under review

மாலை முரசு

From Tamil Wiki
மாலைமுரசு

மாலைமுரசு (1959) தினத்தந்தி குழுமத்தின் மாலை இதழ். தமிழில் வெளிவந்த முதல் மாலை இதழ். ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன் இதை தொடங்கினார்.

தொடக்கம்

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மாலைநாளிதழ் 1865 முதல் வெளிவந்த மெட்ராஸ் மெயில். அது 1981-ல் நிறுத்தப்பட்டது. மெட்ராஸ் மெயில் போல ஒரு மாலையிதழை வெளியிட எண்ணிய சி.பா.ஆதித்தனார் தன் மகன் சிவந்தி ஆதித்தனிடம் ஒரு மாலையிதழ் தொடங்கும் எண்ணத்தைச் சொன்னார். மதுரையில் தினத்தந்தி தொடங்கப்பட்டது. மேலும் சிறிய ஓர் ஊரிலிருந்து இதழை தொடங்கலாமென திட்டமிடப்பட்டது. ஆகவே ஜூலை 12, 1959-ல் திருநெல்வேலியில் இருந்து மாலைமுரசு தொடங்கப்பட்டது. சிவந்தி ஆதித்தன் நாளிதழ் நடத்துவதில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் பொருட்டு மாலைமுரசு தொடங்கப்பட்டது என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். (தினத்தந்தி பொன்விழா மலர்[1])

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவமனை அருகே மாலைமுரசு அலுவலகம் ஒரு சிறிய கட்டிடத்தில் தொடங்கியது. சி.பா.ஆதித்தனார் ஏற்கனவே 1942-ல் மதுரை முரசு என்னும் இதழை நடத்தி வந்தமையால் அந்நினைவாக மாலைமுரசு என்று பெயரிடப்பட்டது.

உள்ளடக்கம்

அக்காலத்தில் டெலிபிரிண்டர் போன்ற வசதிகள் இல்லை. ஆகவே வானொலிச்செய்திகளே மாலைமுரசில் அச்சிடப்பட்டன. திருநெல்வேலி நாகர்கோயில் உள்ளூர்ச்செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தினத்தந்தியை விடவும் பரபரப்பான தலைப்புகள் அளிக்கப்பட்டன. "கோர்ட்டில் நடந்தது!!! கிருஷ்ணா கிருஷ்ணா என்று மயங்கிவிழுந்தார் சாட்சி!!! மூலக்கரை இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் பரபரப்பு!!!" என 1959-ல் வெளிவந்த ஒரு செய்திக்கு தலைப்பு அளிக்கப்பட்டிருந்தது

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page