being created

எஸ். தர்மாம்பாள்

From Tamil Wiki

எஸ். தர்மாம்பாள்( சரஸ்வதி, கரந்தை எஸ். தர்மாம்பாள், கரந்தை தர்மாம்பாள்) மருத்துவர், சமூகப் போராளி. முதன்முதலில் தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். திராவிடக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த சாமிநாதன் செட்டியார், பாப்பம்மாள் என்ற நாச்சியார் அம்மையார் இணையருக்கு தருமாம்பாள் 1890-ம் ஆண்டு திருவையாறில் பிறந்தார். இயற்பெயர் சரஸ்வதி.பின்னாளில் தருமாம்பாள் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை சாமிநாதன் துணி வியாபாரம் செய்தார்.அவரின் நண்பர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை.

குழந்தைப் பருவத்திலேயே, தருமாம்பாள் தன் பெற்றோரை இழந்துவிட்டார். லட்சுமி என்ற பெண்னிடம் வளர்ந்தார். என்ற பெண்மணி தான் வளர்த்து வந்தார். பள்ளிக் கல்வி கிட்டவில்லை. வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியனார், மணி திருநாவுக்கரசு ஆகியோரிடம் தமிழும், பண்டித நாராயணி அம்மையாரிடத்தில் தெலுங்கும் கற்றார். ஆங்கிலம், மலையாள மொழிகளில் ஓரளவிற்குத் தேர்ச்சி பெற்றார்.

அவர் சிறுவயது முத நாடகக் கலை மீது பற்று மிகக் கொண்டிருந்தார்.

தனி வாழ்க்கை

தர்மாம்பாள் அக்காலத்தில் நாடகங்களில் நாயகன் பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த குடியேற்றம் முனிசாமி நாயுடுவை சாதி மறுத்து மணந்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் சிலகாலம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தார். பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்து எண் 330. தங்கச்சாலையில் வாழ ஆரம்பித்தார்.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு தானே முயன்று கற்றும், பயிற்சிகள் மேற்கொண்டும் அதில் தேர்ச்சி பெற்றார். அவர் சித்தமருத்துவராகப் பணியாற்றத் தொடங்கிய 1930-ஆம் ஆண்டில் அலோபதி மருத்துவர்கள் அதிகம் இருக்கவில்லை. பெரும் பகுதி மக்கள் சித்தமருத்துவர்களையே தேடி நாடி வந்தனர்.

தங்கச் சாலையில் புகழ்பெற்ற புகழ்பெற்ற சித்த மருத்துவராக மக்களுக்கு மருத்துவம் செய்தார் டாக்டர் தருமாம்பாள். ஏழை மக்களின் துயர் போக்கும் சேவையாகவே தனது மருத்துவத் தொழிலை அன்னை தருமாம்பாள் தங்கச் சாலையில் செய்து வந்தார்கள். பல மக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

சென்னை மாநில முதல்வர் மேதகு பனகல் அரசர் நம் நாட்டு மருத்துவப் பிரிவுகள்-(சித்த மருத்துவம், ஆயுர் வைத்தியம், யுனானி மருத்துவம்-) செழித்திட இந்திய மருத்துவப் பள்ளியினை 1925-1926 இல் எக்மோர் பாந்தியன் சாலையில் தோற்றுவித்தார். 330 தங்கச்சாலை டாக்டர் தருமாம்பாளின் நிரந்தர முகவரியாயிற்று.

சமூகப் பணிகள்

பெண் விடுதலைக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த டாக்டர் தருமாம்பாள், பல பெண்களுக்குக் கல்வி கற்பதற்கும், கல்லூரிகளில் சேர்ந்திடவும், வேலை வாய்ப்பினைப் பெறுதற்கும் உறுதுணையாக இருந்தார். தமிழ் மாதர் கழகத்தைத் தோற்றுவித்து பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியானார். தமிழ் மாதர் கழகத்தின் தலைவராக, பண்டிதர் நாராயணி அம்மையாரும், செயலாளராக டாக்டர் தருமாம்பாளும் பொறுப்பேற்றுக் பெண்கல்விக்கான முன்னெடுப்புகளைச் செய்தனர். மூடப்பழக்கங்களுக்கு எதிராகப் பகுத்தறிவுப் பிரச்சாரமும் செய்தார், பல இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்வித்தார். பல இளையவர்களுக்கு சாதி மறுப்புத் திருமணமும் செய்வித்தார்.

