under review

வசுபூஜ்ஜியர்

From Tamil Wiki
வசுபூஜ்ஜியர்

வசுபூஜ்ஜியர் சமண சமயத்தின் பன்னிரெண்டாவது தீர்த்தங்கரர். சித்த புருஷராக விளங்கிய வசுபூஜ்ஜியர், கருமத் தளைகளைகளிலிருந்து விடுபட்டு, மேற்கு வங்காளத்தின் சம்பாபுரியில் முக்தி அடைந்தார்.

புராணம்

வசுபூஜ்ஜியர் இக்ஷ்வாகு குல மன்னர் வாசுவுக்கும், இராணி ஜெயதேவிக்கும் பங்குனி மாத தேய்பிறை பதினான்காவது நாளில் சம்பாபுரியில் பிறந்தார். ஜைன நம்பிக்கைகளின்படி, அனைத்து கர்மாக்களையும் அழித்து ஆன்ம விடுதலை அடைந்தார். ஆடி மாதத்தின் வளர்பிறை பதினான்காவது நாளில் இந்தியாவின் பாகல்பூரில் உள்ள சம்பாபுரியில் கேவல ஞானத்தை அடைந்தார்.

இரண்டாவது வாசுதேவர், த்விப்ரிஷ்டஹா வசுபூஜ்ஜியரின் பக்தர். அவரும் அவரது சகோதரர் பல்தேவ விஜய்யும் பிரதிவாசுதேவா தர்க்கை வென்று அவரது அடக்குமுறை ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். விஜய் பின்னர் வசுபூஜ்யரின் துறவி வரிசையில் சேர்ந்தார்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: மாணிக்கம் போன்ற சிவப்பு
  • லாஞ்சனம்: நீர் எருமை
  • மரம்: பிரியங்கு மரம்
  • உயரம்: 70 வில் (210 மீட்டர்)
  • முக்தியின் போது வயது: 7200000 ஆண்டுகள்
  • முதல் உணவு: மன்னர் பத்மா அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 116 (அமர்)
  • யட்சன்: தும்புரு தேவ்
  • யட்சினி: புருஷ்தத்தா தேவி

சிலை

பீகார் மாநிலத்தின் சம்பாபூரில் உள்ள நாத் கோயிலில், வசுபூஜ்ஜியருக்கு 31 அடி உயர சிலை 2014-ல் நிறுவப்பட்டுள்ளது. புல்சந்த் சேத்தி வளாகம் திமாபூரில் உள்ள ஸ்ரீமதி சோனா தேவி சேத்தி அறக்கட்டளையால் இந்த சிலை கட்டப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டது.

கோயில்கள்

  • ஜெயின் கோவில், ஆலப்புழா, கேரளா
  • சம்பாபுரி
  • ஸ்ரீ ஆத்ம வல்லப ஜெயின் நினைவுச்சின்னம்
  • ஸ்ரீ வாசுபூஜ்ய ஸ்வாமி ரத மந்திர் மல்கஜ்கிரி தெலுங்கானா

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Nov-2023, 05:58:45 IST