under review

யாத்திரி

From Tamil Wiki
யாத்திரி.jpg

யாத்திரி (த. கார்த்திக்) (பிறப்பு மார்ச் 16, 1986) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு , கல்வி

யாத்திரியின் இயற்பெயர் த.கார்த்திக். மார்ச் 16, 1986 அன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர்-கிருஷ்ணாபத்தில் தங்கையா, கோட்டைக்கரசி இணயருக்குப் பிறந்தார். கிருஷ்ணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புகைப்படக் கலைஞராக தொழில் செய்கிறார்.

தனி வாழ்க்கை

யாத்திரி 2011- ஆம் ஆண்டு முத்துமாரியைத் திருமணம் செய்துகொண்டார். முத்துமாரி தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை. குழந்தைகள் யாழினி, செழியன்

யாத்திரி புகைப்படக் கலைஞராக தொழில் செய்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

யாத்திரி முகநூலில் 2010-ம் ஆண்டிலிருந்து கவிதைகள், பத்திகள், கட்டுரைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ;காதலே கதிமோட்சம்' 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்தது. இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளும். ஒரு நாவலும் வெளிவந்துள்ளன.

"மனித வாழ்க்கைக்கு பயன்தராத எந்த எழுத்துமே இலக்கியம் ஆகாது. நான் எழுதுவது பெரிதாக புத்தக வாசிப்பில்லாத பெரும்பான்மையினருக்கு" என்று தன் எழுத்தின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார் யாத்திரி.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • காதலே கதிமோட்சம் ( 2019 )
  • மனவெளியில் காதல் பலரூபம் ( 2020 )
  • அன்பின் நிமித்தங்கள் ( 2021 )
நாவல்
  • பெருந்தக்க யாவுள ( 2022 )

நான்கு நூல்களையும் வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page