே ஸ்வாகா”

இம்மந்திரத்தை ஒருவர் ஐந்து லட்சம் முறை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு கூறி இம்மந்திரத்தின் ஆற்றல் பெற்றவர் தன்வந்திரிக்கு இணையாகவும், அமிர்தத்தை உண்டவராகவும் கருதப்படுவார்.

மானசாதேவியை மகாசங்கராந்தி அன்று தனி அறையில் வைத்து வழிபடுவதும் வழக்கில் உள்ளது.

வேறு பெயர்கள்

Manasa Devi.jpg

ஜரத்காரு

மானசாதேவி கிருஷ்ணனின் வருகையை எண்ணி மூன்று யுகங்களாக தவமிருந்தாள். மானசா தவத்திலிருந்த போது அவளது உடலும் ஆடை அணிகலன்களும் தேய்ந்து ஒன்றாகின. மூன்று யுகம் கழிந்து மானசாதேவியின் தவத்தில் கிருஷ்ணன் பிறந்த போது கிருஷ்ணன் ஜரத்காரு எனப் பெயரிட்டார் என பாகவத புராணம் குறிப்பிடுகிறது.

ஜகத்கௌரி

மானசாதேவி மனதின் கடவுளாகவும், ஒவ்வொரு மனதரின் உள்ளுர்ணவிலும் வாழ்பவளாகவும், உலகம் முழுவதும் வழிபடப்படுபவளாகவும் கருதப்படுவதால் ஜகத்கௌரி எனப் பெயர் பெற்றாள்.

மானசா

காசியபரின் மனதில் பிறந்ததால் மானசா.

பார்க்க: பெயர் காரணம்

சித்தயோகினி

தன் தவத்தின் பயனாக யோக நிலை பெற்றதால் சித்தயோகினி எனப் பெயர் பெற்றாள்.

வைஷ்ணவி

மகாவிஷ்ணு மேல் தீராத பக்தி கொண்டதால் வைஷ்ணவி

நாகபாகினி

வாசுகியின் (நாகர் குலத்தின் அரசன்) தங்கை என்பதால் நாகபாகினி

சைவி

சிவனை வேண்டி தவமிருந்ததால் சைவி

நாகேஸ்வரி

ஜனமேஜெயன யாகத்திலிருந்த நாகங்களை காக்க தன் மகன் ஆஸ்திகனை அனுப்பியதால் நாகேஸ்வரி

ஜரத்காருப்ரியா

தன் கணவர் ஜரத்காரு மேல் கொண்ட காதலால் ஜரத்காருப்ரியா

ஆஸ்திகமாதா

யோகி ஆஸ்திகனின் அன்னை என்பதால் ஆஸ்திகமாதா.

விசாகரி

விஷத்தை அறுத்த கடவுள் என்பதால் விசாகரி எனப் பெயர் பெற்றாள்.

மகாஞானவதி

ஞானமும், யோகம், ஆற்றலும் ஒருங்கே பெற்றதால் மகாஞானவதி என்றழைக்கப்படுகிறாள்.

கோவில்கள்

ஹரியானாவிலுள்ள பஞ்சகுளா என்னும் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மகாராஜா பாட்டியாலா கட்டிய மானசாதேவி கோவில் உள்ளது. ஹரித்துவாரில் இமயமலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சிவாலிக் மலையில் மானசாதேவிக்கு தனி கோவில் ஒன்றுள்ளது.

நாட்டார் தெய்வம்

மானசாதேவியை நாகர் குலத்து கடவுளாக வழிபடும் வழக்கம் இன்றும் வழக்கில் உள்ளது. மானசாதேவியின் உருவ வழிபாடு ஆந்திராவில் பல பகுதிகளிலும், கர்நாடகத்திலும் வழிபாட்டில் உள்ளது. ஹம்பியிலுள்ள விருபாக்‌ஷர் ஆலயத்தில் மானசாதேவிக்கு தனி சன்னதி ஒன்றுள்ளது.

தமிழ் நாட்டார் கதைப்பாடல்களில் முத்தாரம்மன் கதைப்பாட்டில் மானசாதேவி வழிபாடு பற்றிய குறிப்பு உள்ளது. முத்தாரம்மன் கதைப்பாட்டிலுள்ள நாக கன்னி என்னும் தெய்வ வழிபாடு பற்றி வரும் குறிப்புகள் அனைத்தும் மானசாதேவியின் தொன்மங்களுடன் தொடர்புடையது என ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.

மானசரோவர்

மானசரோவர் என்றழைக்கப்படும் மானசா ஏரி இமய மலையில் உள்ளது. அர்ஜுனன் இந்த ஏரிக்குச் சென்றதாக மகாபாரதத்தின் சபா பருவம் நான்காவது ஸ்லோகம், எட்டாவது பாகத்தில் உள்ளது. இந்த ஏரியின் கரையில் சிவ வழிபாடு நிகழ்த்துவது இன்றும் வழக்கில் உள்ளது. இந்த ஏரியில் குளிப்பவர்களுக்கு மோட்ச நிலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மானசரோவருக்கு உஜ்ஜானிக்கா என்ற பெயரும் உள்ளது.

வசிஸ்டரும், அருந்ததியும் இங்கே மோட்சம் அடந்ததாக வனப்பருவத்தின் பதிநான்காவது ஸ்லோகம், நூற்றிமுப்பதாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. பீஷ்மர் அம்பு படுக்கையிலிருந்த போது ஒரு முனிவர் அன்ன வடிவெடுத்து பீஷ்மரை காணச் சென்றதாக பீஷ்ம பருவத்தின் தொன்னூற்றி எட்டாவது ஸ்லோகம், நூற்றிபத்தொன்பதாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. இந்திரனை உபஸ்ருதி காட்டிக் கொடுத்த போது இந்திரன் மானசரோவரிலுள்ள தாமரை ஒன்றிலுள் மறைந்து வாழ்ந்தான் என்று மகாபாரத கதையில் உள்ளது.

பிரம்மா இந்த ஏரியை உருவாக்கியதாகவும், சராயு நதி இங்கிருந்து உதிப்பதாகவும் ராமாயணத்தின் பால காண்டம் குறிப்பிடுகிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.