under review

மு. அப்பாத்துரைப்பிள்ளை

From Tamil Wiki

மு. அப்பாத்துரைப்பிள்ளை (நவாலி. மு. அப்பாத்துரைப்பிள்ளை) ( 19-ம் நூற்றாண்டு) இலங்கைத் தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. அப்பாத்துரைப்பிள்ளை இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நவாலி என்னும் ஊரில் முத்துத்தம்பியின் மகனாகப் பிறந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மு. அப்பாத்துரைப்பிள்ளை மாலை, மஞ்சரி, அந்தாதி ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடியவர். 'சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை' முக்கியமான நூல். 1894-ல் 'நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி' எழுதினார். 1891-ல் 'மருதடியந்தாதி' எழுதினார்.

நூல்கள் பட்டியல்

மாலை
  • சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
மஞ்சரி
  • நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி - 1894
அந்தாதி
  • மருதடியந்தாதி - 1891

உசாத்துணை


✅Finalised Page