தேவதாசி முறை ஒழிப்பு

சட்டமன்றத்தின் முதல்பெண் உறுப்பி னர் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நவம்பர் 5, 1927 அன்று சட்டசபையில் தேவதாசி முறையை ஒழிக்கச் சட்டமுன் வரைவைத் பேரவையில் தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் அவரைச் சார்ந்தவர்களும் அதை எதிர்த்தனர். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திருவிக, பெரியார் ஆகியவர்களுடன் டாக்டர் தருமாம்பாள் தேவதாசி முறைக்கு எதிராகப் போராடினர். முத்துலட்சுமி ரெட்டியின் மசோதாவிற்கு அவர்கள் ஆதரவு தேடி வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்தனர். தருமாம்பாளுக்கு மக்களிடமிருந்த செல்வாக்கு அவருடைய போராட்டத்தின் பலமாக இருந்தது. டாக்டர் முத்துலட்சுமி யின் மசோதாவிற்குப் பொதுமக்களின் ஆதரவு கிடைத்தது. சட்டமன்றத்தில் மசோதா வெற்றிகரமாக நிறை வேறியது.

பெண்கள் மாநாடு

தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு நவம்பர் 13, 1938 அன்று சென்னை ஒற்றைவாடை நாடக அரங்கில் திராவிட இயக்கத்தின் முன்னெடுப்பில் நடைபெற்றது. அன்னை தருமாம்பாள், மலர்முகத்தம்மையார், மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் மாநாட்டு அமைப்பாளர்கள். மாநாட்டு அலுவலகம் அன்னை தருமாம்பாள் இல்லத்தில் செயல்பட்டது. இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட பெண்கள் மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தமிழ்க் கொடியை அன்னை மீனாம்பாள் சிவராஜ் ஏற்றினார்.மறைமலை அடிகளாரின் மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையார் மாநாட்டுத் தலைவர். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.ஈ.வெ. ராமசாமியப் 'பெரியார்' என் அழைக்கும் தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

1938-ல் பள்ளிகளில் இந்திமொழி கற்பது கட்டாயம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதியொட்டி இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது.

தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு முடிந்த மறுநாள் நவம்பர் 14, 1938 அன்று தருமாம்பாள் தலைமையில் பெண்கள் இந்தி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10,000 க்கும் மேற்பட்ட பெண்களும் பொதுமக்களும் திரண்டு-“இந்தி ஒழிக! தமிழ் வாழ்க” என்ற முழக்கத் துடன் ஊர்வலமாகச் சென்று, சென்னை தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். காவலர்கள் பெண்தலைவர்களை கைது செய்தனர். தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர் முகத்தம்மையார், திருவாரூர் பாவலர் பாலசுந்தரத்தின் மனைவி பட்டு அம்மாள், தருமாம்பாளின் மருமகள் சீதாம்மாள் (நச்சினார்க்கினியன் 3 வயது, மங்கையர்க்கரசி 1 வயது இரு குழந்தைகளுடன்)

தமிழ்ப்பணிகள்

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர் களுக்காகவும் அன்னைதருமாம்பாள் பெரும் அளவில் உதவியுள்ளார்.கருந்தட்டாங் குடியிலிருந்த தன் வீட்டை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தமிழ் நாடு முழுதும் பள்ளியில் பயிலும் மாணவர் களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் பெறவும், பேச்சாற்றல், எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவும் 'சென்னை மாணவர் மன்றம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.பெரும் பொருள் திரட்டி இந்த அமைப்புக்கு சொந்தக் கட்டடம் ஒன்றை உருவாக்கினார். மயிலை சிவமுத்து நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கட்டடம் வடசென்னையில் செயல்பட்டு வருகிறது.

1940-ல் தமிழாசிரியர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும் ஊதியம் போன்றவற்றில் இருந்த வேறுபாடுகளைக் களைய மாநிலத் தமிழாசிரியர் கழகத்தினர் போராடி வந்தனர். தருமாம்பாள் தமிழா சிரியருக்கு ஆதரவாகப் போராடினார். தமிழாசிரியர் ஊதியத்தை மற்ற ஆசிரியர்கள் ஊதியத்திற்கு இணையாக உயர்த்தாவிட்டால் பெண்கள் எல்லாம் ஒன்று கூடி இழவு வாரம் கொண்டாடுவோம் என்று அன்னை தருமாம்பாள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். அன்று தமிழக அரசின் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாகத் தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க ஆணையிட்டார்.

தமிழிசை

1940 க்கு முன் தமிழ் நாட்டில் இசை மேடைகளில் தமிழ்ப்பாடல்கள் இசைப்பதில்லை.தமிழில் பாடுதற் கேற்ற இசைப்பாடல்கள் இல்லை என்று இசைவாணர்கள் செப்பினர், இது அப்பட்டமான பொய்க் கூற்றாகும்.

தமிழிலேயேபாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்தவர்கள் அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை எனும் மூன்று பெருமக்கள் ஆவர்.

பொதுவாக கருநாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அறியப்படும் தியாகய்யர், சியாமாசாஸ்திரிகள், முத்துச் சாமி தீட்சிதர் ஆகியோரைவிட, இவர்கள் காலத்தால் முற்பட்டவர்கள்.



சமூகப் பணிகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.