under review

மல்லிநாதர்

From Tamil Wiki
மல்லிநாதர்

மல்லிநாதர் சமண சமயத்தின் பத்தொன்பதாவது தீர்த்தங்கரர். சமண சமய கருத்துக்களின்படி, கர்மத்தளையிலிருந்து விடுப்பட்டு துறவறம் பூண்டு சித்த புருஷன் ஆனவர்.

புராணம்

சமண சமய சாஸ்திரங்களின்படி, மல்லிநாதர் இக்ஷுவாகு குலத்தில், மன்னர் கும்பாவிற்கும், ராணி பிரபாதேவிக்கும் மிதிலையில் பிறந்தார். ஸ்வேதாம்பர ஜெயின்கள் மல்லிநாதரை மல்லி தேவி என்ற பெண்ணாக நம்புகிறார்கள். திகம்பர பிரிவினர் மல்லிநாதா உட்பட 24 தீர்த்தங்கரர்களையும் ஆண்கள் என்று நம்புகிறார்கள். திகம்பர பிரிவினர் ஒரு பெண் 16-வது சொர்க்கத்தை அடைய முடியும் என்றும் அவர்கள் ஒரு ஆணாக மீண்டும் பிறப்பதன் மூலம் மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்றும் நம்புகிறது. மல்லிநாதர் அரச குடும்பத்தில் பிறந்த மகன் என்றும், மல்லிநாதரை ஆணாக வழிபடுவதாகவும் திகம்பர மரபு கூறுகிறது. இருப்பினும், ஜைன மதத்தின் ஸ்வேதாம்பர பாரம்பரியம், மல்லிநாதா மல்லி பாய் என்ற பெயரைக் கொண்ட பெண் என்று கூறுகிறது.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: தங்க நிறம்
  • லாஞ்சனம்: பூரண கும்பம்
  • மரம்: அசோக மரம்
  • உயரம்: 25 தனுசு (75 மீட்டர்)
  • கை: 100 கைகள்
  • முக்தியின் போது வயது: 55000 வருடங்கள்
  • முதல் உணவு: மிதிலா நகரின் நந்திசேனர் அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 28 (விசாகர்)
  • யட்சன்: குபேர தேவர்
  • யட்சினி: அபராஜித்தா தேவி

இலக்கியம்

  • ஞாத்ரதர்மகதா மல்லிநாதப் பெருமானை பற்றிய கதையைக் கூறுகிறது. இது கணதர சுதர்மஸ்வாமியால் இயற்றப்பட்டது.
  • மல்லிநாதபுராணம் நாகச்சந்திரரால் பொ.யு. 1105-ல் எழுதப்பட்டது.

கோயில்கள்

  • மன்னார்குடி மல்லிநாத சுவாமி ஜெயின் கோயில் தமிழ்நாட்டின் பழைய சோழப் பேரரசின் பழமையான நகரமான மன்னார்குடியில் உள்ள ஒரு ஜெயின் கோயிலாகும்.
  • சதுர்முக பசதி என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்காலாவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற ஜெயின் கோவில் ஆகும். தீர்த்தங்கரர் அரநாதர், மல்லிநாத் மற்றும் முனிசுவ்ரத்நாதசுவாமி ஆகியோருக்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • ஸ்ரீ மல்லிநாத் ஜெயின் தேராசர், போயானிக்கு அருகில், விரம்கம் தாலுக்கா, குஜராத்.

உசாத்துணை


✅Finalised Page