under review

ராஜம் (இதழ்)

From Tamil Wiki

ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர்.

பதிப்பு, வெளியீடு

ராஜம் இதழ் 1986-ல் சந்திரா ராஜசேகரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக ”ர” என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் இருந்தது.

நோக்கம்

’பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்’; 'Womens Monthly' என தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் வெளிவந்தது.

உள்ளடக்கம்

ராஜம் இதழில் சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் வெளிவந்தன. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவையும் ராஜம் இதழில் வெளியாகின.

உசாத்துணை


✅Finalised Page