ரா. ரங்கநாயகி
- ரங்கநாயகி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரங்கநாயகி (பெயர் பட்டியல்)
ரா. ரங்கநாயகி (பண்டிதை ரா. ரங்கநாயகி) நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ரங்கநாயகி ராமசாமியை மே 4, 1930-ல் திருமணம் செய்து கொண்டார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு சொற்பொழிவுகள் பல ஆற்றினார். சுயமரியாதைப் போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டார். ஈ.வே.ரா-வின் வேண்டுகோளை ஏற்று புரோகித மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.
இலக்கிய வாழ்க்கை
சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் முதலாவது ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவை ஆனந்தபோதினி அச்சகத்தார் புத்தகமாக வெளியிட்டனர். 'விநோத அச்சகம்' என்ற அச்சகத்தை இவர் நடத்தினார். இவரின் கட்டுரைகள் ஆனந்தபோதினி, குடியரசு இதழ்களில் வெளியாகின. ஆனந்தபோதினி இதழில் சிறுகதைகள் பல எழுதினார்.
நூல்கள்
சிறுகதைகள்
- குஷால்
- மல்லிகா
- என்ன செய்கிறோம் பார் உன்னை
- தற்கொலை
- வீராயிக்கு வந்த விபத்து
- பதி-லில்லியம் - 1932
பிற
- தமிழ் இலக்கிய யாத்திரை
- வள்ளல்கள்
- கவியரசி சரோஜினி தேவி (கட்டுரை)
- நான் ஏன் இந்தியாவிற்கு வந்தேன் (கட்டுரை)
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Sep-2023, 01:44:57 IST