under review

வே.க. நாகமணிப்புலவர்

From Tamil Wiki

வே.க. நாகமணிப்புலவர் (1891-1933) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வழிநடைச்சிந்து முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவில் வே.க. நாகமணிப்புலவர் 1891-ல் பிறந்தார். வீரகத்திப்பிள்ளை ஆசிரியரின் திண்ணைப்பள்ளியில் பயின்றார்.தில்லையம்பல வித்தியாசாலை சோமசுந்தர ஐயரிடத்தில் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றார். சிறிதுகாலம் யாழ்ப்பாணம் வணிகர்களுக்கு கணக்கெழுதும் தொழிலில் இருந்தார். நயினாத்தீவில் கிராம சங்கத்தலைவராக ஐந்தாண்டுகாலம் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

வே.க. நாகமணிப்புலவர் 1902-ல் யாழ்ப்பாணத்தில் தர்மசீலரான வை. வல்லிபுரம் கட்டுவித்த கெங்கா சத்திரத்தின் பேரில் காரைதீவில் இருந்து வரும் வழி மார்க்கங்களைக் குறித்து 'வழிநடைச்சிந்து' என்ற நூலை நாகமணிப் புலவர் இயற்றினார். இது வே.க.த. சுப்பிரமணியம் அவர்களால் ஸ்ரீ கணேச இயந்திரசாலையில் 1934-ல் பதிப்பிக்கப்பட்டது. 'நயினை நிரோட்டக யமகவந்தாதி', 'நயினை மான்மியம்' ஆகிய நூல்களையும் எழுதினார்.

நூல்கள் பட்டியல்

சிந்து
  • வழிநடைச்சிந்து
பிற
  • நயினை நிரோட்டகயமகவந்தாதி
  • நயினை மான்மியம்

உசாத்துணை


✅Finalised Page