under review

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

From Tamil Wiki

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் விருதுகளுள் ஒன்று முதலமைச்சர் கணினித் தமிழ் விருது. 2013 முதல் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

தமிழ் மொழி உலகெங்கும் பரவும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்கி அளிப்பவர்களுக்கும், கணினி வழிப் புத்தாக்கச் செயல்பாட்ட்டாளர்களுக்கும் 2013 முதல் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும். தகுதிச் சான்றும் கொண்டது இவ்விருது.

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற்றோர் பட்டியல் - 2020 வரை

எண் ஆண்டு விருது பெற்றவர்கள்
1 2013 ந. தெய்வசுந்தரம்
2 2014 து. குமரேசன்
3 2015 செல்வமுரளி
4 2016 ராமசாமி துரைபாண்டி
5 2017 மதன் கார்க்கி
6 2018 நாகராஜன்
7 2019 சே. ராஜாராமன் (எ) நீச்சல்காரன்)
8 2020 முனைவர் வ. தனலட்சுமி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2023, 03:19:47 IST